அத்தியாயம் 3
டிமென்ஷியா வகைகள்
அல்சைமர்(alzheimer), வாஸ்குலார் டிமென்ஷியா, பர்கின்சன்(parkinson), ஹண்டிங்டன் இப்படி பலவகையாக டிமென்ஷியா பிரிக்கப்படுகிறது. இதில் அல்சைமர் வகையே பரவலாக காணப்படுகிறது. மூளையின் செல்கள் மரிப்பதாலே அல்சைமர் ஏற்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் சிலருக்கு நாற்பதுகளிலே அல்சைமர் நோய் தொடங்கிவிடுகிறது.
அபிக்கு அதிர்ச்சியில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. அதிர்ச்சி ஒரு புறம், பயம் மறுபுறம். தன்னையறியாமல் கை நடுங்க தோள்பட்டையைத் தடவி விட்டுக் கொண்டாள். பார்வை பட்டும் சதாவைத் தவிர வீட்டில் உள்ளவர்கள் அனைவரின் முகத்தையும் தொட்டு மீண்டது. ராஜாவின் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தில் கை நடுங்க ராமின் கரத்தை அழுந்த பற்றிக் கொண்டாள்.
அவளையேப் பார்த்திருந்த சதா,
“சரின்னு சொல்லு அபி. இப்போவே கல்யாணம் செஞ்சிக்கலாம். என் கூடவே உன்னைக் கூட்டிட்டுப் போயிருறேன்” என கேட்டான்.
“ஹலோ சார்! என்ன நடக்குது இங்க? நீங்க பார்க்க வந்த பொண்ணு அங்க நிக்கறா! அவள விட்டுட்டு இவள எதுக்கு தொல்லை பண்ணுறீங்க? ஒழுங்கா வந்த வேலைய பாருங்க. இல்லைன்னா சீன் ஆகி போயிருவீங்க!” என கத்தினான் ராஜா.
“ஏய் அபி, உள்ள போடி! இங்க நின்னு ஷோ காட்டுனது போதும், போ!” என அபியைப் பார்த்து மிரட்டினான் ராஜா. அவன் குரலில் மேனி நடுங்கியது அவளுக்கு. இருந்தாலும் பிடிவாதமாக நீ சொல்லி நான் என்ன கேட்பது என்பது போல நின்றிருந்தாள் அவள்.
“அடங்கமாட்டடீ நீ!” என அவளை நோக்கி ஓர் எட்டு எடுத்து வைத்தான் ராஜா. அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் அவன் கையை இறுக பற்றி இருந்தான் சதா.
“தம்பி, நாங்க தான் பேசிக்கிட்டு இருக்கோம்ல. நீ எதுக்கு நடுவுல சிலிர்த்துக்கிட்டு வர. போ, போய் பெயாம(பேசாம) உட்காரு” என பிடித்திருந்த அவன் கையில் அழுத்தத்தைக் கூட்டினான் சதா.
“ஆ!!! விடுடா வலிக்குது” என அலறினான் ராஜா.
“தலைக்கு குளிச்சது, காது அடைச்சிக்கிச்சு! சரியா கேக்கல தம்பி!”
“வலிக்குது, விடுங்க சார்” என வலியில் இருந்தவன் வார்த்தையைக் கடித்துத் துப்பினான்.
“இது பச்சப்புள்ளைக்கு அழகு! நாங்க பேசி முடிக்கற வரைக்கும் சத்தம் வரக் கூடாது” என நாற்காலியில் அவனைத் தள்ளினான் சதா.
அந்த சிறப்பான சம்பவத்துக்குப் பிறகு சதாவைப் பார்த்த அபியின் கண்கள் லைட் போட்டது போல மின்னின.
அதற்குள் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்த பூரணி, நிலைமையை சமாளிக்க முயன்றார்.
“ராஜா, என்னடா கொஞ்சம் கூட மரியாதை இல்லாம நடந்துக்கற? அவரு நம்ம வீட்டு மாப்பிள்ளை. அத மறந்துறாத!” மகனைக் கண்டித்தவர்,
“நீங்க உட்காருங்க மாப்பிள்ளை. முதல்ல காபியைக் குடிங்க. நாம நிதானமா பேசலாம்.” என்றார்.
“ராகவி, காபி ஊத்திக் குடும்மா” என மகளையும் ஏவினார்.
இவர்கள் முன்னால் வாய் திறக்காமல் அமைதியாக நிற்கும் அபியை ஒரு கணம் கூர்ந்துப் பார்த்தான் சதா. இவர்களின் சம்மதம் இல்லாமல் அபியைக் கரம் பிடிப்பது கஸ்டம் என புரிந்தது அவனுக்கு. மீண்டும் சோபாவில் அமைதியாக அமர்ந்தான் அவன். ராகவி கையில் கொடுத்த காபியை வாங்கியவன், அபியைப் பார்த்தவாறே அதை விழுங்கி வைத்தான். வீட்டினர் பார்வை அவளைத் துளைப்பது போன்ற பிரமையில் அவளோ தலையை நிமிர்த்தவே இல்லை.
காபி ஊற்றிக் கொடுத்ததும் ராகவி வேண்டும் என்றே அபியின் அருகே போய் நின்றாள். மகளின் கண் அசைவில் மீண்டும் பேச்சைத் துவக்கினார் பூரணி.
“மாப்பிள்ளை, திடுதிப்புன்னு இப்படி கேக்கவும் எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி ஆகிருச்சு. உங்கள பற்றி தரகர் சொன்னதுல இருந்து நீங்கதான் ராகவி புருஷன்னு நாங்கள்லாம் முடிவே பண்ணிட்டோம். அவளும் உங்களயே தான் நினைச்சிட்டு இருக்கறா! சாப்பாடு இறங்கல, தூக்கம் வரல, ராத்திரிலாம் பேய் மாதிரி உலாத்திக்கிட்டு இருக்கா. இப்ப வந்து கதைய மாத்துனா, பாவம் அவ மனசு என்ன பாடு படும்னு நீங்க கொஞ்சம் நினைச்சுப் பார்க்கனும்.” என்றவர் வராத கண்ணீரை முந்தானையில் துடைத்தார்.
“ஆமா மாப்பிள்ளை!” என மனைவிக்கு பின் பாட்டு பாடினார் ஆறுமுகம். கண்ணெதிரே ரூபாய் நோட்டுக்கள் பாய் பாய் காட்டுவது போல எழுந்த பிரம்மையில் ஏற்கனவே ஆடிப் போயிருந்தார் அவர்.
“அபி இன்னும் சின்ன புள்ள. விளையாட்டுத்தனம் அதிகம். உடம்பு வேற, எந்த வேலைக்கும் வணங்காது. பெரியவங்க சின்னவங்கன்னு ஒரு மட்டு மரியாதை கிடையாது. குடும்பத்த அணுசரிச்சு போகத் தெரியாது. அதனால நீங்க ராகவிய தான் கல்யாணம் செஞ்சிக்கனும். அவ தான் அழகுலயும், அறிவுலயும் உங்களுக்குப் பொருத்தமா இருப்பா. நீங்களே நல்லா பாருங்க!” என அருகருகே நின்றிருந்த இரு பெண்களையும் சுட்டிக் காட்டினார்.
அருகருகில் அவர்கள் இருவரையும் பார்க்க மெழுகு பூசிய பளபளா ஆஸ்திரேலியன் ஆப்பிளும், நசுங்கிப் போன ரோட்டோரக் கடை ஆப்பிளையும் போல இருந்தது.
ராகவி இவள் எனக்கு ஈடா எனும் பாவத்தில் நிற்க, அபியோ ‘பல்டி பக்குற டர்ல உடனும் பல்த்து வொர்ல்டு மொத்தமும் அர்ல உடனும் பிஸ்து’ எனும் மனோபாவத்தில் நின்றிருந்தாள். அதாவது ஒன்றும் புரியாமல் நின்றிருந்தாள்.
சதாவின் கண்கள் அபியின் மேல் மட்டும்தான் நிலைத்திருந்தது. ஆரம்பத்தில் இருந்தே அவளை அவன் சரியாகவே பார்க்கவில்லை. விழும் அவளைக் கையில் பிடித்தப் போது அவளின் வாசனையில் கவனத்தை வைத்தவன், முகத்தை சரிவர கவனிக்கவில்லை. முகத்தில் இருக்க வேண்டியதெல்லாம் அந்தந்த இடத்தில் இருக்கிறது எனும் அளவுக்கு மட்டுமே மேலிருந்து கீழ் வரை பார்த்த அந்த சில நிமிடங்களில் கவனித்திருந்தான். அவள் இவனைப் பார்க்கும் போது இவன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு நின்றிருந்தான்.
மற்றவர்கள் பார்வைத் தன்னைப் பரிகசிப்பது போலவே ஒரு மாயத் தோற்றம் அவனுக்கு. அதனாலேயே யாரையும் முகத்துக்கு நேராகப் பார்த்து பேசமாட்டான் சதா. இவன் பார்க்கும் போது அவள் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தாள். இப்பொழுது பார்க்கும் போது கூட அவளின் அதீத மெலிவும், தலையைக் குனிந்திருந்ததால் அவளின் காக்டஸ் முடி மட்டும்தான் அவன் கண்ணுக்கு நன்றாக தெரிந்தது.
குரலைச் செறுமி சரி செய்தவன் பூரணியைப் பார்த்து,
“நான் இருக்கற லட்சணத்துக்கு அழகான உங்க மகள கட்டிக்க எனக்கே ரொம்ப கில்டியா இருக்கு. உங்க அந்தஸ்த்துக்கும் அவங்க அழகுக்கும் கண்டிப்பா வேற நல்ல மாப்பிள்ளை கிடைப்பான். நான், சராசரியா இருக்கற அபியையே கல்யாணம் செஞ்சிக்கறேன். என் அவலட்சணத்துக்கு ஏத்த அலங்கோலம் அப்படின்னு திருப்தியா ஆகிரும்” என கூறினான் சதா.
தன்னை அலங்கோலம் என சதா சொன்னதைக் கேட்டு ஒரு கணம் முகம் வாட அவனை நோக்கிய அபி, மீண்டும் தலை குனிந்துக் கொண்டாள்.
நாசுக்காக தன் மகளை வேண்டாம் என சதா சொன்னதில் கொதித்துப் போயிருந்த பூரணிக்கு, அதே பணக்கார வாழ்க்கை அபிக்கு கிடைப்பதில் எள்ளளவும் இஸ்டம் இல்லை. சதாவின் முகத்தில் தெரிந்த உறுதி இவருக்கு கடுப்பைக் கிளப்பியது.
“சதா தம்பி, திடீர்னு இப்படி பேசுனா நாங்க என்ன செய்யறது. எங்களுக்கு கலந்து பேச டைம் குடுங்க” என அவகாசம் கேட்டார் பூரணி.
மாப்பிள்ளைசதா தம்பியானதை கவனித்த சதா, ஆறுமுகத்தை நோக்கி,
“ஆறுமுகம் சார், ரெண்டு நாள் டைம் எடுத்துக்குங்க. நல்லா யோசிங்க, ஆனா பதில் யெஸ்னு தான் வரனும். நீங்க ஒத்துக்கிட்டா விமரிசையா கல்யாணம் நடக்கும். இல்லைனாலும் அமோகமா நடக்கும்”என மறைமுகமாக மிரட்டினான்.
“சரி வா அபி. அவங்க நல்லா யோசிக்கட்டும். அது வரைக்கும் என் வீட்டுலயே இரு” என கை நீட்டியபடி எழுந்து நின்றான் சதா.
‘வெட்டு சார், என்னதிது பொசுக்குன்னு வீட்டுக்கு வான்னு கூப்புடுறீங்க? சர்தான், இன்னிக்கு ராத்திரி நேரத்து பூஜையில், ரகசிய தரிசன ஆசையில்னு என் முதுகுல ஏறி பூசணி டான்ஸ் ஆடிருமே!’ மனதில் புலம்பினாள் அபி.
“அதெப்படி வருவா தம்பி? நாங்க இன்னும் சம்மதம் சொல்லல. அதோட ராமை விட்டுட்டு அவளால இருக்க முடியாதே! நல்லா படிக்கனும்ன்னு அவனுக்கு வேற பூஜை நடத்தறோம் இன்னிக்கு ராத்திரி. சொல்லு அபி!” தான் மனதில் நினைத்த மாதிரியே அவரும் பூஜை என சொல்லவும், அவள் உதட்டில் கீற்றாய் புன்னகை மின்னி மறைந்தது. தன்னை அடக்கிக் கொண்டவள், பூரணியின் மறைமுக மிரட்டலுக்குப் பணிந்தாள். அடிக்கடி அவளுக்குப் சப்போர்ட் செய்து ராம் வாங்கிக் கட்டிக் கொள்வான் தான். ஓர் அடி அவனுக்கு விழும் போதே, மற்றதை தான் ஏற்றுக் கொள்வாள் அபி.

Author: VanishaAdmin
Article Title: Urasathe--EPI 3
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.