அத்தியாயம் 8
எருமை போடுமே சாணி
நீதான் என் இதய ராணி!!!!
இரண்டு நாட்கள் விழிப்பும் தூக்கமுமாகவே பொழுது ஓடியது சரவணப்பாண்டியனுக்கு. காலையில் ஹோட்டலிலேயே இலவச காலை உணவு வழங்கப்பட, அலாரம் வைத்து எழுந்து எட்டு மணிக்கெல்லாம் அவர்கள் ரெஸ்டாரென்ட் போய் வயிறு நிறைய சாப்பிட்டு விடுவான். அதன் பிறகு மருந்து போட்டு விட்டுப் படுத்தான் என்றால் மாலை மூன்று கூட ஆகிவிடும் விழித்தெழ.
இத்தனை வருடங்கள் தூங்காத தூக்கத்தை எல்லாம் இந்த இரண்டு நாட்களில் தூங்கினான் சரவணப்பாண்டியன். காய்ச்சல் முதல் நாளிலேயே விட்டிருக்க, கை காயம் மட்டும் அவ்வப்பொழுது வலி கொடுத்தது.
இரண்டாம் நாள் அந்தி வேளையில் இவனைப் பார்க்க வந்தான் இளா. அவனுக்கு சரவணன்தான் மெடிக்கல் லீவ் என மேசேஜ் போட்டுத் தங்கும் இடத்தையும் தெரிவித்திருந்தான். வரும் போதே இருவருக்கும் உணவு வாங்கி வந்திருந்தான் இளமாறன். அறையில், தரையில் அமர்ந்து இருவரும் உணவு உண்டபடி கதையடித்தார்கள். தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த ஏதோ ஒரு மொக்கை ஆங்கிலப் படத்தைப் பார்த்து கமேண்ட் அடித்துக் கொண்டு குதூகலமாகப் போனது அன்றைய நாள்.
“ஜோ!! நெஜமாலுமா நம்ம கொக்கோய் உன்னை கிளினிக் கூட்டி போய், ரெஸ்ட் எடுக்க ரூமும் போட்டுக் குடுத்துச்சு!! நம்ப முடியவில்லை!!! இல்லை!!!இல்லை!” எனப் பாட்டாகவே பாடினான் இளா.
“ஆமாடா இளா! அவங்க எப்படிப்பட்ட கேரெக்டர் தெரியுமா?”
“சொல்லேன் கேப்போம்”
“நான்தான் ராணி! நான் சொல்லறததான் என்னைச் சுத்தி உள்ளவங்க கேட்கனும் அப்படிங்கற நெனைப்பு உள்ளவங்க! அப்படி கேக்கற வரைக்கும் நீ குட் குவின் கிளிய பார்க்கலாம்! கேட்டு நடக்கலனா ஈவில் குவின் கிளிய பார்க்க நேரிடும்! அந்த ஈவில் குவின் ஒரு டெரர் பீஸ்! அதோட ஒத்தை முறைப்புக்கே கை காலேல்லாம் ஆடிரும்”
“சீச்சீ! போடா சரா! உன்னை விட ரெண்டு வயசு சின்னவ! அவள பார்த்து பயமா இருக்குன்னு சொல்றியே!!! ஷேம்! ஷேம்! பப்பி ஷேம்!”
“ஏஜ் இஸ் ஜஸ்ட் அ நம்பர்னு நீ கேள்விப்பட்டது இல்லையா! அவங்களுக்கு இருபது வயசா இருக்கலாம்! ஆனா மேச்சுரிட்டி லெவல் முப்பது வயசுக்கு இருக்கு, தெரியுமா!”
“ஜோ!!!” என இவன் இழுக்க,
“என்னடா?” எனக் கேட்டான் சரவணன்.
“அவ மேல உனக்கு எதாச்சும் இஸ்க்கு இஸ்க்கு?”
“நோ! நோ! அப்படிலாம் இல்லடா! முதலாளின்னு மரியாதை இருக்கு! அவ செஞ்ச இந்த உதவிக்கு நன்றி உணர்ச்சி இருக்கு! அட, அழகா இருக்காளேன்ற ஒரு பிரமிப்பு இருக்கு! அதோட அவ அப்பா மேல கடலளவுக்கு பயம் இருக்கு!” என இவன் சொல்ல,
“நல்லதுடா ஜோ! தேவையில்லாம காதல் கத்தரிக்காய்னு மாட்டிக்கிட்டு உசுர விட்டுடாதே! உசுரு முக்கியம் பிகிலு” என சீரியஸாகவே சொன்னான் இளா.
“தெரியும்டா! நீ பயப்படாத”
“என்னிக்கு இந்த ஹோட்டல்ல இருந்து செக் அவுட்?”
“நாளைக்கு பகல்ல வெளியாகிடனும் இளா”
“எனக்கு லீவ்தான் நாளைக்கு! கீழ லாபில வேய்ட் பண்ணு! லன்ச் சாப்பிட்டு நான் கொண்டு போய் கடைல விடறேன்”
“சரிடா”
அன்றைய இரவுதான் மேசேஜ் போட்டிருந்தாள் ஷாமினி.
“உடம்பு இப்போ ஓகேவா பாண்டியா?”
“ஓகே மேடம்”
“நாளைக்கு கிரேப்(டாக்சி) எடுத்து கடைக்கு வந்திடு! எனக்கு கிளாஸ் இருக்கு”
“இளா வரேன்னு சொன்னான் மேடம்”
“சரி! பாய்” என முடித்துக் கொண்டாள்.
அடுத்த இரு வாரங்கள் வேலை, வேலையென நிற்க நேரமில்லாமல் போனது இவனுக்கு. நன்றாய் ஓய்வு எடுத்திருக்க, இவனும் சுறுசுறுப்பாகவே வேலைப் பார்த்தான். அதோடு இரவு டியூசனும் எந்தத் தடங்களுமின்றி போனது.
முதல் தடவை உடம்பு சரியில்லாத வேளை இவன் கையால் வெஜிடெபிள் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டிருந்தவள், அதற்கு பிறகு இவன் சாப்பிடுகிறாயா எனக் கேட்க, வேண்டாமென மறுத்து விட்டாள். அவன் குளித்து, சாப்பிட்டு விட்டு வரும் வரைக்கும் அவனுக்காகக் காத்திருப்பாள். இவனுக்குத்தான் கொடுக்காமல் சாப்பிடுகிறோமே என ஒரு மாதிரி இருக்கும். மீண்டும் ஒரு முறை கேட்டால், அவள் பேய் ஆட்டம் ஆடி விட வாய்ப்பிருப்பதால் முதல் முறை கேட்டதோடு விட்டு விட்டான்.
அன்று அவன் சாப்பிட அமர்ந்த போது, அவனருகே வந்து நின்றாள் ஷாமினி.
“நானும் என்னைக் கட்டுப்படுத்திட்டு உக்காந்திருக்கேன்! ஆனா வாசம் ஆள இழுக்குது!” என்றவள்,
“ஓ! காய்கறி போட்ட சாம்பாரா? இதெல்லாம் சமைப்பியா நீ?” எனக் கேட்டபடியே அவன் முன்னே அமர்ந்து கொண்டாள்.
“அடிக்கடி ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ்னு சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு மேடம்! அதான் நேத்து நம்ம சமையலுக்கு தேவைப்படற சாமான் கொஞ்சம் வாங்கனேன்! செஃப் சொன்னாரு, ஒரேடியா சமைச்சிட்டு, டப்பர்வேர்ல தனி தனியா போட்டு, ஃப்ரீசர்ல வச்சிக்கன்னு! தேவைப்படறப்ப எடுத்து சூடாக்கி சாப்பிட்டுக்கலாம்னு ஐடியா குடுத்தார்! கொஞ்சமா ஃப்ரீஷர்ல எனக்கு இடமும் ஒதுக்கிக் கொடுத்திருக்காரு!”
“அப்படியா? அப்போ இன்னும் ஃப்ரீஷர்ல சாம்பார் இருக்கா?”
ஆமாமென இவன் தலையாட்ட, அவனது தட்டை இழுத்து இவள் முன்னே வைத்துக் கொண்டாள் ஷாமினி.
“அப்போ, அதை சூடு பண்ணி நீ சாப்பிட்டுக்கோ! இத நான் எடுத்துக்கறேன்!” என்றவள் ஒரு வாய் வைத்து கண் மூடி அதன் சுவையை அனுபவித்தாள்.
“எங்கம்மா வைக்கற சாம்பாரோட கொஞ்சம் சுமார்தான்! பட், பரவாயில்ல! சாப்பிடலாம்!”
‘என் தட்டைப் புடுங்கிட்டு கிளிக்கு குசும்ப பார்த்தியா?’ என நினைத்துக் கொண்டான் சரவணப்பாண்டியன்.
“பாண்டியா!”
“ஹ்ம்ம்!”
“இந்த சாம்பாருக்குத் தொட்டுக்க அப்பளமும், ஊறுகாயும் இருந்தா எப்படி இருக்கும் தெரியுமா?” என்று சொல்லியபடியே அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தாள்.
‘வாய்ல வேலை வாங்கனது போய் இப்போ கண்ணால வேலை வாங்குது கிளி!’ என எண்ணிக் கொண்டவன், விடுவிடுவென பின் கதவு வழியே வெளியே போனான்.
அவர்கள் கடைக்கு அருகிலேயே 99 ஸ்பீட்மார்ட் (மளிகை கடை என வைத்துக் கொள்ளலாம்) இருந்தது. அதில் விலையும் கொஞ்சம் மலிவாக இருக்குமென இளா சொல்லி இருக்க, நேற்றைய தினம் கூட அங்குதான் சாம்பாருக்குத் தேவையானதை வாங்கினான் சரவணன். அங்கு போய் தாஜ்மஹால் அப்பளக்கட்டு ஒன்று வாங்கியவன் வேகமாய் காபிதியாமுக்கு வந்தான். அடுப்பில் நின்று அப்பளம் பொரித்து எடுத்துக் கொண்டு வந்து அவளுக்குக் கொடுத்தவன், தனக்கான உணவையும் ரெடி செய்யப் போனான்.
“ஊறுகாய் இல்லையா பாண்டியா?”
“அந்தக் கடைல கண்ணுல அம்புடல மேடம்”
“எனக்கு தொட்டுக்க வேணுமே”
‘ஹ்ம்ம்! இங்க இருக்கறது நான் ஒருத்தன்தான்! என்னைத் தொட்டுக்கிட்டாத்தான் உண்டு’ என நினைத்துக் கொண்டவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு வந்தது.
நாசி லெமக்கிற்கு உறைப்புக்காக வைக்கும் சம்பல் கொண்டு வந்து அவள் தட்டில் வைத்தவன்,
“இப்போதைக்கு இதுதான் இருக்கு! இதை தொட்டுக்குங்க” என்றான்.
அதன் பிறகு அமைதியாகப் போனது அவர்களின் உணவு நேரம்.
சாப்பிட்டு முடித்து தட்டுக்களை கழுவி வைத்து விட்டு, படிக்க அமர்ந்தார்கள். அன்று பாடங்கள் அவ்வளவாக இல்லாமல் போக, சீக்கிரம் முடிந்து விட்டது டீயூசன்.
அவள் கிளம்பாமல் அமர்ந்திருக்க, இவனும் அமைதியாக அமர்ந்திருந்தான்.
“இவ கிளம்பித் தொலைய மாட்டாளான்னு இருக்கா பாண்டியா?”
“அப்படிலாம் இல்லை மேடம்”
“இப்போ போனாலும், தம்பி டியூசன் செண்டர் முன்ன காத்துத்தான் நிக்கனும். அதான் மெதுவா போகலாம்னு நெனைச்சேன்”
இவன் தலையாட்டிக் கேட்டுக் கொண்டான்.
“அவனை எல்லா சப்ஜெக்டுக்கும் டியூசன் போடறேன்! இந்த வருஷ கடைசில பரீட்சை வருது! அந்த டைம்ல எனக்கும் கோர்ஸ் முடிஞ்சிடும்! அதுக்குப் பிறகு அவன கூட்டிட்டு போலண்ட் பறந்துடுவேன்! எங்கம்மாவோட ஒன்னு விட்டத் தம்பி ஒருத்தர் அங்க பேமிலியோட செட்டில் ஆகிட்டார்! அவர் எங்கள வந்துட சொல்லி கேட்டுட்டே இருக்கார்! படிக்கற வரைக்கும் அவரோட இருந்துட்டு, அப்புறம் எங்க வழிய பார்த்துப்போம்”
“அங்க போய் நீங்க என்ன படிக்க போறீங்க மேடம்?”
“ஹோட்டல் மேனேஜ்மேண்ட்! இங்கலாம் ஒரு கட்டிடம் பழசாகிட்ட அதை உடச்சிட்டுப் புதுசு கட்டிடறாங்க! அங்கலாம் அதை பாதுகாத்து பவுனாட்டாம் பார்த்துப்பாங்களாம்! பழமைலயும் புதுமை புகுத்தி நல்லா மேயிண்டேய்ன் பண்றாங்களாம். நான் படிச்சு முடிச்சதும், அப்படி ஒரு பில்டிங் வாங்கி, பி அண்ட் பி னு சொல்வாங்கல்ல, பெட் அண்ட் ப்ரேக்பெஸ்ட் (ஹோட்டல் போல) ஆரம்பிக்கப் போறேன்! தம்பியையும் படிக்க வச்சு, அவனுக்கொரு வாழ்க்கை அமைச்சுக் கொடுப்பேன்! ஹேப்பியா, சுதந்திரமா, எந்த பயமும் இல்லாம சுத்தித் திரிவேன்” எனக் கனவு மின்னும் கண்களோடு சொன்னவள்,
“இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன் பாண்டியா” என்றாள்.
“என்ன மேடம்?”
“தம்பி செட்டிலானதும் நான் இடுப்ப சுத்தி பாய்ப்ரேண்ட் வச்சிப்பேன்! மண்டேக்கு மார்லவ், தியூஸ்டேக்கு தியாகோ, வெட்னெஸ்டேக்கு வெங்கர், தெர்ஸ்டேக்கு..”
“தேவாங்கு!!!” என இவன் சொல்லி முடிக்க, கையில் இருந்த புத்தகம் கொண்டு அவன் முதுகிலேயே போட்டாள் ஷாமினி.
“உனக்குத்தான் தேர்ஸ்டேக்கு தேஞ்சுப் போன மூஞ்சு, ஃப்ரைடேக்கு பிஞ்சி போன மூஞ்சு, சட்டர்டேக்கு சாவுகிராக்கி மூஞ்சுன்னு கிடைக்கும் போடா!! இது இந்த ஷாமினியோட சாபம்!”
அவளது கோபம் பார்த்து இவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு! எவ்வளவு முயன்றும் அடக்க முடியவில்லை! இருமி, செருமி சமாளித்தான். சிரித்து விட்டு இவளிடம் யார் வாங்கிக் கட்டுவது! சட்டென தேவாங்கு எனக் கிண்டலடித்தது தான்தானா என நம்ப முடியாமல் விழித்தான் சரவணன். அது என்னவோ இளாவிடம் பேசுவது போல சட்டென வந்துவிட்டது வாயில்.
“சாரி! சாரி மேடம்! தெரியாம வாயில வந்திடுச்சு!”
“அதெப்படி தெரியாம வரும்! எல்லாம் மனசுல உள்ளதுதான் இப்படி வெளிய வரும்! ஏன்!!! நான் இடுப்ப சுத்தி பாய்ப்ரேண்ட் வச்சிக்கக் கூடாதா? அதெல்லாம் உங்களுக்கு மட்டுமே எழுதி வைச்ச ரைட்ஸா??? எனக்குன்னு சில கடமைகள் இருக்கு! அதை முடிச்சிட்டு நான் என் இஷ்டத்துக்குத்தான் வாழ்வேன்! டாட்!!!!!!”
இவன் பதிலேதும் சொல்லவில்லை.

Last edited:
Author: VanishaAdmin
Article Title: Jagam Nee--EPI 8
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.