Sanam Teri Kasam

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
592
-2,583
93
Fb post (Dec 2018)

View attachment 55

படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.இப்போத்தான் அதை பத்தி பேச டைம் கிடைச்சுச்சு.

நம்ம குடும்ப நாவல் படம் தான் இதுவும். எண்டிங் மட்டும் நமக்கு ஒத்து வராது.
ஹீரோ ஜெயில்ல களி சாப்பிட்டு வெளிய வந்தவரு. ஆணழகன் (அது போதும் நமக்கு), டேட்டூ வைச்ச ஆஜானுபாகுவான உடம்பு.. நம்ம கதையில வர மாதிரி ஆண்மை ததும்பும் ஹீரோ.
ஹீரோயின் ப்லேய்ன் லைப்ரரியன்.. பொம்மை மாதிரி அழகு. ஆனா அத எடுத்துக் காட்ட தெரியாத அப்பாவி. சோசியலா பழக தெரியாத வெகுளி.ஒரே அப்பார்ட்மெண்ட்ல வேற வீட்டுல இருப்பாங்க ரெண்டு பேரும். ஹீரோக்கு இவ மேல ஒரு கண்ணு. இவன கண்டாலே மிரண்டு போவா அவ. அப்புறம் என்ன, அவன் வீட்டுக்கு அழகழகா பொண்ணுங்க அட்டேண்டேன்ஸ் போட்டா பயப்படாம பாயாசமா போடுவா?
ஒரு கட்டத்துல இவள யாரும் கல்யாணம் பண்ணிக்க விரும்பலன்னு தெரிஞ்சதும், வாண்டேட்டா ஹீரோட்ட போய் என்னை அழகாக்கிக்குடுன்னு கேப்பா. கண்ணா லட்டு தின்ன ஆசையா?? வேணான்னா சொல்லுவான் பயபுள்ள. அப்படியே ரெண்டு பேரும் நட்பாகிருவாங்க. அப்புறம் ப்ளா ப்ளா ப்ளா. அவளுக்கு கல்யாணம் இன்னொருத்தன் கூட நடக்கும் போது, அவன் வேணான்னு போயிருவான். காரணத்த பார்த்து தெரிஞ்சிக்கிங்க.
இவ காசு போட்டு ஹனிமூன் இடமெல்லாம் புக் பண்ணிட்டோமேன்னு தனியா போவா சனிமூன் கொண்டாட. ஹீரோவும் அவளுக்காக போவாரு, அவ என்னாச்சும் பண்ணிக்குவாளோன்னு. அங்க......... இவ ஹீரோ கையப் புடிச்சு இழுத்திடுவா..(ஏன்மா கையப் புடிச்சு இழுத்தியா?) அப்பவும் ஹீரோ சொல்லுவான், இப்படி ஜலபுலஜாங்ஸ் வேணாம்மான்னு. இவ பாவ மூஞ்ச காட்டி என்னை உனக்கும் புடிக்கலையான்னு கேப்பா. அதுக்கு மேல என்னத்த சொல்ல.. மேட்டர் ஓவர். மறுநாள் ஹீரோயின் எஸ்கேப்..
நம்ம கதை ஹீரோலாம் என்ன பண்ணுவாங்க??? நம்ம பர்பாமன்ஸ் பாத்து பொண்ணு ஓடிருச்சுன்னு மனசு நொந்து போயிருவாங்க.. சீ போடின்னு போயிருவாங்க..
நம்ம ஹீரோ தேடி, ஓடி இவள கண்டுபிடிப்பாரு.. அதுக்கு மேல என்னத்த சொல்ல. குடம் குடம்மா கண்ணீர் விட்டு படத்தைப் பார்த்து முடிச்சேன்.
இந்தப் படமும் டீவியில தான் பார்த்தேன். சோ நோ லிங்க்.. ஹிஹிஹி..
எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.. பாருங்க!

யப்பா இந்த ஹீரோ செம்ம அழகுப்பா.. ஆனா பாருங்க, தெலுங்கு படத்துல இவன ஒப்புக்கு சப்பாணியா போட்டு என்னை காண்டாக்குறாங்க.. பீலீங்கோட இப்ப போறேன். அடுத்த படத்துல பார்க்கலாம் டியர்ஸ்..
 

Author: VanishaAdmin
Article Title: Sanam Teri Kasam
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: vetrij