அத்தியாயம் 15
“லவ் பண்ணவ நீ வேணாம், என்னை மறந்துருன்னு சொல்றத பார்த்துக் கிட்டு நிக்கிறான் பாரு, அந்த நிமிஷம் மனசுல ஏற்படற வலி இருக்கே அது சாவை விட மோசம்.”
(படம் – உன்னாலே உன்னாலே)
அறைந்ததோடு மட்டுமல்லாது, சரமாரியாக வயிற்றிலும் குத்து விழுந்தது அவனுக்கு. அவள் கைப்பிடித்துத் தடுத்தவன்,
“ஏன்டி! பாத்திரம் எடுக்கனும்னு ரூமுக்குள்ள கூட்டி வந்து இப்படி கும்மாங்குத்து குத்துற? வலிக்குது விடு லாவண்யா” எனக் கத்தினான்.
“ஷ்ஷ்! சத்தம் போடாதே! நீ அடி வாங்குறது ஊருக்கே தெரியனுமா?”
“நீ அடிச்சா என் உடம்பு தாங்கும், உன் உடம்பு தாங்குமா? அபிராமீ!” என வசனம் பேசி அதற்கும் மொத்து வாங்கினான் இவன்.
எதிர்பாராத வேளையில் அவள் இரு கைகளையும் மடக்கிப் பிடித்தவன்,
“சொல்லு லட்டு! மாமா மேல, அடிக்கற அளவுக்குக் என்ன கோபம்?” எனக் கேட்டான்.
கைகளை விடுவித்துக் கொள்ள போராடினாள் லாவண்யா. சாதரணமாகப் பிடித்தது போல இருந்தாலும், இரும்புப் பிடியாக இருந்தது. அவனை முறைத்தவள்,
“ஏன்னு உனக்குத் தெரியாது?” எனக் கேட்டாள்.
தலையை இடம் வலமாக ஆட்டினான் இவன்.
“காரிலிருந்து இறங்கறப்ப என்ன செஞ்ச?”
“என்ன செஞ்சேன்? உனக்குக் கதவைத் திறந்து விட்டேன்”
“அதுக்கு அப்புறம்?”
“நீ தடுமாறி விழப் பார்த்தப்ப தாங்கிப் பிடிச்சேன். அது தப்பா? நான் பிடிக்காட்டி கீழ விழுந்து மூக்கை உடைச்சிட்டு இருப்ப. உதவி செஞ்சவனுக்கு ஒரு நன்றி சொல்லலைனாலும் போகுது! இப்படி மொத்தி எடுக்காம இருக்கலாம்”
“நான் விழப் பார்த்தனா? இல்லை என் காலை நீ தட்டி விட்டியா?”
‘ஐய்யய்யோ! கண்டுப் பிடிச்சுட்டாளா? கையில தட்டெல்லாம் வச்சிருந்தாளே கவனிச்சிருக்க மாட்டான்னு தப்புக் கணக்குப் போட்டுட்டனே. சமாளிப்போம்’
“இல்லடா செல்லக் குட்டி. நீயாதான் விழப் பார்த்த. இது எங்கப்பத்தா மேல சத்தியம்”
“செத்துப் போன கிழவி மேல சத்தியம் பண்ணுறியா? இதுலயே தெரியலை உன் வண்டவாளம்? முதல்ல சந்தேகம் வரல. உன் கை ரெண்டு நிமிஷத்துக்கும் மேல என் இடுப்புல இருந்துச்சு பார்த்தியா? அப்பத்தான் கண்டுபிடிச்சேன். வேணும்னே தடுக்கி விட்டு என் இடுப்பைப் பிடிச்சு பார்த்திருக்க. உன் கிரிமினல் வேலைய என் கிட்ட காட்டாத கார்த்திக். பின்னிருவேன்”
“ஆமா! இது குஷி ஜோதிகா இடுப்பு! நாங்க கிரிமினலா பிளான் போட்டுப் பிடிச்சிட்டோம். போடி! இதெல்லாம் இடுப்பா? எரிஞ்சு போன அடுப்பு” என வாயை விட்டான் கார்த்திக்.
பட்டென அவன் கையை உதறியவள், அவனுக்கு முதுகு காட்டி திரும்பி நின்று கொண்டாள்.
‘என்னடா ஆச்சு? சண்டை போடாம திரும்பி நிக்கறா!’
“லட்டு! லட்டும்மா! என்னாச்சு?”
அவள் முன்னே போய் நின்றான். கண்கள் கலங்க நின்றிருந்தாள் லாவண்யா. சர்வமும் பதறி விட்டது கார்த்திக்குக்கு.
இரு கைகளாலும் அவள் கன்னங்களைப் பற்றி,
“என்னாச்சுடா? ஏன் கண்ணு கலங்குது? நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். இங்க பாரு அழாதே லட்டும்மா” எனச் சமாதானப்படுத்தினான்.
அவளது கண்களை மென்மையாகத் துடைத்தவன், அவள் தடுக்க முயன்றும் முகத்தைத் தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். மெல்ல அவள் முதுகைத் தடவிக் கொடுத்தவன்,
“நீ எப்பொழுதும் சிரிச்சுக்கிட்டே இருக்கனும் லட்டு. இப்படி அழுதா என்னால தாங்க முடியாது. முதன் முதலா நான் பார்க்கும் போது, உங்கண்ணன் முன்னுக்கு அழுத பார்த்தியா? அப்பவே இப்படிக் கட்டிப் பிடிச்சு ஆறுதல் சொல்லனும்னு துடிச்சேன் தெரியுமா. என் முன்னாடி இனிமே எப்பவும் நீ அழக் கூடாது. சரியா?” எனச் சொல்லி இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
அவளும் பாந்தமாக அவனிடம் ஒட்டிக் கொண்டாள்.
“உன் முன்னால அழாம, பின்னால அழலாமா?” எனக் குழைந்து வந்தது குரல்.
இவனுக்குக் கொண்டாட்டம் தாங்கவில்லை.
‘பட்சி சொக்கிருச்சே! இப்பவே ஏதாவதொரு பிட்ட போட்டு சீக்கிரமா நம்மள கட்டிக்கிற மாதிரி பண்ணிடனும். ஐடியா! பாடுனாத்தானே இவ குடும்பத்துல உள்ளவங்களுக்குப் பிடிக்கும். நாமளும் ஒரு பாட்ட எடுத்து விடுவோம்’
“அடியே அழகே
என் அழகே அடியே!”
“நீ ஜோரா பாடுற கார்த்திக். ஐ லைக் இட்” என்றவளின் குரல் கொஞ்சியது.
“அப்படியே மாமாவ பார்த்து ஐ லவ் யூன்னும் சொல்லுமா தங்கம்!”
“ஐ” என மட்டும்தான் சொன்னாள்.
அதற்குள் இந்துவின் குரல் வெளியிலிருந்து கேட்டது.
“லட்டு! அத்தையும் மாமாவும் வந்திருக்காங்க. எங்க இருக்க?”
அத்தை என்ற சொல்லில் அவள் உடல் விறைப்பதைக் கட்டிப் பிடித்திருந்த கார்த்திக்கால் துல்லியமாக உணர முடிந்தது.
சட்டென விலகியவள், மீண்டும் பழைய லாவண்யாவாய் மாறி இருந்தாள்.
“ஏன்டா கட்டிப் பிடிச்ச? கொஞ்சம் ஏமாந்துற கூடாதே! உடனே உன் குரங்கு வித்தைய காட்டிருவியே” என எரிந்து விழுந்தவள் விடு விடுவென வெளியே நடந்தாள்.
ரூமிலிருந்து வெளியாகும் முன் அவனைத் திரும்பிப் பார்த்தவள்,
“இந்த எரிஞ்சி போன அடுப்பு உனக்கு வேணாம். நீ வேற நல்ல அடுப்பா பார்த்து சோறு பொங்கிக்க” என முகத்தில் அடித்த மாதிரி சொல்லி விட்டுச் சென்றாள்.
‘இவ்வளவு நேரம் சுகமாத்தானே என் அணைப்புல இருந்தா. திடீர்னு என்ன ஆச்சு? நம்பளையும் சிச்சுவேஷன் சாங் பாட வைக்கிறாளே! ஊரு மக்கள் ஏத்துக்குவாங்களா? எதுக்கும் பாடித்தான் பார்ப்போமே!
‘பெண் மனசு ஆழமென்று
ஆம்பளைக்குத் தெரியும்
அது பொம்பளைக்கும் தெரியும்’ எனப் பாடியபடியே வெளியே வந்தான்.
“என்னப்பா கார்த்திக்! வீட்டுல இம்புட்டு வேலை கிடக்குது. நீ ஹாயா பாடிக்கிட்டு திரியறே” என அவன் முன்னே வந்து நின்றார் இந்து.
‘உங்க மக என்னைப் பேயா, பாட உட்டுட்டா. நீங்க என்னன்னா ஹாயா பாடுறேங்கறிங்க. ஹ்ம்ம். எல்லாம் என் யோகம்!’
“சொல்லுங்கமா. என்ன செய்யனும்?”
“இந்தக் கோமியத்தை வீடு முழுக்கத் தெளிச்சிட்டு வா” என சொம்பை அவனிடம் நீட்டினார்.
‘உங்க மருமகனாக ட்ரை பண்ணதுக்கு, இந்தக் கோமியம்தான் மிச்சம்’ என மனதிலே முனகிக் கொண்டே வேலையைக் கவனிக்கச் சென்றான்.

Author: VanishaAdmin
Article Title: Uyir Vangum Rojave--EPI 15
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.