அத்தியாயம் 6
நீதானே என் மாலை நேரத்து மயக்கம்!
அது ஒரு சனிக்கிழமை.
“பாப்பா! பாப்பா!!”
வரவேற்பறை தரையில் அமர்ந்து பாட்டுக் கேட்டபடியே பாடம் செய்து கொண்டிருந்த மதுஷாலினியின் காதில் நாராசமாய் விழுந்தது பாப்பா எனும் அழைப்பு!
“மகன் கூப்பிட்டது போய் இப்போ அம்மா ஆரம்பிக்கிறாங்க” என முனகியபடியே எழுந்தாள் மதுஷாலினி.
இந்த இரண்டு மாதங்களில் மேல் வீட்டுக்கு வந்தவர்களை ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டு விட்டது இவள் மனம். வாய் வார்த்தையாக எதுவும் பேசிக் கொள்ள மாட்டாள். வீட்டுப் பெரியவர்களை நேராய் சந்திக்க நேர்ந்தால் சின்னதாய் ஒரு புன்னகை. அவ்வளவுதான்! அதுவும் அவர்கள் வீட்டுப் பெண்ணை என்னவோ இவளுக்கு முதல் பார்வையிலேயே பிடிக்கவில்லை. சிலரை எந்தக் காரணமும் இல்லாமல் பிடிக்காமல் போய் விடுமே! அப்படித்தான் அவளையும் பிடிக்காமல் போனது.
‘அவ அழகா இருக்கான்னு எனக்குப் பொறாமையோ!! அதான் பிடிக்கலையோ!’ என இவளுக்குள்ளேயே பட்டிமன்றம் நடக்கும்.
முதல் சந்திப்பில் இவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள, அதன் பிறகான சந்திப்புகளில் அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
‘போடி, போடி! பொடலங்கா!’ என இவளும் விட்டு விட்டாள்.
அந்த வீட்டுப் பையன் மீது செம காண்டில் இருந்தவளுக்கு இப்பொழுதெல்லாம் ஒரு மரியாதை வந்திருந்தது அவன் மேல். சூப்பர் மார்க்கேட்டில் சண்டை போட்டதுதான் அவனுடன் இவள் கடைசியாகப் பேசியது. கல்லூரியில் அடிக்கடி பார்த்துக் கொண்டாலும், இவளும் போய் பேசியதில்லை, அவனும் வந்து பேசியதில்லை. ஆனால் அவன் பார்வை இவளை அடிக்கடி தழுவிப் போவதை உணர்ந்திருக்கிறாள் பெண்.
‘அவ்ளோ அழகான பொண்ணுங்க இந்தக் காலேஜ்ல இருக்கறப்ப, இவன் ஏன் என்னையே அடிக்கடி பார்க்கறான்? நல்லா ஹெண்ட்சமா, டக்கராத்தானே இருக்கான்!! அப்புறம் ஏன் என்னைப் பார்க்கறான்?’ என மனதில் அடிக்கடி ஓடும் இவளுக்கு.
லெக்சரர் வராத போது ஒன்றிரண்டு முறை இவள் வகுப்புக்குப் பாடம் எடுக்க வந்திருக்கிறான் விஜய். கோபோல்(COBOL-ப்ரோக்ராமிங் லேங்குவேஜ், அந்தக் கால கட்டத்தில் இருந்தது) இவன் எடுக்கும் போது கொட்டாவி விடாமல் புரிந்து கொள்ள முடிந்தது இவளால். எப்படி இவ்வளவு அழகாக அந்த மொழியைப் புரிந்து கொண்டு, அதை அருமையாய் கற்பிக்கவும் செய்கிறான் என ஆச்சரியமாக இருக்கும்.
அறிவும், அழகும் ஒருங்கே கொண்டவன் தன்னை அடிக்கடி பார்க்கிறான் என்பது சிறு கர்வத்தைக் கொடுக்கத்தான் செய்தது இவளுக்கு!
ஆனாலும் மனசாட்சியோ,
‘அடங்குடி பல்லழகி! வீட்டு ஓனர் மகளாச்சே, அதோட அண்ணன் பார்த்துக்க சொல்லிட்டுப் போயிருக்கானேன்னு பார்த்து வைக்கறான்! அதுக்குள்ள ஓவரா கற்பனைய ஓட்டுவ!’ என அடக்கி வைக்கும்.
இதை எல்லாம் யோசித்துக் கொண்டே வாசலுக்கு வந்தாள் மதுஷாலினி.
“என்ன ஆண்ட்டி?”
“பாப்பா! பெனடோல்(பாரசிட்டமோல்) இருக்காம்மா? தலை வலியா இருக்கு! வீட்டுல தீர்ந்து போச்சு! இனிமேத்தான் வாங்கி வைக்கனும்” என்றவரின் முகம் சோர்ந்து கிடந்தது.
இவளுக்குப் பார்க்கவே பாவமாய் இருந்தது.
“உள்ள வாங்க ஆண்ட்டி!” என அவரை உள்ளே அழைத்தாள் ஷாலு.
“பரவால்லம்மா” என்றார் அவர்.
“அட, வாங்க ஆண்ட்டி!” என இவள் வற்புறுத்த, சிறு புன்னகையுடன் உள்ளே நுழைந்தார் அவர்.
“வீட்டை ரொம்ப அழகா வச்சிருக்கம்மா”
“தேங்க்ஸ் ஆண்ட்டி” என்றவள், அவரை கிச்சனுக்கு அழைத்துப் போனாள்.
மருந்தையும் தண்ணீரையும் எடுத்து அவரிடம் நீட்டியவள்,
“சாப்டீங்களா ஆண்ட்டி? சாப்பிடாம மருந்து போடக் கூடாது” எனக் கேட்டாள்.
“இன்னிக்கு நான் லீவ்தான்மா! சமைச்சி சாப்பிட்டுட்டேன்! கொஞ்ச நேரம் அக்கடான்னு படுக்கலாம்னு பார்த்தா, தலை வலி பிடுங்கி எடுக்குது” என்றவர் மருந்தை வாயில் போட்டுத் தண்ணீரைக் குடித்தார்.
“நீ சாப்டியா பாப்பா?”
“இன்னும் இல்ல ஆண்ட்டி! இனிமேத்தான். பகல்ல வீட்டுல இருந்தா நான் சமையல்னு அலட்டிக்க மாட்டேன். அம்மாயி வீட்டுல சாப்டுப்பேன்! இல்லைனா ப்ரேட் சாப்பிட்டுக்குவேன்! நைட்டுக்கு அப்பா வரதுக்குள்ள சுடச் சுட சமைச்சிடுவேன்! சேர்ந்து சாப்டுப்போம்! என்னமோ தனியா உக்காந்து சாப்பிடறது பிடிக்க மாட்டுது ஆண்ட்டி!”
முகம் மிருதுவாகிப் போனது அகிலாவுக்கு. அஸ்மிதா சொன்னது போல திமிர் பிடித்தவள் இல்லையோ இவள் என இந்தத் தாய் மனம் இறங்கியது அவளுக்காக!
அவள் கை பற்றிக் கொண்டவர்,
“நம்ம வீட்டுக்கு வரியா சாப்பிட? இன்னிக்கு என் மகனுக்குப் பிடிச்ச மாசி கருவாட்டுக் குழம்பு, உருளைக் கிழங்கு, மொச்சைக் கொட்டைலாம் போட்டு காரசாரமா வச்சிருக்கேன்! அப்பளமும் இருக்கு! வாயேன்!” என அழைத்தார்.
இவளுக்குச் சங்கடமாக இருந்தது. அம்மாயி வீடு, கடைகள் தவிர வேறெங்கும் இவள் சாப்பிட்டது இல்லை! ஒரு பக்கம் தயக்கமாய் இருக்க, இன்னொரு பக்கம் ஆசையாய் வேறு இருந்து தொலைத்தது! கருவாட்டுக் குழம்பு எனும் வார்த்தைகளே நாக்கில் நீருற வைத்தது! அவள் கண்களில் ஆசையைக் கண்ட அகிலா,
“அட வாம்மா! வீட்டுல யாரும் இல்ல! வெக்கப்படாம ஒரு வாய் சாப்பிட்டு போ!” என மீண்டும் அழைத்தார்.
“ஆண்ட்டி! ஒரு பெனடோலுக்கு ஒரு தட்டு சாப்பாடுலாம் ரொம்ப ஓவரு!”
“இதென்ன ஓவரு! இன்னிக்கு ஒரு வாய் சாப்பாடு நான் போட்டா, என்னைக்காச்சும் எனக்கொரு வாய் சாப்பாடு நீ போட மாட்டியா???”
“அதென்ன கெஞ்சத்தனமா ஒரு வாய்! வயிறார சாப்பாடு போடுவேன் ஆண்ட்டி!” எனச் சொல்லிச் சிரித்தாள் மதுஷாலினி.
“அழகு பாப்பா” எனத் தாடையைப் பிடித்து ஆட்டினார் அகிலா.
வீட்டுக் கதவை சாற்றி வைத்து விட்டு அகிலாவுடன் நடந்தபடியே,
“ஆண்ட்டி! எப்படி வேணும்னாலும் கூப்பிடுங்க என்னை! பாப்பான்னு மட்டும் கூப்ட வேணாம்” என்றாள்.
“அழகா பொம்மை கணக்கா இருக்கற புள்ளய பாப்பான்னு கூப்பிட்டா என்ன தப்பு?”
“என்ன போய் அழகுன்னா, அப்புறம் உங்களையும் உங்க மகளையும் என்னன்னு சொல்றது?” எனக் கேட்டவளை ஆழ்ந்து பார்த்தார் அகிலா.
மாடிக்குப் போகும் படியில் நின்றிருந்தார்கள் இருவரும்.
“எதுமா அழகு? சிவப்பான தோலா? வனப்பான உடம்பா? செதுக்குனாப்பல இருக்கற முக அமைப்பா? அழகுங்கறது நம்மள நாம வெளிப்படுத்திக்கற முறைலதான் இருக்கு! இன்னிக்குத்தான் நாம ரெண்டு பேரும் பேசிக்கறோம்! என்னோட தலை வலிய புரிஞ்சுக்கிட்டு வீட்டுக்குள்ள கூப்டு வச்சு, மருந்தோட தண்ணியும் சேர்த்து குடுத்த பாரேன்! அங்க தெரிஞ்சதுமா என் கண்ணுக்கு உன்னோட அழகு! மருந்து குடுத்ததோட என் கடமை முடிஞ்சதுன்னு நெனைக்காம, சாப்பிட்டுட்டுத்தான் மருந்து போடனும்னு சொன்ன பார்த்தியா, அங்க தெரிஞ்சதுமா மாசு மருவற்ற அழகு! என் கண்ணுக்கு நீ பேரழகிதான்!” என வாஞ்சையாகச் சொன்னார் அகிலா.
இவளுக்குச் சட்டெனக் கண் கலங்கி விட்டது. இவள் அம்மாவும் உயிரோடு இருந்திருந்தால், இப்படித்தான் மகள் மனதை உணர்ந்து அழகாய் பேசி இருப்பாரோ! மகள் மனதில் இருக்கும் சஞ்சலங்களை இது போன்ற பேச்சினால் முளையிலே களைந்திருப்பாரோ!! அம்மாயியிடம் நெருக்கம்தான் என்றாலும், ஒரு தலைமுறை மூத்தவரிடம் இது போன்ற அனுசரணையான வார்த்தைகளை எதிர்ப்பார்க்க முடியாதே!
முயன்று அழுகையை அடக்கியவள்,
“பேசியே என் வயித்த நெறச்சிடுவீங்க போல! சோறு போட மாட்டீங்களா ஆண்ட்டி?” எனப் பேச்சை மாற்றினாள்.
சிரித்த முகமாகவே அவளை உள்ளே அழைத்துப் போனார் அகிலா. எவர்சில்வர் தட்டில் சுடச் சுட புழுங்கல் அரிசி சாதம் போட்டு, கருவாட்டுக் குழம்பை அள்ளி அதன் மேல் ஊற்றி இவளிடம் நீட்டினார். அதன் வாசமே கபகபவெனப் பசியைக் கிளப்ப, கையைக் கழுவி விட்டு மேசையில் அமர்ந்தாள் இவள். அவள் தட்டில் அப்பளம் எடுத்து வைத்தவர், ஒரு குவளையில் தண்ணீரும் கொண்டு வந்து வைத்தார்.
அவள் அருகிலேயே உட்கார்ந்து கொண்ட அகிலா, பேச்சுக் கொடுத்தபடி இருந்தார். இவளும் சாப்பிட்டுக் கொண்டே, அவர் கேட்டதுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“அம்மா! அம்மா” எனும் சத்தத்தில்,
“வேலைக்குப் போனவன் இந்த நேரத்துக்கு வீட்டுக்கு வந்திருக்கான்!” எனச் சொல்லியபடியே வாசலுக்கு விரைந்தார் அகிலா.
கிச்சன் உள்ளறையில் இருப்பதால், ஹாலில் இருந்து பார்த்தால் இவள் அமர்ந்திருப்பது தெரியாது.
“என்னடா தம்பி! இந்த நேரத்துக்கு வந்திருக்க?” என அகிலா கேட்க,
“சாமான் தூக்கி அடுக்கறப்ப காலுல கார்ட்டன் விழுந்திடுச்சும்மா! வலி உயிர் போய்டுச்சு! வேலையே பார்க்க முடியல! அதான் வீட்டுக்கு வந்துட்டேன்!” என்றான் விஜய்.
“கொஞ்சம் கவனமா இருந்திருக்கக் கூடாதாப்பா! உள்ள வா! என்னான்னு பார்க்கிறேன்!”
இருவரும் பேசுவது இவளுக்கு நன்றாகவே கேட்டது. அம்மாவிடம் வலியைப் பற்றி முறையிடும் போது அவன் குரலில் தெரிந்த சலுகை, கொஞ்சல் எல்லாம் நன்றாகவே விளங்கியது இவளுக்கு.
“அம்மா புள்ள போல!” என முணுமுணுத்துக் கொண்டாள் மதுஷாலினி.
“பெரு விரல்ல நகம் பெயர்ந்திருக்குடா! அதான் வலி! ரத்தம் வேற வருது! இரு, ஐயோடின் இருக்கான்னு பார்க்கறேன்” என அறைக்குள் நுழைந்தார் அகிலா.
“அது போட்டா எரியும்மா”
“எரிஞ்சா தாங்கிக்க முடியாத வயசாடா உனக்கு! இன்னும் பச்சைப் புள்ள மாதிரி எரியும், சொறியும்னு”
இவளுக்குச் சிரிப்பாய் வந்தது அவர்களின் பேச்சு வார்த்தையைக் கேட்க!
“அம்மா!!”
“அட இருடா வரேன்! உன் தங்கச்சி அந்த மருந்த எங்க எடுத்து வச்சான்னு தெரில! ஸ்பெஷல் கிளாசுக்குப் போயிருக்கறா! போன் போட்டாலும் எடுக்க மாட்டா!”
“வலிக்குது விரலு!
ஆ அது சரி அது சரி
துடிக்குது விஜயவேலு
அது ரொம்ப சரி ரொம்ப சரி” என அடிக்குது குளிரு பாட்டை அவன் மெல்லியக் குரலில் மாற்றிப் பாடி வலியைப் பொறுத்துக் கொண்டிருக்க, கேட்ட இவளுக்குச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
‘கெத்து பீஸூ வீட்டுல வெத்து பீஸால்ல இருக்கு!’ என மனதிலேயே அவனை ஓட்டினாள் மதுஷாலினி.
அகிலா மருந்தோடு வந்து, அவன் காலைத் துடைத்து மருந்தைத் தடவி விட்டார்.
“பெரிய மனுஷன் மாதிரி குடும்ப பாரத்த சுமக்கற! சின்ன வலின்னா கூட அம்மா, அம்மான்னு என் முந்தானையைத் தேடற”
“நான் ஒரு முரண்பாட்டு மூட்டைம்மா! வெளிய பெரிய மனுஷனா காட்டிக்கிட்டாலும் உனக்கு நான் எப்பவுமே குழந்தைத்தான்மா! உடம்பு வலின்னாலும் சரி, மனசு வலின்னாலும் சரி, உன்னைத் தவிர வேற யாரம்மா நான் தேடிப் போவேன் ஆறுதலுக்கு”
“இப்போலாம் இப்படித்தான்டா பேசுவீங்க! நாள பின்ன உனக்குன்னு ஒருத்தி வந்துட்டா, இந்த அம்மா சும்மாவா ஆகிடுவேன்”
“அப்படிலாம் சொல்லக் கூடாது அகிலா! ஆத்துக்காரி வந்தாலும் எனக்கு அகிலாத்தான் அகிலமும்! மாமியார் கொடுமை நீ எவ்ளோ வேணும்னாலும் பண்ணுமா! என்ன ஏதுன்னு நான் கேட்டுக்கவே மாட்டேன்!”
“ஹ்க்கும்! நம்பிட்டேன்டா! நம்பிட்டேன்” என நொடித்துக் கொண்டவர், கிச்சனுக்குள் நுழைந்து கொண்டார்.
அங்கிருந்து பேச்சுச் சத்தம் வர,
“யாருமா அங்க! அஸ்மி வெளிய போயிருக்கான்னு சொன்ன!” எனக் கேட்டபடியே லேசாக நொண்டியபடி கிச்சனுக்குள் நுழைந்தான் விஜய்.
அங்கே அவனது தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மதுஷாலினியை எதிர்ப்பார்க்கவே இல்லை இவன். வியர்த்து வழிகிறது என டீ சர்டை கழட்டி விட்டு உள் பனியனோடு நின்றிருந்தவனுக்குக் கூச்சமாய் போய் விட,
“ஆள் இருக்காங்கன்னு ஏன்மா சொல்லல!” எனப் படபடத்தான்.
“நம்ம கீழ் வீட்டுப் பாப்பாத்தானடா விஜய்!”
“பாப்பான்னு சொல்லாதம்மா!”
“பாப்பான்னு சொல்லாதீங்க!” என இருவரும் கோரஸாய் குரல் கொடுக்க, என்னங்கடா இது என்பது போல பார்த்தார் அகிலா!

Last edited:
Author: VanishaAdmin
Article Title: Sorkam Madhuvile--EPI 6
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.