அத்தியாயம் 14
என்னை பிடிச்சிருக்குன்னா பிடிச்சிருக்குன்னு சொல்லு.
இல்லைன்னா இல்லைன்னு சொல்லு. நீ என் மனசுல பெரிய சுமையா இருக்க. உன்னை முதன் முதலா பாத்ததிலிருந்து என் மனசு குத்திக்கிட்டே இருக்கு. என்னால தாங்க முடியல.
(படம் – காதலுக்கு மரியாதை)
குழந்தை போல் பார்த்துக் கொள்ளச் சொன்னவள், குழந்தையாகவே மாறி வேந்தனின் இடுப்பின் மேல் தன் இரு கால்களையும் போட்டபடி தூங்கிக் கொண்டிருந்தாள். மேசை விளக்கின் ஒளியில் அவள் நிம்மதியாகத் தூங்குவதை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் வேந்தன்.
‘இவளா அந்த அடாவடி தேவி? பச்சைப் புள்ள மாதிரி, இல்ல இல்ல வெள்ளைப் புள்ள மாதிரி தூங்குறாளே. போட்டுருக்கற பென் டேன் கார்ட்டுன் பைஜாமாவ பாரு! அது கூட ஆம்புள பசங்க போடுறதுதான் போட்டுருக்கா. ஆனாலும் கியூட்டா இருக்கா. இவ்வளவு தடால் பார்ட்டியா இருக்காளே, போட்டத் திட்டம் வெற்றி அடையுமா?’
மனதில் அன்று லட்டுவும் அவனும் அக்கு வேர் ஆணி வேராக அந்த அக்ரிமெண்டை அலசியது வந்து போனது இவனுக்கு.
“இந்தாண்ணா காபி. அம்மா போடற அளவு இருக்காது. ஆனாலும் குடிக்கலாம்” எனக் கப்பை நீட்டினாள் லாவண்யா.
வாங்கிக் குடித்தவன்,
“அம்மா கை மணம் உனக்கு அப்படியே இருக்கு குட்டிமா. நீயும் குடி. அனு தூங்கிட்டாளா?” எனக் கேட்டான்.
“அவ உன் கல்யாணம் நடக்கப் போகுதுன்ற சந்தோஷத்துல அம்மாவைக் கூட தேடல இன்னிக்கு. தூங்கிட்டா! எப்பப் பாரு சின்னப் புள்ளை மாதிரி அம்மா கைய எடுத்து அவ கன்னத்துல வச்சிக்கிட்டாத்தான் மேடத்துக்குத் தூக்கம் வரும். இன்னிக்கு அவங்க சேலைய கட்டி புடிச்சுக்கிட்டு படுத்துட்டா”
“மனசால அவ இன்னும் குழந்தைதான்டா. அம்மாவ ஒட்டிக்கிட்டே வாழ்ந்துட்டா. எனக்கும் பணம் இருந்தா அவளுக்கு மட்டும் வீட்டோட மாப்பிள்ளைப் பார்ப்பேன்”
“அண்ணா! நீ வீட்டோட மாப்பிள்ளையா போற கதைய முதல்ல பார்ப்போம். அப்புறம் அவளுக்கு என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம்”
மீண்டும் அந்தப் பேப்பரை நன்றாகப் படித்தாள். பேனாவினால் சில வரிகளை ஹைலைட் செய்தாள். காபியைக் குடித்துக் கொண்டே வீட்டு ஹாலை ஒரு முறை சுற்றி வந்தாள். பேனாவால் தலையைத் தட்டிக் கொண்டாள். பார்த்த வேந்தனுக்கே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.
“லட்டும்மா! நீ போடுற சீனலெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கும்மா. அண்ணனுக்கு அள்ளு விடுது. நல்லப் பிள்ளையா உக்காந்து யோசிம்மா” எனக் கெஞ்சாத குறையாகச் சொன்னான்.
அவன் கேட்டதற்காக அவன் அருகில் அமர்ந்தவள்,
“அண்ணா! அவங்க போட்ட கண்டிஷன்ல அவங்களுக்கே ஆப்பு வர மாதிரி ஒரு கண்டிஷனும் இருக்கு. அதை வச்சே உன்னை அவங்க கிட்ட இருந்து பிரிக்கிறேன். நீ கவலைப் படாம கல்யாணம் பண்ணிக்க. வெள்ளெலி வாலை புடுங்கி, நான் எறியறேன். இதுல மெய்ன்னா அஞ்சு கண்டிஷன் போட்டுருக்காங்கண்ணா. நான் வரிசையா சொல்லுறேன்.
‘அதெப்படி பிள்ளைய அப்படியே விட்டுக் குடுக்கறது’
அம்மாவுக்காக சைன் பண்ணி விட்டாலும் மனம் முரண்டியது அவனுக்கு.
“முதல்ல பாதகமா உள்ளத சொல்லு. கசப்பு மருந்த முதல்ல சாப்பிட்டறலாம்”
“கண்டிஷன் ஒன்னும் ரெண்டும் உன்னை வச்சி செஞ்சிரும். அவங்க சொல்லுற வேலைய செய்யனும்னா என்ன? ரொம்ப ஜெனரலான கட்டளை இது. அவங்க என்ன சொன்னாலும் நீ செய்யனும். கிட்டத்தட்ட புருசன்ற பேருல அடிமை நீ. ரெண்டாவது கண்டிஷன் அத விட மோசம். நம்ம குடும்ப விஷயம்னா என்ன? அதுவும் ஜெனரலா இருக்கு. நம்ம குடும்பத்த அவங்க என்ன வேணும்னாலும் செய்யலாம். என் கல்யாண விஷயத்துல தலையிடலாம், அனு கல்யாண விஷயத்துல தலையிடலாம். உன்னால ஒன்னும் செய்ய முடியாது”
“நான் காலம் பூராவும் அடிமையா இருப்பேன் லட்டு. ஆனா அம்மாவுக்காக உங்க ரெண்டு பேர் வாழ்க்கையையும் அடகு வச்சிட்டனோன்னு பயமா இருக்கு” என்றவனின் குரலில் சொல்லொண்ணா துயரம் இருந்தது.
“அண்ணா! அம்மாவுக்காக நாங்களும் எதுவும் தாங்கிக்குவோம். நீ கவலைப்படாதே. இப்ப நல்ல விஷயத்தைப் பாப்போம்”
“சொல்லுடா”
“ஐந்தாவது கண்டிஷன்ல, இந்தக் கல்யாணத்துல பிரச்சனை வந்தான்னு ஒரு செம மேட்டர் இருக்கு. அவங்களுக்குப் பிடிக்காத மாதிரி நீ நடந்துகிட்டா, சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்னு உன்னைத் தூக்கி கடாசிருவாங்க. எப்படி ஐடியா!”
“ஐடியா எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா என் இமேஜை நீ ரொம்ப டேமேஜ் பண்ணுறீயோன்னு ஃபீலிங்கா இருக்கு”
“சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். நீ ஃபீல் ஆவாதண்ணா. அவங்களுக்கு உன்னை பிடிக்காம டைவர்ஸ் பன்ணிட்டாங்கனா, மத்த கண்டிஷன் எல்லாம் இல்லாம போயிடும். சோ நாம எல்லாரும் சேஃப் ஆயிடலாம். புரியுதா?”
“நல்லா புரியுது லட்டு. நான் அவங்க கூட இருந்து அவங்களுக்கு என்னென்ன பிடிக்காதுன்னு கண்டுபிடிச்சி அதயே செய்றேன். கண்டிப்பா இது வொர்க் அவுட் ஆகும். அந்தப் பெண்ணாதிக்க பேயிடம் இருந்து கண்டிப்பா நம்ம குடும்பத்தக் காப்பாத்துறேன். இது நம்ம குல தெய்வம் குழந்தையம்மன் மேல” சத்தியம் எனச் சொல்ல வந்தவன் வாயை மூடினாள் லட்டு.
“குலசாமி மேல சத்தியம் போடக் கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்காங்கதானே?”
“சரி விடு. சத்தியம் வைக்காட்டி என்ன, என் மனசுக்குள்ள சத்தியப் பிரமாணம் எடுத்துக்கிறேன்” என வீர வசனம் பேசிவிட்டு இப்பொழுது இரவின் குளு குளுத் தனிமையில், கிறக்கமாக கேட்டாளென்று அவள் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிய தன் முட்டாள்த்தனத்தை எண்ணி நொந்து கொண்டான் வேந்தன்.
‘குழந்தையம்மன் மேல சத்தியம் வைக்க போன நான், அவளையே குழந்தையா பார்த்துக்கறேன்னு ப்ராமிஸ் பண்ணிட்டனே. லட்டுக்குத் தெரிஞ்சா என்னை மங்குனி அமைச்சர் லெவலுக்குப் பார்ப்பாளே! இந்த டெரர் பீஸ் கிட்ட குப்பைக் கொட்ட நம்மாள முடியாது. சீக்கிரமா ஏதாவது பண்ணி அவளா பிரியற மாதிரி செஞ்சுறனும். அது வரைக்கும் நம்ம பிரம்மச்சரியத்தைக் கட்டிக் காக்கனும். பிரிய போறோம்னு முடிவெடுத்துட்டு அவ கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கக் கூடாது. அது மாதிரி பாவம் வேற எதுவும் இல்லை’ மனதில் சங்கல்பம் செய்து கொண்டான்.
மெல்ல அவளது கால்களைத் தன் இடுப்பில் இருந்து நகர்த்தி கட்டிலில் போட்டான். அவளுக்கு முதுகு காட்டி அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான். தூக்கத்திலேயே அவள் நகர்ந்து வந்து கைகளை இவன் இடுப்பில் போட்டுப் பின்னாலிருந்து குளிருக்கு இதமாக அணைத்துக் கொண்டாள்.
‘இது என்னடா எனக்கு வந்த சோதனை. இப்பத்தான் பெரிய சங்கல்பம் எடுத்தேன். அடுத்த நிமிஷமே அதை உடைச்சி எறியற மாதிரி நடக்குதே’
அவன் பேச்சை கேட்காமல் மனம் வேறு சிச்சுவேஷன் பாட்டை எடுத்துவிட்டது.
‘கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்’
‘ஐய்யய்யோ! இம்சை அரசி என் தவத்தை கலைக்கப் பார்க்கிறாளே! அப்பேற்பட்ட விசுவாமித்திரரே மேனகைப் போட்ட டான்சுக்கு டவுன் டவுன் ஆயிட்டாரு. விசு படத்துல வர ஹீரோ மாதிரி இருக்கற நான் எம்மாத்திரம்’
அவளிடம் இருந்து மெல்ல விலகியவன், போல்ஸ்டர் தலையணையை அவள் கைக்குக் கொடுத்து விட்டு, மார்பிள் தரையில் போர்வையை விரித்துக் கொண்டுப் படுத்து விட்டான். மனதை ஒரு நிலைப்படுத்த மெல்லிய குரலில் பாடினான் வேந்தன்.
“செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா”
அந்த மெல்லிய பாடல் சத்தத்திற்கு விழித்துக் கொண்டாள் தேவி. கீழே கிடக்கும் வேந்தனைப் பார்த்ததும் புன்னகை அரும்பியது அவளுக்கு.
‘மை ஸ்வீட் லிட்டில் ராஸ்கல்’ மனதிலேயே அவனை கொஞ்சியவாறு மீண்டும் தூங்கிப் போனாள்.
இரண்டு நாட்கள் சாப்பிடுவதும், தூங்குவதும், அவள் பேசுவதைக் கேட்பதும் எனப் பொழுது போனது வேந்தனுக்கு. ஓரளவு அவளது டைம் டேபிள் அவனுக்குத் தெரிந்தது. அவள் ஓயாமல் பேசியதில் அவளது பிடிப்பு, வெறுப்பு, பயம், ஆசை எனக் கொஞ்சம் அவளைப் பற்றி அறிந்திருந்தான். பாசமாகப் பேசினால் அவனுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வாள் என்பதை நன்றாக புரிந்துக் கொண்டான் வேந்தன். அவள் அடக்கு முறைக்கு அடங்காதவள் அன்புக்கு மட்டுமே தலை வணங்குவாள் என்பது அவனுக்குச் சாதகமாக இருந்தது.
தெரிந்த விஷயங்களைக் கொண்டு எப்படி அவளை வெறுப்பேற்றி பிரிவது எனப் பகலெல்லாம் திட்டமாகத் தீட்டினான். ஆனால் ராத்திரியில் அவன் மேல் அவள் காலைத் தூக்கிக் போட்டுத் தூங்கியதும் போட்டத் திட்டம் எல்லாம் அப்படியே மறந்து விடும் அவனுக்கு.
இந்த இரண்டு நாட்களில் வேந்தன் பக்தி பாடல்களின் களஞ்சியமாக மாறி இருந்தான். ஆழ்ந்த தூக்கத்தில் எழுப்பி ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ பாடலை யார் பாடியது என்று கேட்டால், கரேக்டாக சொல்லுமளவுக்குத் தேறியிருந்தான்.
மூன்றாம் நாளில் தேவி, வேந்தன் குடும்பத்திற்கு வாங்கியிருந்த வீட்டிற்குக் கிரகப்பிரவேசம் செய்ய ஏற்பாடு ஆகியிருந்தது.

- மேடம் சொல்லுற வேலைய எல்லாம் நீ தட்டாம செய்யனும்.
- நம்ம குடும்ப விஷயங்களில அவங்க தலையிடலாம். ஆனா அவங்க குடும்ப விஷயத்துல நீ தலையிட முடியாது.
- நீ அவங்க வீட்டோட மாப்பிள்ளையா போகனும். வீக்டேய்ஸ் பகல் வேளையில நீ எப்ப வேணும்னாலும் எங்களப் பார்க்க வரலாம். ஆனா கரெக்டா மாலை அஞ்சு மணிக்கு அவங்க வீட்டுல இருக்கனும்.
- நீ இப்ப செய்யற வேலையையே தொடர்ந்து செய்யலாம். இப்ப குடுக்கற சம்பளத்த விட பத்து மடங்கு உன் சேலரிய அதிகரிச்சிருக்காங்க. கம்பேனி ஷேர்சுலயும் இருபது பர்சண்ட் குடுத்துருக்காங்க.
- இந்தக் கல்யாணத்துல பிரச்சனை வந்தா அவங்க மட்டும்தான் உன்னை டைவர்ஸ் பண்ண முடியும். உனக்கு அந்த உரிமை இல்லை. அதோட நீங்க சேர்ந்து வாழும்போது பிள்ளை இருந்ததுனா, அந்தப் பிள்ளையோட பொறுப்பெல்லாம் அவங்களோடதுதான். உனக்குப் பிள்ளை விஷயத்துலயோ இல்லை அவங்களோட சொத்து விஷயத்துலயோ உரிமை கோர எந்த ரைட்சும் இல்ல. ஆனா இந்த வேலைய நீ எப்பொழுதும் போல தொடரலாம்.
‘அதெப்படி பிள்ளைய அப்படியே விட்டுக் குடுக்கறது’
அம்மாவுக்காக சைன் பண்ணி விட்டாலும் மனம் முரண்டியது அவனுக்கு.
“முதல்ல பாதகமா உள்ளத சொல்லு. கசப்பு மருந்த முதல்ல சாப்பிட்டறலாம்”
“கண்டிஷன் ஒன்னும் ரெண்டும் உன்னை வச்சி செஞ்சிரும். அவங்க சொல்லுற வேலைய செய்யனும்னா என்ன? ரொம்ப ஜெனரலான கட்டளை இது. அவங்க என்ன சொன்னாலும் நீ செய்யனும். கிட்டத்தட்ட புருசன்ற பேருல அடிமை நீ. ரெண்டாவது கண்டிஷன் அத விட மோசம். நம்ம குடும்ப விஷயம்னா என்ன? அதுவும் ஜெனரலா இருக்கு. நம்ம குடும்பத்த அவங்க என்ன வேணும்னாலும் செய்யலாம். என் கல்யாண விஷயத்துல தலையிடலாம், அனு கல்யாண விஷயத்துல தலையிடலாம். உன்னால ஒன்னும் செய்ய முடியாது”
“நான் காலம் பூராவும் அடிமையா இருப்பேன் லட்டு. ஆனா அம்மாவுக்காக உங்க ரெண்டு பேர் வாழ்க்கையையும் அடகு வச்சிட்டனோன்னு பயமா இருக்கு” என்றவனின் குரலில் சொல்லொண்ணா துயரம் இருந்தது.
“அண்ணா! அம்மாவுக்காக நாங்களும் எதுவும் தாங்கிக்குவோம். நீ கவலைப்படாதே. இப்ப நல்ல விஷயத்தைப் பாப்போம்”
“சொல்லுடா”
“ஐந்தாவது கண்டிஷன்ல, இந்தக் கல்யாணத்துல பிரச்சனை வந்தான்னு ஒரு செம மேட்டர் இருக்கு. அவங்களுக்குப் பிடிக்காத மாதிரி நீ நடந்துகிட்டா, சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்னு உன்னைத் தூக்கி கடாசிருவாங்க. எப்படி ஐடியா!”
“ஐடியா எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா என் இமேஜை நீ ரொம்ப டேமேஜ் பண்ணுறீயோன்னு ஃபீலிங்கா இருக்கு”
“சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். நீ ஃபீல் ஆவாதண்ணா. அவங்களுக்கு உன்னை பிடிக்காம டைவர்ஸ் பன்ணிட்டாங்கனா, மத்த கண்டிஷன் எல்லாம் இல்லாம போயிடும். சோ நாம எல்லாரும் சேஃப் ஆயிடலாம். புரியுதா?”
“நல்லா புரியுது லட்டு. நான் அவங்க கூட இருந்து அவங்களுக்கு என்னென்ன பிடிக்காதுன்னு கண்டுபிடிச்சி அதயே செய்றேன். கண்டிப்பா இது வொர்க் அவுட் ஆகும். அந்தப் பெண்ணாதிக்க பேயிடம் இருந்து கண்டிப்பா நம்ம குடும்பத்தக் காப்பாத்துறேன். இது நம்ம குல தெய்வம் குழந்தையம்மன் மேல” சத்தியம் எனச் சொல்ல வந்தவன் வாயை மூடினாள் லட்டு.
“குலசாமி மேல சத்தியம் போடக் கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்காங்கதானே?”
“சரி விடு. சத்தியம் வைக்காட்டி என்ன, என் மனசுக்குள்ள சத்தியப் பிரமாணம் எடுத்துக்கிறேன்” என வீர வசனம் பேசிவிட்டு இப்பொழுது இரவின் குளு குளுத் தனிமையில், கிறக்கமாக கேட்டாளென்று அவள் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிய தன் முட்டாள்த்தனத்தை எண்ணி நொந்து கொண்டான் வேந்தன்.
‘குழந்தையம்மன் மேல சத்தியம் வைக்க போன நான், அவளையே குழந்தையா பார்த்துக்கறேன்னு ப்ராமிஸ் பண்ணிட்டனே. லட்டுக்குத் தெரிஞ்சா என்னை மங்குனி அமைச்சர் லெவலுக்குப் பார்ப்பாளே! இந்த டெரர் பீஸ் கிட்ட குப்பைக் கொட்ட நம்மாள முடியாது. சீக்கிரமா ஏதாவது பண்ணி அவளா பிரியற மாதிரி செஞ்சுறனும். அது வரைக்கும் நம்ம பிரம்மச்சரியத்தைக் கட்டிக் காக்கனும். பிரிய போறோம்னு முடிவெடுத்துட்டு அவ கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கக் கூடாது. அது மாதிரி பாவம் வேற எதுவும் இல்லை’ மனதில் சங்கல்பம் செய்து கொண்டான்.
மெல்ல அவளது கால்களைத் தன் இடுப்பில் இருந்து நகர்த்தி கட்டிலில் போட்டான். அவளுக்கு முதுகு காட்டி அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான். தூக்கத்திலேயே அவள் நகர்ந்து வந்து கைகளை இவன் இடுப்பில் போட்டுப் பின்னாலிருந்து குளிருக்கு இதமாக அணைத்துக் கொண்டாள்.
‘இது என்னடா எனக்கு வந்த சோதனை. இப்பத்தான் பெரிய சங்கல்பம் எடுத்தேன். அடுத்த நிமிஷமே அதை உடைச்சி எறியற மாதிரி நடக்குதே’
அவன் பேச்சை கேட்காமல் மனம் வேறு சிச்சுவேஷன் பாட்டை எடுத்துவிட்டது.
‘கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்’
‘ஐய்யய்யோ! இம்சை அரசி என் தவத்தை கலைக்கப் பார்க்கிறாளே! அப்பேற்பட்ட விசுவாமித்திரரே மேனகைப் போட்ட டான்சுக்கு டவுன் டவுன் ஆயிட்டாரு. விசு படத்துல வர ஹீரோ மாதிரி இருக்கற நான் எம்மாத்திரம்’
அவளிடம் இருந்து மெல்ல விலகியவன், போல்ஸ்டர் தலையணையை அவள் கைக்குக் கொடுத்து விட்டு, மார்பிள் தரையில் போர்வையை விரித்துக் கொண்டுப் படுத்து விட்டான். மனதை ஒரு நிலைப்படுத்த மெல்லிய குரலில் பாடினான் வேந்தன்.
“செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா”
அந்த மெல்லிய பாடல் சத்தத்திற்கு விழித்துக் கொண்டாள் தேவி. கீழே கிடக்கும் வேந்தனைப் பார்த்ததும் புன்னகை அரும்பியது அவளுக்கு.
‘மை ஸ்வீட் லிட்டில் ராஸ்கல்’ மனதிலேயே அவனை கொஞ்சியவாறு மீண்டும் தூங்கிப் போனாள்.
இரண்டு நாட்கள் சாப்பிடுவதும், தூங்குவதும், அவள் பேசுவதைக் கேட்பதும் எனப் பொழுது போனது வேந்தனுக்கு. ஓரளவு அவளது டைம் டேபிள் அவனுக்குத் தெரிந்தது. அவள் ஓயாமல் பேசியதில் அவளது பிடிப்பு, வெறுப்பு, பயம், ஆசை எனக் கொஞ்சம் அவளைப் பற்றி அறிந்திருந்தான். பாசமாகப் பேசினால் அவனுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வாள் என்பதை நன்றாக புரிந்துக் கொண்டான் வேந்தன். அவள் அடக்கு முறைக்கு அடங்காதவள் அன்புக்கு மட்டுமே தலை வணங்குவாள் என்பது அவனுக்குச் சாதகமாக இருந்தது.
தெரிந்த விஷயங்களைக் கொண்டு எப்படி அவளை வெறுப்பேற்றி பிரிவது எனப் பகலெல்லாம் திட்டமாகத் தீட்டினான். ஆனால் ராத்திரியில் அவன் மேல் அவள் காலைத் தூக்கிக் போட்டுத் தூங்கியதும் போட்டத் திட்டம் எல்லாம் அப்படியே மறந்து விடும் அவனுக்கு.
இந்த இரண்டு நாட்களில் வேந்தன் பக்தி பாடல்களின் களஞ்சியமாக மாறி இருந்தான். ஆழ்ந்த தூக்கத்தில் எழுப்பி ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ பாடலை யார் பாடியது என்று கேட்டால், கரேக்டாக சொல்லுமளவுக்குத் தேறியிருந்தான்.
மூன்றாம் நாளில் தேவி, வேந்தன் குடும்பத்திற்கு வாங்கியிருந்த வீட்டிற்குக் கிரகப்பிரவேசம் செய்ய ஏற்பாடு ஆகியிருந்தது.
Author: VanishaAdmin
Article Title: Uyir Vangum Rojave--EPI 14
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.