அத்தியாயம் 18
நீதானே கலக்கத்தில் நான் கேட்கும் நீலாம்பரி!
“மகேன் அண்ணா பூச்சி மருந்த குடிச்சுட்டான்!”
தனது கை விரல்களை கோர்த்துப் பிரித்து நீவி மடக்கி எனப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தவளை அமைதியாய் நோக்கினான் விஜயவேல்.
“தெரியும்!” எனச் சொன்னவனை நிமிர்ந்து கேள்வியாய் பார்த்தாள் இவள்.
“அந்தச் சம்பவம் நடந்தப்ப தெரியாது மது! ஆனா சில வருஷம் கழிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன்”
ஸ்கேட்டிங் ரிங்க்கில் விழுந்து வாரி இருந்தவளை, தான் பார்த்துக் கொள்வதாக மற்றவர்களிடம் சொல்லி அழைத்து வந்து விட்டான் விஜய். இடுப்பு இற்றுப் போய் விடும் அளவுக்கு வலிப்பதாக இவள் சொல்ல உடனே தனியார் மருத்துவமனைக்கு அழைத்துப் போனான். பெரிதாய் ஒன்றும் இல்லையெனச் சொல்லி, தடவுவதற்கு க்ரீம் மற்றும் வலி நிவாரண மாத்திரை எனக் கொடுத்து அனுப்பி இருந்தார்கள். அப்படியே அவளை விட்டு விட்டுப் போகாமல் வீடு வரை வந்திருந்தான் விஜய்.
“எல்லாத்தையும் பேசிக்கலாம் மது! இப்போ மருந்து சாப்பிடனும். அதோட இடுப்புக்கு க்ரீம் தடவனும். சாப்பிடு முதல்ல” என வாங்கி வந்திருந்த உணவை தட்டில் போட்டுக் கொடுத்தான் விஜய்.
“உங்களுக்கு?” எனக் கேட்டாள் இவள்.
இவனும் அவள் அருகில் சோபாவிலேயே அமர்ந்து சாப்பிட்டான். உணவு நேரம் அமைதியாகவே கழிந்தது.
“சட்டை மாத்திட்டு வா மது! க்ரீம் பூசி விடறேன்”
“இல்லல்ல! நானே பூசிப்பேன்” என அவசரமாகச் சொன்னாள் இவள்.
“நான் பார்க்காத இடம்னு ஒன்னு உன் கிட்ட இருக்கா? எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம் மது?” எனக் கேட்டான் இவன்.
“என்ன?” என அதிர்ந்து நின்றாள் இவள்.
“ஐ மீன் கனவுல! கற்பனைல!”
என்ன பேச்சு இது என்பது போல முறைத்துப் பார்த்தாள் மதுஷாலினி.
“என்ன முறைப்பு? இல்ல என்ன முறைப்புங்கறேன்! ஒவ்வொரு ஆம்பளைக்கும் இது போலலாம் ஃபேன்டசி இருக்கும். கனவுக்கன்னிகள் இருப்பாங்க. கற்பனைலயும், கனவுலயும் அவங்க கூட இருக்கற மாதிரி, வாழ்ற மாதிரி உலகம் ஒன்னு இருக்கும். கண்ண மூடுனா கனவுல நீதானேங்கற மாதிரி, ஒரு மாய உலகம் அது. எந்த நடிகையையும், உலக அழகியையும் அந்த இடத்துல நான் வைக்கல! என் மனச தொட்ட உன்னை மட்டும்தான் அங்க வச்சி வாழ்றேன்!” எனக் கரகரத்தக் குரலில் சொன்னவனை கலங்கிய கண்களுடன் பார்த்திருந்தாள் மது.
“சட்டை மாத்திட்டு வரேன்”
இடுப்பு வலியோடு இதயமும் சேர்ந்து வலிக்க, மெல்ல குளியலறை நோக்கிப் போனாள் மதுஷாலினி. உள்ளே போய் கதவடைத்தவளுக்குக் கண்ணீர் நிற்கவேயில்லை. அழுதுத் தீர்த்து முகம் கழுவி, உடை மாற்றி விட்டு வந்தாள். அமைதியாய் அவன் முன்னால் போய் திரும்பி நின்று டீஷர்ட்டை மெல்ல மேலே தூக்கி இடுப்பைக் காட்டினாள் மது.
அமர்ந்தவாக்கிலேயே இரு கை கொண்டு அந்தக் குட்டி இடுப்பைப் பற்றிக் கொண்டவன், முகத்தை அவள் முதுகில் புதைத்துக் கொண்டான். சத்தமில்லாமல் ஒரு சமாதானம்.
தானாகவே மெல்ல விலகிய விஜய், க்ரீமை அவள் இடுப்பில் பூசி விட ஆரம்பித்தான்.
“வலிக்குதாம்மா?”
“ஆமா”
இதமாய் பூசி, மெல்ல மசாஜ் செய்து விட்டான் விஜய். அது முடிந்ததும் விலக முயன்றவளை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டவன், அவளது நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டான். அப்படியே சுகமாய் கரைந்து போனது நிமிடங்கள்.
“விஜய்!”
“ஹ்ம்ம்ம்” என்றவன் வாகாய் அவள் கழுத்தடியில் முகம் புதைத்துக் கொண்டான்.
இவள் உடல் கூசிச் சிலிர்த்தது. நெளிந்து கொண்டே இருந்தவளின் முகம் பார்த்தவன்,
“என்னடி?” எனக் கேட்டான்.
“கூசுது!”
“கூசட்டும்”
“மீசைக் குத்துது”
“குத்தட்டும்”
“வேணாம் விஜய்”
“என்ன வேணாம்? நான் வேணாமா? இல்ல என்னோட காதல் வேணாமா? சொல்லு மது! காதல் சொல்லாமலேயே ஹேட் யூ சொன்னவதானே நீ! சொல்லு! என்ன வேணாம்னு சொல்லு?” எனக் கேட்டவனின் குரலில் சுதி ஏறியிருந்தது.
அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டு,
“எனக்கு நீ வேணாம்னு ஹேட் யூ சொல்லல. உனக்கு நான் வேணாம்னுதான் அப்படி சொன்னேன் விஜய்!” என்றவளுக்கு அப்படி ஓர் அழுகை.
விஜய்யின் கழுத்து அவள் கண்ணீரால் நனைந்து போனது.
“ஷ்! அழாதே மது! அழாதே! என் செல்லம்ல! அழாதடா” எனத் தேற்றினான் இவன்.
“உன்னை ரொம்ப ரொம்பப் பிடிக்கும் எனக்கு. அது காதலான்னு அப்போ தெரியல. உன் கண்ணுல தெரிஞ்ச மயக்கம் எனக்கு மமதையக் குடுத்துச்சு. என்னைப் பார்த்ததும் மலரும் உன் முகம் எனக்கு இருமாப்பைக் குடுத்துச்சு. நான் பக்கத்துல இருந்தா சட்டுன்னு இளக்கமா மாறிடும் உன்னோட உடல்மொழி எனக்கு உவகையக் குடுத்துச்சு! மொத்தத்துல அழகான விஜய் சுமாரான இந்த மது மேல வச்சக் காதல் என்னை மகிழ்ச்சியின் உச்சியில இருத்தி வச்சது. ஆரம்பத்துல என்னைக் கிண்டல் பண்றன்ற கோபத்துல சண்டைப் போட்டேன். பிறகு என் விஜய்ங்கற உரிமைல சண்டைப் போட்டேன்!”
“அன்னைக்கும், இன்னைக்கும், என்னைக்கும் உன் விஜய்தான்” எனச் சொல்லி அவள் கன்னம் வழிந்திருந்த கண்ணீரைத் துடைத்தான் விஜய்.
“ஆண்ட்டி மேல நீ வச்ச பாசம், குடும்பத்துக்காக நிற்க நேரமில்லாம உழைச்ச உழைப்பு, படிப்புல நீ காட்டுன டெடிகேஷன், என் மேல உனக்கிருந்த அக்கறை எல்லாமே உன் பக்கம் என்னை ரொம்ப ஈர்த்தது. ஆனாலும் ஒரு பயம். அம்மா இருந்து நல்லது கெட்டது சொல்லிக் குடுத்திருந்தா இப்படி படிக்கற வயசுல காதல்லாம் வருமான்னு ஒரு குழப்பம். ஏதோ தப்பு செய்யறேன்ற மாதிரி கலக்கம். அதனாலத்தான் உன்னைக் காதல் சொல்ல விட்டது இல்லை நான். நீ ஐ லவ் யூன்னு சொல்லிட்டா என்னால மறுக்க முடியும்னு தோணல. நட்புங்கற போர்வைல காதல மறைச்சு என் மனசுல பூட்டி வச்சேன்”
அமைதியாய் அவள் இடுப்பை வருடியபடி மனதில் உள்ளதையெல்லாம் பேச விட்டான் விஜய்.
“நீ வேலைக்குப் போய் நல்ல நிலைக்கு வந்ததும் என் லவ்வ சொல்லனும்னு நான் நினைக்கல விஜய். நான் படிச்சு முடிச்சதும் என் மனசுல உள்ளத மறைக்காம சொல்லனும்னு நெனைச்சேன். எங்கப்பாவோ, என் அம்மாயியோ என்னைப் பார்த்துப் படிக்கற புள்ளைக்கு என்னடி லவ்வு? இதைதான் நாங்க சொல்லிக் குடுத்து வளத்தமான்னு கேட்டுடக் கூடாதில்லையா! அதுக்காகத்தான் படிச்சு முடிக்கற வரை பொறுக்கனும்னு நெனைச்சேன். நான் படிக்கற கேப்ல, நீ உன் குடும்பத்துக்கான கடமைய செய்வ. பிறகு நம்மளோட காதலுக்கு யார் தடை சொல்லப் போறான்னு அசால்ட்டா இருந்தேன்”
“அஸ்மியும் உங்கண்ணாங்களும் நம்ம காதல் மலர்ந்து மணம் வீசறதுக்குள்ள அவங்க அறியாமலே அதை மணல்ல தள்ளி குழி தோண்டிப் புதைச்சிட்டாங்க!” என்றவனின் குரலில் அவ்வளவு வலி.
“இப்படி ஒரு ட்விஸ்ட் வரும்னு நான் நெனச்சே பார்த்தது இல்ல விஜய். ரெண்டு அண்ணாங்களும் அடிக்கடி வீட்டுக்கு வரவும், என்னையும் அப்பாவையும்தான் மிஸ் பண்ணறாங்க போலன்னு ஏமாளியா இருந்திருக்கேன். நாங்க மூனு பேரும் ரொம்ப ஒற்றுமைன்னு சொல்ல முடியாது. அடிக்கடி சண்டைப் போட்டுப்போம். ஒருத்தருக்கு ஒருத்தர் கீறி வச்சி, கடிச்சு வச்சுன்னு வயலண்டா சண்டைப் போடுவோம்! ஆனா சண்டை முடிஞ்சதும் ஒன்னு சேர்ந்துப்போம். ஊட்டி விட்டுச் சாப்பிட்டுப்போம். அந்த டைம்லாம் அப்பா திட்டுவாரே தவிர, பெருசாலாம் கை நீட்ட மாட்டாரு. அம்மா இல்லாத பிள்ளைங்கன்னு எங்க மேல அவருக்கு எக்ஸ்ட்ரா பாசம். என் கிட்ட அது வெளிப்படையா வெளிப்படும். மகேன், மகேஷ் கிட்ட காட்டிக்கலனாலும், அவங்களால அவரோட அன்ப உணர்ந்துக்க முடியும். அவரு அன்னைக்கு கை நீட்டி ரத்தம் வரும் அளவுக்கு அடிச்சத எங்க மூனு பேராலயுமே தாங்கிக்க முடியல! எங்களுக்கே அப்படினா, அடிச்ச அவர் நிலைய சொல்லவே தேவையில்ல. ரொம்ப ஓஞ்சு போட்டாரு. இப்படிப்பட்ட முட்டாள் புள்ளைகள பெத்து வச்சிருக்கோமேன்னு மாஞ்சு போய்ட்டாரு.”
அன்றைய தினத்தை நினைத்துக் கண்ணீர் வந்தது இவளுக்கு.
“ஒரு வாரம் எங்கள அம்மாயி வீட்டுல விட்டுட்டாரு. வந்து பார்க்கல, பேசவும் இல்ல. மகேஷ் ஓரளவுக்குத் தேறிட்டாலும், மகேன் அண்ணா அமைதியாகவே இருந்தான். எனக்கு அவன் மனசுல என்ன ஓடுதுன்னு கண்டுப்புடிக்கவே முடியல. ஓன் வீக் கழிச்சு, நீ வீட்டுல இருப்பியா இல்லையான்னு ஒரு வகை எதிர்ப்பார்ப்போட வீட்டுக்கு வந்தேன். நீங்க காலி பண்ணிட்டீங்க! மனசுலாம் ரணமா வலிச்சது. என் துக்கத்துலயே உழண்டுட்டு இருந்த நான் மகேன கவனிக்கல. வீட்டுக்கு வந்த ரெண்டாம் நாள் நைட் நான் பாத்ரூம்கு எழுந்து வந்தப்ப, பின்னாடி கதவு திறந்திருந்தது. என்னடா இதுன்னு நான் வெளிய வந்து பார்த்தேன். மகேன் தோட்டத்துப் பக்கம் மம்பட்டி, கோடாலிலாம் போட்டு வைக்கற இடத்துக்குப் போனான். என்னத்துக்கு போறான்னு நானும் அமைதியா ஃபோலோ பண்ணேன். நான் கிட்ட போறதுக்குள்ள செடிக்கு போடற பூச்சி மருந்த எடுத்துக் குடிச்சிட்டான்! நான் கத்துன கத்துல அப்பாவும் மகேஷூம் ஓடி வந்தாங்க!”
தங்கையின் பேராசை ஒரு குடும்பத்தை எப்படி சிதைத்திருக்கிறது என ஏற்கனவே அறிந்திருந்தான். ஆனாலும் அவள் வாய்மொழி வழி கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு மனது விண்டு வலித்தது.
“நம்ம வீட்டுலத்தான் கார் இல்லையே! மாமாவுக்கு போன் போட்டு, அவர் அடிச்சுப் புடிச்சு வந்து ஹாஸ்பிட்டல்லுக்குப் போறதுக்குள்ள மருந்து உள்ள பரவிடுச்சு. ரொம்பப் கஷ்டப்பட்டுத்தான் அவன மீட்டோம். அப்பா முகத்துல ஜீவனே இல்லை விஜய். அவன் பொழச்சி வர வரைக்கும் நாங்க எல்லாரும் மரணத்தின் வாசல எட்டிப் பார்த்துட்டு வந்தோம். உங்க குடும்பத்து மேல எங்கப்பாவுக்கு இன்னும் வெறுப்புக் கூடிப் போச்சு. மகேன பார்க்கறப்பலாம் உங்க எல்லாருக்கும் சாபம் குடுக்காம அவர் இருந்தது இல்ல. எனக்கு உள்ளுக்குள்ள அடிச்சிக்கும் விஜய்! அவர் சாபம் பலிச்சு அகிலா ஆண்ட்டிக்கு எதாச்சும் ஆகிடுமோன்னு பயமா இருக்கும். நீ ஒரு நல்ல நிலைக்கு வரத அவர் சாபம் தடுத்திடுமோன்னு கலக்கமா இருக்கும். மகேன மாமா கவுன்சலிங்லாம் அனுப்புனாங்க. எங்கப்பா மாதிரி ஆளுங்களுக்கு கவுன்சலிங், சைக்காட்ரிக் ட்ரீட்மேண்ட்லாம் பைத்தியக்கார ட்ரீட்மெண்ட்தானே! என் மகன பைத்தியமாக்கின அவளும் அவ குடும்பமும் நல்லாவே இருக்க மாட்டாங்கன்னு எந்நேரமும் திட்டிட்டே இருப்பாரு”
பழைய நினைவுகளில் ஆழ்ந்தவள் சற்று நேரம் அமைதியாய் இருந்தாள்.
“மது!” என இவன் அழைத்த பின்புதான் மறுபடி பேச ஆரம்பித்தாள்.
“அப்போத்தான் நீ என்னைப் பார்க்க வந்த! எனக்கு அகிலா ஆண்ட்டி பத்தி தெரிஞ்சுக்கிட்டே ஆகனும்னுதான் பேச வந்தேன். அவங்க நல்லா இருக்காங்கன்னு நீ சொல்லவும்தான், அடைச்சி வச்சிருந்த பாரமெல்லாம் வெளியாகிப் போச்சு” என்றவளின் கூந்தலில் முகம் புதைத்துக் கொண்டவன், அப்பொழுது கூட அகிலாவைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.
தன் அம்மாவின் மேல் மது கொண்ட பாசம் இவனை மேலும் அவள் மேல் பைத்தியமாக்கியது.
“நீ டைம் குடுன்னு கேட்ட! என்ன நம்பிக்கைல நான் உனக்கு டைம் குடுப்பேன்? எங்கப்பாவுக்கு இருக்கற வெறுப்புல கண்டிப்பா நம்ம காதல ஒத்துக்க மாட்டாரு! இவனுங்க காதல்ன்னு பண்ணி வச்ச அட்டகாசத்துல அந்த வார்த்தை மேலயே அவருக்கு செம்ம வெறுப்பு. என்னால அவர மீறி வர முடியாது விஜய். முடியவே முடியாது. அவருக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். அவ்ளோ உயர்வா உன்னைப் பத்தி பேசுவாரு. அதெல்லாம் என் மனசுல நம்பிக்கைய விதைச்சது. படிச்சு முடிச்சுட்டு, எனக்கு விஜய்யைப் பிடிச்சிருக்குப்பான்னு சொன்னா, எந்த மறுப்பும் சொல்ல மாட்டாருன்னு இருந்தேன். ஆனா அதெல்லாம் மாறிப் போச்சே இப்போ! எந்த நம்பிக்கைல உனக்கு நான் நம்பிக்கைக் குடுப்பேன்! சுயநலமில்லையா அது! என்னைக்குமே நாம ரெண்டு பேரும் சேர முடியாது! அப்படி இருக்கறப்ப, எதுக்கு உன் மனசுல ஆசைய இன்னும் வளக்கனும்? அதான் கடுப்பா பேசனேன்! என்னை நீ வெறுக்கனும்னு வார்த்தைகள வீசுனேன். நீ முன்னேறி வந்து, கல்யாணம் காட்சி, குழந்தைக் குட்டின்னு வாழனும்னு நான் நெனைச்சேன். என் சேர்க்கை உனக்கு வெற்றியைத்தான் குடுக்கனும் விஜய்! உன்னோட வீழ்ச்சிக்கு நான் காரணமா இருக்கக் கூடாது!”
“நீ அருகே இல்லாதப்ப எனக்கு என்ன வெற்றி கிடைச்சு என்ன புண்ணியம் மது! ஐ அம் நத்திங் விதவுட் யூ”
“போடா! இந்த மாதிரிலாம் பேசாதே! உனக்கு நான் என்னத்த செஞ்சிட்டேன்னு இவ்ளோ லவ் என் மேல! போடா, போடா” என அவன் நெஞ்சில் குத்தினாள் மதுஷாலினி.
“இது என்ன சினிமாவா மது? நாயகனுக்கு நாயகி பெரிய தியாகம்லாம் செஞ்சதுனால லவ் வரதுக்கு! அநியாயத்த தட்டிக் கேட்ட ஹீரோயின் மேல ஹீரோக்கு லவ் வரது, ரோட்டுல அடிப்பட்டுக் கிடந்த நாய்க்கு துப்பட்டால கட்டுப் போட்டதுனால காதல் வரது, ஏழைப் பசங்களுக்கு பென்சில் நோட்புக் வாங்கிக் கொடுத்ததுனால லவ் வரதுலாம் சினிமாலத்தான் சாத்தியம். இது நிஜ வாழ்க்கை மது! யாருக்கு யார் மேல எதுக்கு லவ் வருதுங்கறதுலாம் அந்த குப்பிட் போடற முடிச்சு! அதுக்கெல்லாம் காரணம் தேட முடியாது! எனக்கு உன் மேலயும், உனக்கு என் மேலயும் காதல் வரனுங்கறதுதான் விதி! புரிஞ்சதா?”
“இந்த மாதிரி காதலுக்கான டெபினிஷென நான் இது வரைக்கும் கேட்டதே இல்ல விஜய்” என மென்மையாய் புன்னகைத்தாள் மது.
அழுகை எல்லாம் ஓய்ந்திருக்க, வெகு அருகினில் தெரிந்த அவள் மதி முகம் மயக்கியது இவனை. பார்வை மாறிப் போக, அவள் கன்னத்தை மென்மையாய் வருடினான் இவன்.
“மது”
“ஹ்ம்ம்”
“நான் இவ்ளோ பெரிய போஸ்ட்ல இருக்கேன். ஆனா கேர்ட்டசிக்காகக் கூட டின்னர் மீட்டிங்ல மது குடிச்சது இல்லை தெரியுமா!”
“அதுக்கென்ன இப்போ?”
“இப்போ மது அருந்தனும் போல இருக்கு”
“அதெல்லாம் பழகிக்காத விஜய்! சட்டுன்னு விடாது அந்தப் பழக்கம்”
குறும்புப் புன்னகை அவன் இதழ்களில்.
“விடாட்டி போகுது! ஜாலிதானே!”
“என்ன ஜாலி கிடக்கு சரக்கடிக்கறதுல? கொன்னுடுவேன் பார்த்துக்கோ”
“கொல்லுடி! மதுவால என்னைத் தினம் தினம் கொல்லு” என்றவன் சட்டென அவள் உதடுகளை தன் உதடுகளால் பற்றிக் கொண்டான்.
அதிர்ந்து போனவள், போகப் போக அமிழ்ந்து போனாள். இத்தனை வருட ஏக்கத்தையும் அந்த ஒற்றை முத்தத்தில் ஏகமாய் காட்டினான் விஜய். இரு கைகளால் அவள் கன்னம் தாங்கி, நாக்கை தூரிகையாய் சுழற்றி அவள் இதழ்களில் ஓவியம் வரைந்தான்.
“காதல் ஓவியம்
பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை
நம் ராஜியம்” என அவர்களின் ஆஸ்த்தான இசையமைப்பாளர் பின்னணி பாட்டுக் கொடுத்தார்.
முத்தம் முற்றுப் பெற்றதும், மூச்சு வாங்க அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் மதுஷாலினி.
“இந்த மது, அந்த மதுவ விட போதைடி! என்னென்னைக்கும் என்னை எழுந்துக்க விடாம அடிச்சு வீழ்த்தும் போதை!” எனக் கண் மூடி ரசனையாய் சொன்னான் விஜய்.
அவன் கூற்றில் வெட்கமாய் இன்னும் அவன் நெஞ்சில் புதைந்தாள் மது.
“நீ அடுக்கன காரணம்லாம் இன்னும் அப்படியேத்தான் இருக்கு மது! வீட்டை விட்டும் என் கூட வர மாட்ட! பின்ன என்ன தைரியத்துல இப்படி என் கூட ஒட்டிட்டு கிடக்க நீ?” எனச் சீண்டினான் விஜய்.
“என் மாமாவும் நீங்களும் கூட்டுக் களவாணியா இருக்கீங்கன்ற தைரியத்துலத்தான்” என்றவள் அவனைப் பார்த்துக் கண் சிமிட்டினாள்.

Author: VanishaAdmin
Article Title: Sorkam Madhuvile--EPI 18
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.