அத்தியாயம் 17
ஒரு விஷயத்துக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்ணா அதை லவ் பண்றோம்னு அர்த்தம்ல.
மேடம் ட்ரேன் லேட்டா வந்தா கூடதான் வெயிட் பண்ணுறோம், அதுக்காக ட்ரேயின நேசிக்கறோம்னு அர்த்தமா?
(படம் - காதல் கோட்டை)
ஒரு வாரமாகக் ‘கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே’ என ஒளிந்து கொண்டிருந்தான் வேந்தன். தேவியிடம் நடந்து கொண்டதை இன்னும் அவனால் ஜீரணிக்க முடியவில்லை.
‘வேணா, வேணான்னு சொன்ன நானா இப்படி நடந்துகிட்டேன்? என் சுயக் கட்டுப்பாட்டையே இழக்கற அளவுக்கு என்ன மோகம், என்ன தாகம்? காதல் இல்லாம மோகம் மட்டும் வருமா? அப்படி வந்தா, அது நான் ரோஜாவுக்குச் செய்யற துரோகமில்லையா?’ எனப் பலவாறானச் சிந்தனைகள் அவனைப் போட்டு பாடாய்ப்படுத்தின.
தேவியும் அவனைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். இரவில் அவளுக்கு முன்பாகவே அவனது அறையில் படுத்துக் கொள்வது, இவள் எழும் முன்பே எழுந்து கிளம்பி விடுவது, இரவு உணவை இவளோடு சாப்பிடுவதைத் தவிர்ப்பது எனப் போக்கு காட்டிக் கொண்டிருந்தான் அவன். வேந்தன் செய்வதெல்லாம் அவளுக்கு குழந்தை செய்யும் சேட்டையாகத்தான் பட்டது. அதோடு அவர்களின் உறவுக்குப் பிறகு, என்னோடு என் ரூமில் வந்து இரு என இவளாக கூப்பிடுவதற்கு வெட்கமாக இருந்தது. கொஞ்ச நாள் விட்டுப் பிடிக்கலாம் என விட்டு விட்டாள். ஒரு வாரத்திற்கு மேல் இப்படியே செய்தால், பிறகு வைத்துக் கொள்ளலாம் கச்சேரியை என சமாதானமாகிக் கொண்டாள் தேவி.
இன்றோடு தேவி போட்டு வைத்திருந்த ஒரு வார கெடு முடிவுக்கு வந்திருந்தது. வேந்தன் இன்னும் அப்படியேதான் இருந்தான். அன்று அவன் ரூமில் படுத்ததும், அரை மணி நேரம் அவன் செட்டிலாவதற்குக் கொடுத்த தேவி, மாற்றுச் சாவியால் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.
விட்டத்தை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்த வேந்தன் அவளைக் கண்டதும் திகைத்து எழுந்து நின்றான்.
“வா, ரோஜா”
“உன் குரல கேட்டு ஒரு வாரம் ஆச்சு தெரியுமா மலர்”
நடந்து அவன் அருகில் சென்றவள், அவனை அமர சொல்லி விட்டு இவளும் அமர்ந்தாள். அவனது கையைத் தன் கையில் வைத்துக் கொண்டவள், ஒவ்வொரு விரலாகச் சொடுக்கு எடுத்துக் கொண்டே,
“வாட்ஸ் போதரிங் யூ மலர்?” எனக் கேட்டாள்.
“ஒன்னும் இல்ல ரோஜா” என்றவனின் குரலில் சுரத்தே இல்லை.
“ஒன்னும் இல்லைனா ஏன் இந்த ஹைட் அண்ட் சீக் விளையாட்டு? எதுவா இருந்தாலும் நீ என் கிட்ட ஷேர் பண்ணிக்கலாம் மலர். நீ இப்படி இருந்தா நான் என்னன்னு நினைக்க? என்னைப் பிடிக்கலையா? இல்ல என் கூட இருந்தது பிடிக்கலையா?”
அவளது வாயைப் பொத்தினான் வேந்தன்.
“உனக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கறதுன்னு தெரியல ரோஜா”
“சொல்லித்தான் பாரேன், புரியுதா இல்லையான்னு அப்புறம் பார்ப்போம்”
மெல்ல தன் மனதை அவளிடம் திறந்தான் வேந்தன்.
“எனக்கு எங்க அம்மாதான் ரோல் மாடல். அவங்க அவ்வளவா படிக்கல. வீட்டுல பார்த்த மாப்பிள்ளையான எங்கப்பாவ கட்டிக்கிட்டாங்க. அவர் மேல உயிரையே வச்சிருந்தாங்க. காதலாகி கசிந்துருகினு சொல்லுவாங்களே அப்படி. அவரு இன்னொருத்திய முன்னமே காதலிச்சவருன்னு தெரிஞ்சும், இருந்துட்டு போகுது, அதனால நான் அவர் மேல வைச்ச காதல் இல்லைன்னு போயிருமான்னு வாதம் செய்வாங்க. அவரு இறந்தப்ப அவங்களுக்குச் சின்ன வயசு. அவரையே நினைச்சுக்கிட்டு, எங்களுக்காக வாழறாங்க. அவங்க மாதிரி நானும் என் மனைவிய மனசார விரும்பனும்னு நினைச்சேன். காதலால நாங்க ஈருடல் ஓருயிரா இருக்கனும்னு கோட்டைக் கட்டி வச்சிருந்தேன். ஆனா இப்படி திடீர்ன்னு நமக்குள்ள நடந்த இந்த விஷயம் என்னைப் புரட்டிப் போட்டுருச்சு. காதலில்லாம காமத்தை மட்டும் உன் கிட்ட காட்டிட்டனோன்னு என் மனசாட்சி என்னைக் கொல்லுது”
காதலில்லாமல் என்ற வார்த்தைத் தேவியை வெகுவாகத் தாக்கியது. முயன்று முகம் மாறாமல் காத்தாள். அவளது கவலையைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம், இப்பொழுது இவனைத் தேற்றுவதுதான் முக்கியம் என உணர்ந்தாள்.
“மலர், என்னைத் தவிர வேற பொண்ணு கிட்ட இப்படி நடந்து இருப்பியா?”
“சேச்சே! நீ என் வைஃப்! அதனாலதான் அப்படி நடந்துருப்பேன். மத்த பொண்ணுகிட்ட போய் எப்படி?” என்றவனின் குரலில் கோபம் இருந்தது.
“நீயே சொல்லிட்ட நான் உன் மனைவின்றதனாலத்தான் இப்படி நடந்துகிட்டன்னு. அப்புறம் என்ன? இதுல நீ கில்ட்டியா ஃபீல் பண்ண என்ன இருக்கு? காதலாகி கசிந்துருகினு ஒரு ப்ரேஸ் சொன்னியே, அது எப்படி வரும் தெரியுமா? ஒருத்தரோட குறை நிறைகளை பெரிது படுத்தாம உனக்கு நான் எனக்கு நீ அப்படின்னு எப்போ வாழுறாங்களோ அப்பத்தான் வரும். எனக்கு நீ நன்மைதான் செய்வேன்னு கணவன் மனைவி ஒருத்தர் மேல் ஒருத்தர் நம்பிக்கை வைக்கனும். அந்த நம்பிக்கைய உன் மேல நான் வச்சிருக்கேன். எந்தச் சமயத்திலயும் தன் துணைய மற்றவங்க கிட்ட விட்டுக் குடுக்கக் கூடாது. எப்போ நாமளும் இப்படி மாறறமோ, அப்போ கசிந்துருகலாம். அது வரைக்கும் இருக்கற சுமூகமான உறவையும் ஏன் கெடுத்துக்கனும்? என் கிட்ட நீ எடுத்துக்கிட்ட உரிமைய நான் என்னிக்குமே தப்பா நினைக்க மாட்டேன். ஏன்னா நீ என் பிலவ்ட் ஹஸ்பண்ட். இப்போ மனச அலட்டாம நம்ம ரூமுக்கு வா. எப்போதும் போல இரு. வாழ்க்கை நம்மல எப்படி இழுத்துட்டு போகுதோ அதன் வழியில போகலாம். சியர் அப் மலர்” என அவன் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியவள் அவனை எழுப்பி தனதறைக்கு அழைத்துச் சென்றாள்.
எப்பொழுதும் போல் அவனைக் கட்டிக் கொண்டுப் படுத்தும் கொண்டாள். அழகாகத் தூங்கும் மனைவியைக் கண் கொட்டாமல் பார்த்த வேந்தன்,
‘எனக்குக் காதல் வந்துருச்சா? தெரியலையே? காதல் வந்தா என்ன சிம்ப்டம்ஸ் வரும்?’ என யோசித்தான்.
மெல்ல நகர்ந்து போனை எடுத்துத் தட்டிப் பார்த்தான்.
‘சிம்ப்டம் 1- அவளுக்காக அசௌகரியங்களை பொறுத்துக் கொள்ளுவது.
சிம்ப்டம் 2- அவளுக்காக வலி தாங்குவது.
சிம்ப்டம் 3- ஈர்ப்புக் கொண்டு, கண்கள் தன்னவளையே சுற்றுவது.
சிம்ப்டம் 4- அவள் மேல் மட்டுமல்லாமல் அவள் குடும்பத்தின் மேலும் பற்று, பாசம் வருவது.
சிம்ப்டம் 5- காதலி சொல்வதை மட்டும் அல்ல சொல்லாததையும் செய்வது’
‘அடடா இதுல 4 சிம்ப்டம் எனக்குப் பொருந்தி வருதே. வைரமுத்து வேற வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் உருவமில்லா உருண்டையொன்று உருளக் காண்பாய்னு சொல்லியிருக்காரே. நான் இவள பார்க்கறப்ப எல்லாம் பல உருண்டைகள் உருளுதே. அப்போ கம்யூட்டர் ஜி, காதல் ஆப்சன லாக் பண்ணிறலாமா? கொஞ்ச நாள் போகட்டும்! எனக்கு கன்பர்மா இதுதான்னு தெரியட்டும்! அப்புறம் லாக் பண்ணறேன். காதல மட்டும் இல்ல இந்தக் காரிகையயும்தான்’
தூங்கும் அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான் மலர்வேந்தன். ஒரு வாரமாகத் தூக்கமில்லாமல் துக்கப்பட்டவன் தேவியை ஒரு கையிலும் நித்திரா தேவியை மறு கையிலும் அணைத்தபடி நிம்மதியாக உறங்க ஆரம்பித்தான்.

Author: VanishaAdmin
Article Title: Uyir Vangum Rojave--EPI 17
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.