அத்தியாயம் 4
தயிர் ஊத்தி சாப்பிடுவேன் சாதம்
நீயே என் காதல் வேதம்!!!
பத்து நிமிட ப்ரேக் கிடைக்க, காபிதியாமின் பின் புறம் வந்து காபி கப்புடன் நின்றிருந்தனர் சரவணனும் இளாவும்.
“ஜோ!!! இன்னிக்கு நைட் நீ ஃப்ரீயா?” எனக் கேட்டான் இளா.
“எந்த நைட்டுமே நான் ஃப்ரீதான்” எனப் பதிலளித்தான் சரவணன்.
“அப்போ சரி! இன்னிக்கு நாம கே.எல் நைட் லைஃப் பார்க்கப் போகலாமா?”
இவனுக்குத் தயக்கமாக இருந்தது.
“சீக்கிரம் வந்திடலாம்ல? காலைல எனக்கு வேலை இருக்கு இளா”
“வேலை என்னிக்குத்தான் இல்ல உனக்கு! இதெல்லாம் அந்தந்த வயசுல அனுபவிச்சிடனும் ஜோ! இளமை போனா திரும்ப வராது!”
“ஹ்ம்ம் சரி! போகலாம்”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, இவர்களைக் கடந்து தள்ளிப் போய் நின்றாள் அந்தப் பெண்.
“டேய் கொக்கோய்டா” என முணுமுணுத்தான் இளா.
‘கிளியோபட்ரா’ என மனதில் சொல்லிக் கொண்டான் சரவணப்பாண்டியன்.
அன்றைய தினம் இவனை கிளியோபட்ரா எனக் கூப்பிட சொல்லி மிரட்டி,
“நானும் இங்கத்தான் வேலைப் பார்க்கறேன்! உனக்கு சீனியர், வேலைல! சோ இந்த முணுமுணுக்கறது, பேர் வச்சி கூப்புடறது, இதெல்லாம் என் கிட்ட வச்சிக்காதே! எப்போதும் நல்ல மூட்ல இருக்க மாட்டேன்! வெளுத்து விட்டுருவேன்! ஜாக்கிரதை” என்றவள்,
“மனுஷனே ஃபர்தர் மேத்ஸ்(further maths) வச்சி செய்யுதேன்னு கடுப்புல இருக்கான்! இவன் வேற மண்டைக்கு ஏத்திக்கிட்டு!” என முணுமுணுத்தபடியே புத்தகங்களை எடுத்துக் கொண்டு வெளியேறி போனாள்.
மறுநாளிலிருந்து அவளும் வேலைக்கு வந்தாள். மாலை நான்குக்கு வேலை ஆரம்பிப்பவள், கடை மூடும் வரை இருப்பாள். சூப்பர்வைசரின் அடுத்த நிலையில் இருந்தாள் அவள். எந்த வேலை செய்வதென்பது அவளிஷ்டம்தான். சில சமயம் கல்லாவில் அமர்வாள். சில சமயம் சமையல்கட்டில் முட்டை வறுக்கும் வேலை பார்ப்பாள்! சில சமயம் வெய்ட்டரஸாக இருப்பாள்! ஆனால் இவனை வைத்து செய்வது போல, கடை அடைத்து ஷட்டரை மூடினால் கூட கிளம்ப மாட்டாள்! ஒன்பது வரை அங்கேயே அமர்ந்து கையோடு கொண்டு வந்திருந்த பாடங்களைச் செய்வாள்.
சூப்பர்வைசரே அவளிடம் நீக்குப் போக்காகப் போகும் போது, நாம் ஏன் தலையைக் கொடுக்க வேண்டும் என இவனும் ஒன்றுமே சொல்லமாட்டான். அவள் அமர்ந்திருக்க, கண்டுக் கொள்ளாமல் தரையைக் கூட்டி, மோப் செய்வான். அவள் அருகே போகும் போது மட்டும் இவனுக்கு கூட்ட ஏதுவாக காலைத் தூக்கிக் கொள்வாள். பாத்திரங்களையும் கழுவிப் போட்டு விட்டு, அவள் கிளம்ப காத்திருப்பான். அவள் பின் கதவு வழி கிளம்பியதும்தான் நிம்மதி பெருமூச்சொன்றை இழுத்து விடுவான்! அதன் பிறகே குளித்து, படுக்க ஆயத்தம் செய்வான் சரவணப்பாண்டியன்.
வேலைப் பார்க்க நாடு விட்டு நாடு வந்து, இவளைப் போன்ற அராத்துகளிடம் எதற்கு வம்பு எனத் தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கப் பழகிக் கொண்டான். எதிர்த்துப் பேசவோ, கடுப்பைக் காட்டவோ சில நிமிடங்கள் போதும்! ஆனால் அதன் பின்பு வரும் பிரச்சனைகளை சமாளிக்கப் படும் சிரமம் இவனுக்கல்லவா தெரியும்! பேரழகி கிளியோபாட்ரா எனக் கடுப்பில் முணுமுணுத்ததற்கே ஏற்கனவே இருந்த வேலையோடு சேர்த்து முன் பக்கம் அழகுக்கு வைத்திருந்த செடிகளுக்குக் காலை மாலையென நீருற்றும் வேலை, அரை மணி நேர ல்ஞ்ச் ப்ரேக் டைம் பதினைந்து நிமிடமாகக் குறைக்கப்பட்டக் கொடுமை எனப் பழித் தீர்த்திருந்தாள் அவள். இன்னும் வாயைக் கொடுத்துப் பின் பக்கத்தைப் புண்ணாக்கிக் கொள்ள விரும்பவில்லை இவன்.
ஓரக் கண்ணால் அவள் என்ன செய்கிறாள் என இவன் பார்க்க, பைப் போல இருந்த எதையோ வாயில் வைத்து உள்ளே ஆழ்ந்து இழுத்து வாய் மற்றும் மூக்கு வழியாகப் புகை விட்டுக் கொண்டிருந்தாள்!
‘அடிப்பாவி! சிகரேட் அடிக்கறாளா?’ என இவன் பார்த்தது பார்த்தபடி இருக்க, சட்டென இவனைத் திரும்பிப் பார்த்தவள், என்ன என்பது போல ஒற்றைப் புருவத்தைத் தூக்கி, ஸ்டைலாக வாய் வழி புகை விட்டாள்.
படக்கெனத் திரும்பிக் கொண்டான் சரவணப்பாண்டியன்.
“இளா!!! அது என்னடா? புது வகை சிகரேட்டா?” என மெல்லியக் குரலில் வினவினான் நண்பனை.
“அதுக்கு பேரு வேப்(vape)! ஈசிகரேட்னு சொல்லுவாங்க சரா! சிகரேட் மாதிரி ரொம்ப கெடுதி இல்ல. நிக்கோட்டின் அளவு இதுல ரொம்ப ரொம்ப குறைவு! பல விதமான ஃப்ளேவர்ல வருது இது! லைச்சி, மாங்கா, ஸ்ட்ராபெரி, காபின்னு! இப்போ உள்ள யூத் இததான் கெத்தா யூஸ் பண்ணறாங்க! இதும் ஒரு வகை அடிக்ஷன்தான். எப்படியும் அடிக்கடி யூஸ் பண்ணா லங்ஸ் ஒரு நாள் புட்டுக்கும்!”
புகை விட்டு விட்டு இவர்கள் அருகே வந்தவள்,
“இளான்னு பேர் இருந்தா இளவரசன்னு நெனைப்போ! ப்ரேக் டைம் முடிஞ்சது! போ! போய் வேலையைப் பாரு” என இளாவைத் துரத்தி விட்டாள்.
அவனோடு இவனும் உள்ளே போக முனைய,
“ஓய்! நீ இரு! அவன் போகட்டும்!” எனச் சரவணனை நிறுத்தினாள்.
அமைதியாக அவன் நிற்க,
“பொன்னியின் செல்வன் படம் பார்த்தியா நீ?” எனக் கேட்டாள்.
ஆமாமெனத் தலையை மட்டும் ஆட்டினான் இவன்.
“அப்போ என்னோட ஆளு துருவ்வோட அப்பா விக்ரம கொன்னது, உன்னோட ரிலேட்டிவ்ஸ்தானா?” எனக் கேட்டாள்.
இவன் பேவென முழித்தான்.
“கொன்னுட்டீங்கல்ல!!! நந்தினி நந்தினி சுத்திட்டு இருந்த அந்த மனுஷன கொன்னுட்டீங்கல்ல!!! இப்போ உனக்கு சந்தோஷமா?”
“அது..அது வரலாறுங்க! அதுக்கு நான் என்னங்க செய்வேன்!” எனத் திக்கினான் இவன்.
“அந்த ஈர வெங்காயமெல்லாம் எனக்குத் தெரியாது! என் மாமனார கொன்னதுக்கு பிராயச்சித்தமா இனி இந்தப் பாண்டியன் எனக்கு அடிமையா இருக்கனும்! நான் என்ன வேலை சொன்னாலும் செய்யனும்! புரிஞ்சதா?”
“ஏங்க!! இதெல்லாம் அநியாயங்க”
“அநியாயமோ அவிச்ச வெங்காயமோ! ஐ டேண்ட் கேர்!!! இப்போ போய் எனக்கு வைட் காபி எடுத்து வந்து குடுத்துட்டு வேலையைப் பாரு”
அவளது அலட்சியமானப் பேச்சிலும், அடாவடித்தனத்திலும் ஆத்திரத்தில் முகம் சிவந்தது இவனுக்கு! கையாலாகாத ஆத்திரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது!!! அமைதியாக உள்ளே போய் அவள் கேட்டதை எடுத்து வந்து கொடுத்தான்.
காபியை வாங்கி அருந்திக் கொண்டே,
“பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா” எனக் கிண்டல் செய்து அவள் பாட, விடுவிடுவென உள்ளே போய் விட்டான் இவன்.
அன்றும் ஒன்பது வரை அங்கேயே அமர்ந்திருந்தாள் அந்தப் பெண். அவள் கையில் கல்குலேட்டார் படாத பாடு படுவதை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே மற்ற மேசைகளை சனிடைசர் போட்டுத் துடைத்தான் சரவணப்பாண்டியன். அவள் எழுந்து டாய்லட்டுக்குப் போவதை கவனித்தவன், அவள் மேசை அருகே போய் அவள் செய்ய முயற்சித்த கணக்கை எட்டிப் பார்த்தான். வெட்டிக், கொத்திக் குதறி வைத்திருந்தாள் அந்தக் கணக்கை. தனது போன் காமிராவில் அதை படம் பிடித்துக் கொண்டவன், மோப் போட ஆயத்தம் செய்ய ஆரம்பித்தான்.
டாய்லட் போய் வந்தவள்,
“பாண்டியா!!!” என அழைத்தாள்.
நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
கார் சாவியை அவனிடம் தூக்கிப் போட்டவள்,
“போய் ஸ்டார்ட் பண்ணி ஏர்கோண்ட் போட்டு வை!” என வேலை ஏவினாள்.
சாவியைக் காட்ச் பிடித்தவனுக்குக் கண்கள் பளபளத்தன.

Last edited:
Author: VanishaAdmin
Article Title: Jagam Nee--EPI 4
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.