Urasathe--EPI 8

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
918
-1,981
93
அத்தியாயம் 8

டிமென்ஷியாவின் அறிகுறிகள்:

குணங்களில் மாற்றங்கள்

இந்த வியாதி தாக்கப்பட்டவர்களின் குணங்கள் திடீர் மாறுதல்களை அடையும். அவர்களின் மனநிலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். காரணமே இல்லாமல் சிறிது நேரத்திற்கு கடுஞ்சினத்திற்கு உள்ளாவார்கள். சில நேரம் மூர்க்கத்தனமாகவும், முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்வார்கள்.


பாவாடை தாவணி சரசரக்க பாரம்பரியமாக இருந்தவள், செய்கையில் படா லோக்கலாக இருந்தாள். குணாவின் மோட்டார்பைக் கீழே விழுந்து கிடக்க, தோட்ட வேலைக்கு வைத்திருக்கும் சிறிய மம்மட்டியால் பைக்கைக் கொத்தி தூர் வாரிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.

கொஞ்சம் தள்ளி நின்றுக் கொண்டு,

“யம்மா, தெரியாம சொல்லிட்டேன். என்னை மன்னிச்சிரு. எனக்கு இருக்கறதே ஒரே பைக், விட்டுரு ப்ளீஸ். சொல்றேன்ல விடும்மா!” கெஞ்சலில் ஆரம்பித்து கோபத்தில் முடித்தான் குணா.

மம்மட்டியைத் தூர தூக்கிப் போட்டவள் இடுப்பில் கைகளைக் கட்டிக் கொண்டு அவனை முறைத்தாள். கைகளில் சிராய்ப்புக் காயங்களுடன், ரத்தம் வேறு லேசாக வழிந்தது.

“அந்த பயம் இருக்கட்டும்! நீ நேரா வந்து என்னை மோதுனத கூட நான் மன்னிச்சுருவேன், ஆனா கூப்பிட்டப்பாரு அந்தப் பேரு, அத மட்டும் நான் மன்னிக்கவே மாட்டேன். புதுசா பார்க்கற பொண்ண அப்படித்தான் மரியாதை இல்லாம கூப்புடுவியா? மேனர்ஸ் இல்ல, சென்ஸ் இல்ல, ரெஸ்பேக்ட் இல்ல?” பொரிந்துக் கொட்டினாள் அவள்.

“ஓ, பரவாயில்லையே. இங்கிலிபீசெல்லாம் பேசற. ஆனா நகரு நகருன்னு கத்துனப்போ எங்க போச்சு உன் சென்ஸ், மேனர்ஸ்லாம்?” இவனும் கத்தினான்.

அதற்குள் அருகில் வந்திருந்த சதாவும், அபியும் அவர்கள் சண்டையை வேடிக்கைப் பார்த்தது போதும் என சமாதானப்படுத்த விழைந்தனர்.

“குணா என்னாடா பிரச்சனை? யார் இந்தப் பொண்ணு?” என கேட்டான் சதா.

“யாருக்கு தெரியும் மச்சி! தொறந்த வீட்டுக்குள்ள என்னமோ நுழையற மாதிரி வந்துட்டு இருந்துச்சி.”

“ஏய், யார பார்த்து நாய்ன்னு சொன்ன?” எகிறினாள் அவள்.

“ஏன் தொறந்த வீட்டுல நாய் மட்டும்தான் வருமா? பூனை, பூதம்லாம் வராதா?” நக்கலாக கேட்டான் குணா.

“யார பாத்துடா பூதம்னு சொன்ன? நானும் மொத புடிச்சுப் பார்க்கறேன், என்னை சும்மா கண்ட பேருலாம் சொல்லி கூப்பிட்டு காண்டாக்குற!” மீண்டும் மம்மட்டியை எடுக்கப் போனவளை, அபி பிடித்துக் கொண்டாள்.

“இரு, இரு பேசி தீர்த்துக்கலாம்” என அவளை சமாதானப் படுத்த விழைந்தாள் அபி.

“மச்சி, உடம்புல திமிரு இருக்கலாம், ஆனா திமிரே உடம்பா இருக்கக் கூடாதுடா! பூமி தாங்காது” சதாவிடம் பேசினாலும் பார்வை அந்த அடங்காப்பிடாரியிடமே இருந்தது.

“யாருக்குத் திமிரு? உனக்குத்தான் அது கொட்டிக் கிடக்கு. ஒழுங்கா போனவள இடிச்சுத் தள்ளி ரத்தக்காயம் பார்த்துட்டு தெனாவெட்டா பேசிட்டு இருக்க”

“ஆமா, கையில ரத்தம் வருதே! நீ உள்ள வா, மஞ்ச பத்து போடலாம்” என அவளை உள்ளே அழைத்தாள் அபி.

“இருங்க சிஸ்டர்! யாருன்னு தெரியாதவங்கள வீட்டுக்குள்ளார எல்லாம் கூட்டிட்டுப் போக வேணாம். மருந்த வெளிய வச்சே போடுங்க” என்றான் குணா.

“யாருன்னு தெரியாம கூர்க்கா உள்ள விடமாட்டானே! யாரும்மா நீ?” என கேட்டான் சதா.

“ஏதோ உங்களுக்காச்சும் கொஞ்சம் மூளை வேலை செய்யுதே சதாண்ணா. நான் உங்க குக் சாமியோட தங்கச்சி மக. ஏற்கனவே ஒரு தடவ மாமாவ பார்க்க வந்துருக்கேன் இங்க. அப்போ நீங்க இல்ல. அதனால என்னைத் தெரியல.”

“சாமிண்ணா அடிக்கடி சொல்லுற பாப்பா நீ தானாம்மா! சரி வா, உள்ள போய் பேசலாம்” குணாவைப் பார்த்தவாறே அவளிடம் பேசினான் சதா.

“நான் ஒன்னும் பாப்பா இல்ல. என் பேரு கேசி!” அவள் சொல்லி முடிக்கவும், உள்ளிருந்து சாமி வரவும் சரியாக இருந்தது.

“வாடிம்மா நாகநாகேஸ்வரி! வரும் போதே என்னப் பிரச்சனை?”

சாமியின் விளிப்பைக் கேட்டு சிரிப்பை உள்ளடக்கிய குரலுடன்,

“மச்சி, வச்சப் பேரு மண்ணாங்கட்டியாம் ஆனா வெளிய சொல்லிக்கறது மேடியாம் கலி முத்திப் போச்சு” என மறைமுகமாக அவளைக் கலாய்த்தான் குணா.

தன் மாமா அருகில் நிற்கவும் அடக்கி வாசித்த கேசி, குணாவைத் திரும்பி முறைத்துவிட்டு அபியுடன் உள்ளே சென்று விட்டாள்.

“என்ன ஆச்சி மச்சி? ஏன் பைக் கண்ணாடிலாம் ஒடச்சி வைக்கற அளவுக்கு அவளுக்கு கோபம்? நீ என்னடா பண்ண?” என குணாவை வெளியே நிறுத்தி வைத்துக் கேட்டான் சதா.

“இன்னிக்கு என் நேரமே சரியில்லைடா. காலையிலே பைக் மக்கர் பண்ணிருச்சு. கஸ்டப்பட்டு ஸ்டார்ட் பண்ணி ஓட்டிட்டு வந்தேன். வர வழியில ப்ரேக் புடிக்காம போச்சு. சரி வீடு கிட்ட தானேன்னு அப்படியே ஓட்டிட்டு வந்தேன். இவ நுழையறதுக்காக கூர்க்கா கேட்டை திறந்துவிடவும் அப்படியே பைக்க உள்ள விட்டுட்டேன். ஏ பொண்ணு தள்ளிப் போ, ப்ரேக் இல்லன்னு கத்துறேன் இந்தம்மா ஆடி அசைஞ்சி நகராம நடந்துப் போச்சு. இயர் போன் காதுல. பொண்ணு பொண்ணு நகருன்றேன், நோ ரியக்சன். அப்புறம்தான் சத்தமா குள்ள கத்திரிக்கா தள்ளி போன்னு கத்துனேன்.”

“ஏண்டா அப்படி கத்துன?”

“கண்ணுல தெரியறத தானேடா சொல்ல முடியும்! பின்னால இருந்துப் பார்க்க குள்ளமா கத்திரிக்கா சைஸ்ல தான் இருந்தா. அதான் அப்படி கூப்புட்டேன்”
 

Author: VanishaAdmin
Article Title: Urasathe--EPI 8
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: yasotha and Thani

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
918
-1,981
93
“அவ உன் பைக்க அடிச்சு போட்டதுல தப்பே இல்லடா”

“மிச்சத்தையும் கேட்டுட்டு கருத்து சொல்லுடா என் கருத்து கந்தசாமி! அந்தப் பாம்புக் காதுக்கு அந்த வோர்ட் மட்டும் நல்லா கேட்டுருச்சு. அப்பவும் தள்ளிப் போகாம திரும்பி நின்னு முறைக்கிறா! பைக்கை அடிச்சு திருப்பி வளைக்கறதுக்குள்ள லேசா மோதிருச்சு அவ மேல.”

“ஐயோ பாவம்டா அவ!”

“டேய், நானும்தாண்டா கீழ விழுந்தேன். தோ பாரு என் கையிலயும் தான் ரத்தம். யாராச்சும் அத கண்டுகிட்டீங்களா? ஒரு பொண்ணு ரத்தம் சிந்துனா மட்டும் ஜகத்தையே அழிப்போம்னு கிளம்பிருங்க. பொண்ணுங்க சிந்துனா மட்டும் ரத்தம், அதே ஆம்புள சிந்துனா மட்டும் குத்தமாடா? போங்கடா டேய்!”

“இத்துணூண்டு ரத்தம், துடைச்சிப் போட்டுட்டு போவியா!” என சமாதானப் படுத்தி அவனை சாப்பிட அழைத்துப் போனான் சதா.

அவர்கள் உள்ளே நுழையும் போதே பேச்சு சத்தம் டைனிங் ஹாலில் கேட்டுக் கொண்டிருந்தது.

“மாமா, எப்ப பாரு என்னையே திட்டுங்க. உங்க ஒரே தங்கச்சிக்குப் பொறந்த ஒரே மக நானு. அந்தப் பாசம் கொஞ்சம் கூட இல்லை”

“அதெல்லாம் இல்லடா நாகேசு. நம்ம குடும்பத்துகே நீ மட்டும்தானே ஒத்த வாரிசு. எங்க குலம் காக்க வந்த குலக்கொழுந்து” என மருமகளை நெட்டி முறித்தார் சாமி.

“நாகேசுன்னு கூப்டாதீங்க மாமா. எனக்கு கெட்ட கோபம் வரும். ஊருல அப்படி கூப்பிட்டு தான் என்னால வெளிய தலை காட்ட முடியல. பையனுங்க எல்லாம் முத்து குளிக்க வாரீகளா, மூச்சை அடக்க வாரீகளான்னு பாடி கலாய்ச்சி தள்ளுரானுங்க. இங்கயும் என் மானத்த கப்பல்ல ஏத்தாதிங்க. கேசின்னு கூப்புடுங்க. நாகநாகேஸ்வரின்னு பேரு வச்ச உங்க மேல கொலைவெறி வருது” நாக்கை நீட்டி சீறினாள்.

“நீ வயித்துல இருந்தப்ப உங்கப்பன், வயல்ல சிவனேன்னு போயிட்டு இருந்த பாம்ப அடிச்சு கொன்னுப்புட்டான். நாகதோஷம் ஆயிருச்சேன்னு உங்காத்தா ஏற்கனெவே பயத்துல இருந்தா. பொறந்த உன்னைய நர்சு கையில இருந்து வாங்குனவுடனே உங்காத்த மயக்கம் அடிச்சு விழுந்துட்டா”

“ஏன் சாமிண்ணா மயக்கம் ஆனாங்க?” சுவாரசியமாக கதை கேட்டாள் அபி.

“பின்ன என்னம்மா! ஸ்சு ஸ்சுன்னு கருநாக்க வெளிய வெளிய நீட்டிருக்கா இவ. என் தங்கச்சி செத்துப்போன பாம்புதான் சாபம் விட்டுருச்சு, என் பொண்ணு பாம்பு மாதிரி சீறுரான்னு ஒரே அழுகை! பச்சை உடம்புக்காரி அழறாலேன்னு, நான் நாகேஸ்வரிக்கு விரதம் புடிச்சு, ஜோசியம் பார்த்து, இந்தப் பேர இவளுக்கு வச்சேன். அதை சுருக்கிக் கூப்புட எனக்கு உரிமை இல்லையா? எனக்கென்னா பொண்டாட்டியா, புள்ளையா? செத்தா கொள்ளி போட இருக்கறது இவ ஒருத்திதானே!” என கண்ணைத் துடைத்தார்.

“உடனே செண்டிமெண்ட எடுத்துவுட்டு ஆள சாச்சிருங்க. அதுக்குத்தான் இந்தப் பக்கமே வரது இல்லை.” வாய் மாமனை திட்டினாலும் தோளோடு சாமியை அணைத்துக் கொண்டாள் கேசி.

குமரகுருவும் மணியமும் ஏற்கனவே ரூமின் உள்ளே சென்றிருந்தனர். அது குமரகுருவின் உடற்பயிற்சி நேரம். அபியும் இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே கேசியின் காயத்தைத் துடைத்து, சாமி கொடுத்த ஃபர்ஸ்ட் அய்ட் கிட்டில் இருந்த மருந்தைப் போட்டு விட்டிருந்தாள். அவளுக்கு மாமனும் மருமகளும் பேசிப் பழகும் விதம் அதிசயமாக இருந்தது.

உள்ளே நுழைந்த சதா, குணாவுக்கும் மருந்தைப் பூசிவிட்டான்.

“என்ன குணா தம்பி, என் மருமகள இப்படி இடிச்சிப்புட்டீங்களே! புள்ள முகமே வாடிப்போச்சு.”

“ஹ்ம்ம். வாடிப்போனா கொஞ்சம் தண்ணி தெளிச்சு விடுங்க” வாயிலேயே முனகினான் குணா.

“தெரிஞ்சே இடிப்பாங்களா சாமிண்ணா? அது ஒரு ஆக்சிடேண்ட். ஆனா உங்க மருமக தெரிஞ்சே என் பைக்க அடிச்சு நெளிச்சி வச்சிருக்கா. எல்லா பசங்களுக்கும் பைக் தான் முதல் பொண்டாட்டி. என் பொண்டாட்டி மேலயே கை வச்சிருக்கா உங்க நாகேசு! பொம்பள புள்ளையாச்சேன்னு பேசாம இருக்கேன்”

“மாமா, நாகேசுன்னு கூப்புட வேணான்னு சொல்லுங்க. இந்தாளு என்னைப் பார்த்து குள்ள கத்திரிக்கான்னு கூப்புட்டா எனக்கு கோபம் வருமா வராதா? அதான் பைக்க அடிச்சேன். நியாயமா கூப்புட்ட வாயத்தான் உடைச்சிருக்கனும். ஆனா நான் கட்டையா போயிட்டேனே, எகிறி அடிக்க முடியாதுன்னு விட்டுட்டேன்”

“நாகேசு, வாய் பேச்சு வாய் பேச்சாதான் இருக்கனும். அத விட்டுட்டு அடிதடில இறங்க கூடாது. தம்பி உன்ன குள்ள கத்திரிக்கான்னு சொன்னா, போடா நெட்டை முருங்கக்காய்னு சொல்லிட்டு வந்துருக்கனும். மேட்டர் அப்படியே முடிஞ்சிருக்கும். இப்ப பைக் சேதாரமா போச்சு” சமையல்காரருக்கு உவமையும் காய்கறிகளாகவே வந்தன.

“சரி, விடுங்க சாமிண்ணா. ரெண்டு பேரு மேலயும் தப்பிருக்கு. இனிமேலயாச்சும் அந்த பழைய பைக்க தூக்கி கடாசிட்டு புதுசா வாங்கட்டும் இவன். நீ சொல்லும்மா, என்ன சென்னைக்கு திடீர் விஜயம்?” கேட்டான் சதா.

“இன்னிக்கு ஷூட்டிங்ணா! அதான் வந்தேன்” என்றாள் கேசி.

“நீ சினிமால நடிக்கறீயா? ஆக்டர் ராம்சரண பார்த்துருக்கியா?” என ஆசையாக கேட்டாள் அபி.

கடுப்பாய் அபியை ஓரக்கண்ணில் முறைத்தான் சதா. நேர்க்கண்ணில் முறைக்க அவனுக்கு எப்பொழுது தான் நேரம் வருமோ, கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

“சினிமா இல்லமா! அது என்னமோ டியூப்ல நம்ம நாகேசு சாப்பிட்டு பார்த்து கருத்து சொல்லும். அதான்மா ருசியோ ருசி, லவ்லி, ஆவ்சம் அப்படின்னு சொல்லிகிட்டே விரல நக்கி, நாக்க வெளிய நீட்டி சப்பு கொட்டுவாங்களே அந்த வேலை” என்றார் சாமி.

அவர் சொல்லிய விதத்தில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான் குணா.

“மாமா, நான் ஒரு வீலொகர்.”

“ஆமாடா நாகேசு! நானும் அத தான் தமிழ்ல சொன்னேன்” என்றார் சாமி.

“நீ சொல்லு கேசி! வீலொகர்னா என்ன? என்னையும் அதுல சேர்த்துப்பாங்களா? நான் நல்லா கவிதை சொல்லுவேன்! இன்ஸ்ட்டண்டா இப்போ உனக்கு ஒன்னு சொல்லுறேன் பாரேன்.

மாசத்துல இது மாசி

வழுக்கி விடுமே பாசி

ஏ பீ சீ டீ நீ வாசி

கும்மு பிகரு கேசி!!!!!

கவிதை நல்லா இருக்கா கேசி?”

குடித்துக் கொண்டிருந்த காபி புரை ஏற சிரித்தான் குணா. சதாவுக்குமே சிரிப்பை அடக்க முடியவில்லை.

அபியை முறைத்தாள் கேசி.

“அப்போ நல்லா இல்லையா? வேணும்னா கும்முவ எடுத்துட்டு ஜம்மு போட்டுக்கலாமா?” என கேட்டாள் அபி.

“நீ ஆணியப் புடுங்க வேணாம்!” என கையெடுத்து கும்பிட்ட கேசி, அபி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தாள்.

“வீலொகர்னா ப்ளோகர் மாதிரி தினப்படி நடக்கறதையோ, இல்ல அவங்களுக்குப் பிடிச்சதையோ வீடியோ எடுத்து யூடியூப்ல அப்லோட் பண்ணுவாங்க. அந்த சேனல நிறைய பேர் சப்ஸ்க்ரைப் பண்ணா நமக்கு பைசா வரும். எனக்குப் புடிச்சது ஊர் சுத்தறதும், வித விதமா சாப்பிடறதும் தான். அதையே நான் வீடியோ எடுத்துப் போட்டு சம்பாரிக்கறேன். என் சேனல் பேரு கேசிஸ் கார்னர். மறக்காம சப்ஸ்க்ரைப் பண்ணு அபி. இன்னிக்கு கூட ஒரு பாரம்பரியமான இட்லி கடைய ப்ரோமேட் பண்ண சொல்லி என்னைக் கூப்பிட்டாங்க. அதுக்குத்தான் இந்த பாவாடை தாவணி!” என்று கெத்தாக குணாவைப் பார்த்தாள் கேசி.

அவனோ அவளைக் கண்டு கொள்ளாமல் போனை நோண்டிக் கொண்டிருந்தான்.

‘வெறும் 100 சப்ஸ்க்ரைபர வச்சிகிட்டு இவ பண்ணுற அலும்பு இருக்கே! கேசிஸ் கார்னர்னு பேரு வச்சதுக்கு பதிலா கேசிஸ் கேவலம்னு வச்சிருக்கலாம். ஷப்பா’ என அவளை மனதில் வறுத்தெடுத்தவனுக்குத் தெரியவில்லை கடவுள் கோர்த்துவிட்ட அவனின் கறிசோறு அவள் தான் என்று.

“சரி நான் கிளம்பறேன் மாமா” என சமையல்கட்டில் இருந்த சாமிக்கு குரல் கொடுத்தாள் கேசி.

“இங்க இன்னும் எவ்வளவு நாள் இருப்பே நாகேசு?” என கேட்டார் சாமி.

“இன்னும் கொஞ்ச மாசத்துக்கு இங்கதான் மாமா. நிறைய ஆஃபர்ஸ் வருது ரிவியூ போட”

“எங்க தங்கி இருக்க கேசி?” கேட்டாள் அபி.

“இப்போதைக்கு ஹோட்டல்ல தான். லேடிஸ் ஹாஸ்டல் பார்த்துட்டு இருக்கேன் அபி”

“எதுக்கு அங்கலாம்? நம்ம வீடு இவ்வளவு பெருசா இருக்கறப்போ, இங்கயே தங்கிடு” என சொன்னாள் அபி.

“சதாண்ணா சொல்லாம எப்படி அபி?” என விழித்தாள் கேசி.

“அவரு என்ன சொல்லுறது? அதான் நான் சொல்லுறேன்ல! என்ன வெட்டு சார், ஓகேவா?” என சதாவை நேர்ப்பார்வைப் பார்த்து கேட்டாள் அபி.

முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டவன்,

“இந்த வீட்டுல உனக்கு எல்லா உரிமையும் இருக்கு அபி. தாராளமா தங்க சொல்லு” என்றான்.

நம் வீடு என அபி சொன்னதிலேயே வானத்தில் பறந்துக் கொண்டிருந்தவன், அவளின் உரிமையான பேச்சில் மனம் குளிர்ந்துப் போனான்.

குணா தாழ்ந்த குரலில்,

“தஞ்சாவூர்க்கு போயிருக்கியா சதா?” என கேட்டான்.

“நான் போனது இல்லைடா. தேவைப்பட்டா மட்டும்தான் இந்த வீட்ட விட்டே வெளிய போறேன். உனக்கு தெரியாதா!”

“இல்லை, அந்த ஊருல தலையாட்டி பொம்மை ரொம்ப பேமஸாம். ஆனா பாரு, அந்த பொம்மையே பார்க்காமலே, அது மாதிரியே நீ நல்லா தலையாட்டறியே! சிம்ப்ளி கிரேட் மச்சான்” என சதாவை கழுவி ஊற்றினான் குணா.

“அபிக்காக எதையும் குடுப்பான்டா இந்த சதா!”

“யப்பா இந்த கொசு தொல்லை தாங்கலடா சாமி! ஹிட் அடிச்சு கொல்லுங்கடா” என்றவன் பைக்கை எடுத்து செல்ல மெக்கானிக்குக்கு சொல்லிவிட்டு வேலை இடத்துக்கு கிளம்பினான்.

அவன் கிளம்பிய சிறிது நேரத்தில் கேசியும் தனது உடமைகளை எடுத்து வர கிளம்பி விட, சதாவும் அபியும் தனித்து விடப்பட்டார்கள்.

“அபி!”

“சொல்லுங்க வெட்டு சார்”

“உன் கிட்ட கொஞ்சம் பேசனும்” பார்வையைத் தன் கைகடிகாரத்தில் பதித்துக் கொண்டே பேசினான் சதா.

“அதுக்கு முன்ன நான் ஒன்னு கேக்கலாமா வெட்டு சார்?”

“கேளு அபி”

அவள் கேட்ட விஷயத்தில் முகம் இறுக, கோபத்தில் உடல் விறைக்க அவள் கண்களை நேராகப் பார்த்து முறைத்தான் சதா.
 

Thani

Active member
Nov 27, 2025
144
-39
43
அபி என்ன கேட்டாய் ,வில்லங்கமா இல்லை தானே ,ஹீரோ சாரை கோவப்படுத்தாதே.
 
  • Love
Reactions: VanishaAdmin