Shaadi Mein Zaroor Ana

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
592
-2,583
93
Post Date In FB (Dec 2018)

View attachment 54

ரொம்ப நாளாச்சு படத்தை பத்தி பேசி. இன்னிக்கு நான் பாத்த ஒரு நல்ல படத்தை பத்தி பேசலாம். டிவியில் போட்டாங்களேனு உட்கார்ந்து பார்த்தேன். ஹீரோ மொக்க பீசு மாதிரிதான் இருந்தான். ஆனா நடிப்பால நம்மளை சொக்க வச்சுட்டான். ஹீரோயினும் சளச்சவ இல்ல செம்மையா நடிச்சிருந்தா. டைரக்டர் நாம எழுதற குடும்ப நாவல்ல இன்ஸ்பயர் ஆகி இந்த படத்த எடுத்திருப்பாரோ? நாம புக்குல படிச்சதெல்லாம் படத்தில் இருந்தது.

1. அம்மா அப்பா பார்த்து வச்சு ரெண்டு பேரும் சந்திப்பாங்க
2. ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சிரும் லவ் பண்ணுவாங்க
3.கல்யாணம் வரைக்கும் வந்து லாஸ்ட் மினிட்ல கல்யாணம் நின்னுரும்.
4. அப்போ பார்த்து நல்ல வேலை கிடைக்க கல்யாணமா வேலையா அப்படின்ற கன்பியூசன்ல ஹீரோயின் ஓடிப்போயீடுவா
5. ஹீரோ வெக்ஸ் ஆகி , அப்புறம் முன்னுக்கு வந்துருவாரு.
6. ஹீரோயினுக்கு மேலே இருப்பாரு அவளை போட்டு டார்ச்சர் பண்ணி பழிவாங்குவார்
7. ஹீரோயின் வேற என்ன செய்வா அவன் முன்னேயே அழுவா.
8. அவன் கிட்ட காம்ப்ரமைஸ் பண்ண வருவா
9. அது கண்டிப்பா முடியும் நீ இன்னும் அப்படியேதான் அழகா இருக்க. உன் அழகு இன்னும் கூடி இருக்கு அப்படின்னு அவமானப்படுத்துவான்.
10. ஹோட்டலுக்கு வரியான்னு கூட கேட்பான்.
11. வேலை எடுத்து வாசலிலே காத்து வச்சு பழிவாங்குவான்.
12. ஒரு நாள் ராத்திரி ஜெயில்ல கூட போட்டு வைப்பான்.
13. ஆனா கடைசியில அவளை அந்த லஞ்சம் கேசில் இருந்து காப்பாத்திருவான்.
14. அப்புறம் இவ அவன் பின்னால போய்க்கிட்டு இருப்பா. நான் உன்னை லவ் பண்றேன் நடந்ததெல்லாம் மன்னிச்சிடுனு.
15. கடைசியிலே இவங்க ரெண்டு குடும்பமும் கோல்மால் பண்ணி ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிருவாங்க.
16. சுபம்

இருங்க2. நம்ம கதையில ஹீரொ கிஸ் ப்ண்ணுவாரு. அது மட்டும் இங்க உல்டா
🙂


லிங்க் எங்கயாவது கிடைச்சா கண்டிப்பா பாருங்க. நல்ல நாவல் படிச்ச திருப்தி..
 

Author: VanishaAdmin
Article Title: Shaadi Mein Zaroor Ana
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: vetrij