Sernthaadu Cindrella--EPI 15

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
947
-1,585
93
அத்தியாயம் 15

“இன்னிக்கு பாட்காஸ்ட்ல அந்த ஒரு நாற்காலிய பத்தி பேச போறேன்! உடனே இது அரசியல் பதிவுன்னு நெனைச்சிடாதிங்க! இல்லவே இல்லை! அப்போ எந்த நாற்காலி? நம்ம எல்லார் வீட்டுலயும் பாவமா ஒரு மூலைல இருக்குமே அந்த நாற்காலி! அது மேலத்தான் துவைச்ச துணிய போட்டு வைப்போம்! ஈரத் துண்ட போட்டு வைப்போம்! துவைக்காத துணிய கூட போட்டு வைப்போம்! அந்த நாற்காலிக்கு மட்டும் வாயிருந்தா டேய், என்னை விட்டுடுங்கடான்னு அழுதுரும்! அது உருவான பர்ப்பஸ்ஸே வேற! ஆனா நாம அதுக்குக் குடுக்கற பர்ப்பஸ்ஸோ வேற! அந்த நாற்காலி மாதிரித்தான் நம்மில் சிலரும்! பூமிக்கு வந்த பர்ப்பஸ் என்னன்னு தெரியாம தேமேன்னு வாழ்ந்துட்டு இருக்கோம்!”

(பாட்காஸ்ட் பை பரதேசி)




முற்றத்தில் மழை நீர் தெறித்து விழும் அழகை ரசித்தபடி ஊஞ்சலில் அமர்ந்திருந்தான் விஷ்ணு! அவன் மடியில் சுகமாய் தலை சாய்த்துப் படுத்திருந்தாள் ஊர்மிளா. கணமான போர்வையைப் அவள் மேல் போர்த்தி விட்டிருந்தான் இவன். தூக்கம் கண்களைச் சுழற்றியது பெண்ணுக்கு. ஆனாலும் இது போலொரு அழகான தருணத்தைத் தவற விட்டு விடக் கூடாது எனப் பிடிவாதமாக விழித்திருந்தாள்.

“மனுஷங்க நாம ஓட்டமா ஓடிட்டே இருக்கோம்ல! இது போல மழையை ரசிக்கறதுலாம் லக்‌ஷரியா ஆகிடுச்சு வாழ்க்கைல!” என்றான் விஷ்ணு.

“பணம் இருந்தா, எந்தக் கவலையும் இல்லாம அழக ரசிக்கலாம் ட்ரைனர் சார்! ஒன்னும் இல்லாதவங்க ஓடித்தானே ஆகனும்!” என இவனை வம்பிழுத்தாள் ஊர்மி.

அவள் நெற்றியை வாஞ்சையாய் தடவிக் கொடுத்தவன்,

“பணம் இல்லாதவனுக்குப் பணத்தத் தேடி ஓட்டம்னா, பணம் உள்ளவனுக்கு அதை நிலைக்க வைக்க ஓட்டம்! நம்மள நம்பி பல குடும்பங்கள் இருக்கு ஊர்மி! நம்மட்ட வேலைப் பார்க்கறவங்க, நம்ம சேரிட்டில படிக்கற பசங்க, நாம தத்தெடுத்து நடத்தற ஸ்பெஷசல் சைல்ட் இல்லங்கள், நம்ம கம்பெனி ஷேர்ஸ வாங்கி வச்சிருக்கற ஷேர்ஹோல்டர்ஸ்னு பலர் நாம ஓடற ஓட்டத்த நம்பித்தான் வாழ்றாங்க! யார் ஓட்டத்த நிறுத்தனாலும் நாம நிறுத்த முடியாது! நிறுத்தவும் கூடாது ஊர்மி” என்றான் விஷ்ணு.

எல்லாவற்றிலும் இவளைக் கூட்டுச் சேர்த்துக் கொள்பவனை இன்னும் இன்னும் பிடித்தது ஊர்மிக்கு. நம் வீடு, நம்மிடம் வேலைப் பார்ப்பவர்கள், நம் கம்பேனி, நம் குடும்பம் என எல்லாவற்றிலும் அவளை உள்ளிழுத்துக் கொண்டான் இவன். நான் என்று தனிமையில் வாழ்ந்து வந்தவளுக்கு நாம் எனும் அங்கீகாரம் கிடைத்தது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது! கூடவே இது நிலைக்குமா எனும் பயத்தையும் கொடுத்தது.

அடிப்பட்டக் கால் அனுமதித்த அளவு திரும்பி நேராக விஷ்ணுவின் முகம் பார்ப்பது போல படுத்தவள்,

“விஷ்ணு” எனக் கிசுகிசுப்பாக அழைத்தாள்.

“என்ன ஊர்மி?” என அவனும் கிசுகிசுப்பாகக் கேட்டான்.

“நாம நாமன்னு வாய் ஓயாம சொல்றியே, நீயும் நானும் நாமளா மாற உன் பேரேண்ட்ஸ் ஒத்துப்பாங்களா?” எனக் கேட்டாள் இவள்.

இவளுக்கு சேனா குருப்ஸின் ஸ்கோலர்ஷிப் கிடைத்த போது, அந்நிகழ்வைப் பெரிய விழாவாக நடத்தினார்கள் அந்நிறுவனத்தினர். இவளைப் போலவே இன்னும் பலருக்கு ஸ்கோலர்ஸிப் கிடைத்தது! பெரிய விஐபிக்கள் முன்னிலையில் விஷ்ணுவின் அம்மா காயத்ரிதான் ஸ்காலர்ஷிப் லெட்டரை மேடையில் வைத்து எல்லோருக்கும் வழங்கினார். அவரை அருகே பார்த்த போது ஊர்மிக்குக் கொஞ்சம் பயமாய் இருந்தது! அழகாய் அதே நேரம் ஆளுமையாய் தெரிந்தவர், இவளது பெயரைச் சொல்லி, நன்றாகப் படிக்க வேண்டும் என ஆங்கிலத்தில் சிரித்த முகமாய் சொன்னார். சிரித்த முகமாய் தெரிந்தாலும், தள்ளி நில் என்பதை போல இருந்தது அவரது உடல்மொழி! இன்னும் கூட அவர் மீதிருந்து வந்த பெர்பியூமின் உயர்தர வாசனை தன்னைச் சூழ்ந்திருப்பதைப் போல உணர்ந்தாள் ஊர்மிளா.

“ஒத்துக்க மாட்டாங்க”

“பின்ன எப்படி விஷ்ணு?” என்றவளின் குரலில் ஏகத்துக்கும் வருத்தம்.

“ஒத்துக்க மாட்டாங்க ஊர்மி! ஆனா தடுக்கவும் மாட்டாங்க! இது வேணாம், சரியா வராதுன்னு ரெண்டுப் பேருமே சொல்வாங்க! நான் பிடிவாதமா இருந்தா பிறகு பட்டுத் தெளிஞ்சு வான்னு விட்டுருவாங்க! நம்ம உறவு அப்படியாப்பட்டதா ஊர்மீ? அவங்க நினைக்கற மாதிரி, வேணாம் போடான்னு மறுபடி விட்டுருவியா என்னை? ஏன்னா நான் எப்பவும் உன்னை விடப் போறது இல்ல! வேண்டாம் நான்னு நீயா போனாத்தான் உண்டு! சிண்ட்ரெல்லா இருக்கால்ல, அவ பிரின்ஸ விட்டுக் காணாப் போனப்ப, அவன் அவளோட ஷூவ கைல வச்சிக்கிட்டு அலைஞ்சு திரிஞ்சு தேடிக் கண்டுப் புடிச்சு தன்னோட ராணியாக்கிக்கிட்டான்! ரெண்டு பேரும் ஹேப்பிலி எவர் அஃப்டர் வாழ்ந்தாங்க! நீயும் என்னோட சிண்ட்ரெல்லாத்தான். முதல் தடவைக் காணாப் போனப்ப, உன் மேல எனக்கு அட்ராக்‌ஷன் மட்டும்தான் இருந்தது! அதான் நான் தேடி வரல! ரெண்டாவது தடவைக் காணாப் போனப்பா, உன் மேல உயிரையே வச்சிருந்தேன்! அதான் தேடி வந்தேன்! உனக்கு உடம்பு சரியானதும் உன்னை என் ராணியாக்கிக்குவேன்! இதுக்குப் பிறகு நமக்கு ஹேப்பிலி எவர் அஃப்டர் இருக்கா இல்லையான்னு நீதான் டிசைட் பண்ணனும் ஊர்மீ! உன்னோட காயங்கள் ஓரளவு எனக்குத் தெரியும்! என்னையும் என் காதலையும் நம்பி வா! வாழ்ந்து பார்த்திடலாம்”

“என்ன தெரியும் விஷ்ணு என்னைப் பத்தி?” எனக் கேட்டவளுக்குக் கண்கள் கலங்கி நின்றன.

“உன் பாஸ்ட் பத்தி எனக்கு எதுவும் தெரிய வேணாம்னு சொல்லிருக்கேன்! சொன்னது போலவே உன்னைப் பத்தி நானா எதையும் தேடிப் போய் தெரிஞ்சுக்கல! நீ தேஜா கிட்ட பேசனப்ப கேட்டத வச்சி தனியா அனாதை ஆசிரமத்துல வளர்ந்திருக்கன்ற வரை தெரியும்! ஒரு குழந்தை ஆனாதையாக்கப்படறது காலத்தின் குற்றமே தவிர, அந்தக் குழந்தையுன் குற்றமில்ல! நீ அனாதைங்கறத என் பேரேண்ட்ஸ் பெருசா தூக்கிப் பிடிக்கறதுல எனக்கு உடன்பாடு இல்ல”

“என்னைத் உட்கார வை விஷ்ணு! உன் முகத்தப் பார்த்துப் பேசனும் நான்” என்றவளை ஊஞ்சலில் வசதியாக அமர வைத்தான் இவன்.

“உன் பேரெண்ட்ஸ் என்ன சொல்ல வந்திருப்பாங்கன்றத நீ சரியா கேட்டுக்கல போல விஷ்ணு! நான் அனாதையாக்கப்பட்டதுக்குப் பின்னாடி ஒரு கதை இருந்திருக்கும்னு உனக்கு ஏன் தோணல?”

ஊர்மிளாவை ஆழ்ந்து நோக்கினான் விஷ்ணு.

“அந்தக் கதை உன்னை என் கூட சேர விடாம பிரிக்கும்னா, அந்தக் கதை எனக்குத் தேவையில்ல ஊர்மீ! பிறப்பு, வளர்ப்பு, தராதாரம், ஜாதி, மதம் இதெல்லாம் பார்த்து வந்தா அதுக்கு பேரு லவ் இல்ல! வேற என்னவோ கர்மம் அது!” என்றவனைக் கட்டிக் கொண்டாள் இவள்.

“என்னைப் பொறுத்த வரை லவ், கல்யாணமெல்லாம் ஓர் ஏமாத்து வேலை! எல்லாரும் காதல் பண்றாங்க, கல்யாணம் பண்ணிக்கறாங்க! நாமும் அதை தொடரனும்! புள்ளக் குட்டிப் பெத்துக்கனும்ங்கற மனநிலைதான் இங்க நிறைய பேருக்கு! கல்யாணம்ங்கறது உடலுறவுக்குக் கொடுக்கப்படற லைசன்ஸ்! அதைப் போய் புனிதம், புண்ணியம்னு ரீல் விட்டுட்டுத் திரியறானுங்கன்னு தோணும் எனக்கு! என் வாழ்க்கைல கால்யாணங்கற சுழலுல மட்டும் சிக்கிடவே கூடாதுன்னு சபதம் எடுத்து வச்சிருந்தேன் விஷ்ணு! அதை கொஞ்சம் கொஞ்சமா தகர்த்த நீ! யெஸ் யூ டிட்!”

சற்று நேரம் மழையை வெறித்தவள், மீண்டும் விஷ்ணுவைத் திரும்பிப் பார்த்தாள்.

“உன்னோட கவனிப்பு, அக்கறைலாம் கடுப்பக் கிளப்பனாலும், என்னவோ உள்ளுக்குள்ள ஒரு குளுமை! இப்படிலாம் ஃபீல் பண்ணாதே ஊர்மீன்னு எனக்கு நானே தடைப் போட்டுக்குவேன்! நீ வேற உனக்கு ஆள் இருக்குன்னு சொன்னியா, அப்படி இருந்தும் உன் பக்கம் ஏன் என் மனசு சாயுதுன்னு ரொம்ப கோபமா வந்தது என் மேலேயே! அந்த ட்ரேன் ரைட்ல ஒரு குட்டிப் பாப்பாவுக்காக குரங்கு சேட்டைலாம் பண்ணி சிரிக்க வச்சப் பார்த்தியா, அங்கத்தான் எவ்ளோ சொல்லியும் கேக்காம என் மனசு படார்னு உன் காலடியில விழுந்திடுச்சு! நீ, நான், நம்ம குழந்தைன்னு கற்பனைகள் தோண ஆரம்பிச்சிடுச்சு விஷ்ணு! அன்னைக்கு நைட் ரொம்பக் கஷ்டப்பட்டேன் தூங்க! எங்கம்மா இரத்தம்தானே என் உடம்புல ஊறுது! அவங்க போல நானும் இன்னொருத்தி ஆளுக்கு ஆசைப்படறனே, நான்லாம் என்ன மனுஷின்னு அவ்ளோ பாரம் மனசெல்லாம்!” என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை!

விஷ்ணுவின் நெஞ்சில் சாய்ந்து கொண்டவளுக்கு அழுகை நிற்கவில்லை!

“ஏன் விஷ்ணு எங்கம்மா அந்த மாதிரி செஞ்சாங்க? ஏன்? ஏன்? பெத்தப் புள்ளைங்கன்னு கொஞ்சம் கூடவா பாசம் ஒட்டிக்கிட்டு இருந்திருக்காது! எப்படி எங்களுக்கே விஷம் வைக்க மனசு வந்தது?” எனக் கதறியவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் இவன்.

சற்று நேரம் அழுது ஓய்ந்தவள், அவனது தலை கோதலில் மெல்லத் தேறிக் கொண்டாள். சிறு வயது கதைகளைப் பற்றித் தனக்குத் தெரிந்த அளவில் பகிர்ந்து கொண்டாள் ஊர்மிளா.

“அந்த அஞ்சு வயசுல என்ன ஏதுன்னு புரியல விஷ்ணு! தம்பி வாயில நுரையோட மயங்கி சரிஞ்சப்ப, என்னமோ சரியில்லன்னு மட்டும் தெரிஞ்சது! எனக்கும் வயிறெல்லாம் ஒரே எரிச்சல்! கண்ணு வேற மங்குது! தம்பிக்கு என்னமோ ஆச்சு! அவன காப்பாத்தனும்னா நான்தான் எதாச்சும் செய்யனும்னு யோசிச்சு, கொஞ்ச தூரமா இருந்த ஒரு பாட்டி வீட்டுக்கு ஓடினேன்! நாங்க ஊஞ்சல் விளையாடுவோமே, அதுக்குப் பக்கமாத்தான் இருந்தது அவங்க வீடு! விளையாடப் போறப்ப அவங்க தோட்டத்தப் பெருக்கறத பார்த்துருக்கேன்! அன்னிக்குன்னு பாட்டிய பார்க்க அவங்க மகன் வந்திருந்தாரு! நான் பாட்டிக் கிட்ட ஓடிப் போய் தம்பியப் பத்தி சொல்லிட்டு அங்கயே மயங்கி விழுந்துட்டேன்”

குரலில் வலியுடன்,

“அப்புறம் என்னாச்சு ஊர்மீ?” எனக் கேட்டான் இவன்.

“முழிச்சுப் பார்த்தப்ப ஹாஸ்பிட்டல்ல இருந்தேன்! தம்பிய காணோம்! பாட்டி மட்டும் என் பக்கத்துல இருந்தாங்க! தம்பி, தம்பின்னு கேட்டுத் தவிக்கறேன்! அவங்களுக்கு என் குரல் கேட்கல!! மறுபடி நான் மயங்கிட்டேன் போல! அப்புறம் கண்ண திறக்க முடியல! பேச்சு சத்தம் மட்டும் கேட்டுச்சு! பாட்டி யாரோ ஒருத்தர்ட்ட பேசிட்டு இருந்தாங்க!”

விஷ்ணுவிடம் தன் மனதைத் திறந்து காட்டிக் கொண்டிருந்தவளுக்கு அந்த நாளுக்கே போய் விட்ட உணர்வு.

“எனக்கு இவங்க குடும்பத்தப் பத்தி அவ்வளவா தெரியாது ஏட்டய்யா! மகன் வேற ஊர்ல வேலைப் பார்க்கறதுனால நான் தனியாத்தான் இருக்கேன்! இவங்கம்மாட்ட பேச்சு வார்த்தை வச்சிக்கலாம்னு போனப்ப, முகம் கொடுத்தே பேசல! மதிக்காதவங்க கிட்ட நமக்கென்ன பேச்சுன்னு நானும் வச்சிக்கறது இல்ல! இந்தப் பொண்ணு மட்டும் வெளிய என்னைப் பார்த்தா கையாட்டிட்டுப் போகும்! நேத்து திடுதிப்புன்னு வீட்டுக்குள்ள வந்து தம்பிக்கு வாய்ல நொரைன்னு சொல்லிட்டு மயங்கி விழுந்துட்டா! இவளை என் மகன் தூக்கிக்க, அவ வீட்டுக்கு ஓடனோம்! குட்டிப் பையன் துடிச்சிட்டு இருந்தான், உடனே மகன் காருல கொண்டு வந்து இந்த ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் பண்ணிட்டோம்! அப்புறம்தான் டாக்டர் சொல்லி சாப்பாட்டுல விஷம்னு தெரியும்!”

“பெரிய இம்சைப் புடிச்ச கேஸ்மா இது! ஆத்தாக்காரி இதுங்களுக்கு விஷத்தக் குடுத்துட்டு கல்யாணமான இன்னொருத்தன் கூட ஓடிப் போயிருக்கு! புள்ளைங்க பத்தி எந்தக் கவலையும் இல்லாம அப்பன்காரன் இன்னிக்குக் காலைல தூக்கு மாட்டிச் செத்துத் தொலைச்சிட்டான்!”

“அச்சோ சாமி! என்ன ஏட்டய்யா சொல்றீங்க!!” எனப் பதறினார் பாட்டி.

“ஆத்தாக்காரி ஓடிப் போனாளே, அந்தப் பரதேசி ஒரு கஞ்சாக்காரன்! என்ன ஆசை வார்த்தைப் பேசி ஏமாத்துனானோ தெரில! வீட்டுல வச்சிருந்த பணம், நகைன்னு எடுத்துட்டு அவன் பின்னாடி போயிருக்கு! அதைப் புடிங்கிட்டு கழுத்தறுத்து போட்டுட்டான்! பாடிய இப்பத்தான் குப்பை மேட்டுலக் கண்டுப் புடிச்சாங்க! அந்தக் கஞ்சாக்காரன் பொண்டாட்டியே ஸ்டேஷன்ல வந்து அவனைக் காட்டிக் குடுத்துருச்சு! என்னத்த சொல்றது போங்க! இந்தப் பாப்பாவுக்குச் சொந்தம்பந்தம்னு யாரும் கிடையாது இப்போ! அப்பனும் ஆத்தாளும் காதல் பண்ணி வீட்டை விட்டு ஓடி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்ட கேசுங்க! என்னத்த காதலிச்சாங்களோ, என்னத்த கல்யாணம் பண்ணாங்களோ! கேடு கெட்டதுங்க!” எனப் புலம்பினார் ஏட்டய்யா!

“இனி என்னய்யா ஆகும்?”

“திக்கத்தவங்களுக்கு ஆனாதை ஆசிரமம்தான் துணை! சொல்லி விட்டுருக்கோம்! உடம்பு தேறுனதும், அங்க கொண்டு போய்டுவாங்க”

அன்று படுத்திருந்தவளின் கண்களில் கோடாய் கண்ணீர் இறங்கியதைப் போல இன்றைக்கும் ஊர்மியின் கண்களில் கண்ணீர் கோடாய் இறங்கியது. மென்மையாய் அதைத் துடைத்து விட்டான் விஷ்ணு!

“அவங்க வாழ்க்கைல என்ன நடந்தது, ஏன் ரெண்டுப் பேரும் தடம் மாறிப் போனாங்கன்னு இன்னும் கூட எனக்குத் தெளிவா தெரியாது விஷ்ணு! இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோன்னு அனுமானம் மட்டும்தான் இருக்கு! என்னைப் பெத்தவரோட குடிப் பழக்கத்துனால, கிடைக்க வேண்டிய அட்டேன்ஷன் கிடைக்காம என்னைப் பெத்தவ தடம் மாறிப் போய்ட்டாளோன்னு யோசிப்பேன்! சந்தோஷமா இருந்த சில தருணங்கள் இன்னும் பசுமையா என் நெஞ்சுல இருக்கு! அதே போல சண்டை சச்சரவு, அழுகை சம்பவங்களும் கொஞ்சம் கொஞ்சம் ஞாபகத்துல இருக்கு! வளர வளர, குடும்பம்ங்கற இன்ஸ்டிடூஷன் மட்டும் எனக்கு வேணாம்னு தோணுச்சு! அவ்ளோ வெறுப்பு அது மேல! என்னை அனாதையாக்குன குடும்பங்கற கட்டமைப்ப நானும் உருவாக்கக் கூடாது! புருஷன், புள்ளைன்னு யாருக்கும் என்னோட பாசத்தக் குடுத்து, உடைஞ்சு நிக்கக் கூடாதுன்னு ஒரு வைராக்கியம்! சாவ எட்டிப் பார்த்துட்டு வந்திருக்கேன் விஷ்ணு! கல்யாணம் எனக்கு இன்னொரு சாவாத்தான் தெரிஞ்சது! அவங்க சந்தோஷத்துக்கு எங்கள உருவாக்கி, சுயநலமா எங்கள அனாதையாக்கிட்டாங்கல்ல! ஐ ஹேட் தெம் விஷ்ணு! ஐ ஹேட் தெம் போத்!!!”

ஒரு தனி ஆணாய், ஒரு தனி பெண்ணாய் எந்த விதமான முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்! அதே ஓர் அப்பாவாய், அல்லது அம்மாவாய் இருக்கும் பட்சத்தில், தாங்கள் உருவாக்கிய உயிர்களின் மீது கொஞ்சமாவது தார்மீகப் பொறுப்பு இருக்க வேண்டும் அல்லவா! தன் சுகத்துக்கு இடைஞ்சல் வந்து விடுமோ எனப் பெற்றப் பிள்ளைகளைக் கொல்லப் பார்த்தவளும், மனைவி ஓடி விட்டதால் மானம் போய் விட்டதே என எண்ணிப் பெற்றப் பிள்ளைகளைக் கூட நினைக்காமல் உயிரை விட்டவனும் வாழவே தகுதியில்லாத ஜந்துக்கள்! அவர்கள் விட்டுச் சென்ற வடுவை இன்னும் சுமந்து வாழும் தன்னவளின் மேல் அனுதாபம் சுரந்தது விஷ்ணுவுக்கு!

மெல்லியக் குரலில், நெஞ்சைத் தடதடக்க வைத்த பயத்துடன்,

“தம்பிக்கு என்னாச்சு ஊர்மீ?” எனக் கேட்டான்.

அவனை நிமிர்ந்து அமைதியாய் பார்த்திருந்தவளின் முகம், மெல்ல மெல்ல மலர்ந்து விகசித்தது.

“இருக்கான்! சூப்பரா இருக்கான்! உனக்கும் அவன தெரியும்”

(சேர்ந்தாடுவாள்)
 

Author: VanishaAdmin
Article Title: Sernthaadu Cindrella--EPI 15
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

CRVS2797

Active member
Aug 4, 2024
148
-11
43
அட.. தம்பி உயிரோட இருக்கானா? அப்படின்னா சென்னை தமிழ்ல அடிக்கடி விஷ்ணு கிட்ட பேசறவன் தான் ஊர்மியோட தம்பியோ..?

😀😀😀
CRVS (or) CRVS 2797
 

Ananthi Jai

Active member
Dec 28, 2024
125
-1
43
Irukana😲😲😲 Evan da avan ithula ulla extra property 🧐🤔 antha phone party ah😲😯😮😦😧😳😨🤯 Yemma shocking ku vera emoji irundha kudunga pa🧐

Mosamana fb.. ipdiyum irukanga... Nalla velai iva aasramathula valantha ithungalta irundhu iruntha sariya valathu irukathunga 😡😡😡
 
  • Love
Reactions: VanishaAdmin

Geethazhagan

Active member
Aug 11, 2025
78
49
28
பாவம் ஊர்மியின் கஷ்டங்கள்
அப்ப ஊர்மி தம்பி நம்பரை தான் கொடுத்திருக்காளா. சூப்பர்மா
 
  • Love
Reactions: VanishaAdmin

sai deepalakshmi

Active member
Dec 2, 2025
72
-21
28
வருத்தமாக இருந்தாலும் அவள் தம்பி உயிரோடு இருப்பது மனதிற்கு நிம்மதியாக உள்ளது.
மனநிறைவான பதிவு .