அத்தியாயம் 14
பூ பூக்கும் ஓசை
அதை கேட்கத்தான் ஆசை!!
பெண்களுக்கு எப்படியோ, திருமணப் பேச்சு எடுக்கப்படும் போது ஆண்கள் மனதில் ஒரு கிளுகிளுப்பும், கிளர்ச்சியும் ஏற்படுவது இயற்கையான ஒன்று. பெண்கள், கணவன் எப்படி இருப்பான், புகுந்த வீட்டு ஆட்கள் எப்படி நடந்து கொள்வார்கள், பெற்றோரை பிரிந்து வாழ்வது எப்படி, தாம்பத்திய உறவு எப்படி இருக்குமோ எனப் பல பிரச்சனைகளைப் பற்றி யோசித்து மண வாழ்க்கையை ஒரு பயத்துடனே அணுகுவார்கள்.
இந்தப் பிரச்சனை எல்லாம் பெரும்பாலான ஆண்களுக்கு இல்லை. இட மாற்றம், வாழ்வியல் மாற்றம் எல்லாம் இல்லாது போக, மனைவியாய் வரப் போகும் பெண்ணைப் பற்றிய கனவிலும், ஏற்படப் போகும் தாம்பத்திய உறவைப் பற்றியக் கற்பனையிலும் கவனத்தை வைத்து ஆவலுடனே திருமண வாழ்க்கையை எதிர்ப்பார்த்திருப்பார்கள். அதே போலத்தான் ஆசையிலும் கற்பனையிலும் தன்னை மூழ்கடித்துக் கொண்டு திருமணத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தான் தினகரன்.
தினகரனுக்கு லேசாய் விவரம் தெரிய ஆரம்பித்த வயதில்தான் அவன் தாயார் மரணித்திருந்தார். வியாபாரம், பணம் என அதியமான் அதன் பின்னால் ஓடிக் கொண்டிருக்க, தாயின் முழு அன்பில் முக்குளித்து வளர்ந்திருந்தவனுக்கு அவரின் இறப்பைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதுதான் நிதர்சனம் என மனதை இவனாகவே தேற்றிக் கொண்டு, பள்ளிக்குச் சென்று வர ஆரம்பித்தான். பள்ளி முடிந்த பின் வீட்டில் தாயில்லாமல் தனியாய் இருக்கப் பயந்தவன், தந்தையின் கடைக்கு வந்து விடுவான். பாடங்களை செய்து விட்டு, கடை வேலைகளைப் பார்ப்பான். அவன் தனிமையைப் போக்கிய அந்தக் கடையின் மேல் அவனுக்கு சிறு வயதிலேயே பற்றும் பாசமும் வந்திருந்தது.
பள்ளியில் இவனைச் சுற்றி எப்பொழுதும் ஒரு கூட்டம் இருக்கும். கலகலப்பாகப் பேசி, ஜோக்கடித்து எல்லோரையும் சிரிக்க வைப்பான் தினகரன். அதோடு படிப்பிலும் கெட்டி. ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் இவனது நட்பில் இருந்தார்கள். சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர்கள்தான் உள்ளுக்குள் மிகவும் உடைந்து போயிருப்பார்கள் என்பது இவன் வரைக்கும் நிஜம்தான்.
காலேஜ் போனதும் கூட கடைக்குப் போவதை இவன் விட்டு விடவில்லை. நண்பர்களுடன் சினிமா, ஊர் சுற்றல் எனப் போனாலும், ஆறு மணிக்குள் கண்டிப்பாக கடையில் ஆஜராகி விடுவான். இரவில் கடையை மூடும் வரை அங்குதான் அவனது பொழுதுகள் கழியும். காலை உணவை மட்டுமே சமைப்பான் தினகரன். மற்ற நேரமெல்லாம் இவனும் அதியமானும் ஹோட்டலிலேயே சாப்பிட்டுக் கொள்வார்கள்.
கல்லூரி படிக்கும் போதே, உழைப்பினால் விளைந்த உடற்கட்டும், கலகலப்பான சுபாவமும் இவனுக்குப் பல காதல் ப்ரோபோசல்களைக் கொண்டு வந்தன. மனைவியை இழந்தும் அடுத்தத் துணை தேடாமல் வாழும் அதியமானின் மகனான இவனுக்கு, காதலித்தால் அது திருமணத்தில்தான் முடிய வேண்டும் எனும் எண்ணம் இருந்தது. தங்கள் இனத்திலேயே இவனுக்குப் பெண் பார்த்து மணமுடிக்க வேண்டும் எனும் தந்தையின் விருப்பத்தை அறிந்திருந்தவன், காதல் பக்கம் தலை வைத்துப் படுக்கவில்லை. புன்னகை முகத்துடனே அழகாய் மறுத்து விடுவான்.
படித்து முடித்ததும் முழு நேரமாகக் கடையில் வந்து அமர்ந்து கொண்டான் தினகரன். மகன் தோள் கொடுக்க, அதியமானுக்குச் சற்று ஓய்வுக் கிடைத்தது. மிசின் போல செய்ததையே செய்து கொண்டிருந்தவர் நண்பர்கள், நடைப் பயிற்சி, கோயில் குளமென கொஞ்சமாய் சிறகை விரித்து வாழ்க்கையை ரசிக்க ஆரம்பித்தார்.
தினகரனும் கடையை விரிவுப்படுத்தி, வியாபாரத்தைப் பெருக்க ஆரம்பித்தான். மகனது வேகத்தைப் பார்த்த அதியமான், கொஞ்சம் பயப்படத்தான் செய்தார். அகலக் கால் வைக்கிறானே மகன் என படபடப்பாய் இருந்தது. சில சமயம் அதைச் சொல்லவும் செய்வார். ஆனால் மகன் லாபத்தைக் காட்ட ஆரம்பிக்க, இனி முழுதாய் விலகி அவனுக்கு முழு சுதந்திரம் கொடுத்து விடுவோம் என சில வருடங்களில் வெளியே வந்து விட்டார் அதியமான்.
இப்பொழுது நெட்டித் தள்ளப் பொழுது கை வசம் இருக்க, மனம் பலதையும் நினைக்க ஆரம்பித்தது.
“ஒரு பொண்ணு வீட்டுல இருந்து விளக்கேத்தி வச்சு சாம்பிராணி போட்டா வீடு வாசமா இருக்கும்லடா?”
“ஏன்? நீங்க சாம்பிராணி போட்டா வாசம் தர மாட்டேன்னு சொன்னுச்சா அது? பொண்ணேதான் வேணுமா?” என இடக்காகக் கேட்பான் தினகரன்.
“இந்த ஸ்வீகி, டோமாட்டோலாம் எனக்கு ஒத்துக்க மாட்டுதுடா மகனே!”
“அது டோமாட்டோ இல்ல ஷோமாட்டோ”
“என்னமோ ஒரு மாட்டோ!! ஒரு பொண்ணு வீட்டுல இருந்து சமைச்சி வச்சா மணமா, சுவையா இருக்கும்லடா?”
“ஏன் நான் சமைச்சி வைக்கறது மணமா, சுவையா இல்லையா? ருசியா இல்லாமலா நேத்து நாலு சப்பாத்தியை முழுங்கனீங்க!”
“அடேய் தினகரா!! உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணிடலாம்னு பிட்ட போட்டா, ஏன்டா திட்டற மாதிரியே பேசற”
“ஓ! கல்யாணமா! அப்படி நேரா பேசிப் பழகுங்கப்பா! இதை எப்ப கேப்பீங்கன்னு நான் எத்தனை மாசமா வேய்ட்டிங் தெரியுமா?” என்ற மகனை முறைத்துப் பார்த்தார் அதியமான்.
கலகலவெனச் சிரித்து,
“நான் எப்பவோ ரெடிப்பா! சிரிப்புல ஒரு சிநேகா, அழகுல ஓர் அமலா, நடையில ஒரு நக்மா, ஜொலிப்புல ஒரு ஜோதிகானு எல்லாமே சேர்த்து இருக்கற மாதிரி ஒரு பொண்ண பாருங்க! உடனே தாலியைக் கட்டிடறேன்” எனச் சொல்லிக் கண்ணடித்தான் தினகரன்.
மகனின் சிரிப்பில் இவருக்கும் சிரிப்பு எட்டிப் பார்த்தது.
“உன்னோட ஒன்னு விட்ட சித்தப்பா, திருச்சில நம்ம சொந்தத்துல பொண்ணு இருக்கறதா சொல்லிருக்காருடா! பொண்ணு சென்னைலத்தான் படிக்குதாம். நல்ல குடும்பம்! ஒத்தைப் பொண்ணு! வசதிக்கும் குறைவில்லன்னு சொல்லிருந்தான். இந்த ஜாதகத்துலலாம் எனக்கு நம்பிக்கை இல்லை! உனக்குப் புடிச்சிருந்தா சரி! நேருல போய் பார்த்து, ரெண்டு வார்த்தைப் பேசிப் பாருப்பா! அப்புறம் முடிவெடுக்கலாம்” என்றார் அதியமான்.
அதன் பிறகு ஒரு நல்ல நாளில் முதன் முதலாய் நிவேதாவை சந்திக்க ஒரு காபி ஷாப்புக்கு போனான் தினகரன். அவளோடு அவளது அப்பாவும் வந்திருந்தார்.
“நிவேதாவ பார்த்த உடனே எனக்கு நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை மோமண்ட்தான்!”
கதையைச் சொல்லிக் கொண்டே வந்த தினகரனின் முகத்தில் தற்பொழுது தெரிந்த மென்மையான பாவத்தில் மனம் உடைந்து போனாள் செந்தாமரை.
‘ஏன் கடவுளே எங்கக்காவ கூப்டுக்கிட்ட! உனக்கு எங்க குடும்பத்துல ஓர் உயிர் வேணும்னா என்னோடத எடுத்திட்டு இருக்கலாம்ல! இப்படி ஒரு கணவனையும் ஒரு குழந்தையையும் தவிக்க விட்டுட்டியே’ எனக் கதறியது அவள் மனம்.
அவளை நெருங்கிப் படுத்திருந்தவன், விட்டு விலகி கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான். இவளும் எழுந்து கொஞ்சம் இடைவெளி விட்டு அவன் பக்கமாய் அமர்ந்தாள்
“உங்க பெரியப்பா பக்கத்துல இருக்கறப்ப என்ன பெருசா பேசிக்க முடியும்! ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகப்படுத்திக்கிட்டோம்! காபியோட கேக்கும் ஆர்டர் பண்ணி தந்தேன் அவளுக்கு! ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டா! அதை மெய் மறந்து நானும் பார்த்திட்டு இருந்தேன் உங்க பெரியப்பா ஹ்க்கும்னு தொண்டையைக் கணைக்கற வரைக்கும்!” எனச் சொல்லியவனுக்கு அந்த நிகழ்வை நினைத்துச் சிரிப்பு வந்தது.
கண்ணில் மின்னல் தெறிக்க அழகாய் சிரித்தவனைக் கண் எடுக்காமல் பார்த்திருந்தாள் தாமரை.
தாமரையின் கையை மெல்லப் பற்றிக் கொண்டவன்,
“வீட்டுக்குப் போனதுமே அப்பா கிட்ட சொல்லிட்டேன் நிவேதாவ பிடிச்சிருக்குன்னு. அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்கான்னு அவ வாயால கேக்கனும்னு ஓர் ஆசை” எனச் சொன்னான்.
பழைய நினைவுகளில் இருந்த தினகரனின் விழிகள் சுவரை வெறித்திருந்தன.
“அப்பா அவளோட போன் நம்பர் வாங்கிக் குடுத்தாரு தாமரை! நான் போன்ல கேட்டப்ப, அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னா! ரெண்டு பேருமே வீட்டுல சம்மதம் சொல்லிட்டோம்! பெரியவங்க கல்யாண விஷயத்தைப் பார்க்க, நாங்க ரெண்டு பேரும் போன்லயே குடும்பம் நடத்தனோம்! ஒரே சங்கீத ஸ்வரங்கள் சீன்தான். அவ சிணுங்கறது பிடிக்குதுன்னு சீண்டி வம்பிழுத்துட்டே இருப்பேன்! அடிக்கடி சண்டையும் போட்டுப்போம்! அப்புறம் சமாதானம் ஆகிப்போம்! எனக்குள்ள புழங்காம இருந்த நேசத்தை அவ கிட்ட கொட்டினேன் தாமரை! அவளும் அவ்ளோ அக்கறையா இருப்பா! அன்பா பேசுவா” எனச் சொல்லி பெருமூச்சு விட்டான் தினகரன்.
அவன் முகத்தையே பார்த்திருந்தாள் இவள். கணவனின் காதலைப் பற்றிக் கேட்கக் சங்கடமாகத்தான் இருந்தது. ஆனாலும் அவன் ஏற்கனவே மணமானவன் எனத் தெரிந்துதானே இந்தப் பந்தத்துக்குள் நுழைந்தாள் எனும் நிதர்சனம் உறைக்க அமைதியாகிப் போனாள் பெண்.
“நிச்சயம்லாம் ஏதும் வைக்காம ஸ்ட்ரேய்ட்டா கல்யாணம் வச்சிட்டாங்க நம்ம வீட்டுல! உனக்கும்தான் தெரியுமே! கல்யாணத்துல உன்னைக் காட்டி என் தங்கச்சின்னு அறிமுகப்படுத்துனா நிவேதா. ஏற்கனவே ரெண்டு மூனு தடவை போன்ல கூட சொல்லிருக்கா எனக்கு சித்தப்பா மக தாமரைன்னு ஒருத்தி இருக்கான்னு! அப்போ என் ஃபுல் ஃபோகஸ் நிவி மேலத்தான்! நீ என் மைண்ட்ல பேக்கிரவுண்டுக்குப் போயிட்ட!”
புரிந்தது என்பது போல தலையை ஆட்டினாள் இவள்.
“தாமரை! இதுக்கு மேல சொல்லப் போறதுலாம் எங்களோட அந்தரங்கம். எப்பவுமே கணவன் மனைவிக்குள்ள இருக்கற அந்தரங்கம் மிகப் புனிதமானது. அதனால மேலோட்டமா மட்டும் சொல்லறேன்.
“சரி மாமா”
“எங்க ரெண்டு பேருக்குமே சின்ன வயசு! ஒரு பெண்ணை உடலளவுலயும், உள்ளத்து அளவுலயும் அறியாதவன் நான்! கல்யாணம்னு ஒரு லைசென்ஸ் கிடைச்சதும், நிவி கிட்ட நான் எப்படி இருந்திருப்பேன்னு புரியுதா தாமரை? அவள விட்டு விலக முடிஞ்சதே இல்லை என்னால! ஹனிமூனுக்கு கொடைக்கானல் போனோம்! ரூமுக்கு வெளிய வெயில் அடிச்சதா, மழை பேஞ்சுதான்னு கேட்டா கூட சொல்ல முடியாத நிலைல இருந்தோம் நாங்க! நிவேதா என்னைக் கட்டுப்படுத்தனதே கிடையாது! முகம் சுளிக்காம எனக்கு வளைஞ்சுக் குடுப்பா! அவளோட இந்தப் புரிதல் இன்னும் அவ மேல என்னைப் பித்தாக்குச்சு! எந்நேரமும் இளைஞ்சிக்கிட்டே இருந்தோம்னு சொல்ல முடியாது! அடிக்கடி சண்டையும் வந்துச்சு! அந்தச் சண்டையெல்லாம் முடியற இடம் கட்டிலாதான் இருந்துச்சு!”
அவள் கையை விடுவித்தவன், நெற்றியை மெல்ல தேய்த்துக் கொண்டான்.
“தலை வலிக்குதா மாமா? காபி போட்டு எடுத்து வரவா?”
“இல்லல்ல வேணாம் தாமரை! பழைய நினைவுகள் மேல் எழும்பி வரவும், தலையே பாரமா இருக்கு! ஆரம்பிச்சிட்டேன், சொல்லி முடிச்சிடறேன்” என்றவன் தொடர்ந்து பேசினான்.
“என்னோட வீர தீர சாகசத்துல சீக்கிரமாவே நிவேதா கர்ப்பமாகிட்டா! வாந்தி, மயக்கம்னு ரொம்பக் கஷ்டப்பட்டா! மனசே இல்லாமத்தான் திருச்சிக்குப் போய் இருக்கியான்னு கேட்டேன்! என்னால அவள விட்டுட்டு இருக்க முடியும்னு தோணல. ஆனா அவளே போகலன்னு சொல்லிட்டா! அத்தை அடிக்கடி வந்து பார்த்துக்கிட்டாங்க! நான் அவளுக்கு ரொம்பவே அனுசரணையா இருந்தேன் தாமரை! எனக்குத் தெரிஞ்ச அளவுல நல்லா பார்த்துக்கிட்டேன். நைட்டுல நானே தள்ளிப் போனாலும், இவ விட மாட்டா என்னை! ஹார்மோன் இஸ்யூனால நான் தேவையா இருக்கேன் போலன்னு நெனச்சிப்பேன். குழந்தைப் பிறந்தப்ப கூட மூனு மாசம்தான் தள்ளி இருந்தா! ஐ மீன் இருந்தோம். வாழ்க்கை ரொம்ப அழகா போனது! அருமையான பொண்டாட்டி, அழகான பொண்ணுன்னு வானத்துல மிதந்தேன் நான்! உனக்குக் கிடைச்ச சந்தோஷம் போதும்டா டேய்னு எங்க வாழ்க்கைல இடியைப் போட்டுட்டாரு அந்தக் கடவுள்” என்றவனின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
அவனைப் பார்த்து இவளுக்கும் கண்ணீர் வந்தது. எட்டி இவள் கன்னம் துடைத்தவன்,
“அழாதே தாமரை! அம்மா இல்லாம வளந்த எனக்கு பொண்ணுங்க கண்ணீர் விட்டா தாங்கிக்க முடியாது! கேலியாவோ, நக்கலாவோ, கோபமாவோ எதாச்சும் பேசி அவங்க கண்ணீரை நிறுத்திடுவேன்” என்றான்.
இவளும் தனது மெல்லியக் கரங்களால் அவன் கண்ணீரைத் துடைத்தாள்.
“எனக்கு ஆம்பளைங்க அழுதா தாங்கிக்க முடியாது மாமா! பெண்கள் ஈசியா அழுது மனக் கஷ்டத்த தீர்த்துப்போம்! ஆனா ஆம்பளை அழறான்னா, அது அவனால தாங்கிக்கவே முடியாத கஷ்டமாத்தான் இருக்கும்! எங்கப்பா அழுகைக்கு என்னை ஆட்டி வைக்கற பவர் இருக்கு! அது போல இப்போ உங்க கண்ணீரும் என்னை என்னமோ செய்யுது” என்றவளை ஆழ்ந்து நோக்கினான் தினகரன்.
“அந்த ஹாஸ்பிட்டல்ல உன்னை வர வேணாம்னு சொல்றதுக்கு முன்ன, மொத்தமா நாம ஒரு மூனு நாலு தடவை, நான் நல்லாருக்கேன், நீங்க நல்லாருக்கீங்களா ரேஞ்சுக்குப் பேசி இருப்பமா?” எனக் கேட்டான்.
ஆமென்றாள் இவள்.
“உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் தாமரை! உன்னோட அமைதி, அலட்டிக்காத பாங்கு எல்லாம் ரொம்பப் பிடிக்கும்! அதோட என் நிவியோட தங்கச்சிங்கற ஒன்னு போதுமே உன்னை எனக்குப் பிடிக்க! ஆனாலும் ரொம்ப பேச மாட்டேன்! நிவிக்குப் பிடிக்காது! அவளுக்கு ரொம்பவே பொசெசிவ் என் மேல! உன் கூட பேசறத கூட தாங்கிக்க முடியாது அவளால! அதனாலேயே நான் உன் கிட்ட சிரிச்சுப் பேசனது இல்ல! என் நிவிக்குப் பிடிக்காத எதையும் செய்ய மாட்டேன் நான்!”
அந்த நேரம் கதவுத் தட்டும் சத்தமும்,
“சித்தி!” எனும் சிணுங்கலும் கேட்க வேகமாய் எழ முயன்றாள் தாமரை.
“ஏய்! கால அசைக்கக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்றது!” எனத் திடீர் அந்நியனாய் மாறி இவளிடம் கத்தியவன், வேகமாய் கட்டிலில் இருந்து எழுந்து கதவை நோக்கி விரைந்தான்.
அங்கே கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தாள் பூக்குட்டி!
“என்னடாம்மா?” எனக் கேட்டு மகளைக் கைகளில் அள்ளிக் கொண்டான் தினகரன்.
“பூக்குட்டி திடீர்னு முழிச்சேனா, சித்திய காணோம்! சித்தி வாசத்தக் காணோம்! சித்தி, சின்னத் தாத்தா கூட ஊருக்குப் போய்ட்டாங்கன்னு பயந்துட்டேன்” என அழுதபடியே சொன்னாள்.
“சித்தி இங்கத்தான்மா இருக்கேன்! செல்லம்ல, அழாதீங்க” எனக் குரல் கொடுத்தாள் செந்தாமரை.
கதவைச் சாற்றி விட்டு மகளைக் கொண்டு வந்து இவளிடம் கொடுத்தான் தினகரன். தாமரையை இறுக்கி அணைத்துக் கொண்ட பூக்குட்டி,
“லவ் யூ சித்தி” என்றாள்.
“லவ் யூடாம்மா” என்றாள் இவள்.
சற்று நேரம் அவள் அருகே படுத்து மெல்லத் தட்டிக் கொடுத்தாள் தாமரை. சிறிது நேரத்திலேயே தூங்கி விட்டாள் சின்னவள்.
பெண்கள் இருவரையும் கண்ணசைக்காமல் பார்த்திருந்தான் தினகரன்.
“படுங்க மாமா! நாளைக்குப் பேசிக்கலாம்”
“தாமரை!”
“ஹ்ம்ம்”
“என்னைப் பார்த்தா பொம்பள சுகத்துக்கு அலையவறவன் மாதிரி இருக்காம்மா?”

Last edited:
Author: VanishaAdmin
Article Title: Pirithor Nesamithu--EPI 14
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.