அத்தியாயம் 2
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
பள்ளி விடுமுறை ஆரம்பித்திருந்தது. பள்ளிக்குப் போவது போலவே காலையிலேயே எழுந்து, தந்தைக்குக் காலை உணவு கொடுத்து, மதிய உணவையும் கட்டிக் கொடுத்து அனுப்பி விடுவாள் செந்தாமரை. அதன் பிறகு அக்கடாவெனப் படுத்து விடுவாள். மீண்டும் ஒன்பது மணி போல எழுந்து, மற்ற வேலைகளைப் பார்த்து விட்டுக் குளித்து வருவாள். அதன் பிறகான பொழுதுகள் அவளுக்கே அவளுக்கானது.
சில நேரம் ஆன்லைனில் நாவல்கள் ஏதாவது படிப்பாள். அல்லது யூடியூப் பார்த்து க்ரோஷே எனப்படும் பின்னல் வேலை செய்வாள். ஸ்வெட்டர், கைப்பை, முடியைக் கட்ட பேண்ட் இப்படி எதாவது முயற்சித்துப் பார்ப்பாள். புதிதாய் ஒன்றை உருவாக்கும் போது, மனம் சந்தோஷத்தில் தளும்பி வழியும். சில நேரங்களில் ஐபேடில் வண்ணம் தீட்டுவது, எண் விளையாட்டு, ஜிக்சாவ் பசில் என எதாவது விளையாடுவாள். காலையில் ஒலிக்க ஆரமபிக்கும் வானொலி, அவளுக்குத் தோழியாக இரவு வரை துணை இருக்கும்.
வேலைக்குப் போகும் போது ஒன்றும் தெரியாதுதான். இது போல லீவ் நாட்களில் தனியாய் வீட்டில் இருக்கும் போது தனிமைக் கொடுமையாய்தான் இருந்தது. அதை விரட்டி விடத்தான் ஏதேதோ செய்வாள். இருந்தும் மனம் எனும் சாத்தான் கண்டதையும் நினைக்க ஆரம்பித்து விடும்.
‘நான் என்ன பாவம் செஞ்சேன்? ஏன் எனக்கு மட்டும் கணவன், குழந்தைன்னு வாழ்க்கை அமையல? அந்தப் பூக்குட்டி மாதிரி எனக்கொரு மக இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்! தினம் தலை வாரிப் பூச்சூடி, அழகழகா உடுத்தி விட்டு, அவ கூட பாடி, ஆடின்னு எவ்ளோ அருமையா பொழுது கழியும்! அப்பாக்கு வேற அடிக்கடி உடம்பு சுகமில்லாம போய்டுதே! அவரும் இல்லாம போய்ட்டா, இந்த வீட்டுல தன்னந்தனியா நான் என்ன செய்வேன்! இப்பவே கிச்சனுல இருந்து பாப்பான்னு அம்மா கூப்பிடற மாதிரிலாம் தோணுதே, பைத்தியமாகிடுவேனோ?’
அவளை அறியாமலே கண்கள் கலங்கி விடும். எப்பொழுதும் போல தன்னைத்தானே தேற்றிக் கொள்வாள்.
சத்தமாய்,
“உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக் கூடாது” எனப் பாடி சுயபச்சாதாபத்தில் இருந்து தன்னை மீட்டுக் கொள்வாள்.
அன்று சில்லரை போட்டு வைக்கும் காய்ன் பர்ஸ் ஒன்றைப் பின்னிக் கொண்டிந்தவளின் கவனத்தைத் தொலைப்பேசி சத்தம் கலைத்தது. திரையில் பெரியம்மா என ஒளிர, அழைப்பை ஏற்றாள் இவள்.
“ஹலோ பெரியம்மா”
“தாமரை! உனக்கு லீவுதானே இப்போ?”
“ஆமா பெரியம்மா!”
“கொஞ்சம் வீட்டுப் பக்கம் வந்துட்டுப் போயேன்”
அடிக்கடி அங்கே போய் நிற்க மாட்டாள் இவள். பெரியம்மா நல்லவர்தான். அக்கறையாய் இவளுக்கு வரன் ஒன்றும் அமைய மாட்டேன் என்கிறதே என அவர் கவலைப்பட்டு பேசுவது இவளுக்கு ஒரு மாதிரி இருக்கும். பாசம்தான்! ஆனாலும் அது கூட நெருஞ்சியாய் நெஞ்சில் குத்தியது. பெரியப்பாவும் நிறைய வரன்கள் கொண்டு வந்தார்தான். பிடித்திருக்கிறது எனச் சொல்லி செல்பவர்கள், அடுத்த நாளே வேண்டாமென ஒதுங்கிக் கொள்வார்கள்.
இவளுக்கு மாப்பிளை வீட்டின் மறுப்பு ஏனெனத் தெரிந்துதான் இருந்தது. என்ன நடந்தது, ஏது நடந்தது என இவர்களிடம் விசாரிக்காமல் ஒதுங்கிப் போய் விடுபவர்களின் காலில் விழ இஷ்டமில்லை இவளுக்கு. வேண்டாம் என்பவர்களிடம் தன்மானத்தை விட்டு மறுபடி போகக் கூடாது எனத் தந்தையிடமும் கண்டித்து சொல்லி விட்டிருந்தாள் பெண்.
இவள் திருச்சி நகரத்தில் இருந்த கல்லூரி ஒன்றில்தான் படித்தாள். வீட்டிலிருந்து ஒரு மணி நேரம் பேருந்தில் பயணித்து, பின் ஷேர் ஆட்டோ ஏறி கல்லூரிக்குப் போய் சேர்வாள் தாமரை. முதல் வருடப் படிப்பு எந்த விதத் தங்குத் தடையுமின்றி போனது. அதற்கடுத்த வருடம் சீனியர் ஒருவனின் பார்வையில் விழுந்து தொலைத்து விட்டாள். அதிலிருந்து ஆரம்பித்தது இவளுக்குச் சனி. எங்குப் போனாலும் பின்னாடியே வந்து லவ், காதல், ப்ரேமா எனப் பிணாத்த ஆரம்பித்தான் அந்தச் சீனியர் சதிஷ்.
கண்டுக் கொள்ளாமல் விட்டால், சீ இந்தப் பழம் புளிக்கும் எனப் போய் விடுவான் என நினைத்தாள் இவள். அவனோ மௌனம் சம்மதம் என எடுத்துக் கொண்டு விடாமல் பின் தொடர்ந்தான். இவளது தோழிகள் எல்லாம் அவன் பெயரைச் சொல்லி இவளைக் கிண்டல் செய்ய ஆரம்பிக்க, வேறு வழியில்லாமல் பேச்சு வார்த்தையில் இறங்கினாள் தாமரை.
“எனக்குத் தெரியும், எப்படியும் என் கிட்ட நீ வந்துடுவன்னு” எனச் சிரித்தவனை எரிச்சலாய் பார்த்தாள் இவள்.
வெளேரென நிறத்தில், பாலிவூட் பட நாயகன் போல அழகனாய்த்தான் இருந்தான் சதிஷ். அதோடு புல்லட்டில் ஸ்டைலாய் கல்லூரிக்கு வருவான். உடுத்தும் விதமும் கண்ணைக் கவர்வதாய்தான் இருக்கும். நல்லபடி பேசிப் பழகி, மனதைக் கவரும் விதத்தில் காதல் சொல்லி இருந்தால், இவளும் சரி எனச் சொல்லி இருப்பாளோ என்னவோ!
நான் பேரழகன். நான் பின்னால் வர நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது போல இருக்கும் அவனது பேச்சும், உடல் மொழியும் இவளுக்கு ஒரு வித ஒவ்வாமையைத் தந்தது. இவனைப் போன்ற ஆட்களுக்கெல்லாம் காதல் என்பது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு! தனக்கான ஆளைக் கண்டு பிடிக்கும் வரைதான் ஆர்வமாய் விளையாடுவார்கள். கண்டு பிடித்தவுடன் அதில் இருந்த ஆர்வம் போய், அலட்சியம் வந்து விடும்.
தாமரையின் ஆசையெல்லாம் டீச்சர் ட்ரைனிங் முடிக்க வேண்டும். ஆசிரியராய் வேலைப் பார்க்க வேண்டும். பிறகு அவளது அன்பு அம்மா கை காட்டும் ஒருத்தனைக் கல்யாணம் செய்து கொண்டு, குழந்தைக் குட்டி எனச் சராசரி வாழ்க்கை வாழ வேண்டும். அம்மாவையும், அப்பாவையும் கடைசி வரை வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்!
“இங்க பாருங்க சதிஷ்!”
“பார்த்துட்டேத்தான் இருக்கேன்! கெண்டை மீன் விழிகள். ஆரஞ்சு சுளையாய் உதடுகள். முந்திரி போல மூக்கு. ஆப்பிள் போன்ற கன்னம். செதுக்கி வைத்தக் கோயில் சிலை போல உடம்பு! மொத்தத்தில் நீ பிரம்மன் எனக்காய் படைத்து அனுப்பிய மாய மோகினி” என்றவனின் குரல் உருகியது.
அவனது வர்ணிப்பில் இவளுக்கு இரத்த அழுத்தம் எகிறியது.
“எனக்கு இந்தக் காதல் கத்தரிக்காய்லாம் சரிப்பட்டு வராது! ப்ளீஸ்! விட்ருங்க”
“பழகிப் பார்க்காம எப்படி சரிப்பட்டு வராதுன்னு முடிவெடுப்பீங்க! வாங்க பழகலாம் லோட்டஸ்! அதன் பிறகு என்னோட காதலிலும் நான் கொட்டிக் கொடுக்கப் போகிற பரிசு மழையிலும் மயங்கிப் போயிடுவீங்க!” என்றவன் காற்சட்டைப் பாக்கேட்டில் இருந்து ஒரு குட்டி டப்பாவை எடுத்து அவள் கையில் திணித்தான்.
“தங்க ப்ரேஸ்லேட்! உங்களுக்காகத்தான் வாங்கி வச்சிட்டு இத்தனை நாளா காத்துட்டு இருந்தேன்! கைல இதைப் போட்டுக்கிட்டு ரிட்டர்ன் கிஃப்டா எனக்குக் காதலைக் குடுங்க” என்றவனைக் கொலை வெறியாய் பார்த்தாள் தாமரை.
“பொண்ணா பொறந்தவ தங்கத்தை மதிக்கனும்னு எங்கம்மா சொல்லிக் குடுத்திருக்காங்க! அதனால இதை உங்க மூஞ்சு மேல வீசாம போறேன்” என்றவள் அந்த டப்பாவை தரையில் வைத்தாள்.
“எனக்கு உங்க மேல எந்த வித ஃபீலீங்கும் இல்ல. தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க! இப்படி என் பின்னால வந்து எனக்குத் தொல்லைக் குடுக்காதீங்க! அடுத்த முறை கூப்பிட்டு வச்சுப் பேசிட்டு இருக்க மாட்டேன். ஈவ் டீசிங்னு போலீசுக்குப் போய்டுவேன்” என்றவள் திரும்பி நடக்க முனைய, அவள் முழங்கையைப் பிடித்து நிறுத்தினான் சதிஷ்.
அவனது அத்து மீறிய தொடுகையில் சட்டெனக் கோபம் மூண்டு விட, பளீரென அறைந்து விட்டாள் செந்தாமரை. அறைந்த பிறகுதான் செய்தது புரிய, எங்கே திருப்பி எதாவது ஏடாகூடமாகச் செய்து விடுவானோ எனப் பயம் வந்து விட்டது.
சட்டென உடல் நடுங்க,
“மன்னிச்சிடுங்க! எனக்குப் பிடிக்கல! இனிமே என் பின்னாடி வராதீங்க” எனக் கடகடவெனச் சொன்னவள் ஓட்டமாய் ஓடி விட்டாள்.
அவனை அடித்து விட்டவளுக்கு நெஞ்செல்லாம் பதறியது! என்னடா செய்தி எனக் கேட்கும் அளவுக்குத் தைரியமானத் தகப்பன் இல்லை. கூடப் பிறந்த சகோதரர்களும் இல்லை. அம்மாவுக்குத் தெரிந்தால் பதட்டமாகி விடுவார்.
“சேலை மேல முள்ளு விழுந்தாலும், முள்ளு மேல சேலை விழுந்தாலும் கிழிஞ்சு கேவலப்படப் போறது சேலைதான் கண்ணு! பார்த்து சூதனமா நடந்துக்கனும்!” என காலேஜூக்குத் தனியாய் அனுப்பும் போதே சொல்லி வைத்திருந்தார்.
அவரிடம் இப்படி விஷயம் எனச் சொன்னால் டீச்சர் கனவு, கனவாகவே போய் விடக் கூடிய சாத்தியம் இருக்க, மூச்சு விடவில்லை இவள்.
அந்தத் தரமான சம்பவத்துக்குப் பிறகு அவனது தொல்லை இருக்கவில்லை. அந்த வருடமே அவனும் படிப்பை முடித்து விட்டுப் போய் விட, நிம்மதியாய் உணர்ந்தாள் தாமரை. அதன் பிறகு தாயின் இறப்பு, தந்தையைத் தேற்றுவது, வேலைக்குச் சேர்ந்தது என வாழ்க்கையில் நிகழ்ந்த பல விஷயங்கள் சதிஷை மறக்கடித்திருந்தன.
தாயில்லாத வாழ்க்கை ஒரு விதமாய் பழகி இருக்க, இவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார் கந்தன். முதலில் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டினருக்கு இவளை மிகவும் பிடித்து விட்டது. கிட்டத்தட்ட இரு பக்கமும் சம்மதம் என முடிவாகி இருக்க, திடீரெனச் சம்மந்தத்தை முறித்துக் கொள்வதாக ஆள் விட்டுச் சொல்லி விட்டார்கள் அவர்கள். இவர்களுக்கு என்ன ஏதென்று விளங்காத நிலை. போன் போட்டுக் கேட்டாலும் சரியான பதிலில்லை. கந்தனுக்கு மனதே விட்டுப் போனது.
அது முறிந்த சில நாட்களில் இவளுக்கு ப்ரைவட் எண்ணிலிருந்து போன் வந்தது. அழைப்பை ஏற்று,
“ஹலோ” என்றாள் இவள்.
“என்னம்மா கண்ணு! சௌக்கியமா?” எனக் கேட்டது அந்தப் பக்கக் குரல்.
“யாருங்க?”
“ஓ! குரல் கூட மறந்திடுச்சில்ல! அந்தளவுக்கு அலட்சியமா போய்ட்டேன்லடி நானு? இனி மறக்க மாட்ட! காலத்துக்கும் மறக்க மாட்ட என்னை”
“ஏய்? யார்டா நீ?”
“உன்னோட சதிஷ்”
“செருப்பால அடிப்பேன்”
“அந்தச் செருப்ப சாணில முக்கிக் கூட அடி, சுகமா வாங்கிப்பேன்”
“சீ! போனை வைடா”
“இரு செல்லம்! சொல்ல வந்தத கேக்காம அதுக்குள்ள வைக்கச் சொன்னா என்ன அர்த்தம்? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பஜ்ஜி சொஜ்ஜிலாம் சாப்பிட்டுட்டு உன்னை வேணாம்னு சொல்லிட்டாங்களாமே? ஐயோ பாவம்!”
“உன் வேலையாடா இது?”
“அறை வாங்கிட்டு அப்படியே விட்டுட்டுப் போக நான் என்ன பேடியாடி? காலேஜ் ஃபுல்லா தெரியும் நான் உன் பின்னாடி சுத்துனது! அப்பவே எதாவது செஞ்சி விட்ருந்தா, நான்தான்னு கண்டுப் புடிச்சு ஆப்படிச்சிருப்பானுங்க! அதான் இவ்ளோ நாள் வெய்ட் பண்ணேன்! இந்தத் தாமரை என் கையில மட்டும்தான் மலரனும்! கண்டவன் கட்டிட்டுப் போய் கைமா பண்ண விட்டிருவேனா? கலைச்சி விடுவேன்! உன் வீடு தேடி வர ஒவ்வொருத்தனையும் கலைச்சி விடுவேன்! எனக்கு வாழ்க்கை குடு சதிஷ்னு நீயே என் காலடியில வந்து விழனும்! ரொம்ப நாள் வெய்ட் பண்ண மாட்டேன்டி! சீக்கிரம் வந்தா பொண்டாட்டியா இருப்ப! லேட்டாக்கின வைப்பாட்டி போஸ்ட்தான் கிடைக்கும்! எந்த போஸ்ட்னாலும் அதை நான்தான் குடுப்பேன் உனக்கு! புரியுதா செல்லம்?”
“அடேய் மன்மதக் கு..! நீயெல்லாம் ஒரு ஹேரே இல்லைன்னு எவனாவது என்னை நம்பி வந்தா, கல்யாணம் கட்டிட்டு வாழ்றேன்! இல்லை கன்னியாஸ்த்திரியா போறேன்! என்னைக்குமே உன் காலடியில மட்டும் வந்து விழ மாட்டேன்டா! வைப்பாட்டியா வச்சிப்பானாம்!! அப்படி யாரும் இங்க ஆம்பள துணை வேணும்னு ஏங்கிட்டு கிடக்கல! போடா பொறம்போக்கு!” என அழைப்பை நிறுத்தியவள், சிம் கார்ட்டை தூக்கி வெளியே போட்டாள்.
இதே போலவே இன்னொரு முறையும் மாப்பிள்ளை வீட்டில் இருந்து மறுப்பு வர, என்ன செய்வது என அமர்ந்து யோசித்தாள். தந்தையிடம் இதைப் பற்றிப் பேச முடியாது! அவருக்குப் பிரச்சனையைத் தீர்க்கத் தெரியாது! ஆனால் அதை நினைத்தே மனதை வருத்தி இன்னும் நோயை இழுத்துக் கொள்வார். அண்ணன், தம்பி என உறவில் கூட யாரும் இருக்கவில்லை. ஒன்று விட்ட அக்கா நிவேதாவோ திருமணமாகி சென்னையில் இருந்தாள். அவளோடு பேச்சு வார்த்தைக் கூட அவ்வளவாக இல்லை.
பள்ளித் தோழி ஒருத்தியின் மாமா போலீஸாக இருந்தார். தோழியோடு அவரைப் போய் பார்த்தாள் செந்தாமரை.
“ப்ரைவட் நம்பர்ல இருந்து கூப்டிருக்கான். அதோட உன்னை உடம்பால எந்த டார்ச்சரும் பண்ணல! அவன்தான் இதெல்லாம் செய்யறான்னு ஒரு ஃப்ரூப்பும் இல்ல! எங்களால ஒன்னும் செய்ய முடியாதும்மா இந்த கேசுல! உனக்காக நேருல போய் மிரட்டிப் பார்த்தேன். பையன் சிங்கப்பூருல இருக்கான்! இதெல்லாம் அவனைக் கட்டிக்க நீ போடுற ப்ளான்னு அவங்க அம்மா உன் மேல கம்ப்ளேண்ட் குடுக்குது!” எனக் கையை விரித்து விட்டார் அவர்.
அடுத்த முறை பெண் பார்க்க வந்த பையனிடம், இவளாகவே உண்மையைச் சொல்லி விட்டாள் தாமரை. அவனோ இவளைத்தான் கேவலமாகப் பார்த்தான்.
“அழகா இருக்கியே, எக்ஸ் எதாச்சும் இருக்குமோன்னு நெனைச்சேன். எவனையோ நீயே கழட்டி விட்டுட்டு கம்பி கட்டற கதை சொல்றியா என் கிட்ட” என அவன் கேட்க நொந்து போய் விட்டாள் தாமரை.
வந்த சில பல மாப்பிள்ளைகளால் இவள் புகழ் ஊரெங்கும் பரவி விட, இப்பொழுது வரன் வருவதும் நின்றிருந்தது. கந்தனுக்கும் விஷயம் தெரிந்து விட, இன்னுமே ஓய்ந்துப் போய் விட்டார் மனிதர்.
“தாமரை!!”
பெரியம்மாவின் குரல் இவளை நடப்புக்குக் கொண்டு வந்தது.
“தோ, நான் கிளம்பி அங்க வரேன் பெரியம்மா!” எனச் சொல்லி அழைப்பைத் துண்டித்தாள் இவள்.

Last edited:
Author: VanishaAdmin
Article Title: Pirithor Nesamithu--EPI 2
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.