Uyir Vangum Rojave--EPI 15

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
925
-1,931
93
அத்தியாயம் 15

“லவ் பண்ணவ நீ வேணாம், என்னை மறந்துருன்னு சொல்றத பார்த்துக் கிட்டு நிக்கிறான் பாரு, அந்த நிமிஷம் மனசுல ஏற்படற வலி இருக்கே அது சாவை விட மோசம்.”

(படம் – உன்னாலே உன்னாலே)




அறைந்ததோடு மட்டுமல்லாது, சரமாரியாக வயிற்றிலும் குத்து விழுந்தது அவனுக்கு. அவள் கைப்பிடித்துத் தடுத்தவன்,

“ஏன்டி! பாத்திரம் எடுக்கனும்னு ரூமுக்குள்ள கூட்டி வந்து இப்படி கும்மாங்குத்து குத்துற? வலிக்குது விடு லாவண்யா” எனக் கத்தினான்.

“ஷ்ஷ்! சத்தம் போடாதே! நீ அடி வாங்குறது ஊருக்கே தெரியனுமா?”

“நீ அடிச்சா என் உடம்பு தாங்கும், உன் உடம்பு தாங்குமா? அபிராமீ!” என வசனம் பேசி அதற்கும் மொத்து வாங்கினான் இவன்.

எதிர்பாராத வேளையில் அவள் இரு கைகளையும் மடக்கிப் பிடித்தவன்,

“சொல்லு லட்டு! மாமா மேல, அடிக்கற அளவுக்குக் என்ன கோபம்?” எனக் கேட்டான்.

கைகளை விடுவித்துக் கொள்ள போராடினாள் லாவண்யா. சாதரணமாகப் பிடித்தது போல இருந்தாலும், இரும்புப் பிடியாக இருந்தது. அவனை முறைத்தவள்,

“ஏன்னு உனக்குத் தெரியாது?” எனக் கேட்டாள்.

தலையை இடம் வலமாக ஆட்டினான் இவன்.

“காரிலிருந்து இறங்கறப்ப என்ன செஞ்ச?”

“என்ன செஞ்சேன்? உனக்குக் கதவைத் திறந்து விட்டேன்”

“அதுக்கு அப்புறம்?”

“நீ தடுமாறி விழப் பார்த்தப்ப தாங்கிப் பிடிச்சேன். அது தப்பா? நான் பிடிக்காட்டி கீழ விழுந்து மூக்கை உடைச்சிட்டு இருப்ப. உதவி செஞ்சவனுக்கு ஒரு நன்றி சொல்லலைனாலும் போகுது! இப்படி மொத்தி எடுக்காம இருக்கலாம்”

“நான் விழப் பார்த்தனா? இல்லை என் காலை நீ தட்டி விட்டியா?”

‘ஐய்யய்யோ! கண்டுப் பிடிச்சுட்டாளா? கையில தட்டெல்லாம் வச்சிருந்தாளே கவனிச்சிருக்க மாட்டான்னு தப்புக் கணக்குப் போட்டுட்டனே. சமாளிப்போம்’

“இல்லடா செல்லக் குட்டி. நீயாதான் விழப் பார்த்த. இது எங்கப்பத்தா மேல சத்தியம்”

“செத்துப் போன கிழவி மேல சத்தியம் பண்ணுறியா? இதுலயே தெரியலை உன் வண்டவாளம்? முதல்ல சந்தேகம் வரல. உன் கை ரெண்டு நிமிஷத்துக்கும் மேல என் இடுப்புல இருந்துச்சு பார்த்தியா? அப்பத்தான் கண்டுபிடிச்சேன். வேணும்னே தடுக்கி விட்டு என் இடுப்பைப் பிடிச்சு பார்த்திருக்க. உன் கிரிமினல் வேலைய என் கிட்ட காட்டாத கார்த்திக். பின்னிருவேன்”

“ஆமா! இது குஷி ஜோதிகா இடுப்பு! நாங்க கிரிமினலா பிளான் போட்டுப் பிடிச்சிட்டோம். போடி! இதெல்லாம் இடுப்பா? எரிஞ்சு போன அடுப்பு” என வாயை விட்டான் கார்த்திக்.

பட்டென அவன் கையை உதறியவள், அவனுக்கு முதுகு காட்டி திரும்பி நின்று கொண்டாள்.

‘என்னடா ஆச்சு? சண்டை போடாம திரும்பி நிக்கறா!’

“லட்டு! லட்டும்மா! என்னாச்சு?”

அவள் முன்னே போய் நின்றான். கண்கள் கலங்க நின்றிருந்தாள் லாவண்யா. சர்வமும் பதறி விட்டது கார்த்திக்குக்கு.

இரு கைகளாலும் அவள் கன்னங்களைப் பற்றி,

“என்னாச்சுடா? ஏன் கண்ணு கலங்குது? நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். இங்க பாரு அழாதே லட்டும்மா” எனச் சமாதானப்படுத்தினான்.

அவளது கண்களை மென்மையாகத் துடைத்தவன், அவள் தடுக்க முயன்றும் முகத்தைத் தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். மெல்ல அவள் முதுகைத் தடவிக் கொடுத்தவன்,

“நீ எப்பொழுதும் சிரிச்சுக்கிட்டே இருக்கனும் லட்டு. இப்படி அழுதா என்னால தாங்க முடியாது. முதன் முதலா நான் பார்க்கும் போது, உங்கண்ணன் முன்னுக்கு அழுத பார்த்தியா? அப்பவே இப்படிக் கட்டிப் பிடிச்சு ஆறுதல் சொல்லனும்னு துடிச்சேன் தெரியுமா. என் முன்னாடி இனிமே எப்பவும் நீ அழக் கூடாது. சரியா?” எனச் சொல்லி இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

அவளும் பாந்தமாக அவனிடம் ஒட்டிக் கொண்டாள்.

“உன் முன்னால அழாம, பின்னால அழலாமா?” எனக் குழைந்து வந்தது குரல்.

இவனுக்குக் கொண்டாட்டம் தாங்கவில்லை.

‘பட்சி சொக்கிருச்சே! இப்பவே ஏதாவதொரு பிட்ட போட்டு சீக்கிரமா நம்மள கட்டிக்கிற மாதிரி பண்ணிடனும். ஐடியா! பாடுனாத்தானே இவ குடும்பத்துல உள்ளவங்களுக்குப் பிடிக்கும். நாமளும் ஒரு பாட்ட எடுத்து விடுவோம்’

“அடியே அழகே

என் அழகே அடியே!”

“நீ ஜோரா பாடுற கார்த்திக். ஐ லைக் இட்” என்றவளின் குரல் கொஞ்சியது.

“அப்படியே மாமாவ பார்த்து ஐ லவ் யூன்னும் சொல்லுமா தங்கம்!”

“ஐ” என மட்டும்தான் சொன்னாள்.

அதற்குள் இந்துவின் குரல் வெளியிலிருந்து கேட்டது.

“லட்டு! அத்தையும் மாமாவும் வந்திருக்காங்க. எங்க இருக்க?”

அத்தை என்ற சொல்லில் அவள் உடல் விறைப்பதைக் கட்டிப் பிடித்திருந்த கார்த்திக்கால் துல்லியமாக உணர முடிந்தது.

சட்டென விலகியவள், மீண்டும் பழைய லாவண்யாவாய் மாறி இருந்தாள்.

“ஏன்டா கட்டிப் பிடிச்ச? கொஞ்சம் ஏமாந்துற கூடாதே! உடனே உன் குரங்கு வித்தைய காட்டிருவியே” என எரிந்து விழுந்தவள் விடு விடுவென வெளியே நடந்தாள்.

ரூமிலிருந்து வெளியாகும் முன் அவனைத் திரும்பிப் பார்த்தவள்,

“இந்த எரிஞ்சி போன அடுப்பு உனக்கு வேணாம். நீ வேற நல்ல அடுப்பா பார்த்து சோறு பொங்கிக்க” என முகத்தில் அடித்த மாதிரி சொல்லி விட்டுச் சென்றாள்.

‘இவ்வளவு நேரம் சுகமாத்தானே என் அணைப்புல இருந்தா. திடீர்னு என்ன ஆச்சு? நம்பளையும் சிச்சுவேஷன் சாங் பாட வைக்கிறாளே! ஊரு மக்கள் ஏத்துக்குவாங்களா? எதுக்கும் பாடித்தான் பார்ப்போமே!

‘பெண் மனசு ஆழமென்று
ஆம்பளைக்குத் தெரியும்
அது பொம்பளைக்கும் தெரியும்’ எனப் பாடியபடியே வெளியே வந்தான்.

“என்னப்பா கார்த்திக்! வீட்டுல இம்புட்டு வேலை கிடக்குது. நீ ஹாயா பாடிக்கிட்டு திரியறே” என அவன் முன்னே வந்து நின்றார் இந்து.

‘உங்க மக என்னைப் பேயா, பாட உட்டுட்டா. நீங்க என்னன்னா ஹாயா பாடுறேங்கறிங்க. ஹ்ம்ம். எல்லாம் என் யோகம்!’

“சொல்லுங்கமா. என்ன செய்யனும்?”

“இந்தக் கோமியத்தை வீடு முழுக்கத் தெளிச்சிட்டு வா” என சொம்பை அவனிடம் நீட்டினார்.

‘உங்க மருமகனாக ட்ரை பண்ணதுக்கு, இந்தக் கோமியம்தான் மிச்சம்’ என மனதிலே முனகிக் கொண்டே வேலையைக் கவனிக்கச் சென்றான்.
 

Author: VanishaAdmin
Article Title: Uyir Vangum Rojave--EPI 15
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
925
-1,931
93
ரூமெல்லாம் தெளித்து விட்டு ஹாலுக்கு வந்தவன், அப்பொழுதுதான் வேந்தனின் மாமா குடும்பத்தைக் கவனித்தான். அவர்களின் மகன் ‘மன்’மதனும் அங்கேதான் அமர்ந்திருந்தான். அவனின் உடம்பு மட்டும்தான் அங்கே இருந்தது. பார்வை அனுவையும், லாவண்யாயையும் தொடர்ந்து கொண்டிருந்தது.

‘அடப்பாவி! அக்காவத்தான் சைட் விடறான்னு கேள்விப்பட்டேன். இவன் என்னன்னா நம்ம ஆளையும் கண்ணால விழுங்கறானே’

அப்பொழுதுதான் உள்ளே நுழைந்த தேவியின் மேலும் அவன் கண்கள் இன்னும் சுவாரசியமாக மேய்ந்தன.

‘டேய்! மேடம் உனக்குத் தங்கச்சி முறை வரும்டா. இப்படி மூனு பொண்ணுங்களையும், துச்சாதனன் கசின் பிரதர் மாதிரி பார்க்கிறானே. எலக்ட்ரிக் போஸ்ட்டுக்கு சேலை கட்டி விட்டா கூட, அரை மணி நேரம் அசால்ட்டா பார்ப்பான் போல. இருடா மாப்பிள்ளை உன்னை இப்பவே கவனிக்கறேன்’

அவன் அருகே சென்றவன் கால் தடுக்கி விழுவதை போல் முழு சொம்பையும் மதன் மேல் கவிழ்த்தான். கோமிய அபிஷேகம் நடத்தப்பட்ட மதனோ வெகுண்டெழுந்தான்.

“யூ! யூ! ஃபூல் அப் த இடியட் அப் த ஃபூல் அப் அ ஏஸ்!”

‘அடப்பாவி! இவன் பாரின் ரிட்டனா இல்ல பாண்டிச்சேரி ரிட்டனா? நம்ம வடிவேலு கணக்கா திட்டுறான்’

“மன்னிச்சிருங்க சார்! கால் தடுக்கிருச்சு” என வேக வேகமாய் மன்னிப்பைக் கேட்டான் கார்த்திக்.

“வேலைக்கார பரதேசிங்கள வீட்டுல சுத்த விட்டா இப்படித்தான் நடக்கும்” என அவன் சொன்னதுதான் தாமதம், நான்கு புறமும் கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலித்தன.

“மதன்!” என வேந்தனும், இந்துவும் கோபப்பட,

“மாமா!” என லட்டு கொதிக்க,

“டேய்!” எனத் தேவி குரலை உயர்த்தி இருந்தாள்.

“அவன் எனக்கு மட்டும்தான் வேலைக்காரன். அவன பேச எனக்கு மட்டும்தான் ரைட்ஸ் இருக்கு. வேற யாராவது அவன இன்சல்ட் பண்ணீங்க அப்புறம் பேசறதுக்கு நாக்கு இருக்காது. மைண்ட் இட்”

வேந்தனின் மாமாதான் மகனைச் சமாதானப்படுத்தினார். வேந்தனின் பழைய சட்டை, வேட்டியைக் கொடுத்த இந்து,

“போப்பா! போய் குளிச்சிட்டு மாத்திக்க” என அனுப்பி வைத்தார்.

வேந்தனின் கோப முகத்தைப் பார்த்துப் பம்மியவாறே குளிக்க சென்றான் அவன். ஏற்கனவே அனு விஷயத்தில் அவனிடம் உதை வாங்கி ஒரு வாரம் பெட் ரெஸ்டில் இருந்தவன்தானே. முதலில் இங்கே வரவே தயங்கினான். அவன் அம்மாதான் பெரிய பணக்கார வீட்டில் வேந்தன் திருமணம் செய்திருக்கிறான். அப்படியே மீண்டும் பேசி பழகி அனுவைத் திருமணம் செய்து கொண்டால், வரதட்சணை சுளையாக வாங்கலாம் என ஆசைக் காட்டிக் கூட்டி வந்திருந்தார்.

அனுவைக் கட்டிக் கொண்டு லட்டுவையும் சைட் அடிக்கலாம் என்பது தான் ஐயாவின் ஜொளான்(ஜொள்ளு+பிளான்). அவனுக்குத் தெரியவில்லை, அவர்கள் யார் மேல் கையை வைத்தாலும் தேவி சீவி விடுவாள் என்று.

வந்தவர்களைச் சிதம்பரத்தின் முகத்திற்காக உள்ளே அனுமதித்திருந்தார் இந்து. வீட்டிற்கு வந்தவர்களை இன்முகமாக உபசரிப்பது தமிழர் பண்பாடு அல்லவா! தாமரையோ இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிக்கும் ரகம். இந்துவின் உபசரிப்பில் பல கோட்டைகளை மனதில் கட்டிவிட்டார்.

‘என் மகன் அழகு ராஜா. இவ பொண்ணுக்கு அவன கட்டிக்கக் கசக்குமா என்ன? கல்யாணம் முடியற வரைக்கும் அடக்கி வாசிக்கறேன். பிறகு ஆத்தா, மக சிண்ட புடிச்சு ஆட்டிற மாட்டேன்’ என உள்ளுக்குள்ளேயே திட்டம் திட்டி, வெளியில் புன்னகை முகமாகத் திரிந்தார்.

தேவி மகனை எடுத்தெறிந்து பேசிய போது கூட இளித்தபடியே அமைதி காத்தார். வேந்தன் தாமரையைக் கண்டுக் கொள்ளவே இல்லை. மாமாவை மட்டும் பார்த்துத் தலை அசைத்தவன், பிறகு இவர்கள் பக்கமே திரும்பவில்லை. தேவிக்கு இவர்களை முதல் பார்வையிலே பிடிக்கவில்லை. வேந்தன் அமைதியாக இருக்கவும், அவளும் அமைதி காத்தாள்.

ஐயரை வைத்து ஹோமம் வளர்த்துப் பூசை செய்தனர். பாலைக் காய்ச்சி அனைவருக்கும் கொடுத்தார் இந்து. ஐயர் கிளம்பியவுடன் பேச்சை ஆரம்பித்தார் தாமரை.

“அண்ணி, வந்து இப்படி உக்காருங்க. நல்ல விஷயம் பேசலாம்”

இந்துவிற்கு மண்டையில் மணி அடித்தது. மருமகளை ஓரக் கண்ணால் பார்த்தார். அவளும் அவர் பக்கத்தில் வந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டாள்.

“சொல்லுங்க தாமரை! என்ன பேசனும்? இனிமே இவங்க குடும்ப விஷயத்துல நான்தான் எந்த முடிவுனாலும் எடுப்பேன். அதனால என் கிட்டயே பேசுங்க” என்றாள் தேவி.

“அம்மாடி! நான் உனக்கு அம்மா முறை. வாய் நிறைய அம்மான்னு கூப்பிடும்மா”

“யாரை எப்படிக் கூப்பிடறதுன்னு எனக்குத் தெரியும். நீங்க சொல்ல வந்தத சொல்லுங்க”

‘எப்படி பிட்ட போட்டாலும் மசிய மாட்டறாளே. எல்லாம் பணத் திமிரு. கால் மேல கால் போட்டு ஆட்டிகிட்டு உட்கார்ந்துருக்கா. பெரிய ராக்காச்சியா இருப்பா போலிருக்கே. அடி ஆத்தி! இந்த வேந்தன் பையன் கெட்டக் கேட்டுக்கு என்னைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிக்கிறானே. இதைத்தான் கோவணத்தில ஒரு காசு இருந்தா கோழி கூப்பிட பாட்டு வரும்முன்னு சொல்லுவாங்களோ. எல்லாம் என் நேரம். என்ன பண்ணுறது! காரியம் ஆகனும்னா காக்கா கால கூட பிடிக்கலாம். தப்பில்ல!’

“அது வந்தும்மா! என் மகன் மதனுக்கு அனுக் குட்டிய பொண்ணு கேக்கறோம். அவ மாதிரி ஒரு மகாலெட்சுமி எங்க வீட்டுக்கு விளக்கேத்த வந்தா, குடும்பமே சுபிட்சமா இருக்கும். அதோட சொந்தம் விட்டுப் போயிடக் கூடாது இல்லயா”

‘எங்க அனுவை அன்னைக்கு மூதேவின்னு திட்டி முடியைப் பிடிச்சு அடிச்சதென்ன, இன்னிக்கு மகாலெட்சுமின்னு புகழறதென்ன? இந்தப் பிச்சைக்கார குடும்பம் சொந்தமுன்னு சொல்லவே கேவலமா இருக்குன்னு வெளிய துரத்திட்டு இன்னிக்கு உறவு விட்டுப் போயிடக் கூடாதாம்! என்னமா நடிக்குது எங்கண்ணி! இந்த வருஷம் ஆஸ்கார் அவார்ட இவங்களுக்குக் குடுத்து,

‘உலகம் எங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு

உன்னைப் பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு’ பாட்டுப் பாடனும்’ என மனதிலேயே வறுத்தெடுத்தார் இந்து.

அண்ணனுக்காக வாயைத் திறக்கவில்லை அவர்.

தேவி அனுவை ஏறிட்டுப் பார்த்தாள். முகம் வெளுக்கப் பயத்தில் நின்றிருந்தாள் அவள். வேந்தனையும் கவனித்தாள்! முகம் முழுக்க கோபம் இருந்தாலும் கையைக் கட்டிக் கொண்டு அமைதியாக இருந்தான் அவன். வேந்தனின் பார்வை அவன் மாமாவின் மேல் மட்டும்தான் இருந்தது. அவரோ தலையைக் குனிந்தவாறு அமர்ந்திருந்தார்.

இவர்களின் தயக்கத்தைப் புரிந்துக் கொண்டவள்,

“அனுக்கு இப்போதைக்குக் கல்யாணம் பண்ற ஐடியா இல்ல. இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும். இப்பவே இவ கல்யாணம் பண்ணி போயிட்டா, எங்க புள்ள குட்டிங்களை யாரு வளர்த்து விடறது?” எனத் தாமரையின் கண்களை நேராக நோக்கிக் கேட்டாள்.

‘என்ன இந்த புள்ள இப்படி பேசுது?’ தாமரையே ஒரு நிமிடம் அசந்து விட்டார்.

“இல்லம்மா! நான் என்ன சொல்ல வரேன்னா”

“ஒன்னும் சொல்ல வேணாம். இன்னும் ஒரு பத்து வருஷம் போகட்டும். அப்புறம் பாக்கலாம். காலையிலே எழுந்தது ரொம்ப களைப்பா இருக்கு. நான் படுக்கனும். அதனால இப்ப நீங்க கிளம்பலாம். மலர், சீக்கிரமா என் வீட்டுல இருந்து தேவை இல்லாதவங்களை எல்லாம் அனுப்பி வச்சிட்டு ரூமுக்கு வா. எனக்குத் தலை வலிக்குது” என எழுந்து சென்று விட்டாள்.

தாமரைக்கு மிகுந்த அவமானமாகப் போய் விட்டது. இந்துவுக்கோ உள்ளுக்குள் ஒரே சந்தோஷம்.

“என்னை மன்னிச்சிருங்க அண்ணி. மருமகள மீறி என்னால எதுவும் செய்ய முடியாது” எனக் கைகளை விரித்து விட்டார்.

‘புது பணக்காரங்க ஆகிட்டீங்க இல்ல. அதான் என் கிட்டயே ஆடிப் பார்க்கறீங்க. நீ பெத்த மக கல்யாணம் என்னை மீறி எப்படி நடக்குதுன்னு நானும் பார்க்கிறேன்’ என மனதில் சூளுரைத்தத் தாமரைச் சிரித்த முகமாகவே வெளியேறினார்.

“இவங்கள ஏன்மா கூப்பிட்டீங்க?” என அவர்கள் போனவுடன் எகிறினான் வேந்தன்.

“நான் எங்கடா கூப்பிட்டேன்! எப்படியோ விஷயம் தெரிஞ்சு வந்துட்டாங்க. அவங்கள விடு. மருமக தலை வலிக்குதுன்னு சொன்னாப்பாரு. இந்தா காபி. கொண்டு போய் குடுத்துட்டு, தலை அமுக்கி விட்டுட்டு வா”

“அம்மா!” என முறைத்தான் வேந்தன்.

“ஏன்டா முறைக்கிற? உன் தங்கச்சிக்கோ, எனக்கோ தலை வலின்னா செய்ய மாட்டியா? பொண்டாட்டிய மட்டும் ஏன் வேறா நினைக்கிற? போ, போய் பாரு. புள்ளை முகமே வாடி போய் இருந்துச்சு” என விரட்டினார் வேந்தனை.

பணக்கார மருமகள் என்பதால் இந்த உபசரிப்பு இல்லை! மகனின் மனைவி என்பதால்தான் இந்தப் பாசம்.

அவன் அகன்றவுடன், கையில் பெட்டியுடன் வந்தான் சிகப்பு சட்டை.

“வாப்பா சிகப்பு சொக்கா. என்னப்பா இந்தப் பக்கம்?”

“இவரைத்தான் உங்க பாதுகாப்புக்காகவும், நீங்க வெளிய தெருவ போனா ட்ரைவராகவும் மேடம் அரெஞ் பண்ணியிருக்காங்க. அவுட் ஹவுசுல இருந்துக்குவாரு. அதோட சமையலுக்கு ஒரு ஆளும், வீட்டு வேலை, தோட்ட வேலைக்கு ஒரு ஆளும் அப்பயிண்ட் செஞ்சிருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க” என விளக்கினான் கார்த்திக்.

வாயைப் பிளந்து விட்டார் இந்து.

“ஏன்? எங்களுக்கு எதுக்கு இத்தனை வேலைக்காரங்களும் செக்கியூரிட்டியும்? நாங்க எப்பொழுதும் போல இருந்துக்குவோம். அவங்க கிட்ட பணம் இருந்தா, அதை அவங்க புருஷனுக்குச் செலவு பண்ணட்டும். எங்களுக்கு ஒன்னும் பிச்சைப் போட வேணாம்” எனக் கார்த்திக்கிடம் எகிறினாள் லாவண்யா.

“லட்டு! அதென்ன மரியாதை இல்லாம அண்ணிய இப்படிப் பேசறது? புடிக்குதோ இல்லையோ, அவங்க உன் அண்ணி. அதுக்குண்டான மரியாதைய நீ தந்துதான் ஆகனும்” எனச் சொன்ன இந்துவின் குரலில் கண்டிப்பு இருந்தது.

“அண்ணியாம் அண்ணி! திமிர் பிடிச்ச பன்னி!” என முனகிக் கொண்டே சமயலறைக்குள் புகுந்து கொண்டாள் அவள்.

தண்ணீர் வேண்டுமென அவளைப் பின் தொடர்ந்த கார்த்திக்,

“எதுக்கு உனக்கு இவ்வளவு கோபம் வருது லட்டு? மேடம் உங்க நல்லதுக்குத்தானே இதெல்லாம் செய்றாங்க. கொஞ்சமாச்சும் புரிஞ்சுக்கிறியா?” எனக் கேட்டான்.

“யாரையும் நான் புரிஞ்சுக்கத் தேவையில்ல. அவங்க வேலைக்காரனான நீ, அவங்கள புரிஞ்சு கிட்டா போதும்”

‘ஓ! அவங்க என்னை வேலைக்காரன்னு சொன்னதுதான் பட்டுக்குட்டிக்குக் கோபமா?’

“அவங்க கிட்ட வேலை செய்யறேன்! அப்படிதானே கூப்புடுவாங்க. இதுக்கெல்லாம் ஏன் கோபப் படுற செல்லம்!”

“யாரு கோபப்பட்டா? நானா? நேவர்” என்றவள் கழுவிய காபி டபராவை அவன் மீது தூக்கி அடித்தாள்.

அலேக்காக கேட்ச் பிடித்தவன்,

“இப்படியே அடிக்கறேன், உதைக்கறேன்னு சுத்திகிட்டு இரு! கடைசியில நான் அமைதியின் சிகரம் அனுவைதான் கட்டிக்கப் போறேன்”

அந்நேரம் மிஸ்டர் சட்டர்டே அவன் நாக்கில் அமர்ந்திருந்தாரோ?