அத்தியாயம் 13
பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத்தானே எனக்குத்தானே!!!
“மாப்பிள்ளை”
“சொல்லுங்க மாமா”
“புள்ளைய வேணும்னா இங்க கூட்டிட்டு வந்து நான் வச்சிப் பார்த்துக்கவா? அம்மா இல்லாத பொண்ணு! நான்தானே அம்மாவுக்கு அம்மாவா, அப்பாவுக்கு அப்பாவா பார்த்துக்கனும்” எனத் தொலைபேசி அழைப்பில் இருந்த கந்தன் குரல் தளுதளுக்கப் பேசினார்.
பெருமூச்சு எடுத்து விட்ட தினகரன்,
“மாமா! அவளுக்கு லேசாதான் காலுல ஃப்ரக்சர்! வீட்டுல இருந்து ரொம்ப நடக்காம ஓய்வெடுத்தாலே சரியாகிடும்னு டாக்டர் சொல்லிட்டாரு. இன்னிக்கு டிஸ்சார்ஜ் கூட பண்ணிடுவாங்க! இங்கருந்து அவள திருச்சிக்கு அலைய விடனுமா மாமா? நான் பார்த்துக்க மாட்டேனா?” எனக் கேட்டான்.
“அச்சோ! அப்படி நான் சொல்ல வரல மாப்பிள்ளை! நீங்க நல்லாவே பார்த்துப்பீங்கன்ற நம்பிக்கை இருக்கு! சாரி மாப்பிள்ளை! ரொம்ப சாரி இப்படிக் கேட்டதுக்கு” எனத் தடுமாறினார் கந்தன்.
“என்ன மாமா என் கிட்ட சாரிலாம் கேட்டுக்கிட்டு! நீங்க கவலைப்படாம இருங்க! தாமரைய நான் கவனிச்சுக்கறேன்” என இவன் சமாதானமாய் சொல்ல, கந்தனின் பின்னால் இருந்து அன்னபூரணி,
“உங்க பொண்ணுக்கு ஒன்னுன்னா புருஷன் அவருதானே பார்க்கனும்! தாலி கட்டுறப்பவே தாமரை மாப்பிள்ளையோட பொறுப்புன்னுதானே கட்டிக் கொடுத்தோம்! பிறகென்ன இந்தச் சோக கீதம்? ஃபோன இங்க குடுங்க” என வாங்கிக் கொண்டார்.
“மாப்பிள்ளை” என அன்னபூரணி அழைக்க,
“சொல்லுங்கத்தை” என்றான் இவன்.
“இப்போதைக்கு எங்களால அங்க வர முடியாது! உங்க ரெண்டு மாமாவுக்குமே லீவு கிடைக்காது! கல்யாணத்துக்கு நெறய லீவு எடுத்துட்டாங்கல்ல! நான் வரலாம்னா, இவங்க ரெண்டு பேரும் சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவாங்க! அதனால” என அவர் இழுக்க,
“புரியுது அத்தை! விஷயத்தை சொல்ல மட்டும்தான் போன் பண்ணேன்! நாங்க சமாளிச்சிருவோம்” என்றான் தினகரன்.
“சரிங்க மாப்பிள்ளை! நான் போனை வச்சிடறேன்” என அழைப்பைத் துண்டித்தவர், கந்தனை ஒரு பிடி பிடித்து விட்டார்.
“அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு பிடிப்பு வர வேணாமா தம்பி? தன் புருஷன்னு தாமரைக்கும், தன் பொண்டாட்டின்னு மாப்பிள்ளைக்கும் தோணணும்ல! சந்தோஷ தருணத்த விட, இது போல கஷ்ட காலங்களிலதான் உறவு வலுப்படும்! பெத்தவங்களான நாம மனச கல்லாக்கிக்கிட்டு கொஞ்சம் தள்ளித்தான் நிக்கனும்” என அவர் சொல்ல, கந்தன் ஆமோதிப்பாகத் தலையை ஆட்டிக் கொண்டார்.
அங்கே சென்னையில், தாமரை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை அறைக்கு வெளியே நின்றிருந்தான் தினகரன். முந்தைய நாள் தாமரையைக் கொண்டு வந்து இந்தத் தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தான். வலது காலில் அதீத வலி இருக்க, எக்ஸ்ரே எல்லாம் எடுத்துப் பார்த்து, சின்னதாய் எலும்பு முறிவு எனச் சொல்லி கணுக்காலில் மாவு கட்டுப் போட்டு விட்டிருந்தார்கள். அன்றிரவு அவளை அவதானிப்பதற்காக மருத்துவமனையிலேயே தங்க வைத்து விட்டார்கள்.
“நாங்க ஓடிப் பிடிச்சு விளையாடிட்டு இருந்தோம்பா! செடிக்கு விட்டத் தண்ணி தரைல இருக்கறத பார்க்காம சித்தி அதுல வழுக்கி விழுந்துட்டாங்க! நான் கூப்பிட கூப்பிட ஹ்ம்ம் சொல்லவே இல்லை சித்தி! அம்மா மாதிரி சித்தியும் சாமிக்கிட்டப் போய்டுவாங்களாப்பா?” என அழுகையுடன் கேட்ட மகளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான் தினகரன்.
“சித்திக்கு ஒன்னும் இல்லடாம்மா! இன்னும் த்ரீ வீக்ஸ்ல உன் கூட ஓடி விளையாடுவாங்க!” எனச் சொல்லி மருந்து மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் தாமரையைப் பார்க்க அழைத்துப் போனான்.
அவள் அருகே போய், நெஞ்சம் ஏறி இறங்குவதைப் பார்த்த பின்தான் பூக்குட்டியின் முகத்தில் வெளிச்சம் வந்தது.
“அப்பா! சித்தி மூச்சு விடறாங்க! சாமி கிட்ட போக மாட்டாங்க” என்ற மகளைத் துயரத்துடன் பார்த்தான் தினகரன்.
சிறு குழந்தைகளுக்கு நெருங்கியவர்களின் இறப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என நாம் நிம்மதி பெருமூச்சு விடும் போது, இப்படியான நேரங்களில் அவர்களின் பயம் வெளிப்பட்டு விடுகிறது.
கட்டிலின் அருகே போய் தாமரையின் கன்னத்தில் முத்தமிட்டவள்,
“சித்தி! எழுந்துக்கோங்க” என அழைத்தாள்.
பட்டென மகளைத் தூக்கிக் கொண்ட தினகரன்,
“சித்தி தூங்கட்டும்மா! அப்பத்தானே உடம்பு நல்லா போகும். நீங்க தாத்தா கூட வீட்டுக்குப் போய்ட்டு நாளைக்கு வாங்க” என்றான்.
அதியமானும் மருத்துவமனைக்கு வந்து மருமகளைப் பார்த்துக் கவலையாகிப் போனார். சித்தி, சித்தி என அவளை விட்டுப் போக மாட்டேன் என அழுத மகளைச் சமாதானப்படுத்தித் தந்தையுடன் வீட்டுக்கு அனுப்பி விட்டிருந்தான் தினகரன்.
இரவெல்லாம் அவள் அருகில் நாற்காலியில் அமர்ந்தபடியே தாமரையின் முகத்தை வெறித்திருந்தான் இவன். நிவேதாவுடன் மருத்துவமனையில் இருந்த நாட்கள் வேறு நினைவுக்கு வர, மனதில் பெரும் வலி.
தாமரை மருத்துவமனையில் இருக்கும் விஷயத்தைத் திருச்சியில் உள்ளவர்களுக்குக் காலையில் சொல்லிக் கொள்ளலாம் என விட்டு விட்டான். இரவெல்லாம் அந்த மூன்று வயதானவர்களும் இவளையே நினைத்துத் தூக்கத்தைக் கெடுத்துக் கொள்வார்கள் என எண்ணி சொல்லவில்லை.
காலை மணி ஏழாகியும் தாமரை இன்னும் விழித்திருக்கவில்லை. ஒரே இடத்தில் அமர்ந்திருந்தது உடலெல்லாம் வலிக்க, எழுந்து ஸ்ட்ரேச் செய்தவன், கதவைத் திறந்து வெளியே போனான். காரிடாரில் நின்று கந்தனிடம் விஷயத்தைச் சொல்ல, அவர் அன்னபூரணியின் வீட்டில் இருக்க, அவருக்கும் சேர்த்தே பகிர்ந்திருந்தான். பேசி முடித்து விட்டு இவன் அறைக்குள் வர, அங்கே சுவரைப் பற்றியபடி மெல்ல எட்டு வைத்துக் கொண்டிருந்தாள் தாமரை.
அதைப் பார்த்ததும் கோபம் தலை உச்சிக்கு ஏறியது இவனுக்கு.
“ஏன்டி! அறிவுன்னு ஒன்னு இருக்கா, இல்லை அதெதுக்குத் தெண்டமான்னு அடகு வச்சிட்டியா?”
ஏற்கனவே வலியில் இருந்தவள், அவனது கோபக் குரலில்,
“ஏன் உங்களுக்கு அறிவு இல்லையா? என்னோடது கடனா வேணுமா? சாரி! என் அறிவா இருந்தாலும் சரி, அன்பா இருந்தாலும் சரி பாத்திரம் அறிஞ்சுத்தான் குடுப்பேன்! பாத்திரக் கடைக்காரனுக்குக் குடுக்க மாட்டேன்!” எனச் சீற்றமாய் சொன்னாள்.
அவளது வார்த்தைகள் சுருக்கென இவன் இதயத்தைத் தைத்தன. முயன்று அமைதியைக் குரலில் கொண்டு வந்தவன்,
“டாக்டர் ரொம்ப நடக்கக் கூடாதுன்னு சொல்லிருக்காரு தாமரை!” என்றான்.
“எனக்கு பாத்ரூம் போகனும்” எனச் சுவரில் சாய்ந்தபடி சொன்னாள் இவள்.
தாமரையின் அருகே வந்தவன், அலேக்காய் அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டான்.
“விடுங்க என்னை!”
“பாத்ரூம்ல விடறேன்”
அவளை பாத்ரூமில் இறக்கி விட்டவன்,
“முடிஞ்சதும் கூப்பிடு! நான் வெளிய வெய்ட் பண்ணறேன்” எனப் போய் விட்டான்.
இரண்டடி எடுத்து வைத்ததுக்கே கால் வலி தாங்க முடியாததாக இருந்தது. காலைக் கடன்களை முடித்து, பல் துலக்கியவள் கதவைத் தட்டினாள். மீண்டும் அவளைத் தூக்கிக் கொண்டவன், கட்டிலில் போய் இறக்கி விட்டான். என்னவோ சாக்கு மூட்டைப் போல தூக்கி இறக்கியவனை ஓரக் கண்ணால் பார்த்தாள் இவள்.
அவளுக்குக் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்த உணவை ட்ரேயில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் தினகரன். அவன் முகம் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல் நிர்மலமாக இருந்தது.
ட்ரேயை அவள் அருகே கொண்டு போய் கொடுத்தவன்,
“சாப்பிடு தாமரை” என்றான்.
அவன் மேல் கோபம் இருந்தாலும்,
“உங்களுக்கு?” எனக் கேட்டாள் இவள்.
“அப்பா எடுத்துட்டு வருவாங்க! நீ முதல்ல சாப்பிடு”
“இந்தக் காபியையாச்சும் குடிங்க! ப்ளிஸ்” என்றாள் செந்தாமரை.
அவனுக்கும் இரவெல்லாம் தூங்காததால் தலை வலிக்க ஆரம்பித்திருந்தது. காபியை எடுத்துக் கொண்டவன், நாற்காலியில் அமர்ந்து பருகினான்.
அதற்கு மேல் இருவரும் எதையும் பேசிக் கொள்ளவில்லை. டாக்டர் வந்து இவளைப் பரிசோதித்து, காலை ஸ்ட்ரேய்ன் செய்யக் கூடாது எனச் சொல்லி டிஸ்ச்சார்ஜ் செய்து விட்டார்.
“அப்பாவும், பூக்குட்டியும் வந்திருவாங்க! நீ எழுந்து நடக்காம இங்கயே இரு! நான் போய் பில் கட்டிட்டு மருந்தெல்லாம் வாங்கிட்டு வரேன்” என எழுந்தான் தினகரன்.
“என் கார்ட் எடுத்துக்கோங்க! பில்ல அதுல இருந்து கட்டிடுங்க” என்றாள் இவள்.
“தாமரை!” எனக் கோபமாக அவள் பெயரைக் கடித்துத் துப்பினான் தினகரன்.
“என் செலவுக்கு நான்தான் சம்பாதிக்கனும்னு என் புருஷர் சொல்லி இருக்காரு! அதனால என் பணத்துலயே கட்டுங்க” எனச் சுவரை வெறித்தபடி சொன்னாள் செந்தாமரை.
“உன் புருஷன் ஒரு கூறு கெட்டக் குப்பன்! அவன் சொன்னதை எல்லாம் என்னால கேக்க முடியாது” எனச் சொல்லியவன் மேசையில் இருந்த அவனது வாலட்டை எடுத்துக் கொண்டு விடுவிடுவென வெளியேறினான்.
அவனது பேச்சில் இவளுக்குச் சிரிப்பு வந்தது. முகத்தை அவனுக்குக் காட்டாமல் வேறு புறம் திருப்பிக் கொண்டாள் தாமரை. முந்தைய தினம் அவளுக்கொரு கண் திறப்பாக அமைந்திருந்தது. தினகரின் துடிப்பு, படபடப்பு, நெற்றியில் பதித்த ஈர முத்தம், அணைத்துப் பிடித்திருந்த பாங்கு எல்லாம் அவனது அன்பைப் பறைசாற்றி இருந்தது.
“என் மேல அன்பு பாசம்லாம் இருக்கத்தான் செய்யுது இந்த மாமாவுக்கு! ஆனா வார்த்தைகளில மட்டும் முள்ளைக் கட்டி வீசறது! இப்போ நான் திருப்பிக் குடுத்தப்ப உங்களுக்கு வலிச்ச மாதிரித்தானே எனக்கும் ஒவ்வொரு முறையும் வலிச்சிருக்கும்!” என முணுமுணுத்தவள் மெல்ல கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள்.
மேசையில் வைக்கப்பட்டிருந்த அவளது தொலைபேசியை எடுத்து பள்ளிக்கு அழைத்து விவரத்தைச் சொன்னாள். சற்று முன்தான் தினகரன் கால் செய்து மெடிக்கல் லீவ் சொன்னதாக அசிஸ்டண்ட் பிரின்சிபல் சொல்ல, சற்று நேரம் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தாள். அதன் பிறகு கந்தனுக்கும், அன்னபூரணிக்கும் அழைத்து அடி பலமில்லை எனச் சமாதானம் சொன்னாள் தாமரை.
“சரிம்மா தாமரை! உன்னை கூட இருந்து பார்த்துக்க முடியலையேன்னு மனசு கஷ்டமா இருக்கு! என்ன பண்ண! எங்க நிலமை அப்படி! காலை தேவையில்லாம அசைச்சு சின்ன வலியை பெரிய வலியா மாத்திக்காதே! என்ன ஹெல்ப்பு வேணும்னாலும், குளிக்கக் கொள்ள, சாப்பிட இப்படி எதுனாலும் மாப்பிள்ளை உதவியைக் கேளு! பெரிய பருப்பு மாதிரி எல்லாத்தையும் நீயா செய்யாதே” என அதட்டலாய் சொன்னார் அன்னபூரணி.
சரி, சரியெனப் பேசி வைத்தவள்,
“இந்தப் பெரியம்மா இன்னும் பத்து மணி டாக்டர் வேலைய மட்டும்தான் பார்க்கல! மத்தபடி டைரக்டாவும், இண்டைரக்டாவும் என்னைத் தினகர் மாமா மடில புடிச்சுத் தள்ளாத குறைதான்!” எனப் பல்லைக் கடித்தாள்.
“சித்தி” எனும் ஆர்ப்பரிப்பில் புன்னகையுடன் அறை கதவைப் பார்த்தாள் செந்தாமரை.
கையில் லைட் ப்ரவுண் வர்ண பெரிய டெடி பேருடன் ஓடி வந்தாள் பூந்தென்றல். அவள் பின்னால் உணவுப் பாத்திரங்களுடன் வந்தார் அதியமான். தாமரையை நெருங்கி அவள் கழுத்தைக் கட்டிக் கொண்ட பூக்குட்டி,
“ஐ மிஸ் யூ சோ மச் சித்தி! இப்போ காலு எப்படி இருக்கு? நைட்டு உங்கள கட்டிப் புடிச்சு தூங்காம எனக்குத் தூக்கமே வரல” என உதட்டைப் பிதுக்கினாள்.
சின்னவளை ஆதரவாய் அணைத்துக் கொண்ட தாமரை,
“கால் இப்போ ஓகேம்மா! லேசாத்தான் வலிக்குது! நைட்டு சித்தியும் பூக்குட்டிய ரொம்ப மிஸ் பண்ணேன்” என்றாள்.
“சித்தி! கெட் வெல் சூன்” என டெடி பொம்மையை அவளிடம் நீட்டினாள் பூந்தென்றல்.
“அம்மாடியோய்! இந்த அழகான டெடி எனக்கே எனக்கா?” எனப் புன்னகையுடன் அதை வாங்கிக் கட்டிக் கொண்டாள் இவள்.
“அது வந்து சித்தி..” என இழுத்தப் பூக்குட்டி,
“காலு நல்லா ஆகற வரைக்கும் இந்த டெடி உங்களுக்கு! அப்புறம் எனக்கு! நீங்கதான் பிக் கேர்ள்ல! இது கூட ரொம்ப விளையாட மாட்டீங்கல்ல” என தலைச் சரித்து சொன்னவளுக்குச் சிரிப்புடன் முத்தங்களை அள்ளி வழங்கினாள் செந்தாமரை.
பெண்கள் இருவரையும் புன்னகையுடன் பார்த்திருந்த அதியமான்,
“பொம்மை வாங்கிட்டுத்தான் உன்னைப் பார்க்க வரனும்னு ஒரே அடம்மா உன் பொண்ணு!” எனச் சொன்னவர் அவளது நலத்தையும் விசாரித்துக் கொண்டார்.
“தினகரு எங்கம்மா?”
“இப்போ கிளம்பிடலாம் சொன்னாங்க. பில் கட்ட போயிருக்காரு மாமா!”
“இன்னிக்கு வீட்டுக்கு வந்திருவீங்களா சித்தி! ஐ ஜாலி! ஜாலி!” எனக் குதித்தாள் பூந்தென்றல்.
பில் செட்டில் செய்து விட்டு, வீல்சேருடன் அறைக்கு வந்தான் தினகரன்.
“கிளம்பலாமா?”
“சாப்பிடுங்க முதல்ல” எனச் செந்தாமரை சொல்ல, அதியமான் கொண்டு வந்திருந்த இட்லியை தட்டில் போட்டு உண்டான் தினகரன்.
அதன் பிறகே அந்தக் குடும்பம் வீட்டுக்குக் கிளம்பியது. வீட்டில் செந்தாமரைக்கு ராஜ உபசரிப்புத்தான். இவளை சாக்கிட்டு சின்னவள் பள்ளிக்குப் போக மாட்டேன் என நின்றாள்.
“நான் ஸ்கூல் போய்ட்டா உங்களுக்குத் தண்ணி யாரு எடுத்து குடுப்பா? உங்க கூட யாரு ஸ்னேக் அண்ட் லெடர் விளையாடுவா? யாரு கால் தடவி விடுவா?” எனத் தனது முக்கியத்துவத்தை நிலை நாட்ட முனைந்தவளை,
“சமையல் செய்யற அக்கா என்னைப் பார்த்துக்குவாங்க பூக்குட்டி! அதோட அப்பாவும் அப்பப்ப வந்து பார்த்துப்பாரு! நீ ஸ்கூல் போகலனா உன்னோட ப்ரேண்ட்ஸ்லாம் உன்னைக் காணமேன்னு ஃபீல் பண்ணுவாங்க! டீச்சர்லாம் உன்னை மிஸ் பண்ணுவாங்க” எனப் பலதையும் சொல்லி பள்ளிக்கு அனுப்பி வைத்தாள்.
காலையில் பாத்ரூமுக்குத் தூக்கிப் போய் விடுவது, அவளுக்கான உடைகளை எடுத்துக் கொடுப்பது, சீப்பு, பவுடர், பொட்டு போன்றவற்றை கட்டிலுக்கே கொண்டு வந்து தருவது, கீழ் மாடியில் இருந்து உணவு கொண்டு வருவது என மனைவிக்கு எல்லாமே செய்தான் தினகரன். அவன் வேலைக்குப் போகும் நேரங்களில் அதியமானும், வீட்டில் வேலைப் பார்க்கும் பெண்மணியும் உதவியாய் இருப்பார்கள். மொத்தத்தில் அந்தக் கட்டிலில் சிறை வைக்கப்பட்டாள் செந்தாமரை.
கால் கட்டுப்(திருமணம்) போட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டவளின் கால் கட்டைப் பார்க்க ஒரு வாரம் கழித்துக் கிளம்பி வந்திருந்தார்கள் திருச்சிக்காரர்கள்.
“பெரிம்மா, அப்பா!” என இவள் குதூகலிக்க,
“கண்ணு! செல்லம்!” என அவர்களும் பாச மழையைப் பொழிந்தார்கள்.
அவர்கள் வந்திருந்த தினம், பாட்டியுடன் விளையாடியபடியே விருந்தினர் அறையிலேயே தூங்கி விட்டாள் பூந்தென்றல். அவளைத் தூக்கிப் போக தினகரன் வர,
“எங்க கூட தூங்கட்டுமே மாப்பிள்ளை! எங்களுக்கே இந்த ப்ராப்தம்லாம் ஏதோ ஒரு சமயம்தான் வாய்க்குது!” என அன்னபூரணி தளுதளுக்க, மகளை விட்டு விட்டு மாடி ஏறிவிட்டான் இவன்.
திருமணமான தினத்திலிருந்து இதுதான் முதல் முறை கணவனும், மனைவியும் தனித்துப் படுப்பது. எப்பொழுதும் போல தாமரையைத் தூக்கிப் போய் பாத்ரூமில் விட்டு, மீண்டும் படுக்கையில் கொண்டு வந்து விட்டான் தினகரன். இருவருமே எதுவும் பேசிக் கொள்ளவில்லை. விளக்கை அணைத்து, விடி விளக்கைப் போட்டு விட்டு தனதிடத்தில் படுத்தான் இவன். காற்றாடி ஓடும் சத்தம் மட்டும்தான் கேட்டது அவ்வறையில்.
கண்களை மூடி உறங்க முயன்றாள் தாமரை. மெத்தை அசைவதையும், தினகரன் நகர்ந்து அவள் புறம் வருவதையும் உணர்ந்தவள் பட்டென விழிகளைத் திறந்து பார்த்தாள். மூச்சுக் காற்று அவள் முகத்தில் மோதும் அளவுக்கு நெருங்கிப் படுத்து, தாமரையையே விழி எடுக்காமல் பார்த்திருந்தான் தினகரன். அந்தப் பார்வையில் நெளிந்தாள் இவள்.
“என்ன மாமா?”
இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தவன், அவளது கன்னத்தில் மென்மையாய் கை வைத்து,
“தாமரை” என அழைத்தான்.
ஹ்ம்ம் எனச் சொல்ல முயன்றவளுக்கு வாயிலிருந்து வெறும் காற்றுதான் வந்தது.
கன்னத்தில் இருந்த கையை அவள் தலையில் வைத்து ஆதுரமாய் தடவிக் கொடுத்தவன்,
“உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் தாமரை!” என்றான்.

Last edited:
Author: VanishaAdmin
Article Title: Pirithor Nesamithu--EPI 13
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.