அத்தியாயம் 9
சுவத்துல ஓடுது பல்லி
வாங்கி வரவா உனக்கு மல்லி!!!!
இரண்டு நாட்களாய் காபிதியாமுக்கு வரவில்லை ஷாமினி. இவனுக்கு டீயூசன் வேலை இல்லாமல் போனதில் ஓய்வெடுக்க நேரம் கிடைத்தாலும், மனது என்னவோ அவளை நினைத்துத் தவித்தது.
‘இந்த கிளிக்கு என்னாச்சு? ரெண்டு நாளா ஆள காணோம்! உடம்பு எதாச்சும் சரியில்லையோ! வாட்சாப்ல அவ ப்ரோபைல் அப்பப்போ ஆன்லைன்தான் காட்டுது! ஆனாலும் மேசேஜ் போட தயக்கமா இருக்கே! உனக்கு என்னடா அக்கறைன்னு திட்டி விட்டுட்டா மூஞ்ச எங்க கொண்டு போய் வச்சிக்கறது!’ என யோசித்தவன் தானுண்டு தன் வேலையுண்டு என இருந்து கொண்டான்.
இவன் கை வலியில் தவித்த போது சக மனுஷியாய் அவள் உதவியதால் வந்த பரிவு மட்டுமே அவளைத் தேடியதன் காரணம். முதலாளிதானே, அவர்கள் இஷ்டம்தானே வேலைக்கு வருவதும் போவதும் எனத் தன்னைத்தானே தேற்றிக் கொண்டு வேலையில் கவனம் செலுத்தினான் சரவணப்பாண்டியன்.
மூன்றாவது தினம் இவன் செவியில் இன்ப ஊற்றாய் வந்து விழுந்தது அவள் கார் டயரை தேய்த்துக் கொண்டு பார்க் செய்யும் சத்தம்.
‘வந்துட்டா குட்டி ரௌடி’ என நினைத்துச் சிரித்துக் கொண்டவன், எப்பொழுதும் போல அவளுக்கு வைட் காபி கொண்டு போய் வைத்தான்.
“பாண்டியா!”
“என்ன மேடம்?”
“பசிக்குது எனக்கு! ஆண்ட்டி ஸ்டால்ல போய் எனக்கு உளுந்து வடை அண்ட் கறிபாப் வாங்கிட்டு வா!” என உத்தரவிட்டவள் எப்பொழுதும் போல அவனது ஏப்ரனில் பணத்தைச் சொருகினாள்.
தலையாட்டி விட்டு நடந்தவனை,
“பாண்டியா!” என மீண்டும் அழைத்தாள் ஷாமினி.
“சொல்லுங்க!”
“அப்படியே ஸ்டாஃப் எல்லாருக்கும் கறிபாப்(சமோசா மாதிரி இருக்கும்) வாங்கிட்டு வந்து குடு! உனக்கு எதாச்சும் வேணும்னாலும் வாங்கிக்க”
“ஓகே மேடம்” என்றவனுக்கு அவளது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்த களைப்பைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
‘கிளிக்கு என்ன தலையெழுத்தா நம்மள மாதிரி இப்படி லோல் படனும்னு! காலேஜ்கு போனமா, வீட்டுக்குப் போய் தூங்கனமான்னு இல்லாம எதுக்கு இந்த வேண்டாத வேலை’ என எண்ணிக் கொண்டே, அவர்கள் காபிதியாமுக்கு மூன்று கடைத் தள்ளி ஸ்டால் ஒன்று போட்டு பலகாரங்கள் விற்கும் இந்திய பெண்மணியின் கடைக்குப் போனான்.
அந்த ஆண்ட்டி இந்திய பலகாரங்கள் எல்லாம் சுடச் சுட செய்து விற்பார். அவரிடம் வடை வகைகள், உருண்டை வகைகள், மற்றும் புட்டு, மோதகம் எனப் பலதும் கிடைக்கும். ஷாமினி சொன்னது போல அனைவருக்கும் வாங்கிக் கொண்டவன், தனக்கென ஒரு பருப்பு வடையும் வாங்கிக் கொண்டான். அதை கடித்துச் சாப்பிட்டுக் கொண்டு வரும் போதே, தாய் செய்து தரும் வாழைப்பூ வடை ஞாபகம் வந்து விட்டது! எப்பொழுதும் போல கலங்கி நிற்காமல், முடி கலைத்துப் போன காற்றை உணர்ந்து,
“லவ் யூ மா” எனச் சொல்லிக் கொண்டான்.
ஷாமினி கேட்டதை அவளிடம் கொடுத்து விட்டு, மீதியை ஒரு தட்டில் இட்டு வேலை செய்பவர்கள் எல்லோரும் எடுத்துக் கொள்ள வசதியாக கேஷ் கவுண்ட்டர் பக்கம் வைத்து சூப்பர்வைசரிடமும் சொன்னவன், கிச்சனுக்குள் போய் தனக்கொரு காபி எடுத்துக் குடித்தான்.
இளா தனது அத்தையின் வீட்டில் திருமணம் என லீவ் போட்டு விட்டு இன்னொரு மாநிலத்துக்குப் போயிருந்தான். அடிக்கடி திருமண வீட்டில் நடக்கும் கூத்துக்களை சுவைபட மீம் போல செய்து இவனுக்கு அனுப்பி வைப்பான். இளாவின் அட்டகாசத்தில் இவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு வரும். நாடு விட்டு நாடு வந்து, அன்போ ஆதரவோ இல்லாமல் நின்றவனுக்கு அன்பு காட்ட இளா இருந்தான் என்றால், ஆதரவு காட்ட ஷாமினி இருந்தாள்! அவளது செயல்கள் எல்லாம் கரடுமுரடாக இருந்தாலும், உள்ளுக்குள் ஒரு பரிவான பெண் இருப்பதை இவன் கண்டிருந்தானே! தங்கையின் பிரிவுத் துயர் மட்டும் நெஞ்சை அழுத்த, மற்றபடி சந்தோஷமாகவே இருந்தான் சரவணப்பாண்டியன்.
அன்றிரவு கடை அடைத்து விட்டு, தனது வேலைகளை முடித்து விட்டுக் குளித்து வந்தான் இவன். எப்பொழுதும் இவள் டீயூசன் முடிந்து கிளம்பியதும்தான் தங்கையின் ஹாஸ்டலுக்கு போன் செய்து பேசுவான். அது கூட வாரத்துக்கு மூன்று முறைதான். அடிக்கடி அழைத்து படிக்கும் குழந்தையைத் தொல்லை செய்யக் கூடாது என்பதனால்தான் இந்த மூன்று முறை. அங்கு பயிலும் குழந்தைகள் கைப்பேசி வைத்துக் கொள்ளக் கூடாது எனும் சட்டத்திட்டம் இருந்ததால், ஹாஸ்டல் வார்டன் அறைக்குத்தான் அழைப்பான் இவன். இவன் அழைக்கும் நேரம் தெரியுமாதலால், செம்பாவே ஹாஸ்டல் வார்டன் அறைக்கு வெளியே காத்திருப்பாள். பத்து நிமிடங்கள் பேசி, அவளது நலம் விசாரித்து, அன்று என்ன நடந்தது பள்ளியில் எனக் கேட்டு, அவளும் இவனை விசாரித்து என இவர்களின் சம்பாஷனைப் போகும்! அண்ணனின் நிலை அறிந்து, அவளாகவே எப்பொழுது பார்க்க வருகிறாய் எனக் கேட்க மாட்டாள். தங்கைக்கு பொய் நம்பிக்கைக் கொடுக்கக் கூடாது என இவனும் வருவதாகச் சொல்ல மாட்டான்.
அன்று இவன் சாப்பிட்டு முடித்து, டியூசன் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் ஹாஸ்டல் வார்டனிடம் இருந்து அழைப்பு வந்தது. பதறிப் போனான் சரவணப்பாண்டியன்.
“மேடம்! தங்கச்சி ஸ்கூல்ல இருந்து போன்! ப்ளிஸ், பேசிட்டு வந்துடவா?” எனக் கேட்டவனின் குரலில் கெஞ்சல் இருந்தது.
அவனது கலக்கத்தைப் பார்த்து, சரியெனத் தலையாட்டினாள் ஷாமினி.
“ஹலோ”
“சரவணா! நான் வார்டன் பேசறேன்”
“சொல்லுங்க மேடம்! செண்பகாவுக்கு என்ன?” எனக் கேட்கும் போதே தொண்டையடைத்தது இவனுக்கு.
“உன் தங்கச்சி வயசுக்கு வந்துட்டாப்பா”
“என்ன!! வயசுக்கு வந்துட்டாளா?” எனக் கேட்டவனுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டிருந்தது.
“உன்னால வர முடியாதுன்னு எனக்குத் தெரியும். தலைக்குத் தண்ணி ஊத்தி சொல்லிக் குடுக்கறத சொல்லிக் குடுத்து நானே பார்த்துக்கிட்டேன். ஆனாலும் பயந்து அழறா! அண்ணா, அண்ணான்னு ஒரே புலம்பல்! நீ கொஞ்சம் பேசி, ஆறுதலா நாலு வார்த்தை சொல்லுப்பா!”
இவன் அக்கா பூப்படைந்த போது இவனது அம்மாவும் அப்பாவும் செய்த தடபுடல்கள், ஆர்ப்பாட்டங்கள் ஞாபகம் வந்து மனதை அறுத்தது. ஊரையே கூட்டி அவளுக்கு நகைப் போட்டு, பட்டுடுத்தி பூப்புனித நீராட்டு விழா என வந்தவர்களுக்கு வயிறார சாப்பாடு போட்ட பெற்றவர்களை எண்ணிக் கொண்டான்.
‘ம்மா, ப்பா! உங்க செல்லக் குட்டி செம்பா வயசுக்கு வந்துட்டாளாம்! என்னால அவ கூட இருந்து பார்த்துக்க முடியலையே! அவ ஒரு மூலையிலும் நான் ஒரு மூலையிலும்ல இருக்கோம்! தங்கச்சி கூட ஆறுதலா இருக்க முடியாத பாவியாகிட்டேனே நான்!!’ என மனம் ஆர்ப்பரிக்க, கண்கள் குளமாகிப் போனது சரவணப்பாண்டியனுக்கு.
எடுத்து சொல்லி, பயம் போக்கி, சத்தான ஆகாரங்கள் கொடுத்து, பேணிக் காக்க தங்கைக்கு சொந்தமென அருகில் யாருமில்லையே என எண்ணும் போதே அருவியென இறங்கியது கண்ணீர்!
அவனையே கண் கொட்டாமல் பார்த்திருந்தாள் ஷாமினி.
வார்டன் தொலைப்பேசியை செம்பாவிடம் கொடுக்க,
“அண்ணா! அண்ணா!” எனத் தேம்பினாள் சின்னவள்.
இவனும்,
“செம்பா! கண்ணு!” என அழ ஆரம்பித்து விட்டான்.
சட்டென அவனிடம் இருந்து போனை பறித்த ஷாமினி, பேந்த பேந்த விழித்த சரவணனைப் பார்த்து,
“மூச்!! கண்ண தொடை” என மெல்லியக் குரலில் மிரட்டினாள்.
அவன் கண்ணைத் துடைத்துக் கொள்ள,
“என் ப்ரேண்ட் உன் கிட்ட பேச போறான்னு சொல்லு செம்பாகிட்ட” என்றாள்.
தலையாட்டியவன்,
“செம்பா! பாப்பா! என்னோட ப்ரேண்ட் உன் கிட்ட பேசனுமாம்! பேசறியா?” எனக் கேட்டு அலைப்பேசியை ஷாமினியிடம் கொடுத்தான்.
“ஹலோ! இங்க ஷாமினி பேசறேன்! அங்க யாரு பேசறது?”
“நான் செம்பகா பேசறேன் அக்கா”
“செம்பகாவா? செம்பான்னு உங்கண்ணா கூப்புடவும் நான் கூட பொன்னியின் செல்வன் படத்துல வருமே செம்பா குதிரை, அது கூடத்தான் பேசறாங்கன்னு நெனைச்சேன்” என்றாள்.
அந்தப் பக்கம் அழுகை மட்டுப்பட்டிருக்க கிளுக்கி சிரித்தாள் செம்பா குட்டி.
போனை லவுட் ஸ்பீக்கரில் போட்ட ஷாமினி, இன்னும் சின்னவளிடம் பேச்சுக் கொடுத்தாள்.
“இப்போ செம்பா ஏன் அழறீங்க?”
மிரட்டலாய் கேட்டாலும் அதில் பரிவு ஒளிந்திருந்தது.
“நான் வயசுக்கு வந்துட்டேனாம்! சட்டைலாம் ப்ளட்! ரொம்ப பயந்துட்டேன் அக்கா!”
“அச்சோ! இதுக்கு யாராச்சும் பயப்படுவாங்களா! அக்கா கூடத்தான் வயசுக்கு வந்தேன்! சட்டைலாம் ப்ளட் ஆச்சு! ஆனா அக்கா பயப்படலையே!”
“நெஜமா பயப்படலையாக்கா நீங்க?”
“இல்லடா செம்பா! செர்ட்டன் ஏஜ் வந்ததும், பொண்ணுங்களுக்கு மட்டும்தான் இப்படி மாசா மாசம் ப்ளட் வர மாதிரி ஆண்டவன் படைச்சிருக்கான்! ஏன் தெரியுமா? பொண்ணுங்களாம் ரொம்ப தைரியசாலிங்க! ப்ளட் பார்த்தா பயந்து மயக்கம் போட்டு விழ மாட்டாங்கன்னுதான் இந்த மாதிரி படைச்சாரு! அதனால நாம இதைப் பார்த்து பயப்படக் கூடாது! வாடா, வாடா ப்ளட்! நீயா நானான்னு பார்த்துடலாம்னு அது முடிஞ்சு போகிற வரைக்கும் தெம்பா, கெத்தா இருக்கனும்!”
“சரிக்கா! ஆனா என் கிளாஸ்ல எனக்கு மட்டும்தான்கா இப்படி! மத்த கேர்ஸ்லாம் என்னை ஒரு மாதிரி பார்க்கறாங்க!”
“பார்க்கட்டுமே! அதை நெனைச்சி நீ பெருமைத்தான் படனும் செம்பா குட்டி! இந்த ப்ளட் உனக்கு இப்ப வந்திடுச்சி! அவங்களுக்கு நாளைக்கோ, நாலன்னிகோ, இல்லா அடுத்த மாசமோ, எப்பவோ ஒரு நாள் வந்திடும்! அப்போ அவங்க அழறப்ப, நீ கெத்தா போய் நின்னு, இது இப்படித்தான் வரும்! இது வந்தா இப்படி இப்படி செய்யனும்னு அட்வைஸ் பண்ணலாம்! இப்போ உன்னை ஒரு மாதிரி பார்க்கறவங்களாம் அந்த டைம்ல உன்னை கடவுள் மாதிரி பார்ப்பாங்க!”
“சூப்பர்க்கா! ஆனா வயிறு வலிக்குதுக்கா!”
“செம்பா குட்டி! இந்த வயித்து வலி, இடுப்பு வலிலாம் எல்லாருக்கும் வரும்டா! ரொம்ப எரிச்சலாவோ, வலியாவோ இருக்கறப்போ, ‘நாமலாச்சும் பரவால்ல, இந்த மாதிரி டைம்ல கூட டாக்டரம்மா, நர்ஸம்மா, போலீஸ்காரம்மா, தெரு கூட்டிப் பெருக்கற அம்மா, டாய்லட் கழுவற அம்மாலாம் வேலைக்குப் போறாங்களே அவங்களுக்கெல்லாம் இன்னும் எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு’ நெனைச்சி நம்மள நாமே தேத்திக்கனும்!”

Author: VanishaAdmin
Article Title: Jagam Nee--EPI 9
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.