அத்தியாயம் 7
சின்னஞ் சிறு பூவே
உன்னைத் தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே!
“என்னம்மா, சின்ன புள்ள மாதிரி அழுதுகிட்டு!” எனக் கேட்ட கந்தனுக்குமே கண்கள் கலங்கி நின்றன.
“அப்பா!” எனத் தேம்பினாள் அவர் நெஞ்சில் சாய்ந்திருந்த செந்தாமரை.
அப்பாவும் மகளும் விருந்தினர் அறையில் நின்றிருந்தார்கள். தன் மகளை அதியமான் வீட்டு மருமகளாய் விட்டு விட்டுக் கிளம்புகிறார் கந்தன். எப்பொழுது மகள் தன்னைப் பார்க்க வருவாளோ என ஏங்கிப் போய் நிற்கும் சராசரி தகப்பனின் பட்டியலில் அவரும் இணைந்திருந்தார். இனி அவர் தனிமரம்தான். அந்தப் பெரிய வீட்டில் இனி மகளின் கொலுசு சத்தம் கேட்கப் போவதில்லை. ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி இருக்கும் குரலோசை கேட்கப் போவதில்லை. இவர் தோட்டமே கதி எனக் கிடக்கும் போது, இப்போ சாப்பிட வரீங்களா இல்லையா எனும் மிரட்டல் சத்தம் கேட்கப் போவதில்லை. அதையெல்லாம் எண்ணும் போது நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது கந்தனுக்கு.
‘இனி என் புள்ள புருஷன், குழந்தைக் குட்டின்னு சந்தோஷமா இருப்பா! அதுக்காக என்ன கஷ்டத்த வேணும்னாலும் தாங்கிப்பேன் நான்!’ என எண்ணியவர் மிகச் சிரமப்பட்டுக் கண்ணீரை அடக்கினார்.
“கண்ணு! அழாதம்மா! வாழ்க்கைல மாற்றங்கள் வரது மாற்ற முடியாத விஷயம். அப்பாவ நெனைச்சி சஞ்சலப்படாம, உன் வாழ்க்கையைப் பாருடாம்மா!”
“நீங்க தனியா இருப்பீங்களேப்பா! சாப்பாட்டுக்குலாம் என்ன செய்வீங்க?” எனத் திருமணம் பேச ஆரம்பித்ததில் இருந்து கேட்கும் அதே கேள்விகளையே மீண்டும் கேட்டாள் மகள்.
இவருக்கு லேசாய் புன்னகை வந்தது.
“இதுக்கு பதில நான் இன்னும் எத்தனைத் தடவைத்தான்டா சொல்றது! தனியா இருப்பேன்தான்! ஆனா அக்கம் பக்கமெல்லாம் மக்கா மனுஷா இருக்காங்கத்தானே! ஒரு சத்தம் போட்டா ஓடி வந்திட மாட்டாங்களா? ஆபிஸ் பாய் கிட்ட சொன்னா, வீட்டுல சமைக்கறது போலவே சாப்பாடுக்கு அரேஞ் பண்ணிடுவான்! காலையும், மதியமும் அப்படி சாப்பிட்டுக்கறேன். டின்னருதான் உங்க பெரியம்மா அங்க வந்து சாப்பிட்டுக்க சொல்லிட்டாங்களே. வார கடைசிலயும் அவங்களே சாப்பாடு குடுத்து விடறேன் சொல்லிட்டாங்க! பிறகு என்னடா கவலை? வீடு சுத்தம் பண்ணவும் நீ ஆள் பார்த்து வச்சிட்ட! வேற என்ன பிரச்சனை? இனி வயசுப் புள்ள வீட்டுல இருக்காளேங்கற பயம் இல்லாம, கோயில் குளம்னு நண்பர்களோட போய்ட்டு வருவேன்! எனக்கு எந்தக் குறையும் இல்லம்மா ராசாத்தி! நீ செட்டிலாயிட்டன்றதே பெரிய பாரத்த என் நெஞ்சுக் குழியில இருந்து எடுத்து விட்டிருச்சு! அப்பா ஹேப்பியா இருக்கேன்டாம்மா!”
“அப்பா!” என இவள் மீண்டும் ஆரம்பிக்க,
“அடியேய் தாமரை! இன்னும் என்னடி முசுமுசுன்னு அழுகை! நாங்க ட்ரேயின புடிக்கறதா இல்லையா? உங்கப்பாவ எந்தப் பூச்சாண்டியும் புடிச்சுட்டுப் போகாம நாங்க பார்த்துக்கறோம்! அவர விடு” என வந்தார் அன்னப்பூரணி.
கண்களை அவசர அவசரமாகத் துடைத்துக் கொண்டாள் தாமரை. கந்தன் அறையை விட்டு வெளியே போய் விட,
“அவரே உன்னை விட்டுட்டுப் போறோமேன்னு உள்ளுக்குள்ள தவிச்சிட்டு நிக்கறாருடி! இதுல நீயும் அழுது வச்சு அவர கலங்க வைக்காதே! சிரிச்ச முகமா வழியனுப்பி விடு தாமரை. அந்த முகம்தான் அடுத்து நீ அவர பார்க்க வர வரைக்கும் நெஞ்சுக்குள்ள நிக்கும்”
சரியெனத் தலையாட்டியவள்,
“அப்பாவ கொஞ்சம் பார்த்துக்கோங்க பெரியம்மா” என மீண்டும் சொன்னாள்.
“நான் எல்லாம் பார்த்துக்கறேன்! நீ நிம்மதியா இரு”
மதிய உணவு சாப்பிட்டு விட்டுக் கிளம்பினார்கள் பெரியவர்கள் மூவரும். குட்டியின் தூங்கும் நேரமாதலால் அதியமான் அவளோடு இருக்க, தினகரனும் தாமரையும் அவர்களை இரயில் ஏற்றி விட எக்மோர் போனார்கள்.
தண்ணீர் பாட்டில்கள் வாங்கிக் கொடுத்தத் தினகரன், சரியான இடம் பார்த்து மூவரையும் உட்கார வைத்தான்.
“அப்பப்போ எங்கிருக்கீங்கன்னு மேசேஜ் பண்ணுங்க! திருச்சி சேர்ந்ததும் ஒரு போன் போட்டுடுங்க” என்றான் இவன்.
சரியெனத் தலையாட்டினார் வேலன். கந்தனோ எதுவும் பேசாமல் மருமகனின் கைப்பற்றிக் கொண்டார். அவர் பார்வையில் தெரிந்த கலக்கத்தில்,
“கவலைப்படாம போய்ட்டு வாங்க மாமா! உங்க பொண்ண நாங்க நல்லா பார்த்துப்போம்” என்றான் தினகரன்.
சரியெனத் தலையாட்டிக் கொண்ட கந்தன், மகளிடம் கண்களாலேயே விடை பெற்றார். வாயைத் திறந்தால், கதறி விடும் நிலையில் இருந்தார் அவர். இவளும் எதுவும் பேசாமல், கண்ணீர் விடாமல் புன்னகை முகமாகவே தலையசைத்து விடை கொடுத்தாள் மூவருக்கும்.
இரயில் பார்வையை விட்டு மறையும் வரை அங்கேயே நின்றிருந்தவளுக்குக் கண்கள் உடைப்பெடுத்தன.
“தாமரை!” என அழைத்தான் தினகரன்.
கண்ணீர் கண்களுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள் பெண்.
“அழாதே! நம்மள பார்க்கிற பூமர் ஆண்ட்டிஸ் உன் சம்மதம் இல்லாம உன்னைத் தள்ளிட்டு வந்துட்டேன்னு நினைச்சுப்பாங்க! அதே ஜெனெரெஷன் இஸெட்(Z) லேடிஸ், இவள போய் தள்ளிட்டு வந்திருக்கானே ரசனைக் கெட்டவன்னு நெனைப்பாங்க! எதுக்கு அவங்க வாய்க்கு நாம அவலாகனும்!” என்றான்.
கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் தாமரை.
“எங்க கவுண்ட்டர் அட்டாக்க காணோம்? எப்பவும் நான் எது சொன்னாலும் எகிறிட்டு வருவ”
“அம்மா போனதுக்கு அப்புறம் அப்பாத்தான் எனக்கு எல்லாமே! அவருக்கு டிபன் செய்யனும், சாப்பாடு செய்யனும், அவரோட துணிகள அயர்ன் பண்ணி வைக்கனும், செக்கப் அழைச்சிட்டுப் போகனும்னு அவர சுத்தியே சுழன்றது என் உலகம்! இப்போ அவர பிரியறப்ப, உலகமே வெறுமையாகிட்ட மாதிரி இருக்கு தினகர் மாமா” என மனதில் இருந்து பேசியவளை அதற்கு மேல் கிண்டல் கேலி எதுவும் செய்யவில்லை இவன்.
“நாள பின்ன பூந்தென்றல் என்னை விட்டு அடுத்த வீட்டுக்குப் போகும் போது, எனக்கும் இப்படித்தான் ஃபீலாகும்ல” என்றான் தினகரன்.
“அப்படிலாம் உங்களுக்கு ஃபீலாகாது”
“ஏன்? உங்கப்பா உன் மேல வச்ச பாசத்த விட, என் மக மேல நான் வச்சிருக்கற பாசம் எந்த வகைல குறைஞ்சுப் போச்சு?” எனக் கடுப்பாய் கேட்டான் இவன்.
“நம்ம மக அடுத்த வீட்டுக்குப் போகறப்ப, நாமும்தான் அவ கூடவே போய்டுவோமே! பிறகு ஏன் ஃபீலாக போகுது?” எனக் கேட்டவள் முன்னே நடந்து விட, புன்னகையுடன் அவளைப் பின் தொடர்ந்தான் தினகரன்.
காரில் அமர்ந்ததும்,
“தாமரை! கடையில கொஞ்சம் வேலை இருக்கு. அங்க போய்ட்டு பிறகு வீட்டுக்குப் போகலாம்” என்றான் இவன்.
சரியெனத் தலையாட்டியவள், வேறெதுவும் பேசாமல் சீட்டில் நன்றாகத் தலையைச் சாய்த்துக் கொண்டாள். இரவில் சரியாகத் தூக்கம் இல்லாமல் போயிருக்க, அதோடு காலையில் இருந்து அழுதது வேறு ஏசி காற்றில் கண் சொருகியது தாமரைக்கு.
“தாமரை! தாமரை” எனும் அழைப்பில் கஷ்டப்பட்டுக் கண்களை மலர்த்தினாள் இவள்
“கடை வந்திடுச்சு! எழுந்துக்கோ”
கண்களைக் கசக்கியவள், முடியைக் கை கொண்டு சரி செய்தாள். தண்ணீர் பாட்டிலை அவள் புறம் நீட்டியவன்,
“இறங்கி முகத்த கழுவிக்கோ! ரொம்ப டயர்ட்டா தெரியற” என்றான்.
இவள் காரின் வெளியே முகத்தைக் கழுவி, கைப்பையில் இருக்கும் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். பின் தினகரனைத் தொடர்ந்து கடைக்குள் நுழைந்தாள். பொருட்கள் நேர்த்தியாக அடுக்கப்பட்டுப் பிரமாண்டமாக இருந்தது கடை. இதுதான் முதல் முறை அவன் கடைக்கு வருகிறாள் தாமரை. கவரிங்மான் கடையைக் கண்ணைக் கவரும் விதத்தில்தான் வைத்திருந்தான்.
இவர்கள் திருமணத்தைப் பற்றி அறிந்திருந்த கடை ஊழியர்கள் வந்து வாழ்த்துத் தெரிவித்தார்கள். சின்னப் புன்னகையுடன் நன்றி சொன்னான் தினகரன். இவள் முறுவலித்ததோடு நிறுத்திக் கொண்டாள். மேல் தளத்தில் இருந்த அவனது அறையில் இவளை அமர்த்தியவன்,
“அப்புறம் கடையைச் சுத்தி பார்க்கலாம்! நான் போய் ஸ்டோர் ரூம்ல என் வேலையை முடிச்சிட்டு வந்துடறேன். இங்கயே உக்காந்திரு! டீ கொண்டு வர சொல்லிட்டுப் போறேன்” எனச் சொல்லிக் கிளம்பிவிட்டான்.
நடுத்தர சைசில் ஒரு மேசை. அதன் மேல் லாப்டாப் மற்றும் சில பல ஃபைல்கள். அவனுக்கான சுழல் நாற்காலி, வந்தவர்கள் அமர்வதற்கு இரு நாற்காலிகள் எனக் கச்சிதமாக இருந்தன உள்ளே. ஒரு பக்கச் சுவரில் வெங்கடாஜலபதியின் முழு உருவப் படம் அழகானப் பொடிக் கற்களாலான சட்டத்தில் மாட்டி வைக்கப்பட்டிருந்தது. அழகிய மாலை மாட்டப்பட்டு ஊதுபத்தியும் ஏற்றப்பட்டிருந்தது. இன்னொரு பக்கச் சுவரில் பெரிய சைசில் தொலைக்காட்சியை மாட்டி இருந்தார்கள். அதில் ஒவ்வொரு தளத்திலும் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. வெள்ளி விற்கும் விலைக்கு இது போன்ற பாதுகாப்புத் தேவைதான் என எண்ணிக் கொண்டாள் இவள்.
விருந்தினர் நாற்காலியில் அமர்ந்திருந்தவள், அவனைப் பார்ப்பது போல் இருந்த போட்டோ ப்ரேம்மை எட்டிக் கையில் எடுத்துப் பார்த்தாள். அதில் ஒரு வயது இருக்கும் பூந்தென்றலை நிவேதா கையில் ஏந்தி இருக்க, அவர்கள் இருவரையும் அணைத்தபடி நின்றிருந்தான் தினகரன். அவன் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. நிவேதாவும் சிரித்த முகத்துடன் இருந்தாள் அந்தப் போட்டோவில்.
‘கடவுளே! சந்தோஷமான இந்தக் குடும்பத்த இப்படி சிதைச்சு விட்டுட்டியே!’ என இவள் மனம் அரற்றியது.
சற்று நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்க, இவள் போய் கதவைத் திறந்தாள். அங்கே கடையில் வேலைப் பார்க்கும் ஒரு பெண் கையில் ட்ரேயுடன் நின்றிருந்தாள்.
“மேடம் டீ! அண்ணா உங்களுக்கு குடுத்து விட சொன்னாரு!”
“தேங்க் யூமா!” எனச் சொன்னவள் ட்ரேயை வாங்கிக் கொண்டாள்.
அதில் டீயுடன், வடையும் சமோசாவும் இருந்தன. அதைப் பார்த்தவுடன்தான் பசி தெரிந்தது தாமரைக்கு. மதியம் கூட தந்தை கிளம்புகிறார் எனச் சரியாக சாப்பிட்டிருக்கவில்லை. தினகரன் டீ குடித்திருப்பானா எனும் எண்ணம் வர, சி.சி.டிவியில் அவன் உருவத்தைத் தேடினாள் இவள். ஸ்டோர் ரூமில் வேலைப் பார்ப்பவர்கள் சிலருடன் பேசியபடியே அவர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தான் அவன்.
மீண்டும் நாற்காலியில் அமர்ந்தவள், அவ்விடத்தைச் சுற்றிப் பார்வையை ஓட்டிக் கொண்டே சாப்பிட்டு, டீயை அருந்தினாள். தொலைக்காட்சி வழி ஒவ்வொரு தளத்திலும் ஆட்கள் நடமாடுவதும், வியாபாரம் நடப்பதும் பார்க்கச் சுவாரசியமாக இருக்க பொழுது போனதே தெரியவில்லை இவளுக்கு.
ஒரு மணி நேரம் சென்று அறைக்குள் வந்தான் தினகரன்.
“சாரி! கொஞ்சம் லேட்டாகிருச்சு! ஒரே ஓர் இமேயில் மட்டும் ரிப்ளை பண்ணிடறேன்! அப்புறம் கிளம்பிடலாம்” என லாப்டாப் முன்னே அமர்ந்தான்.
சரியெனத் தலையாட்டியவள், மீண்டும் தொலைக்காட்சியில் பார்வையைப் பதித்தாள்.
“போலாம் வா!” எனும் குரலில்தான் கவனம் கலைந்தாள் இவள்.
சொன்னது போலவே மேல் தளத்தையும், கீழ் தளத்தையும் இவளுக்குச் சுற்றிக் காட்டினான். தாமரையும் ஆர்வமாகவே பார்த்தாள். வெறும் மெட்டிதானே, கொலுசுதானே எனச் சொல்லி விட முடியாத அளவுக்கு அத்தனை அழகழகாய் டிசைன்கள் வைத்திருந்தான். கவரிங் நகைகளும் தங்கத்தைப் போலவே கண்ணைக் கவர்ந்தன.
“எதாச்சும் வேணுமா தாமரை?” எனக் கேட்டான் தினகரன்.
எதுவும் வேண்டாமென மறுத்தவள்,
“பூக்குட்டி எழுந்திருப்பா! போலாம் வீட்டுக்கு” எனச் சொல்லி விட்டாள்.
காரை பார்க் செய்து விட்டு வீட்டை நெருங்கும் போது, பூந்தென்றலின் அழுகைச் சத்தம் கேட்டது. மௌனமாய் அவள் கண்ணீர் சிந்திதான் பார்த்திருக்கிறாள் தாமரை. சத்தமாய் அழுகைக் குரல் கேட்க, என்னமோ ஏதோவென வீட்டுக்குள் ஓடினாள் இவள். தாமரையைப் பார்த்தவுடன், ஓடி வந்து தொடையைக் கட்டிக் கொண்டாள் பூந்தென்றல்.
“சித்தி! சித்தி” எனத் தேம்ப வேறு செய்தாள்.
குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள் இவள்.
“ஏன்பா அழுகறா இப்படி?” எனக் கேட்டான் தினகரன்.
“தூங்கி எழுந்ததும் தாமரையைக் கேட்டாடா! ரயிலுக்கு தாத்தா பாட்டியை விடப் போயிருக்கான்னு சொன்னேன். நேரம் ஆக, ஆக, தாமரையும் கூடவே ஊருக்குப் போய்ட்டாளோன்னு நெனைச்சி ஒரே அழுகை.”
“எனக்குப் போன் போட்டிருக்க வேண்டியதுதானேப்பா”
“முதன் முதலா ஜோடியா வெளிய போயிருக்கீங்க! எதுக்குக் கூப்பிட்டுக்கிட்டு, நாமளே சமாளிப்போம்னு பார்த்தா, இன்னிக்கு ஓவரா பண்ணிட்டாடா இந்தக் குட்டி” என்றார் அதியமான்.
“சித்தி!” எனத் தாமரையின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டப் பூக்குட்டியைத் தட்டிக் கொடுத்தாள் இவள்.
“சித்தி உன்னை விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன்டா குட்டி! கொஞ்சம் லேட்டாகிப் போச்சு! இதுக்குப் போய் பூக்குட்டி அழலாமா?” எனக் கேட்டபடியே அவளுக்கு எதாவது பானம் கலந்து தரலாம் என சமையலறைக்குள் நுழைந்தாள் செந்தாமரை.
முந்தைய தினம் புத்திசாலித்தனமாகத் தன்னுடன் டீல் போட்ட பெண்ணா இவள் என மனம் வாடிப் போனது தாமரைக்கு. பேச்செல்லாம் பெரிய மனிதத் தோரணையில் இருந்தாலும், அவள் இன்னும் தாய் மடியைத் தேடும் கன்றுக் குட்டிதான் எனப் புரிந்து கொண்டவள், சின்னவள் முதுகை பாசமாய் வருடிக் கொடுத்தபடியே இருந்தாள்.
சமையலறைக்குள் நுழைந்த இரு பெண்களையும் பார்த்தபடி,
“நாம எப்படித்தான் அன்பா பார்த்தாலும், இந்தப் புள்ளைங்க ஒரு பெண்ணோட அரவணைப்பத்தான் தேடுதுங்கல்லப்பா!” என்றான்.
“புள்ளைங்களுக்கு மட்டும் இல்லப்பா மகனே, ஆம்பளை ஜென்மத்துக்கும் ஒரு பொண்ணோட அரவணைப்பும், அன்பும் கட்டைல போகிற வரைக்கும் தேவையானதாத்தான் இருக்கு! நான் அனுபவிக்கற தனிமையை நீ அனுபவிக்கக் கூடாதுன்னுதான் ஒரே பிடியில நின்னு உனக்கு மறு கல்யாணத்தப் பண்ணி வச்சேன். போனவளுக்கு இனியாச்சும் சாந்திய குடுத்துட்டு, வந்தவள சந்தோஷமா வச்சிக்கடா மகனே!” என்றவர், நண்பர்களைப் பார்க்க வெளியே கிளம்பி விட்டார்.
அன்றிரவு படுக்கை அறையில்,
“தென்றல் குட்டி! நேத்து புது சித்தி ஜோருல அவங்க பக்கம் படுத்துக்கிட்டீங்க! இன்னிக்கு எப்போதும் போல வந்து அப்பா கூட படுத்துக்கோங்க” என மகளை அழைத்தான் தினகரன்.
காப்பாத்துங்க சித்தி என்பது போல தாமரையைப் பார்த்தாள் சின்னவள்.
“அவ மேல தூக்கத்துல நீங்க கையத் தூக்கிப் போட்டுடறீங்க தினகர் மாமா! பூக்குட்டியால கம்பர்டபளா தூங்க முடியலை” என விஷயத்தைப் போட்டு உடைத்தாள் இவள்.
அப்படியா என்பது போல இவன் மகளைப் பார்க்க,
“அப்படிலாம் இல்லப்பா! சித்தி லுல்லலாய்க்கு சொல்றாங்க!” எனச் சொன்ன பூந்தென்றல் இவள் மேல் ஏறி நகர்ந்து போய் தகப்பனை ஒட்டிப் படுத்துக் கொண்டாள்.
‘அடிப்பாவி! லுல்லாலாய்க்கு சொல்றேன்னு என்னை லூசாக்கிட்டாளே’ என்பது போல் பார்த்தவளை மிதப்பாகப் பார்த்து வைத்தான் தினகரன்.
“அதானே! எவ்ளோ நாளா அப்பாவும் பூக்குட்டியும் ஒன்னா ஜோஜோ பண்றோம், அவளுக்கு கம்பர்டபிளா இருக்கா இல்லையான்னு அப்பாவுக்குத் தெரியாதா!” எனச் சொன்னவன் மகளைக் கிச்சு கிச்சு மூட்டிச் சிரிக்க வைத்து தன் கை வளைவுக்குள் படுக்க வைத்துக் கொண்டான்.
அவள் நெற்றியையும், தலையையும் இவன் வருடிக் கொடுக்க சில நிமிடங்களிலேயே தூங்கி இருந்தாள் சின்னக் குட்டி. அவன் கண்களில் வழியும் பாசத்தைக் கண்டத் தாமரைக்குப் புரிந்தது, ஏன் இந்தப் பூக்குட்டி அப்பா பைத்தியமாக இருக்கிறாள் என.
இவள் மெல்லியக் குரலில்,
“என் மேலயும்தான் நேத்து கையைத் தூக்கிப் போட்டீங்க தினகர் மாமா! கையா இல்ல கட்டையான்னு பயந்தே போய்ட்டேன் தெரியுமா! நான் கத்தனது கூடத் தெரியாம அப்படி ஒரு தூக்கம் அப்பாவுக்கும் பொண்ணுக்கும்” என்றாள்.
சற்று நேரம் அமைதி அவனிடம். மகளின் முதுகை வருடியபடியே விட்டத்தை வெறித்தபடி இருந்தவன்,
“ரொம்பக் காலமா நல்ல தூக்கம்ங்கறது இல்லை தாமரை எனக்கு. நிவி சின்ன சவுண்ட் குடுத்தாலும் படக்குன்னு எழுந்து உக்காந்து என்ன செய்யுது, பாத்ரூம் போகனுமா, வலிக்குதான்னு கேட்டே பழகிடுச்சு! அவ இல்லாத சில மாதங்கள் தூக்கங்கறதே தூரப் போய்டுச்சு! பிறகு அதீத மன அழுத்தத்திலும், தூக்கமின்மையிலும் இருந்த எனக்கு, மாத்திரைப் போட்டாத்தான் தூக்கம் வரும்ங்கிற நிலை ஆகிடுச்சு! எவ்ளோ காலம் அப்படி இருக்க? நானே முயன்று எக்சர்சைஸ், வேலை, பூக்குட்டின்னு கவனத்தத் திருப்பினேன். இப்போலாம் படுத்தா அடிச்சுப் போட்ட மாதிரி தூங்கிடறேன்! அதான் உன் சத்தம் கேட்டிருக்காது! சாரி! நான் வேணும்னா உங்க ரெண்டு பேரயும் டிஸ்டர்ப் பண்ணாம தனியா கீழ மெத்தைப் போட்டுப் படுத்துக்கவா?” எனக் கேட்டான்.
இவளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
“இல்ல தினகர் மாமா! பெட்லயே படுங்க! நீங்க தூங்கனதும் பூக்குட்டிய நான் என் பக்கம் இழுத்துக்கறேன்” என்றவள் அதே போலவே சின்னவளைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டாள்.
அன்றிரவும் இவள் இடுப்பில் வந்து விழுந்தது அவன் கை. கண் விழித்தவள், மெல்லிய விளக்கின் ஒளியில் தினகரனின் முகம் பார்த்தாள். ஓடி விளையாடி அயர்ந்து உறங்கும் குழந்தை போல தெரிந்தான் இவள் கண்களுக்கு. சின்னவள் இவள் நெஞ்சில் முகம் புதைத்திருக்க, அவள் அப்பன் இவள் இடுப்பில் கரம் பதித்திருந்தான்.
“இனி இதெல்லாம் பழகிக்க வேண்டியதுதான்!” என முனகிய செந்தாமரை முயன்று உறங்கிப் போனாள்.

Last edited:
Author: VanishaAdmin
Article Title: Pirithor Nesamithu--EPI 7
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.