அத்தியாயம் 18
உன்ன விட்டுப் போனா எனக்கு நல்ல பொண்ணு கிடைப்பா. ஆனா உனக்குதான் கேவலமான பையன் கிடைப்பான். உன் வாழ்க்கை நாசமா போறத என்னால தாங்க முடியாது.
(படம் – ரோமியோ ஜீலியட்)
வேந்தன் போட்டச் சத்தத்தில் அந்த இடமே மயான அமைதியானது.
தங்கையை நோக்கியவன், கண்களால் வினவினான் யாரென்று. அவளுமே நடந்திருந்த காரியத்தில் கண்கள் உடைப்பெடுக்க, அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.
“அனுமா! சொல்லு! எவன் கட்டுனான்?”
அவள் வலது கை மெல்ல மெலெழும்பி சுட்டிக் காட்டிய இடத்தில் நின்றிருந்தவன், சாட்சாத் நம் சிவப்பு சட்டைதான்.
பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்திருந்தான் வேந்தன்.
“ஏன்டா! நீ யாரு எவருன்னே எங்களுக்குத் தெரியாது. எவ்வளவு தைரியமிருந்தா என் தங்கச்சி கழுத்துல தாலியைக் கட்டுவ? உன்னைச் சும்மா விட மாட்டேன்டா”
சிவப்புச் சட்டைக்கு சரமாரியாக குத்துக்கள் முகத்திலும் தோளிலும் விழுந்தன. வேந்தன் அடித்த அடிக்கெல்லாம் அனுவைப் பார்த்தபடியே அப்படியே தடுக்காமல் நின்றிருந்தான் அவன். கார்த்திக் பிடித்துத் தடுத்தும் வேந்தன் அசரவில்லை. தேவி கத்தியும் அவன் காதில் ஒன்றும் ஏறவில்லை. சிவப்புச் சட்டையின் வாய் கிழிந்து ரத்தம் குபு குபுவென வந்தது.
“நிறுத்துண்ணா!” என ஓங்கிக் கத்தினாள் அனு.
தங்கையின் கத்தலில் அடிப்பதை நிறுத்தியவன், திரும்பிக் கேள்வியாக அவளைப் பார்த்தான்.
“போதும்ண்ணா! கையெடுத்துக் கும்புடுறேன் என் புருஷனை விட்டுரு. ரத்தம் எப்படி வருது பாரு! அவரு என்னண்ணா தப்பு பண்ணாரு? எல்லார் முன்னாடியும் கேவலப்பட்டு நிக்கற உன் தங்கச்சிக்கு வாழ்க்கைக் குடுத்தாரு. அது தப்பா? அவரை விட்டுருண்ணா” எனச் சொல்லித் தேம்பி அழுதாள் அனு.
அங்கே இருந்த அனைவருக்கும் பேரதிர்ச்சி. வேந்தனின் கண்கள் கலங்கி விட்டன.
“அனும்மா! வளர்த்தக் கடா மாருல பாயுறதுன்றது இதுதானா? என் தங்கச்சி, என் தங்கச்சின்னு நீ பொறந்தப்பா கீழயே விடாம தூக்கிக்கிட்டு திரிஞ்சேனே அந்த அண்ணனுக்கு நீ காட்டுற மரியாதை இதுதானா? குழந்தையா நீ இருக்கறப்போ ஓயாம அழுவ. இதோ இந்த நெஞ்சுலத்தான்மா உன்னைத் தூக்கிப் போட்டுக்கிட்டு டுவிங்கில் டுவிங்கில் லிட்டில் ஸ்டார், அனும்மா எங்க ஷைனிங் ஸ்டார்னு வாய் வலிக்கத் திரும்ப திரும்ப பாடுவனே அதுக்கா இப்படி ஒரு வார்த்தைக் கேட்டுட்ட? என்னால தாங்க முடியலையே! மீன் குழம்புல உப்பு கம்மி, அண்ணன் இப்ப ஆயிட்டேன் டம்மி”
‘ஐய்யய்யோ! டி. ஆர் மாதிரி பேச ஆரம்பிச்சிட்டானே. இப்போ பாட்டு வேற எடுத்து விடுவானே. கடவுளே’ எனக் கார்த்திக் அடுத்து வரப் போகும் பாடலுக்காகக் காதை தீட்டிக் காத்திருந்தான்.
அவனை ஏமாற்றாமல்,
“தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு” எனப் பாடியவாறே கண்ணைத் துடைத்துக் கொண்டான் வேந்தன்.
கட்டிலிலிருந்து எழுந்து ஓடி வந்த அனு அண்ணனைக் கட்டிக் கொண்டு அழுதாள். அவளோடு இந்துவும், லட்டுவும் சேர்ந்து கொண்டார்கள். அவர்கள் ஒப்பாரியைப் பார்த்து தேவி தலையைப் பிடித்துக் கொண்டாள்.
“இப்ப எதுக்கு என் கண்ணாலத்துல குடும்பமே இப்படி கண்ணீர் உடுறீங்க? சொல்லுங்க மச்சான், எனக்கு என்ன குறைச்சல்?” எனக் கேட்டச் சிவப்புச் சட்டையின் குரலில் அடக்கப்பட்டக் கோபம் இருந்தது.
“டேய்! முதல்ல உன் பேரு கூட என்னன்னு எங்களுக்குத் தெரியாதுடா? இதுல எப்படிடா உன்னை எங்க வீட்டு மாப்பிள்ளைன்னு ஏத்துக்கறது?” என வெடித்தான் வேந்தன்.
“அனும்மா! அவன் கட்டுனத் தாலிய கழட்டி போட்டுட்டு வாம்மா. நாம போகலாம்” எனத் தங்கையை அழைத்தான் வேந்தன்.
“வேந்தா! இப்படிலாம் பேசாதடா. எதா இருந்தாலும் யோசிச்சு அப்புறம் முடிவு எடுக்கலாம்” எனப் பதறினார் இந்து.
“அனும்மா! நான் கட்டுனத் தாலி கீழ இறங்குச்சுனா, நான் செத்துட்டேன்னு அர்த்தம். அதுதான் உனக்கு வேணுமா?” எனக் கேட்டான் சிவப்புச் சட்டை.
அனு இங்கேயும், அங்கேயும் அல்லாடினாள். அவளுக்கு அண்ணனையும் விட முடியவில்லை. புதிதாக தாலி கட்டி வந்த சொந்தத்தையும் விட முடியவில்லை. இறைஞ்சுதலாக தேவியைப் பார்த்தாள். கண்ணை மூடித் திறந்து அவளைத் தைரியப்படுத்திய தேவி, முதலில் தாமரையையும், மதனையும் வெளியேற்றும் வேலையில் இறங்கினாள்.
அதற்குள் தாமரையோ,
“சரி, ஆனது ஆகிப் போச்சு. இனி நம்ம லட்டுவையாச்சும் மதனுக்குக் குடு மதனி” என இந்துவைப் பார்த்து கேட்டுக் கொண்டிருந்தார்.
சில பேர் என்ன பிரச்சனை நடந்தாலும் அதில் தங்களுக்குச் சாதகமானதைத் தேடிக் கொள்வார்களாம். அந்தக் கூட்டத்தை சேர்ந்தவர்தான் தாமரை.
‘என்னது லட்டுவையா? காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கொண்டுப் போன கதையாவுல இருக்குது!’
அனுவைக் கட்டத் தாலியைக் கையில் வாங்கிய மகராசனின் புலம்பல் இது.
“உங்க மகனைதான் போலீஸ் தீவிரமா வலை போட்டுத் தேடிக்கிட்டு இருக்காங்களாமே லோட்டஸ். அவனுக்கு ஏற்கனவே மாமியார் வீடு ரெடியா இருக்கறப்போ, ஏன் நீங்க வேற மெனக்கெடுறீங்க” எனக் கேட்டாள் தேவி.
“என்னடி உளர்ற?” எனத் திமிராகக் கேட்டான் மதன்.
வேந்தனும், கார்த்திக்கும் துடித்துப் போய் அவனைப் மொத்த வருவதற்குள், தேவியே அவனைக் கன்னம் கன்னமாக அறைந்திருந்தாள்.
“யாரைப் பார்த்து டீ போட்டுக் கூப்பிடற? என் ஹஸ்பெண்டே என்னை அப்படி கூப்பிட்டதில்லை. நீ யாருடா என்னை டீ போட!”
மீண்டும் கன்னம் பழுத்தது மதனுக்கு. கார்த்திக் மதனைப் பிடித்துக் கொண்டான். வேந்தன் தேவியை பிடித்து இழுத்து வந்து நாற்காலியில் மீண்டும் அமர வைத்தான்.
“அவன் மேல எல்லாம் கை வச்சு உன் ஸ்டேன்டர்ட்ட இறக்கிக்காதே ரோஜா” என அவளைச் சமாதானப்படுத்தினான் வேந்தன்.
“உங்க சூப்பர் மார்கேட்டுல வேலை செய்யற பொண்ணை உன் மகன் கையைப் புடிச்சி இழுத்துட்டானாமே. அந்தப் பொண்ணு சி.சி.டி.வி ஆதாரத்தை வச்சிருக்காளாம். அதனால போலீஸ் கேக்குறப்போ, ‘என்ன, கையைப் புடிச்சு இழுத்தியா?’ன்னு வடிவேலு ஸ்டைல்ல திரும்பத் திரும்ப கேட்டு உதை வாங்கிட்டு வராதீங்க” என்றான் கார்த்திக்.
“அதோட, உங்க சூப்பர் மார்க்கேட்டுல காலாவதியான பொருளுங்க லேபலை மாத்தி திரும்பவும் விக்கறீங்களாம். அப்படி வாங்குன பாலைக் குடிச்சி ஒருத்தன் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுல இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்கான்னாம். இப்போ, இந்த நேரத்துல அதிகாரிங்க உங்க எல்லா சூப்பர் மார்க்கேட்டையும் ரைட் பண்றாங்களாமே? காதோரமா நியூஸ் வந்தது. சீக்கிரமா போய் எதையாச்சும் புளுகி இருக்கறதையாச்சும் காப்பாத்துங்க” எனக் கார்த்திக் பேசிக் கொண்டு இருக்கும் போதே, தாமரைக்கு சூப்பர் மார்க்கேட்டிலிருந்து போன் வந்தது.
எடுத்துப் பேசியவர் பதறி அடித்துக் கொண்டு ஓடினார். மதனும் அவர் பின்னாலேயே ஓடினான்.
‘ஓன் விக்கட் அவுட். இப்படி பச்சா மேட்டருல எல்லாம் நாம கைய வைக்க வேண்டியதா இருக்கே. சிக்கனிங் ஃபெல்லோவ்ஸ்’ என முனகியபடியே தூசியைத் தட்டுவது போல் கையைத் தட்டிக் கொண்டாள் தேவி.
அடுத்தப் பிரச்சனையை முடிக்கத் தயாரானவள், பெண்கள் மூவரையும் திரும்பிப் பார்த்தாள். அவர்கள் இன்னும் கட்டிப்பிடித்த நிலையில்தான் இருந்தார்கள். சிவப்புச் சட்டை அவர்கள் அருகே கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தான்.

Author: VanishaAdmin
Article Title: Uyir Vangum Rojave--EPI 18
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.