அத்தியாயம் 11
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் உன் வாசல் என் பூங்காவனம்!
தூக்கத்தில் தன்னைத் தாண்டி ஓர் உருவம் நகர்ந்து போவதை உணர்ந்த செந்தாமரை பட்டென விழித்துக் கொண்டாள்.
“என்னடா பூக்குட்டி?” எனக் கட்டிலை விட்டு இறங்கிக் கொண்டிருந்த பூந்தென்றலைக் கேட்டாள் இவள்.
“ஓன் பாத்ரூம் சித்தி!” எனச் சொல்லியவள் தூக்கக் கலக்கத்தில் தடுமாறினாள்.
“நைட்டுல பாத்ரூம் போகறதுனா, சித்தியை எழுப்புங்கம்மா! தனியா தூக்கக் கலக்கத்துல போகாதீங்க” என்றவள், சின்னவளைத் தூக்கிக் கொண்டாள்.
பூந்தென்றல் பாத்ரூம் சென்று வர, மீண்டும் அவளைத் தூக்கிக் கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்துத் தட்டிக் கொடுத்தாள் தாமரை. சில நிமிடங்களிலேயே தூங்கி விட்டாள் பூக்குட்டி. அதன் பிறகே சின்னவளின் பக்கத்தில் அவள் அப்பா இல்லாததைக் கவனித்தாள் இவள். கடிகாரத்தைப் பார்த்தால், மணி விடிகாலை இரண்டு எனக் காட்டியது.
“எனக்கு முன்னாடித்தானே வந்து படுத்தாரு! ஆள காணோம் இப்போ!” என முணுமுணுத்தாள் செந்தாமரை.
இப்பொழுதெல்லாம் சின்னவளைத் தூங்க வைத்து விட்டு, விழித்துதான் இருப்பாள் செந்தாமரை. அறை கதவை லேசாய் திறந்து வைத்து, கீழ் தளத்தில் வாசற்கதவு திறக்கிறதா எனக் கவனித்தபடியே பாடங்களைத் திருத்தும் வேலையைப் பார்ப்பாள். தினகரன் வந்து விட்டான் எனத் தெரிந்தால், மகளுக்கு அணைவாக இரு பக்கமும் தலையணைகளை வைத்து விட்டுக் கீழிறங்கி வந்து விடுவாள்.
இவளைப் பார்த்தவுடனே எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அவன் முகத்தில்.
“எத்தனை தடவை சொல்றது நானே போட்டுச் சாப்பிட்டுப்பேன்னு! இப்படி எனக்காகக் காத்திருந்தேன்னா, இனி நைட்டு சாப்பிடாமலே படுத்துடுவேன் தாமரை” எனப் பெயருக்கேற்றது போல காய்வான் தினகரன்.
அமைதியாய் தட்டை எடுத்து வைத்து உணவைப் பரிமாறி விட்டு,
“சாப்பிடுங்க மாமா! நான் உங்கள எந்த விதத்துலயும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்!” எனச் சொல்லி விட்டுத் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து விடுவாள் இவள்.
முறைத்துக் கொண்டே சாப்பிட அமர்வான் இவன். தாமரைக் கண்டுக் கொள்ளாமல் எதாவது சீரியலைப் பார்ப்பது போல அமர்ந்திருப்பாள். பார்வை சீரியலில் இருந்தாலும், கவனம் மாமன் மேல் இருக்கும். தினகரன் சாப்பிட்டு எழும் நேரம் அருகே வந்து விடுவாள் தாமரை.
அச்சுப் பிசகாமல் தினம் இதே வசனம்!!
“பூக்குட்டி தனியாப் படுத்திருக்கா! நீங்க போங்க மாமா, நான் எடுத்து வச்சிடறேன்” என்பாள் இவள்.
அவனும் அச்சுப் பிசகாமல்,
“நன்றி தாமரை!” எனச் சிடுசிடுப்பாகச் சொல்லி விட்டுப் போவான்.
‘நன்றியைக் கூட நறநறப்பா சொல்ல இந்த மாமாவால மட்டும்தான் முடியும்!’ என எண்ணியபடியே கிச்சனை சுத்தம் செய்து விட்டு மேலே வருவாள் செந்தாமரை.
தூங்கும் முன் இவள் சொல்லும் குட் நைட்டுக்கு இரண்டு ஹ்ம்ம், ஹ்ம்ம் மட்டும் பதிலாய் வரும். காலை வேளைகளில் இவள் தொல்லையில் இருந்து அவனுக்கு விடுதலை. தூங்குபவனை எழுப்பி, பணிவிடை செய்கிறேன் பேர்வழி எனப் படுத்துவதில்லை இவள். தினகரைத் தூங்க விடுவதே பணிவிடைதான் எனும் நல்ல எண்ணம் கொண்டவள் மகளைக் கிளப்பி, தானும் கிளம்பி விடுவாள்.
லன்ச் நேரத்தில் இவள் சாப்பிடும் முன்,
“சாப்டீங்களா மாமா?” என ஒரு மேசேஜ் போட்டு விடுவாள்.
ஆரம்பத்தில் இரண்டு நீல டிக் காட்டினாலும் பதில் வராது. சோர்ந்து போகாது விடாமல் இவள் தினம் மேசேஜ் போட,
“ஹ்ம்ம்!” எனும் பதில் வர ஆரம்பித்திருந்தது.
பெண்கள் மட்டும்தான் ஹ்ம்ம் என மேசேஜ் செய்வார்கள் என யார் சொன்னது? நம் தினகரும் ஹ்ம்ம்மை செம்மையாகப் பயன்படுத்துவான். ஒன்றும் இல்லாததற்கு இந்தப் பதிலே மேல் என விட்டு விட்டாள் தாமரை.
சனி, ஞாயிறுதானே கடை வைத்திருப்பவர்களுக்கு வியாபார நாள்! ஆகவே வார இறுதிகளில் இவனுமே பிசியாகத்தான் இருப்பான். அந்த பிசியிலும் ஞாயிறு காலை தாமதமாகக் கடைக்குக் கிளம்புவான். மகளுடன் எழுந்து, சற்று நேரம் அவளோடு தோட்டத்தில் விளையாடி, அவனாகவே அவளைக் குளிக்க வைத்து, உணவுப் போட்டுக் கொடுத்து எனக் கிடைக்கும் சொற்ப நேரத்தையும் அவளுடன் செலவிடுவான். அதோடு அன்றைய தினம் மாலை ஐந்து மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து விடுவான்.
மால், பார்க், பீச், ஹோட்டல் என எங்காவது அவளை அழைத்துப் போய் வருவான் தினகரன். மகளுக்குப் பிடித்த உணவு வகைகள்தான் அன்றைய மெனு! தாமரை இல்லாத வரை இருவராய் போனவர்கள், இப்பொழுது இவளையும் தங்கள் கூட்டுக்குள் இணைத்துக் கொண்டார்கள். அந்தப் பொழுதுகளில் அவனது கவனம் முழுவதும் மகளிடம்தான் குவிந்திருக்கும். இவள் ஒப்புக்குச் சப்பாணிதான்!
தாமரை அவனை நெருங்கி வர முயல, முன்பிருந்த நக்கல், நையாண்டி, கிண்டல் எல்லாம் அறவே விட்டுப் போயிருந்தது அவனிடம். அவசிய, அவசரத் தேவைக்கு மட்டுமே மகளுக்குச் சித்தியாய் வந்தவளிடம் பேசினான் தினகரன்.
தாமரைக்கு மனதே விட்டுப் போனது! சாண் ஏறினால் முழம் சறுக்கியது. பூவைத் தேடி வண்டு வருவதுதானே இயற்கை! தாமரைப்பூ தினகர் வண்டைத் தேடிப் போவது கேவலமாய் இல்லையா என மனசாட்சி கேள்விக் கேட்டுத் துப்பியது! மூளையோ இந்தக் காலத்தில் எல்லாம் இயற்கையாகவா நடக்கிறது என எகிறிக் கொண்டு வந்தது! ஆனானப்பட்டக் குழந்தைப் பிறப்பே செயற்கையாய் நடக்கும் போது, ஆண் ஆணை சைட்டடிக்கும் போது, பெண் பெண்ணை டாவடிக்கும் போது, குமரி குமரனைத் தேடி போவதில் என்ன குற்றம் என பாயிண்ட் பாயிண்ட்டாக எடுத்துக் கொடுத்தது அது!
‘நான் என்ன மேட்டர் வேணும்னா மாமனைத் தேடி போறேன்! மேட்டர்லாம் இப்போதைக்கு மேட்டர் இல்ல, டாட்டருக்காக குவாட்டரும் வாட்டரும் போல நட்பா இருப்போம்னுதானே தேடிப் போறேன்! இது ஏன் அவருக்குப் புரிய மாட்டுது? என்னை ஒதுக்கி வச்சா, வளர வளர அவளுக்கு என் மேல எப்படி அட்டாச்மேண்ட் வரும்! சித்திங்கறவ நமக்கு அம்மா மாதிரின்னு எப்படி மனசுல ஆழமா நிக்கும்?’ எனப் பல எண்ணங்கள் இவள் மனதை அலைக்கழித்தன.
தானாகக் கனிய வேண்டியதைத் தடியெடுத்து அடிப்பது சரியா? கல்யாணமாகி சில மாதங்கள்தானே ஆகி இருக்கின்றன. ஆரம்பத்திலேயே அவன் கேட்டிருந்த டைமை கொடுத்தால்தான் என்ன எனவும் மனது யோசித்தது.
அடிக்கடி அன்னபூரணி வேறு போன் போட்டு, கேள்விக் கணைகளாய் தொடுத்து என்னதான் நடக்கிறது அங்கே எனத் துப்புத் துலக்கினார்.
“விட்டுப் புடிக்கறதுலாம் சரி வராதுடி தாமரை! அப்படியே கைய விட்டுப் போய்டுவாங்க! சூட்டோட சூடா முந்தானையில முடிஞ்சுக்கனும்! இல்லைனா, இந்த ஒதுக்கமும், விலகலும் பழகிப் போய்டும்! ஒரு பொண்ணால முடியாததுன்னு எதாச்சும் இருக்கா என்ன? சுத்தப்பத்தமா குளிச்சு, மல்லிப்பூ வச்சி, அழகா உடுத்திக்கிட்டு, சிரிச்ச முகமா போய் நின்னா மயங்காத ஆம்பளைன்னு எவனாச்சும் இருப்பானா? கல்யாணம்தான் பண்ணி வைக்க முடியும்! கண்டதையுமா சொல்லிக் குடுக்க முடியும்?” என இவளைப் படுத்தி எடுத்து விடுவார்.
அதியமானோ மருமகள் மகனைக் கவனித்துக் கொள்வதைப் பார்த்து, மிக சந்தோஷமாக வளைய வந்தார். தாமரை, அம்மா தாமரை எனப் பாசத்தைப் பொழிந்தார்.
கந்தனோ போன் போடும் போதெல்லாம்,
“மாப்பிள்ளை உன்னைச் சந்தோஷமா வச்சிருக்காராம்மா?” எனக் கேட்பதை விடுவதில்லை.
அவரது கேள்வியில், பேரப் பிள்ளை ஆசை ஒளிந்திருப்பதை உணர்ந்து கொண்டவளுக்குத் தலையிடியாய் இருந்தது. இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக் கடல் மூன்றும் கன்னியாகுமரியை முட்டி மோதுவது போல, அன்னபூரணி, கந்தன் மற்றும் அதியமான் எனும் மூன்று பெருந்தலைகளும் கன்னியிவளை முட்டி மோதின!
‘என்னை விட்ருங்கடா சாமி! நான் தலையில துண்டைப் போட்டுட்டு துறவரம் போய்டறேன்’ எனக் கத்த வேண்டும் போல் இருந்தது பெண்ணுக்கு.
தூங்கும் மகளையே பார்த்தபடி படுத்திருந்தவளுக்கு மனது கேட்கவில்லை.
‘எங்கே போனாங்க இந்த மாமா?’ என யோசித்தபடியே படுக்கையை விட்டு எழுந்தாள்.
விடிவிளக்கின் வெளிச்சத்தில் அறையைச் சுற்றிப் பார்க்க, பால்கனிக்குப் போகும் கதவு லேசாய் திறந்திருந்தது.
“மழை லேசா தூத்தல் போட்டுட்டு இருக்கறப்ப மொட்டை மாடில இவருக்கு என்ன வேலை?” என முனகியவள் பால்கனி வழியே வெளியேறி சைட்டில் இருக்கும் படி வழி மொட்டை மாடிக்குப் போனாள்.
மொட்டை மாடியில், பூந்தொட்டிகளில் சின்னது பெரியது எனப் பல வகையான பூச்செடிகள் நட்டு வைத்திருந்தார்கள். அதோடு சாய்வாய் அமர்வது போல கல் பெஞ்சும் இருந்தது அங்கே. அதில் அமர்ந்தபடி கும்மிருட்டாய் தெரிந்த வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான் தினகரன். அவன் கையில் பியர் பாட்டில். காலுக்கு அடியில் குடித்து முடித்திருந்த ஐந்தாறு பாட்டில்கள் கிடந்தன. மெல்லியக் குரலில் அவன் பாடியப் பாடல், அவ்விடம் பேரமைதியாய் இருக்க, இவள் காதுகளில் தெளிவாக விழுந்தது. தினகரனை நெருங்கிப் போகாமல், தூரமாகவே நின்று அவனைப் பார்த்தபடி இருந்தாள் செந்தாமரை.
“ஏன் தேவி இன்று நீ
என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி
தூங்கச் சொல்கிறாய்” என உருக்கமாய் கேட்ட அவன் குரலில் இவள் கண்களில் கண்ணீர் அதன் பாட்டுக்கு வழிந்தது.
தூரல் மழை இவள் கண்ணீரைப் போலவே பெரு மழையாய் வலுக்கத் தொடங்க பெருமூச்சுடன் எழுந்து கொண்டவள், தினகரனை நோக்கிப் போனாள்.
“மாமா”
பட்டெனத் திரும்பிப் பார்த்தான் அவன்.
“லோட்டஸ்!” எனக் கோணல் சிரிப்புடன் உச்சரித்தான் தினகரன்.
“மழை வேகமா வருது மாமா! வாங்க உள்ள போகலாம்!”
“நோ!! சூரியன் சூடா இருக்கேன்! மழையாச்சும் என்னை குளிர வைக்கட்டும்” எனத் தலையை ஆட்டியபடியே சொன்னான் இவன்.
அவன் கையைப் பிடித்து இழுத்தாள் தாமரை. மலையை மலர் இழுக்க முடியுமா? அசைக்கவே முடியவில்லை அவனை.
“வாங்க மாமா!”
“வர மாட்டேன்! வேணும்னா நீ இங்க வா!” என அவன் இழுக்க, மன்னவன் மடியில் போய் தொப்பென விழுந்தாள் இவள்.
“அவ்வ்வ்! மெதுவா தாமரை, மெதுவா! குடும்பக் கட்டுப்பாடு பண்ணி விட்டுறாதே! பூக்குட்டிக்கு தம்பியோ தங்கச்சியோ வர வேணாமா? அந்தப் புள்ளைய பூச்சட்டினோ பூந்தொட்டினோ நாம கூப்பிட வேணாமா?” எனக் குளறியபடி கேட்டவனின் புஜத்தில் படபடவென அடித்தாள் இவள்.
அவள் அடியையெல்லாம் கொசுக்கடியைப் போல புறம் தள்ளியவனின் தலை தள்ளாடியது! சரிந்து அவள் கழுத்தில் முகம் வைத்துக் கொண்டவன், கீழே விழுந்து விடாமல் இருக்க இறுக்கமாய் இவளைப் பிடித்துக் கொண்டான்.
“விடுங்க மாமா”
“உன்னை ஒன்னுமே செய்யாம விட்டுத்தானே வச்சிருக்கேன்! அந்த விஷயத்துல நான் ரொம்ப ஸ்ட்ராங்! அது உங்கக்காவுக்குத்தான் தெரில லோட்டஸ்!” என்றவன் உதட்டை அவள் கழுத்தில் அழுத்த,
“அநியாயம் பண்ணாதீங்க மாமா” என உலுக்கினாள் இவள்.
“நான் என்ன அநியாயம் பண்ணேன்! பண்ணதெல்லாம் உங்கக்கா! வேணாம் வேணாம்னு நான் சொல்ல, உன்னை என் தலையில கட்டி வச்சிட்டா! டார்ச்சர்டி நீங்க ரெண்டு பேரும்! மனுஷனுக்கு நிம்மதி போச்சு, நித்திரையும் போச்சு!” என்றவனின் உதடுகள் கழுத்தில் இருந்து இவள் கன்னத்தில் வந்து இளைப்பாறியது.
“வேணாம் மாமா” என இவள் திக்கித் திணற,
“வேணாம், வேணாம்னுதான் நானும் கத்தினேன் தாமரை! கதறினேன் தாமரை! கேக்கலியே உங்கக்கா! இப்போ பாரு! உன்னை ஒட்டிக்கவும் முடியல! ஒதுக்கவும் முடியல! என்னை மன்னிச்சிரு தாமரை! என்னை மன்னிச்சிரு!” என்றவனின் உதடுகள் கீழே நகர்ந்து போய் அவள் உதடுகளோடு ஒட்டிக் கொண்டன.
“தாமரை” என அவள் உதட்டைத் தன் உதடுகளால் உரசியபடியே அழைத்தவன்,
“தள்ளி விட்டுரு தாமரை என்னை! ப்ளிஸ்!” என மன்றாடினான்.
தினகரனின் கண்களில் மழை பொழிவைப் பார்த்தவள், அவன் முகத்தை இரு கரங்களால் பற்றித் தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டாள்.
“இனிமே உங்களை டார்ச்சர் பண்ண மாட்டேன் மாமா! நீங்க நிம்மதியா இருங்க!” என அழுகுரலில் சொன்னவள் அவன் முதுகை மெல்ல வருடி விட்டாள்.
அணைத்தபடி அழுகையில் கரைந்த இரு ஜீவன்களை மழை மகள் அன்பாய் அரவணைத்துக் கொண்டாள்.
அடுத்து வந்த சில நாட்களில்,
“மனுஷன் எத்தனை மணிக்கு வரான், என்ன சாப்பிடறான், எத்தனை மணிக்குப் போறான்னுலாம் கவனிக்க இந்த வீட்டுல யாருக்கு அக்கறை இருக்கு! கல்யாணம்னா கமிட்மெண்ட்! அதெல்லாம் இங்க யாருக்குப் புரியுது” என இவன் சண்டையை ஆரம்பிக்க,
‘எண்ட குருவாயுரப்பா! ஈ லோகத்தில் கணவன்னு ஒருத்தன கட்டி காவி கட்டிப் போகப் போறவ நான் ஒருத்தியாத்தான் இருப்பேன்னு நெனைக்கறேன்! இந்த வீணாப் போன வீட்டுக்காரன் கிட்ட இருந்து என்னைத் தப்பிக்க வை! இந்த மண்டைக் கிறுக்குப் புடிச்ச மணாளன் கிட்ட இருந்து என்னை சேவ் பண்ணு! இந்தக் கடுவன் பூனைக் கண்ணாளன் கிட்ட இருந்து என்னைக் காப்பாத்தி விடு! ப்ளிஸ் காட்!’ என நொந்து போனாள் செந்தாமரை.

Last edited:
Author: VanishaAdmin
Article Title: Pirithor Nesamithu--EPI 11
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.