அத்தியாயம் 4
நீதானே என் தடாகத்தில் வீற்றிருக்கும் தாமரை!
“சரியான ராங்கிப் புடிச்சவ போலருக்குமா அந்த எலும்புக் கூடு” என உணவைப் பிசைந்தபடியே சொன்னாள் அஸ்மிதா.
“அப்படிலாம் பேரு வச்சி கூப்புடாதே அஸ்மி!” எனக் கண்டித்தார் அகிலா.
தங்கையோடு அமர்ந்து இரவு உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் விஜய். அகிலா இவர்களுக்குப் பரிமாறிக் கொண்டிருந்தார். அந்த வீட்டுக்கு அவர்கள் குடி வந்து அன்றோடு ஒரு வாரம் ஓடி இருந்தது. ஓரளவு பொருட்கள் எல்லாவற்றையும் அடுக்கி முடித்திருந்தனர்.
இவனும் பேருந்து எடுத்து டவுனுக்குப் போய் வர கற்றிருந்தான். இவன் அம்மாவும் அப்பாவும் மோட்டார் பைக்கில் அதிகாலையிலேயே வேலைக்குக் கிளம்பி விடுவார்கள். அஸ்மிதாவுக்கு பள்ளி வேன் அரேஞ் செய்திருந்தார்கள் போய் விட்டு வர. ஓரளவு எல்லாம் பழக்கப்பட ஆரம்பித்திருந்தது.
இவர்கள் வாடகைக்கு வந்திருந்த இவ்வில்லம் ஒரு ஹால், இரண்டு அறைகள், இரண்டு குளியலறைகள், ஒரு கிச்சன் எனக் கச்சிதமாக இருந்தது. ஓர் அறையைத் தாயும் தகப்பனும் எடுத்துக் கொள்ள, இன்னொரு அறை அஸ்மிதாவுக்குக் கொடுக்கப்பட்டது. விஜய் எப்போதும் போல ஹாலில் மெத்தை விரித்துப் படுத்துக் கொள்கிறான். அந்த வீட்டு வளாகத்திலேயே அவனுக்குப் பிடித்த இடமொன்று இருக்கிறதென்றால், அது மொட்டை மாடிதான்.
காலேஜ், பார்ட் டைம் வேலை என வாழ்க்கை நிற்க நேரமில்லாமல் ஓட, இரவில் மொட்டை மாடியில் நின்று நிலவை ரசித்துப் பார்ப்பது ஒன்றே தற்பொழுது அவனுக்கு ஆசுவாசம் கொடுக்கும் நிகழ்வாய் இருந்தது. சில சமயங்களில் அங்கு மனோகர் போட்டு வைத்திருந்த விளக்கு வெளிச்சத்திலேயே அமர்ந்து படிப்பான். சிலு சிலு காற்றுத் தாலாட்ட, தோட்டத்தில் நட்டிருந்த பூச்செடிகளில் இருந்து வாசம் வர, ஏகாந்தமாய் இருக்கும் இரவு! மனம் அமைதியடைய கவனம் அழகாய் பாடங்களில் பதிந்து விடும் விஜய்க்கு. இது வரை இருந்த வீடுகளை விட இந்த மாடி போர்ஷன் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
“போங்கம்மா! அவங்க வீட்டுல அந்த அங்கிள் சிரிச்ச முகமா இருக்காரு! அவரோட ரெண்டு சன்ஸ் கூட நல்லா பேசறாங்க! இவ கிட்ட ஒரு ஹலோ சொன்னதுக்கு, நான் சொறி டாக் மாதிரியும், அவ என்னை ட்ரீட் பண்ண வந்த சொரியாசிஸ் டாக்டர் மாதிரியும் பார்த்துட்டுப் போறா!” எனப் படபடத்தாள் அஸ்மிதா.
தங்கையின் உவமையில் இவனுக்குச் சிரிப்பு வந்தது. தட்டைப் பார்த்துக் குனிந்து கொண்டான் விஜய். அந்த வீட்டுப் பெண்ணின் திமிரைத்தான் இவன் குடி வந்த தினத்திலேயே பார்த்திருந்தானே. பாப்பா என அழைத்து விட்டான் என என்ன குதி குதித்தாள் அந்தப் பெண்.
அவள் கண்ணைப் பார்த்துத் தடுமாறி நின்றவன், சட்டென தன்னிலைப் பெற்று எழுந்து கொண்டான் அன்று.
இப்பொழுதுதான் இந்த வீட்டுக்கு அடி எடுத்து வைத்திருக்கிறோம். அந்தப் பெண் யாரோ எவரோ! வீட்டு ஓனருக்குத் தெரிந்த பெண்ணாகக் கூட இருக்கலாம்! எதற்கு அவளிடம் போய் மல்லுக் கட்ட வேண்டும் என விலகி வந்து விட்டான். ஆனாலும் கீழே விழுந்ததால் அப்பெண்ணின் கையில் ரத்தம் வந்திருக்க, இவனுக்கு மனது கேட்கவில்லை. வீட்டிற்குப் போக மாடிப் படியை ஏறும் முன்னே, வெளியில் நின்றிருந்த மகேனிடம் வீட்டின் முன்னே ஒரு சின்னப் பெண் சைக்கிளில் இருந்து விழுந்து கிடக்கிறாள் எனச் சொல்லி விட்டுத்தான் நகர்ந்தான்.
மகேன் குடுகுடுவென ஓடியதும், அந்தப் பெண்ணைக் கைத்தாங்கலாக அவர்கள் வீட்டுக்குள் அழைத்துப் போனதையும் மேலே படி ஓரமாக அமர்ந்து பார்த்து விட்டுத்தான் தனது வீட்டினுள் நுழைந்தான் விஜய். மறுநாள் மகேனிடம் பேசிக் கொண்டிருந்த போதுதான், அந்தக் குட்டிப் பெண்ணுக்குப் பதினெட்டு வயது என்றும், அவள் இவர்களின் தங்கை என்றும் தெரிந்தது. அதற்குப் பின் காலேஜூக்குப் போகும் போதும் சரி, வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போதும் சரி, இவன் பார்வை வட்டத்தில் அந்தப் பெண் விழவேயில்லை. இப்பொழுது பார்த்தால் இவன் தங்கையின் வாயில் விழுந்தெழுந்து கொண்டிருந்தாள்.
“சும்மா வாய்க்கு வந்தத எல்லாம் பேசக் கூடாது அஸ்மி! அந்தப் பொண்ணு பாவம். தாயில்லாத புள்ள! அவ மனசுக்குள்ள என்ன கஷ்டமோ! உடனே ஒருத்தங்கள சட்டுன்னு எடைப் போட்டுடறது தப்புடா!” எனச் சொன்னார் அகிலா.
தாயில்லா பெண் என அன்னை சொன்னதைக் கேட்டவனுக்கு அந்தச் சடபுடா பட்டாசின் மீது லேசாய் பரிவு வந்தது.
‘பதினெட்டு வயசான பொண்ண பாப்பான்னு யாரோ ஒருத்தன் கூப்பிட்டா கோபம் வரத்தானே செய்யும்!’ என அவள் கோபத்துக்கு இவனே சமாதானம் சொல்லிக் கொண்டான்.
“சாப்பிட்டு முடிச்சதும், எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டுப் போய் படு அஸ்மி! அப்பா கூட்டாளிங்களோட வெளிய போய்ருக்காரு! அங்கயே சாப்பிட்டு வந்துடுவாரு” என்றபடியே படுக்கை அறைக்குள் நுழைந்து கொண்டார் அகிலா.
அதிகாலையில் எழுந்ததில் இருந்தே உழைப்புத்தான் அவருக்கு. இரவில் சீக்கிரமாகவே உறங்கி விடுவார் அகிலா. சாப்பிட்டு முடித்துத் தங்கைக்கு பாத்திரம் கழுவிக் கொடுத்துக் கொண்டே,
“பாடம்லாம் ஒழுங்கா படிக்கறியா அஸ்மி?” எனக் கேட்டான் விஜய்.
இடைநிலைப் பள்ளியில் படிவம் மூன்று படித்தாள் இவள். இன்னும் இரண்டு வருடங்களில் அரசாங்கத் தேர்வு எழுத வேண்டும்.
“படிக்கறேன்ணா!” என்றாள் தங்கைக்காரி.
எதிர்த்து நிற்கும் மகனை விட, பாசத்தைக் காட்டும் மகள் மீது மிகுந்த பாசம் ஞானவேலுக்கு. கையில் பணம் இருக்கும் போது தாராளமாகவே அவள் கேட்பதை வாங்கிக் கொடுப்பார் அவர். அப்படித்தான் கைத்தொலைபேசி ஒன்றும் வாங்கிக் கொடுத்திருந்தார் மகளுக்கு. அதிலிருந்த ரேடியோவில் பாடல் கேட்பது, பாம்பு கேம் விளையாடுவது, நண்பர்களுக்கு மேசேஜ் அனுப்புவது என விளையாட்டுத்தனமாய் இருந்தாள் அஸ்மி.
“படிக்கற பிள்ளைக்கு இப்ப எதுக்கு போனு?” எனக் கடுப்பாகி விட்டார் அகிலா.
“பொம்பள புள்ளடி! எங்க போறா, எங்க வரான்னு போன் போட்டுக் கேட்டுக்கலாம்ல! இருக்கட்டும் விடு!” என அகிலாவின் வாயை அடைத்து விட்டார் அவர்.
இத்தனைக்கும் விஜய் கூட போன் வைத்திருக்கவில்லை. அஸ்மி இவனிடம் அடிக்கடி போன் ப்ரீபேய்ட் ரீ சார்ஜ் செய்து கொடுக்கும்படி கேட்பாள்.
“போன வாரம்தானே போட்டுக் குடுத்தேன். அதுக்குள்ள ஏன் முடிஞ்சது? சும்மா சும்மா ப்ரேண்ட்ஸ்க்கு என்னத்துக்கு மேசேஜ் போடற? ஸ்கூலுல பேசிக்கறீங்கத்தானே! வீட்டுக் கஷ்டத்த உணர்ந்து நடந்துக்க அஸ்மி! அடுத்த வாரம்தான் சம்பளம் வரும். அப்போ வாங்கி தரேன்” எனக் கோபமாக ஆரம்பித்து மென்மையாய் முடிப்பான் விஜய்.
அதற்கே முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வாள் சின்னவள். இவனிடம் கிடைக்காவிட்டால், தாயிடம் போய் நிற்பாள். அங்கும் வேலைக்காகாவிட்டால் தந்தையிடம் முறையிடுவாள். கேட்டது எப்படியாவது கிடைத்து விட வேண்டும் அவளுக்கு. அதற்காகவே அடிக்கடி அகிலாவிடம் நன்றாகப் பாட்டு வாங்கிக் கட்டிக் கொள்வாள் அஸ்மி.
“ஒழுங்கா படி அஸ்மி! கணக்குக் கஷ்டமா இருந்தா, என் கிட்ட கேளு சொல்லித் தரேன்”
“நீயே களைச்சுப் போய் வரண்ணா! எதுக்கு உனக்குச் சிரமம்!”
“பாடம் சொல்லிக் குடுக்கறதுல்ல என்னடி சிரமம்! உனக்குப் படிக்க வளையலன்னு சொல்லு! சோம்பேறி கழுதை! படிச்சாத்தான்டி முன்னேறி வர முடியும் வாழ்க்கைல! உன் நல்லதுக்குத்தான் அண்ணா சொல்றேன்”
“சரி! சரி! தூக்கம் வருது எனக்கு! நான் போறேன்” என நழுவி விட்டத் தங்கையை வருத்தமாகப் பார்த்தான் இவன்.
பின் ஒரு பெருமூச்சுடன் தனது பாடப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குக் கிளம்பினான். இவர்கள் வீட்டில் கணிணி இல்லை. காலேஜீல் இருக்கும் கம்யூட்டர் லேபில்தான் ப்ராக்ராமிங் ப்ராக்டிஸ் செய்வான். இந்த செமெஸ்டர் பாடத்தில் ப்ராக்ராமிங் ப்ராஜெக்ட் ஒன்று இருந்தது. அதற்கான கோடிங்கை எழுதி வைத்துக் கொண்டால், நாளை லேபில் கடகடவென டைப் செய்து ரன்னாகிறதா எனப் பார்த்து விடுவான்.
இவன் மொட்டை மாடிக்குப் போக படி ஏறும் போது, அங்கிருந்து மெலிதாய் பாட்டுச் சத்தம் கேட்டது. முக்கால்வாசிப் படிகளில் நின்றவன், அங்கே என்ன நடக்கிறது என எட்டிப் பார்த்தான். அண்ணன்கள் இருவரும் பாட்டுக்கு ஆடிக் கொண்டிருக்க, அவர்களின் தங்கை ஊஞ்சலில் அமர்ந்து சிரித்தபடி ரசித்துக் கொண்டிருந்தாள்.
“ஷாலு! உன் பாட்டு வருது! வா! எங்க கூட ஆடு” என அழைத்தான் மகேஷ்.
‘இந்தக் குட்டி ரௌடி டான்ஸ்லாம் கூட ஆடுமா?’ என எண்ணியபடியே அவர்களைச் சுவாரசியமாகக் கவனித்தான் விஜய்.
அவர்கள் அங்கே வைத்திருந்த குட்டி ரேடியோவில் இருந்து,
“அட ஆள்தோட்ட பூபதி நானடா
அந்த அமரத் தோட்ட பூபதியும் நானடா” எனும் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.
சிம்ரனே இவளிடம் பிச்சை வாங்க வேண்டும் என்பது போல அப்படி ஓர் ஆட்டம். இடுப்பை வளைத்து, அனாயசமாக ஆடியவளை ஆவெனப் பார்த்திருந்தான் விஜய். தங்கையோடு அண்ணன்களும் சேர்ந்து கொண்டு அந்த இடமே கலகலப்பாக இருந்தது. இவர்களைப் போல் ஏன் தங்களால் இருக்க முடியவில்லை எனும் யோசனை வந்தது இவனுக்கு.
பணம்! சந்தோஷம் என்பது பணத்தினால் அல்ல, மனத்தினால் மட்டுமே எனச் சொன்னவன் மட்டும் இவன் கையில் கிடைத்தால் கைமா பண்ணிவிடுவான் விஜய்! சோற்றுக்கே அல்லாடும் போது குதூகலமும் குத்தாட்டமும் எங்கிருந்து வரும்! அதீத உழைப்பும், நண்பர்கள், ஆட்டம் பாட்டம் என இல்லாத வாழ்க்கையும் இவனை ஒரு ரோபோவாகவே மாற்றி இருந்தது. இவனது சந்தோஷம் என்பது பொக்கிஷமாய் இவன் சொந்தப் பணத்தில் வாங்கி பத்திரமாய் பயன்படுத்தும் சாம்சுங் எம்.பி.த்ரீ ப்ளேயரில்தான் இருந்தது. காலேஜ் கம்ப்யூட்டர் லேபில் இருந்த கணிணி மூலம் பாடல்களை பதிவிறக்கம் செய்து தூங்கும் நேரமும், வேலைப் பார்க்கும் நேரத்தில் ஒற்றைக் காதில் மாட்டிய இயர்போன் வழியாக பாடல்கள் கேட்பதும்தான் இவன் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
அவர்களுக்குத் தொல்லையாக இருக்கப் பிடிக்காமல், வீட்டுக்குப் போய் விடலாம் என நினைத்தான் விஜய். அதற்குள் அடுத்தப் பாடலான ஒல்லிக்குச்சி உடம்புக்காரிக்கு அவள் ஆட ஆரம்பிக்கப் புன்னகையுடன் பார்த்து விட்டே வந்தான்.
மறுநாள் காலேஜ் முடிந்து, அங்கிருக்கும் டாய்லட்டிலேயே முகம் கழுவி வேலைக்குப் போட்டுக் கொள்ளும் சூப்பர் மார்க்கேட் பெயர் பதித்த டீ ஷர்ட்டை மாற்றிக் கொண்டவன், வேலைக்குக் கிளம்பிப் போனான். போகும் வழியிலேயே, மாமாக்(இந்து முஸ்லிம்) கடையில் தேநீர் வாங்கி எப்பொழுதும் காலேஜ் பேக்கில் வைத்திருக்கும் ப்ளாஸ்க்கில் ஊற்றிக் கொண்டவன் வேகமாய் நடையிட்டான். நான்கு மணியில் இருந்து இரவு ஒன்பது வரை இவனது வேலை நேரம்.
பொருட்கள் வந்திறங்கும் பெரிய ஸ்டோர் ரூமில் தனது பேக்கையும் ப்ளாஸ்க்கையும் வைத்த விஜய், அகிலா வேலைப் பார்க்கும் இடத்துக்குப் போனான். அங்கே கஸ்டமர் இல்லாததால், வதங்கி தெரிந்த ஆப்பிள் பழங்களை ஒரு கூடையில் அப்புறப்படுத்தும் வேலையில் இருந்தார் அகிலா.
“ம்மா”
“வாயா விஜய்! காலேஜ் எப்படிப் போனது?” என வேலைப் பார்த்துக் கொண்டே கேட்டார் அவர்.
“ஓகேத்தான்மா! வாங்க டீ குடிக்கலாம்” என அழைத்தான் விஜய்.
“நீ முதல்ல போ! இந்தச் சீனக்குட்டி டாய்லட்டுக்குப் போயிருக்கா! அவ வந்ததும், இங்க பார்த்துக்க சொல்லிட்டு வரேன்.”
“சரிம்மா” என்றவன், ரொட்டிகள் விற்கும் இடத்துக்குப் போய் இரண்டு பட்டர் பன்களை இவர்களுக்கான தள்ளுபடி விலையில் வாங்கிக் கொண்டான்.
ஸ்டோர் ரூமில் வைத்திருக்கும் இரண்டு குவளைகளை எடுத்து அதில் தேநீர் ஊற்றி வைத்தான். பத்து நிமிடங்களில் அகிலா வந்து விட, இருவரும் அமைதியாக ஒரு மூலையில் அமர்ந்து தேநீர் பருகினார்கள். இவனுக்கு வேலை ஆரம்பிக்க இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. அகிலாவுக்கு இது டீ ப்ரேக். ஆகவே அவசரமில்லாமல் பேசியபடி பன்னையும் சாப்பிட்டார்கள் இருவரும்.
அடிக்கடி அகிலா இடப்புற நெஞ்சை நீவி விட,
“என்னம்மா? என்ன செய்யுது?” எனக் கவலையாகக் கேட்டான் விஜய்.
“ஒன்னும் இல்லடா விஜய்! எப்பவும் வர வாய்வுத் தொல்லைத்தான். சரியா போய்டும்! நீ டீய குடி”
“அடுத்து எப்போமா செக்கப்பு?”
அரசாங்க மருத்துவமனையில் செக்கப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் அகிலா. இவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்க, அரசாங்க டாக்டர்கள் தரும் மருந்தை எடுத்துக் கொள்கிறார். அவர்கள் எப்பொழுதெல்லாம் செக்கப் வர சொல்கிறார்களோ அப்பொதெல்லாம் தவறாமல் போய் விடுவார். பிள்ளைகள் தலை எடுக்கும் வரைக்குமாவது ஆரோக்கியமாக இருக்க வேண்டுமே எனும் கவலை அவருக்கு.
“ரெண்டு வாரத்துலடா”
“நானும் வரேன்மா! வாய்வுத் தொல்லைன்னு சும்மா விடக் கூடாது இதெல்லாம். டாக்டர்ட்ட சொல்லிடலாம்”
“ஆமாம் போ! சொல்லிட்டா மட்டும் உடனுக்குடனே ஸ்கேன் பண்ணி பார்த்துடுவானுங்க பாரு! அப்பாயிண்ட்மேண்ட் குடுக்கறேன்னு இழுத்து அடிப்பானுங்கடா இந்த கவர்மெண்டு ஆஸ்புத்திரில!” எனச் சலித்துக் கொண்டே எழுந்தார் அகிலா.
உழைத்து இளைத்துப் போயிருந்த தாயைப் பார்த்து இவனுக்கு நெஞ்சில் ரத்தக் கண்ணீர் வந்தது.
“விஜே!!! லோரி சுடா சம்ப்பாய்(லாரி வந்து விட்டது--மலாய்)” எனும் குரலில் இவனும் எழுந்து கொண்டான்.
லாரியில் கார்ட்டன் கணக்காய் வந்து இறங்கிய பீர் டின்களை இறக்கி, அதற்கான இடங்களில் அடுக்கி வைப்பது என நேரம் ஓடியது இவனுக்கு. ஏழு மணி போல ஸ்டோர் ரூமில் கொஞ்சம் வேலைக் குறைந்திருக்க, சூப்பர்வைசர் ஷெல்பில் அடுக்கி இருக்கும் சாக்லேட்டுகளில் காலாவதியானவை இருக்கிறதா எனக் கவனிக்கச் சொன்னார் இவனை.
ஸ்டோர் ரூமின் சூட்டில் வெந்து கொண்டிருந்தவனுக்கு, சூப்பர் மார்க்கேட் உள்ளே கிடைத்த ஏசியின் ஜில்லிப்பு ஆசுவாசத்தைக் கொடுத்தது. ஒரு காதில் இயர்போனை மாட்டிக் கொண்டவன், அதன் வயரை யாரும் பார்க்காத மாதிரி காதின் பின்னால் சொறுகி டீ ஷர்ட் உள்ளே நுழைத்திருந்தான். எம்.பி.த்ரீ பிளேயார் பேண்ட் பாக்கேட்டில் இருந்தது. சன்னக் குரலில் பாடிக் கொண்டே, வேலையைப் பார்த்தான்.
“பாப்பா யப்பாப்பா
பாப்பா அப்பப்பா
பார்த்தா தப்பப்பா
வீராப்பா!”(சுட்டி சுட்டி பாடல்—தாலாட்டு கேக்குதம்மா படம்) எனப் பாடியபடியே திரும்பியவன், அவனை முறைத்தப்படி நின்றிருந்த மதுஷாலினியைப் பார்த்து அதிர்ந்து போனான்.
“மீண்டும் மீண்டும் பாப்பாவா?” என நெற்றிக் கண்ணைத் திறந்திருந்தாள் அவள்.

Last edited:
Author: VanishaAdmin
Article Title: Sorkam Madhuvile--EPI 4
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.