அத்தியாயம் 19
நல்லா படிச்ச பொண்ணா இருக்கனும். தைரியமான பொண்ணா இருக்கனும். சுதந்திரமா சிந்திக்க தெரிஞ்ச பொண்ணா இருக்கனும். நான் சொன்னதெல்லாம் இருந்தாலே அவ அழகாத்தான் இருப்பா.
(படம் – மொழி)
“மச்சி! எப்படிடா இருக்க? சாப்டியா மச்சி?”
கார்த்திக்குக்குப் போன் செய்து பாசமாகக் கேட்டான் வேந்தன்.
‘இப்போ அரை மணி நேரத்துக்கு முன்னதானே இவன் முன்னாடி உட்கார்ந்து மொக்குனேன். அதுக்குள்ள என்ன போன் பண்ணி பாச பிலிம் ஓட்டுறான். எலி ஏன் அம்மணமா ஓடுது?’
“நான் நல்லா இருக்கேன். என்ன விஷயம்னு சொல்லு”
“அது வந்து மச்சி, ஹ்ம்ம் ஒன்னும் இல்ல விடு”
“டேய், சொல்லுடா. ரொம்பத்தான் தயக்கம்”
“ரோஜா ஒரு வாரமா என் கூட பேசறதில்லைடா. நானும் வலிய போய் பேசுறேன். ரெஸ்பான்சே இல்ல மச்சி”
‘ஓ கதை அப்படிப் போகுதா? மேடம் கண்ணு எப்போதும் உன் பின்னாடியே போகுது. ஆனா வாய் மட்டும் பேசறது இல்லையோ? இன்னும் கொஞ்சம் இவன் வாய நோண்டுவோம்’
“என்னடா சொல்லுற? அப்போ டைவர்ஸ் கன்ஃபர்ம்ன்னு சொல்லு”
“அப்படிலாம் சொல்லாதடா. இன்னும் நான்தான் ஊட்டி விடறேன். என்னை டேடி பேர் மாதிரி பிடிச்சிக்கிட்டுத்தான் தூங்குறா. ஆனா வாய மட்டும் திறக்க மாட்டறா. எனக்குப் பைத்தியமே பிடிக்குது கார்த்திக். பேசாம கால்ல விழுந்திடவா?”
‘அந்த அளவுக்கு இறங்கிட்டியா? இருந்தாலும் அன்னைக்கு நீ பேசனது கொஞ்சம் ஓவருதான். அதுக்கு இப்படி எல்லாம் தண்டனைக் குடுக்கக் கூடாதே. இரு இன்னும் கொஞ்சம் தண்டனைய ஏத்தி விடறேன். நாரதர் வேலைய மூட்டைக் கட்டி வைக்கலாம்னா, நீங்களே ஏன்டா வாண்டட்டா வந்து வலையில சிக்கறீங்க?’
“சேச்சே! நீ யாரு மச்சி!”
“ஏன்டா, நான் யாருன்னே மறந்து போச்சா?”
“சொல்லி முடிக்க விடுடா. அதுக்குள்ள முந்திரிக் கொட்டை மாதிரி மூக்கை நுழைக்கறது. இதனாலத்தான் நல்லா வாங்கி கட்டற”
“சரிடா! சொல்லு”
“நீ யாரு? ஆம்பிள்ளை சிங்கம். சிங்கம் சீண்டிப் பாக்கனுமே தவிர சிக்கி சின்னாபின்னமாகக் கூடாது. நீ என்ன செய்யுற, மிட்நைட் ஷோக்கு ரெண்டு டிக்கட் வாங்கிக்க. தமிழ் படமா வாங்கு. தமிழ் படம்தான் தியேட்டருல பார்த்ததே இல்லைன்னு மேடம் பேச்சு வாக்குல சொல்லி இருக்காங்க. அவங்க கிட்ட தைரியமா போய் படம் பார்க்கப் போகலாம் வான்னு கூப்பிடு”
“அவள் வருவாளா?”
“அது பழைய படம் மச்சி. புது படமா வாங்கு”
“இம்சை புடிச்சவனே! ரோஜா படம் பார்க்க வருவாளா?”
“எனக்கு எப்படி தெரியும்? உன் சாமார்த்தியம் அது. சரி, அப்படி வந்தா எப்படி கூட்டிட்டுப் போவ?”
“காருலதான்”
“அப்படியே நானும் வரட்டா காரோட்ட? ஏன்டா! கொஞ்சமாச்சும் மூளை இருக்கா? பொண்டாட்டியா இப்படிதான் சமாதானப் படுத்துவியா? பைக்ல கூட்டிப் போ மச்சி. அப்பத்தான் டச்சிங், டச்சிங் ஆகி ஒரு சமரசம் ஆகும்”
“என் ஓட்டை பைக்லயா?”
“இப்ப கேளு ஓட்டை பைக்லயான்னு? அப்பவே மேடம் வேற புது பைக் வாங்கி குடுத்தாங்கதானே! என்ன சொன்ன நீ? என்னை வேணும்னா நீ வாங்கி இருக்கலாம், ஆனா என் சுயமரியாதைய வாங்க முடியாதுன்னு, கீய என் மூஞ்சில வீசிட்டுப் போன. இப்ப வந்து குத்துதே குடையுதேன்னா, நான் என்ன பண்ண!”
“அது வேற வாய்டா”
“வேணான்டா வேந்தா! உன் பழைய ஜோக்க கேக்குற மூட்ல நான் இல்ல”
“சரி மச்சி! அப்ப காதல் இல்ல. ஓவரா பேசுனேன். இப்ப வந்துருச்சி, அதான் அடக்கி வாசிக்கிறேன். அவள சமாதானப் படுத்த வழி கேட்டா, வலிக்க, வலிக்கப் பேசுற” எனக் கடுப்பாகினான் வேந்தன்.
“சரி! எகிறாதே. அந்த பைக் இன்னும் கராஜ்ல தான் இருக்கு. கீ முனிம்மா கிட்ட இருக்கும், வாங்கிக்க. அப்படியே ரொமெண்டிக்கா பைக்ல கூட்டிப் போய் பாரேன். சண்டை எல்லாம் சமாதானமா ஆகிரும். அப்புறம் மச்சி, நைட்டுல நல்லா பைக் ஓட்டுவல்ல? மாலைக் கண்ணு பிரச்சனை எல்லாம் இல்லயே? ஏன் கேக்குறேன்னா, நமக்கு படியளக்கற தெய்வம் அவங்க. எங்கயாச்சும் இடிச்சுத் தள்ளிடப் போற!”
“போடா டேய்! யாருகிட்ட! கண்ணை மூடிக்கிட்டே ‘தள்ளிப் போகாதே எனையும் தள்ளிப் போக சொல்லாதே’ன்னு பாடிகிட்டே ஓட்டுவேன்டா”
“ஐயோ! அந்தப் பாட்டுல ரெண்டு பேரும் கீழ விழுந்துருவாங்கடா”
“அப்படியா. அந்தப் படம் போட்டப்பவும் எங்க வீட்டுல கரண்டு கட் ஆயிருச்சுடா. நான் முழுசா பாக்கல”
‘நீ எந்தப் படத்த முழுசா பாத்துட்டாலும், பூமி அப் சைட் டவுனா சுத்திரும். போடா!’
“நீ சொன்ன மாதிரி, இன்னைக்கே போய் டிக்கட் வாங்குறேன்! மறுபடியும் ரோஜாவின் ராஜா ஆகுறேன். பாய் மச்சி”
‘ஒரு ஐடியா சொன்னனே, அதுக்கு நன்றி சொன்னியா நீ? அப்படியே கட் பண்ணிட்டு போற. இருடி! ரோஜாவின் ராஜாவா? மேடம் இன்னைக்கு உனக்கு லாடம் கட்டப் போறாங்க. அவங்களுக்குக் கூட்டமே பிடிக்காது. அதுவும் இருட்டுல கொஞ்சம் கண்ணு தெரியாம தடுமாறுவாங்க. அவங்கள படம் பார்க்க அதுவும் மிட்நைட் ஷோக்கா கூப்புடற? டண்டணக்காத்தான். அவங்கள பார்த்து, நீ எப்படி என் தங்கச்சி வாழ்க்கையில முடிவெடுக்கலாம்னா கேட்ட? மலரு டாலி, இன்னைக்கு நீ காலி’ என விசிலடித்துக் கொண்டே மற்ற வேலைகளைக் கவனிக்கச் சென்றான் கார்த்திக்.
இரவில் எப்பொழுதும் போல் குளித்து விட்டுச் சாப்பிட வந்தாள் தேவி. அவளுக்கு உணவை பிசைந்து ஊட்டிக் கொண்டே,
“ரோஜா! இன்னிக்கு மிட் நைட் ஷோ பார்க்க போகலாமா?” எனத் தயங்கித் தயங்கி கேட்டான் வேந்தன்.
தேவியின் கண்களில் ஒரு கணம் மின்னல் தோன்றி மறைந்தது. ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள். திருமணம் முடிந்து இது நாள் வரை இருவரும் தனியாக, ஜாலியாக எங்கேயும் சென்றதில்லை.
அவளது அமைதியைப் பார்த்தவன்,
“நீ வர! நாம போறோம்! அவ்வளவுதான்” எனச் சொல்லி ஊட்டி முடித்து விட்டு ரெடியாகி வரச் சென்று விட்டான்.
உள்ளுக்குள் ஒரு பயம். அவள் வருவாளோ, இல்லை குப்புறப் போர்த்தி படுத்து விடுவாளோ என. வராவிட்டால் டிக்கட்டை கிழித்து வீசி விட்டுச் சென்று படுத்து விடலாம் என முடிவெடுத்திருந்தான்.
ஆச்சரியமே ஆச்சரியப்படும் விதமாகக் கிளம்பி, ஹாலில் அமர்ந்திருந்தாள் தேவி. அவள் சுடிதார் அணிந்து இன்றுதான் பார்க்கிறான். அடர் நீலத்தில், சிறு வெள்ளை ரோஜாக்கள் மேனி எங்கும் பூத்திருந்தன. வெள்ளை நிற துப்பட்டாவைத் தோளில் போடாமல் கையில் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
அவளையே அசையாது பார்த்தபடி நின்றிருந்தவனைக் கண்டுத் தொண்டையைச் செருமினாள் தேவி. தன்னை மீட்டுக் கொண்டவன்,
“போகலாமா ரோஜா?” எனக் கேட்டான்.
தலையசைப்பு மட்டுமே கிடைத்தது.
வாசலில் அவளை நிறுத்தியவன், கராஜிக்கு நடந்து சென்று பைக்கை எடுத்து வந்தான். பின் இறங்கி வந்து ஹேல்மெட்டை அவளுக்குப் போட்டு விட்டான். தேவிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
“இதுலயா போகப் போறோம்?”
‘அப்பாடா! வாய் பூட்டுத் திறந்துருச்சு. டேய் கார்த்திக்! உனக்கு மொட்டை அடிச்சு அலகு குத்தறேன்டா. என்ன ஒரு பிரில்லியன்ட் ஐடியா குடுத்துருக்க’
“ஆமா ரோஜா. உனக்கு ஆட்சேபணை இல்லையே”
இல்லையெனத் தலை வேகமாக ஆடியது. அவள் முகத்தில் பார்த்தக் குதூகலத்தில் வேந்தனுமே ஒரு கணம் ஆடிவிட்டான்.

Author: VanishaAdmin
Article Title: Uyir Vangum Rojave--EPI 19
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.