அத்தியாயம் 4
பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூசித்தேன்!
தனதறையில் அமைதியாக கண்ணாடியை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் செந்தாமரை. முகம் அமைதியாக இருந்தாலும் அகம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
‘இந்தப்பாவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? இப்படி ஓர் இக்கட்டுல மாட்டி வச்சிட்டாரே என்னை’ என எண்ணியவளுக்கு ஆத்திரமாக வந்தது.
பெரிதாய் ஒன்றும் அலங்காரம் செய்திருக்கவில்லை இவள். பள்ளிக்கு அணிந்து போகும் காட்டன் வகை சேலைத்தான் உடுத்தி இருந்தாள். தலை முடியை வாரி ஒற்றைப் பின்னலிட்டிருந்தாள். நெற்றியில் பொட்டிட்டு, முகத்துக்கு லேசாய் பவுடர் ஒற்றி இருந்தாள். கழுத்தில் எப்பொழுதும் அணிந்திருக்கும் சின்னச் சங்கிலி.
அறைக்குள் நுழைந்த அன்னபூரணி, இடுப்பில் கை வைத்து இவளை மேலும் கீழும் பார்த்தார்.
“என்ன பெரியம்மா?”
“இங்க பாருடி தாமரை! நான் உனக்குப் பெரியம்மாத்தான்! ஆனா இப்போ உன் பெரியம்மாவ இந்த வீட்டுக்கு நான் வரல! என் மாப்பிள்ளைக்கு அம்மாவா உன் வீட்டுல காலடி எடுத்து வச்சிருக்கேன்! இந்தக் கல்யாணத்துல இஷ்ட செருப்பு இல்லைனா, நேரடியா உன் வாயத் திறந்து சொல்லிடு! இப்படி யாருக்கு வந்த விருந்தோங்கற மாதிரி ஏனோதானோன்னு கிளம்பி நிக்காதே! நாங்க ஒன்னும் நீதான் என் மாப்பிள்ளைக்கு ஜோடியா வரனும்னு தேடிக்கிட்டு வரல! உங்கப்பாத்தான் என் பொண்ணுக்கு வாழ்க்கைக் குடுங்கன்னு கெஞ்சனார்ங்கறத மறந்திடாதே!! ரெண்டாம் தாரம் கசக்குதுன்னா, நேரா உன் அப்பாட்ட போய் எனக்கு இஷ்டமில்லைப்பான்னு வாயத் திறந்து சொல்லிடு! கமுக்கமா கல்யாணம் பண்ணிட்டுப் போய், என் மாப்பிளையயோ, என் பேத்தியையோ டார்ச்சர் பண்ணுற வேலை வச்சிக்காதே! அப்புறம் இந்தப் பெரியம்மா உனக்கு மாமியாரா மாறிடுவா, பார்த்துக்கோ” எனப் படபடத்தார் அவர்.
“என்ன பெரிம்மா இப்படிலாம் பேசறீங்க?” எனக் கண் கலங்கியவளைப் பார்த்ததும் இவருக்கு உருகி விட்டது.
ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
“என்னம்மா, நொன்னம்மான்னா நான் என்ன சொல்லட்டும்! இப்படி நகை நட்டு, பட்டுன்னு ஒன்னும் இல்லாம கிளம்பி நின்னா, எனக்குக் கோபம் வருமா, வராதா? எங்கடி உங்கம்மா உனக்குச் சேர்த்து வச்சிருந்த நகை நட்டுலாம்? வெளிய எடு!” எனச் சத்தம் போட்டார் அன்னபூரணி.
கண்ணைத் துடைத்துக் கொண்டு, அலமாரி உள்ளே பூட்டி வைத்திருக்கும் நகைப் பெட்டியை எடுத்துக் கட்டிலில் வைத்தாள் இவள்.
“இந்த மங்கலான சீலையக் கழட்டி கடாசிட்டு, மங்களகரமான கலருல சீலை கட்டிக்க” என்றவர் இவள் அலமாரியுள் தலையை விட்டுத் தேடி, மஞ்சள் மாரியாத்தா கலரில் ஒரு சேலையை எடுத்துக் கொடுத்தார்.
“இதை கட்டிக்கிட்டு, இப்போ நான் எடுத்துக் குடுக்கற நகையெல்லாம் போட்டுக்கிட்டு பத்து நிமிஷத்துல கிளம்பி நிக்கற நீ! இல்லைனா, உங்கப்பாட்ட போய், எங்கள வச்சி காமெடி, கிமேடி பண்ணறீங்களான்னு நல்லா கேட்டுப்புடுவேன்” எனச் சொல்லி வெளியேறினார்.
பெருமூச்சொன்றை இழுத்து விட்டத் தாமரை, அவள் பெரியம்மாவை இன்னும் கோபப்படுத்த வேண்டாமெனும் எண்ணத்தில் அவர் எடுத்து வைத்திருந்த சேலையையும், நகையையும் அவசரமாக அணிந்து கொண்டாள்.
கைகள் அதன் பாட்டிற்கு வேலையைச் செய்ய மனமோ தன் தகப்பன் செய்து வைத்தக் காரியத்தை அசைப் போட்டது.
பூக்குட்டியைத் திருச்சி மலைக்கோட்டைக்கு அழைத்துச் சென்று வந்த தினத்தன்று தினகரனும் ஊருக்கு வந்திருந்தான். அன்றைய தினம் அவளைப் பார்த்து முறைத்ததோடு, ஏதும் பேசவில்லை அவன். மகள் சந்தோஷமாய் தோளில் ஏறிக் கொள்ள, அவனது கவனம் முழுவதும் மகள் மீது படிந்து போனது. தென்றலைத் தூக்கிக் கொண்டு அவன் உள்ளே போய் விட, பெரியம்மாவிடம் சொல்லி விட்டுச் செல்லலாம் என இவள் வீட்டுக்குள் நுழைந்தாள். அதோடு அவருக்காக வாங்கி வந்திருந்த இனிப்பையும் கொடுக்க வேண்டுமே.
“பால்கோவாவா? மாப்பிள்ளைக்கு ரொம்பப் பிடிக்கும்! ஒரு தட்டுல எடுத்து வச்சிக் கொண்டு வந்து குடு தாமரை! இப்போத்தான் வந்தாரு அவரும். என்னால சட்டுன்னு எழுந்து அவருக்கு ஒன்னும் செஞ்சுக் குடுக்க முடியல. கையோட காபியும் போட்டுட்டு வந்து குடுத்துடுடி” என அன்னபூரணி சொல்ல, இவளும் தலையாட்டியபடியே சமையலறைக்குப் போனாள்.
பெரியப்பா வீட்டுக்குள் வரும் அரவம் கேட்க, பெரியம்மாவுக்கும் அவருக்கும் சேர்த்தே காபி கலந்தாள் தாமரை.
“வாங்க மாப்பிள்ளை! என்ன, மகள விட்டுட்டு இருக்க முடியலையா?” என அவர் கேட்டபடியே வர,
“எப்பவும் வீட்டுக்குள்ள நான் நுழையறப்ப அப்பான்னு கத்திட்டு ஓடி வருவா! அவ இல்லாம வீடே வெறிச்சுன்னு இருக்கு மாமா! அதான் மேனேஜர் கிட்ட பொறுப்பக் குடுத்துட்டு கிளம்பி வந்துட்டேன்!” எனப் பதில் தந்தான் தினகர்.
“நீங்க வந்ததும் நல்லதா போச்சு! உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்” எனப் பேச்சை ஆரம்பித்தவர், வெளி கேட் திறக்கும் ஓசையில் எட்டிப் பார்த்தார்.
கந்தன் வந்து கொண்டிருந்தார் உள்ளே.
“வாடா!” எனத் தம்பியை உள்ளே அழைத்தார் இவர்.
“தாமரைய இன்னும் காணோம்! அதான் தேடிட்டு வந்தேன்”
“திருச்சிக்குப் போய்ட்டு வந்துட்டா! உள்ள காபி கலக்கறா தம்பி!” என மைத்துனரிடம் சொன்ன அன்னபூரணி,
“தாமரை! உங்கப்பாவுக்கும் சேர்த்து ஒரு கப்” எனக் குரல் கொடுத்தார்.
அதற்குள் எல்லோருக்கும் காபியுடன் வந்திருந்தாள் செந்தாமரை. காபியைக் கொடுத்தவள், உள்ளே போய் ஒரு தட்டில் முறுக்கும், இன்னொரு தட்டில் இனிப்பும் வைத்து எடுத்து வந்தாள். அனைவரும் சாப்பிட்டப்படி பேசிக் கொண்டிருக்க, தாமரையிடம் வந்து நின்று கொண்டாள் சின்னக் குட்டி.
கந்தன் தினகரனிடம் குசலம் விசாரிக்க, அவனும் அதற்கான பதிலைத் தந்தான். பின் தன் மாமனாரிடம் திரும்பியவன்,
“என்னமோ பேசனும்னு சொன்னீங்களே மாமா?” எனக் கேட்டான்.
“போன தடவை உங்கப்பா, உங்களுக்கு ஒரு பொண்ணுப் பார்க்கச் சொல்லி கேட்டிருந்தாரு” எனத் தயங்கியபடி இழுத்தார் தாமரையின் பெரியப்பா வேலன்.
“இருங்க மாமா” என அவரது பேச்சை நிறுத்தியவன்,
“தென்றல்! அப்பா உனக்கு ப்ளாக்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன். ரூம்ல இருக்கற பேக்ல இருக்கு! போய் எடுத்து விளையாடு போ!” என மகளை அறைக்கு அனுப்பினான்.
தாமரைக் கையைத் தன்னோடு வரும்படி அவள் பிடித்து இழுக்க, அவன் உபயோகிக்கும் அறைக்குள் எப்படிப் போவது எனத் தயங்கினாள் இவள்.
“கூட்டிட்டுப் போங்க!” என நேரிடையாக இவளைப் பார்த்துச் சொன்னான் தினகரன்.
‘கட்டளைப் போடறத பாரு கவர்னர் மாதிரி’ எனப் பொருமியபடி சின்னவளுடன் உள்ளறைக்குப் போனாள் தாமரை.
“இப்ப சொல்லுங்க மாமா” என்றான் தினகரன்.
அவர்கள் பேசுவது லேசாய் கேட்டது இவளுக்கு.
‘யாரு கல்யாணத்த பத்தி யாரு பேசனா எனக்கென்னா!’ என எண்ணியவள், சின்னவளுடன் கட்டிடம் கட்டும் விளையாட்டை விளையாட ஆரம்பித்தாள்.
“ஒரு பொண்ணு உங்க ஜாதகத்துக்கு அமைஞ்சு வருது! தரகர் நேத்துத்தான் டீட்டேயில் எல்லாம் குடுத்தாரு! நீங்க பார்த்து ஓகேன்னு சொல்லிட்டா பொண்ணு வீட்டுல பேசிடலாம்” என்றார் வேலன்.
தினகரனின் அப்பா அதியமான் சில மாதங்களாகவே மகனின் மறுமணத்தைப் பற்றிப் பேசியபடிதான் இருந்தார்.
“நீ கடைக்குப் போயிடறப்பலாம் உன் பொண்ணை வேலைக்காரி பார்த்துக்கறா! அவ ஒழுங்கா பார்த்துக்கறாளான்னு நான் பார்த்துக்கறேன்! ஆனாலும் எவ்ளோ காலத்துக்குடா இப்படியே போக? எனக்குப் பேத்தி மேல கொள்ளைப் பிரியம்தான். ஆனாலும் எனக்குன்னு ஒரு வாழ்க்கை இல்லையாடா? இந்த வயசுல நாலு ப்ரெண்ட பார்த்தமா, வாக்கிங் போனமா, நாட்டு நடப்ப அலசனமா, சங்கீத கச்சேரிக்கு போனமான்னு இருக்காம, வீட்டுக்குள்ளயே அடைஞ்சிக் கிடக்கறது கொடுமையா இருக்குடா! கொஞ்சம் என்னைப் புரிஞ்சுக்கோ! ஒரு கல்யாணத்தக் கட்டிக்கிட்டன்னா சின்னவள பார்த்துக்க ஒருத்தி வந்துடுவா! நானும் வெளிய தெருவன்னு ஜாலியா போய்ட்டு வருவேன்” எனச் சொல்லிக் கொண்டே இருந்தார்.
தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தவன், இதற்கு மேல் தந்தையைச் சமாளிக்க முடியாது எனத்தான் சம்மதத்தைச் சொல்லி இருந்தான். ஆனால் அதற்குள் அவர் தீயாய் வேலைப் பார்த்திருப்பார் என இவன் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. தினகரனின் அமைதியைப் பார்த்து,
“பொண்ணு உங்களுக்கு நல்ல பொருத்தமா இருப்பா மாப்பிள்ளை” என்றார் வேலன்.
சட்டென முகம் கடுத்து விட்டது தினகருக்கு.
“எனக்குப் பொறுத்தமா இருக்கறதும் இல்லாததும் இங்க முக்கியமில்ல மாமா! என் மகளுக்கும் அவங்களுக்கும் பொருந்தி வரனும்! பூக்குட்டி வாழ்க்கைல என்னால ரிஸ்க் எடுக்க முடியாது” எனப் படபடத்து விட்டான் இவன்.
அந்த நேரம் பார்த்து உள்ளறையில் இருந்த பூந்தென்றலின் சிரிப்புச் சத்தம் கேட்க இவர்கள் எல்லோரின் பார்வையும் அவ்வறை வாயிலை நோக்கியது.
“ஏன்ண்ணா பிறத்தில பொண்ணு தேடற? என் மகள பார்த்தா உனக்குப் பொண்ணா தெரியலையா? நம்ம வீட்டு மாப்பிள்ளைக்கு நான் பொண்ண குடுப்பேன்னு உனக்குத் தோணலையா?” எனத் தளுதளுத்தக் குரலில் கேட்டார் கந்தன்.
சட்டென அவ்விடமே அமைதியாகி விட்டது. உள்ளே அமர்ந்திருந்த தாமரைக்கும் தகப்பனின் குரல் கேட்க, அதிர்ந்து போய் விட்டாள் அவள்.
“டேய், என்னடா பேசற நீ? தாமரையைப் போய் ரெண்டாந் தாரமாவா!” என வாயை விட்டார் வேலன்,
ஏற்கனவே கொண்டை இட்டிருந்த முடியை அவிழ்த்து முடிந்து கொண்ட அன்னபூரணி,
“என்ன கேட்டீங்க? ரெண்டாந்தாரமாவா? ஏன், என் மாப்பிள்ளைக்கு என்ன குறை? அவருக்கு ரெண்டாந்தாரமா உங்க தொம்பிப் பொண்ண கட்டிக் குடுக்க மாட்டீங்களோ? ஊரான் பொண்ண ரெண்டாங் கையா கட்டி வைக்கனும்னா இனிக்குது! ஆனா சொந்தத் தம்பி பொண்ணுன்னா கசக்குதோ? உங்க மக பெத்து போட்டுட்டு போன பிள்ளைய நீங்களே பார்த்துக்கங்கன்னு உதறிட்டுப் போய் நின்னா, என் மாப்பிள்ளை இருக்கற அழகுக்கும், அந்தஸ்த்துக்கும் ஆயிரம் பொண்ணுங்க நான் நீன்னு வருவாங்க! அவரு மக, மகன்னு உசுர விட்டா, உங்களுக்கு ஏப்ப சாப்பையா போச்சோ! ரெண்டாவது தாரம்னு யாரு வேணும்னாலும் சொல்லட்டும்ங்க! நீங்க எப்படி சொல்லலாம்? என்னத்த நம்ப மக கூட வாழ்ந்து சுகத்த அனுபவிச்சிட்டாரு அந்த மனுஷன்? உங்க பொண்ணு படுத்தப் படுக்கையா இருந்தப்ப ராப்பகல் தூங்காம கண்ணு முழிச்சு கருத்தா அவள பார்த்துக்கிட்ட மனுஷனுக்கு நல்லது பண்ணலைனாலும் போகுது, மனசு நோக பேசாதீங்க” எனக் கத்தி விட்டார்.
“அச்சோ! நான் அந்த அர்த்தத்துல சொல்லல அன்னம்! தாமரை பேரு அரசல் புரசலா அப்படி இப்படின்னு அடிபடுதே, அவள போய் நம்ம மாப்பிள்ளைக்கு எப்படி பண்ணறதுன்னு நாசுக்கா மறுக்கப் போய், இப்படியாகிப் போச்சு பேச்சு” என மறுபடி உளறிக் கொட்டி கிளறி மூடினார் வேலன்.
சட்டென அறையின் வெளியே வந்த தாமரை,
“பெரியப்பா! பேசறது நீங்களா இருக்கவும் நான் சும்மா போறேன்! இல்லைன்னா என்ன செய்தின்னு கேட்டிருப்பேன்! நான் பொறந்ததுல இருந்து பக்கத்துல இருக்கற நீங்களே என்னை நம்பலைல! எவன் பின்னாடி நான் ஜாலியா சுத்தனத நீங்க பார்த்திருக்கீங்க? இல்ல எவன் கூட கூத்தடிச்சத நீங்க கண்டு வச்சிருக்கீங்க? வாயிருக்குன்னு கண்டதையும் பேசாதிங்க பெரியப்பா! நான் ஒழுக்கமானவன்னு எனக்கு மட்டும் தெரிஞ்சா போதும். உங்க அருமை பெருமையான மாப்பிள்ளைக்கு இங்க யாரும் ஏங்கிட்டு நிக்கல! அவருக்கு ஏத்தது போல உசிலம்பட்டில ஓர் உத்தமியோ, பண்ணப்பட்டில ஒரு பத்தினியோ பொறந்திருப்பா, அவள தேடிப் புடிச்சுக் கட்டி வைங்க! எனக்கு வேணவே வேணாம்” எனப் பெரிய கும்பிடு போட்டவள்,
“வாங்கப்பா! வீட்டுக்குப் போகலாம்” எனச் சத்தம் போட்டாள்.
“நீ இரு தாமரை! உங்க பெரியப்பாவுக்குக் கொஞ்ச நாளா மறை கழண்டு கிடக்குது! புடிச்சு இறுக்கி விட்டா எல்லாம் சரியா போகும்.”
“என்னமோ பண்ணுங்க பெரியம்மா! நான் போறேன்” என்றவளுக்குக் கண்களில் கண்ணீர் பூத்து நின்றது.
“சித்தி! யூ க்ரையீங்?” எனக் கேட்டபடி அவளது காலைக் கட்டிக் கொண்டாள் பூந்தென்றல்.
சட்டெனத் தனது கண்களைத் துடைத்துக் கொண்ட தாமரை, சின்னவளை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள்.
“அழலடாம்மா! சித்திக்கு தலை வலி! அதான் கண்ணுல தண்ணி வந்திடுச்சு!” எனச் சமாளித்தாள் இவள்.
“நான் தடவி விடறேன் சித்தி!” என அவளது நெற்றியைத் தனது தளிர்க் கரத்தால் தடவி விட்டாள் பூந்தென்றல்.
அங்கு நிலவிய அமைதியை தினகரனின் குரல் கலைத்துப் போட்டது.
“எனக்குத் செந்தாமரைய கல்யாணம் பண்ணிக்க சம்மதம்”
எல்லோரும் அவனை நோக்க, அவனது பார்வையோ தாமரை இடுப்பில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்த மகள் மீது இருந்தது.
“ஆச்சா?” எனும் அன்னபூரணியின் அழைப்பில்தான் சிந்தனைக் கலைந்தாள் செந்தாமரை.
“அழகா இருக்கடி!” என அவளுக்குத் திருஷ்டி பொட்டொன்றை காதோரம் வைத்தார் அன்னம்.
“எனக்கு உன்னை என் மாப்பிள்ளைக்குக் கேக்கனும்னு ஆசைத்தான்டி! அவரோ கல்யாணத்துக்குப் பிடி குடுக்கவே இல்லை! உன் கிட்ட அதைப் பத்திப் பேசி ஆசைய வளத்து மோசம் பண்ணிடக் கூடாதுன்னுதான் உள்ளுக்குள்ளயே வச்சிட்டு இருந்தேன். மாப்பிள்ளை கல்யாணத்துச் சரின்னு சொன்னத என் சம்பந்தியும் என் கிட்ட சொல்லல, நான் கட்டிக்கிட்ட மனுஷனும் என் கிட்ட சொல்ல! அப்படித் தெரிஞ்சிருந்தா, அழகா பேசி முடிச்சிருப்பேன் கல்யாணத்தை. இப்படி சண்டைச் சச்சரவுல தொடங்கிருக்காது சம்பந்தம்”
தினகரன் தாமரையை மணக்க சரியெனச் சொன்னதோடு எல்லாம் சரியாகிடவில்லை. அன்னமும், கந்தனும் தாமரையைக் கரையாய் கரைத்துத்தான் சம்மதிக்க வைத்திருந்தார்கள்.
“மாப்பிள்ளை நல்ல மனுஷன்மா! கண்டிப்பா ஒரு நாள் உனக்கு நல்ல புருஷனாகவும் இருப்பாரு! கல்யாணத்துக்கு ஒத்துக்கோமா! நான் உசுரோட இருக்கறப்ப, உங்க பெரியப்பாவே உன்னைப் பத்தி என்னெல்லாம் பேசிட்டாருன்னு பாரு! நான் இல்லாம போய்ட்டா, அதெல்லாம் உண்மைன்னு நெனைச்சு கண்ட நாயும் தனியா இருக்கற உன் கிட்ட வாலாட்டும்மா! இப்போலாம் என்னால நைட்டுல நிம்மதியா தூங்கவே முடியறதில்ல! மறுநாள் காலைல கண்ணை முழிப்பனா, இல்ல என் மகள அநாதையா விட்டுட்டுப் போய்டுவனான்னு பயமாவே இருக்குடாம்மா! எனக்கு ஒரு மோட்சத்தைக் குடு தாயி!” என அழு குரலில் கெஞ்சியவரை மறுக்க முடியவில்லை இவளால்.
என்னவோ மனம் விண்டு வலித்தது. ஆறுதலுக்காகத் தாய் மடியைத் தேடியது கன்றுக் குட்டி! தினகரனின் அலட்சியமும், இவள் மீது அவன் கொண்ட அசூயையும் உணர்ந்திருந்தவளுக்கு அவனுடனான திருமணம் எப்படி இருக்கும் எனப் புரிந்தே இருந்தது. கண்ணைத் திறந்து கொண்டே கிணற்றில் குதிக்கத் தயாராகி விட்டவளுக்கு ஒரே ஓர் ஆறுதல் பூக்குட்டி மட்டுமே!

Last edited:
Author: VanishaAdmin
Article Title: Pirithor Nesamithu--EPI 4
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.