அத்தியாயம் 8
நீதானே என் பூஜை அறையின் தெய்வீகம்!
அன்றைய தினம் இடி சத்தத்தில்தான் கண் விழித்தாள் மதுஷாலினி.
“அச்சோ! மழை வச்சு அடிக்கப் போகுது போலிருக்கே! இன்னிக்கு நெட்வொர்க்கிங் பாடத்து டெஸ்ட் இல்லைனா, பேசாம லீவ போட்டுட்டு மறுபடி படுத்திருக்கலாம்!” என எண்ணியபடியே அவசரமாகக் குளிக்கப் போனாள்.
மழை அடித்து ஊற்றுவதற்குள் கிளம்பி, வேகமாய் பஸ் நிறுத்தம் போய் விட வேண்டும் என நினைத்தாள் பெண். காலை உணவைக் கல்லூரியில் போய் பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தவள், கையில் குடையை எடுத்துக் கொண்டு வீட்டைப் பூட்டி விட்டு வேகமாய் பேருந்து நிறுத்தம் நோக்கி நடையிட்டாள். இவள் பஸ் நிறுத்தத்தை அடைந்த நொடி, மழை சோவெனக் கொட்டியது!
“எங்க நம்ம விஜய காணோம்!”
வாகனங்கள் வேகமாய் போக, எங்கே தனக்கு நீர் அபிஷேகம் நடந்து விடுமோ எனப் பயந்து சற்றுத் தள்ளி உட்புறமாய் நின்றாள் மதுஷாலினி. கண்கள் பேருந்து வரும் வழித் தடத்தையும், விஜய் வரும் வழியையும் மாறி மாறிப் பார்த்தன.
ஐந்து நிமிடம் போயிருக்கும். இவள் அருகில் வந்து நின்று ஹாரன் அடித்தது ஒரு கார். புன்னகையுடன் இவள் பார்த்திருக்க, அதில் இருந்து இறங்கி குடையுடன் வந்தான் விஜய்!
“வா மது! இன்னிக்கு கார்ல போய்டலாம்!” என அவன் அழைக்க, சம்மதமாய் தலையாட்டிய ஷாலு, அவனை நெருங்கி குடைக்குள் புகுந்து கொண்டாள்.
முகத்தை மோதும் மழைக் காற்று, உடலைத் தழுவி விழும் சாரல் சரசம், மிக அருகில் குமுதமாய் குமரி! குளிர்ந்து போனான் குடைப் பிடித்தவன்.
மெல்ல நடத்தி போய் காருக்குள் அவளை அமர்த்தியவன், சுற்றி வந்து இவன் ஏறுவதற்குள் நனைந்து விட்டிருந்தான். கல்லூரியில் ஏசி குளிருக்கு இவள் போர்த்திக் கொள்ளும் சால்வையை பேக்கில் இருந்து எடுத்து இவனிடம் நீட்டினாள் மதுஷாலினி.
“தலையைத் துவட்டிக்க விஜய்! சளி பிடிச்சிடப் போகுது” என அக்கறையாகச் சொன்னாள் இவள்.
அவள் கொடுத்ததை வாங்கித் தலையைத் துவட்டி, முகத்தையும் துடைத்தான் விஜய். அந்தச் சால்வையில் பெண்ணவளின் வாசம், அவள் பெயருக்கேற்றது போல போதை தந்தது இவனுக்கு. நேரம் எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து,
“சீக்கிரம் கிளம்பலாம் விஜய்! இன்னிக்கு எனக்கு டெஸ்ட் இருக்குன்னு உனக்குத் தெரியும்தானே! காலையில பசியாற கூட இல்ல” என்றாள் மதுஷாலினி.
அவளது சால்வையைக் காட்டி,
“ஈரமாகிடுச்சு! நான் துவைச்சுக் காய வச்சி தரேன்” என்றான்.
“இல்ல, பரவால்ல! குடு விஜய்” என்றவளைக் கண்டு கொள்ளாமல் காரை செலுத்த ஆரம்பித்தான்.
“டெஸ்ட் பத்தி பயப்படாதே மது! நேத்து நான் சொல்லிக் குடுத்ததுதான் வரும்! கண்டிப்பா நல்லா செஞ்சிடுவ!”
“பயம்லாம் இல்ல விஜய்! நீ கைட் பண்ணறப்ப என்ன பயம் எனக்கு!” என கூலாக சொன்னவள், காரில் இருந்த பாட்டு சிடி ஆல்பத்தைப் புரட்ட ஆரம்பித்தாள்.
“ரிதம், பார்த்தேன் ரசித்தேன், அலைபாயுதே, மின்னலே, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்” என ஒவ்வொரு சிடி தலைப்பாக வாசித்துக் கொண்டே வந்தவள்,
“ராஜா பாட்டு இல்லையா?” எனக் கேட்டாள்.
“இந்தப் பாட்டேல்லாம் நீ கேக்க மாட்டியா மது? ராஜாவேத்தான் வேணுமா?”
“ரெய்ன் வரப்ப ராஜா இல்லைனா எப்படி?”
ராஜா பாடலுக்கு இவனுமே அடிமைத்தான்! அவரது பாடல் கலேக்ஷன் இவனிடமும் இருந்தது. வீட்டில் இருந்ததை காரில் மறுபடி வைக்க மறந்திருந்தான். அவனிடம் பாடம் சம்பந்தமாய் மட்டுமே பேசும் பெண்ணின் வாயை இந்த மேட்டரை வைத்துக் கிளறிப் பார்க்கும் ஆசை வந்தது இவனுக்கு.
“அதென்ன எப்ப மழை வந்தாலும் ராஜா கையைப் புடிச்சு இழுக்கறீங்க? ரகுமான் இழுத்தா வர மாட்டேன்னு சொன்னாரா? இல்லை ஹரிஷ் இழுத்தா வர மாட்டேன்னு சொன்னாரா? இல்லை பரத்வாஜ்தான் இழுக்கறதுக்குக் கையை குடுக்க மாட்டேன்னு சொன்னாரா?” எனக் கேட்டவனைத் திரும்பிப் பார்த்தாள் இவள்.
கம்ப்யூட்டர், மவுஸ், கீ போர்ட், மதர் போர்ட், ரேம்(RAM), ரோம்(ROM) என மட்டுமே இவளிடம் பேசி இருந்தவன், திடீரென இளையராஜாவுக்கு எதிராய் கொடிப் பிடிக்கவும் சட்டென எரிச்சல் மூண்டது பெண்ணுக்கு! இவள் அம்மா ஒரு தீவிர ராஜா ரசிகை. அங்கொன்றும் இங்கொன்றுமென நினைவடுக்கில் வந்து போகும் சில நிழ்வுகளில் இவளைத் தூக்கி வைத்துக் கொண்டு அவர் பாடும் கற்பூர பொம்மை ஒன்று பாடலை அடிக்கடி கேசட்டில் போட்டுக் கேட்பாள் பெண். நினைவுகளில் இருந்து மறைந்து போகப் பார்க்கும் அம்மாவின் பிம்பங்களை ராஜாவின் பாடல்கள் வழி உயிர்ப்பாய் வைத்துக் கொள்ள முயல்பவளுக்கு, அவரைப் பற்றிக் குறையாய் யாராவது சொன்னால் பொறுத்துக் கொள்ள முடியுமா! பொங்கி விட்டாள் பெண்!
“மழைக்கும் ராஜாவுக்கும் உள்ள பந்தம் என்னைப் போல ஒரு ஜீனியசுக்குத்தான் தெரியும்! உன்னைப் போல ஒரு ஜிஞ்சர் ஈட்டிங் மங்கிக்குத் தெரியாது”
அவளது பேச்சு இவனுக்குப் புன்னகையை வரவழைத்தது.
“என்ன இளிப்பு? இல்ல என்ன இளிப்புங்கறேன்!”
“சரி, சரி! இளிக்கல! மழைக்கும் அவருக்கும் அப்படி என்ன கனேக்ஷன்னு கொஞ்சம் சொல்லேன், இந்த மங்கிக்கு எதாச்சும் புரியுதான்னு பார்க்கலாம்”
“மழை பொழியறப்ப, ஜன்னல் ஓரம் நின்னு கையை வெளிய நீட்டி விளையாடிட்டே ராஜா பாட்டு கேக்கறது தனி சுகம். வான் மேகம், பூப்பூவா தூவும்னு பாட்டு வரப்ப, நம்ம கண்ணுக்கு மல்லி இதழ்கள் மழையா பெய்யற மாதிரித்தான் தோணும்! பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்னு பாட்டு வரப்ப, மழைக் காத்துல பன்னீர் வாசம் மூக்கை நிரடறது போல இருக்கும்! அந்தி மழை பொழிகிறது, ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறதுன்னு கேக்கறப்ப, நம்ம அன்புக்கு உரியவங்க அந்தத் துளிகள்ல வாழ்ந்து நம்ம கையை நனைச்சு பூமியில வீழ்ந்து போகிறத உணர முடியும்!” என்றவளின் குரல் தளுதளுத்துப் போனது.
சட்டென அவளைத் திரும்பிப் பார்த்தான் விஜய். கண்களில் நீர் கோர்த்திருக்க, மழை நீரைத் தள்ளி விட்டுக் கொண்டிருக்கும் வைப்பரை வெறித்துக் கொண்டிருந்தாள் மதுஷாலினி.
“மது! நான் சும்மா உன்னை வம்பிழுக்கறதுக்காகத்தான் பேசனேன்! நீ அப்செட் ஆகிடுவன்னு நெனைச்சே பார்க்கல! சாரி மது”
அவளது படபட கோபமும், சிரிப்பும், முறைப்பும் இவனுக்குப் பழக்கமான ஒன்றாக இருந்தது. மூக்கு விடைக்க, கண்ணீரை அடக்கிக் கொண்டு இருப்பவளை எப்படிச் சமாதானப்படுத்துவது எனத் தெரியவில்லை விஜய்க்கு. மழை நேரத்தில் சாலையில் முழு கவனத்தையும் வைக்க வேண்டிய கட்டாயம் வேறு! தவித்துத்தான் போனான் இவன்.
“மது! மது! ப்ளீஸ் அழாதே! ஐ அம் சாரி மது”
எதுவும் பேசவில்லை அவள். இடது கையால் அவளது வலது கையை மெல்லப் பற்றிக் கொண்டான் விஜய். தட்டி விட்டவள்,
“ரோட்டைப் பார்த்து ஓட்டு! நான் ஓகேத்தான்” எனச் சத்தம் போட்டாள்.
புறங்கையால் விழப் பார்த்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள், அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. அங்கே நிலவிய அமைதி இவனை என்னவோ செய்ய, சிடி ப்ளேயரை ஆன் செய்தான். அதுவோ அவனது அவஸ்த்தைப் புரியாமல் ஆப்படித்து வைத்தது.
“ஏ முத்து பாப்பா
நீ ஒத்துப் போப்பா”(வண்டிச்சோலை சின்ராசு) என அது பாடி வைக்க, ஆடிப் போய் விட்டான் விஜய்.
கண்ணீர் காணாமல் போயிருக்க, விஜயைப் பார்த்து முறைத்து வைத்தாள் மதுஷாலினி.
“அச்சோ மது! விதி சதி செய்யுது! இது எப்பவோ நான் கேட்ட பாட்டு! ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னிக்குத்தான் கார வெளியே எடுக்கறேன் நான்!” என அவன் பதற, கல்லூரியும் வந்திருந்தது.
காரில் இருந்து இறங்கிக் கொண்டவள்,
“இப்போ ஒன்னு சொல்றேன், உன் காலண்டர்ல குறிச்சு வச்சிக்கோ விஜய்! என்னைப் பாப்பா, பாப்பான்னு கிண்டல் பண்ற உனக்கு, என்னைப் போலவே குட்டியா பாப்பா மாதிரித்தான் ஒரு கேர்ள்ப்ரேண்ட் கிடைப்பா! அவளே உனக்குப் பொண்டாட்டியாவும் வந்து உசுர எடுப்பா! உன் புள்ளைங்க எல்லாம் அவ சைஸ்லயே பொறக்கும்ங்க! இது நான் உனக்குக் குடுக்கற சாபம்!” எனப் படபடத்து விட்டு காலேஜ் வளாகத்துக்குள் நுழைந்து கொண்டாள்.
அவள் சாபத்தைக் கேட்டு இவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு வந்தது!

Last edited:
Author: VanishaAdmin
Article Title: Sorkam Madhuvile--EPI 8
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.