அத்தியாயம் 20
“கண்ண மூடிக்கிட்டு மறுபடியும் ஒரு கனவு காண நான் தயார இல்ல கௌரி. பொறந்ததிலிருந்து துளசி சக்திவேல். கல்யாணத்துக்கு அப்புறம் துளசி முரளிகிருஷ்ணா. இப்ப துளசி வெறும் துளசி. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!
(படம் - மறுபடியும்)
“ஹலோ அம்மா! சொல்லுங்கம்மா, என் மேல உள்ள கோபம் போயிருச்சா?”
போனை காதில் வைத்துக் கொண்டே,
“லட்டு, டீ லட்டு. எங்கடி போனே? வந்து போனை லோட்டு ஸ்பீக்கர்ல போடு” என இரைந்தார் இந்து.
“என்னம்மா? ராத்திரி பத்து மணிக்கு வீடே அதிருற மாதிரி கத்துறீங்க” என்றபடியே வந்து போனை லவுட் ஸ்பீக்கரில் போட்டாள் லாவண்யா.
“சொல்லுண்ணா, என்ன விஷயம்?”
“என்கிட்ட கேட்டா எனக்கு எப்படி தெரியும்? அம்மாதான் போன் பண்ணாங்க. அவங்க கிட்ட சொல்லி பேச சொல்லு லட்டும்மா. பத்து நாளாச்சு என் கிட்ட பேசி”
அம்மாவை முறைத்த லாவண்யா,
“ஏன்மா இப்படி பண்ணுற? அண்ணன்தான் கெஞ்சுது இல்ல. அப்புறம் என்ன பிடிவாதம்? நீ பெத்த மகனோட, நேத்து வந்த மருமக பெருசா போச்சா?” எனக் கேட்டாள்.
“இப்ப உன்னைப் பஞ்சாயத்து பண்ண கூப்பிடல. அவன் கிட்ட சொல்லு, சீக்கிரமா குலதெய்வம் கோவிலுக்குப் போகனும்னு. ஒரு படையல் போடனும். ரெண்டு கல்யாணமும் சட்டு, சட்டுன்னு நடந்துருச்சு. இனிமே நடக்கறதாச்சும் நல்லதா நடக்கனும். எப்ப போலாம்னு கேளு லட்டு”
“அண்ணா, கேட்டுச்சா?”
“நல்லா கேட்டுச்சு. அவங்க கிட்ட சொல்லு இந்த வாரக் கடைசியில போகலாம்னு. என்ன அரெஞ்மேன்டுன்னு அண்ணி கிட்ட கேட்டுட்டு சொல்லுறேன்”
“கேட்டுச்சாம்மா?” என்றாள் லட்டு.
“ஏன்! என் காது என்ன செவிடா? நல்லாதான் கேட்டுச்சு. சீக்கிரமா சொல்ல சொல்லு. பூஜை பொருளுங்க எல்லாம் வாங்கனும். டீ லட்டு, உங்கண்ணா சாப்டானானு கேளு!”
“அண்ணா, சாப்டியா?”
“சாப்பிட்டேன். அம்மா சாப்பிட்டுடாங்களான்னு கேளு லட்டும்மா!”
“கடவுளே! என்னைக் காப்பாத்து. நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டா, இப்படித்தான் படிக்கிற பிள்ளைய கூப்பிட்டு வச்சு ரவுசு பண்ணுவீங்களா? அண்ணாத்தே இது நல்லா இல்ல. பேஜாரா ஆகிப் போய்டும்”
“லட்டும்மா! என்னடா இப்படி பேசுற?”
“சாரிண்ணா. அம்மாதான் மேட்ராஸ் பாசை கத்து குடுக்க சொன்னாங்க. இப்பத்தான் கூகுள் பண்ணி பார்த்துட்டு இருந்தேன். அது அப்படியே வாயில வந்துருச்சு”
“அவங்க மாப்பிள்ளை எப்படி இருக்காரு? கொஞ்சம் கேட்டு சொல்லு”
அம்மாவைப் பார்த்தாள் லாவண்யா.
“ஆடு உறவாம், குட்டிப் பகையாம். எனக்கு மாப்பிள்ளைன்னா உங்க நொண்ணனுக்கு மச்சான் இல்லையா? ஊருக்குப் போறப்ப ஒழுங்கா, மரியாதையா பேசி பழக சொல்லு லட்டு. நாமளே பார்த்திருந்தாலும் இப்படி ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைச்சிருக்காது”
“இப்ப என்ன மாப்பிள்ளை மரியாதைக்குக் குறை வச்சிட்டாங்கலாம்? நல்லாத்தானே செலவு பண்ணி ரிசப்ஷன் வச்சோம். மாப்பிள்ளைக்கு மோதிரத்துல இருந்து புலி நக செய்ன் வரைக்கும் வாங்கி போடலையா? அவரு எதையும் ஏத்துக்கலைன்னா நான் என்ன பண்ணறது? பொண்ணும் கொடுத்து வீட்டுல இடம் கொடுத்ததே போதும். வேறு எதுவும் செஞ்சு என் மரியாதைய குறைக்காதீங்கன்னு அவங்க மருமகன்தானே சொன்னாரு. இப்ப என் கிட்ட ஏன் பாயறாங்க? இங்க பாரு லட்டும்மா, மருமகன் வந்தவுடனே உங்க அம்மா என்னை மறந்துட்டாங்க. நான் வேணாதவன் ஆயிட்டேன்” என்றவனின் குரல் கலங்கி இருந்தது.
“இப்ப எதுக்கு உங்கண்ணன் இவ்வளவு பெரிய சீனை போடுறான்? மருமகன் வந்தாலும், மருமக வந்தாலும், இவன்தானே நான் பத்து மாசம் சுமந்து பெத்த மகன். இவன்தானே என்னை முதன் முதலா அம்மான்னு வாய் நிறைய கூப்பிட்டவன். நீர் அடிச்சு நீர் விலகிடுமா? கொஞ்சம் ஏசிட்டா இந்த அம்மா கெட்டவளா ஆகிருவனா?” என்றவரின் குரலும் கலங்கியது.
“அம்மா! என்னை மன்னிச்சுரும்மா. இனிமே உன் மருமகளை ஒரு வார்த்தை சொல்ல மாட்டேன்மா. உன்ன மாதிரியே அவளையும் பார்த்துக்குவேன். சரியா? பேசுமா, ப்ளீஸ்!”
“வேந்தா! நான் பெத்த மவனே”
“அம்மா!”
“வேந்தா”
“அம்மா”
‘இதுக்கு மேல ரெண்டு பேரும் அழுது கரைஞ்சி, மூனு வயசுல காய்ச்சல் வந்தப்போ எப்படிப் பார்த்துகிட்டாங்க, ஆறு வயசுல மரத்துல இருந்து விழுந்தப்ப எப்படி துடிச்சாங்கன்னு பேசி முடிக்க மூனு மணி நேரம் ஆகும். நாம போய் படிக்கற வேலைய பார்ப்போம்’ என ரூமுக்குள் நுழைந்தாள் லாவண்யா.
தூக்கம் வருவது போல் இருந்ததால் குளித்து விட்டு வந்து படிப்போம் என குளியலறைக்குள் நுழைந்தாள். பழைய வீட்டில் அனைவரும் ஒரு குளியல் அறையையே பயன்படுதினார்கள். இந்த வீட்டில் எல்லோருக்கும் தனி ரூம், அட்டாச் பாத்ரூம். அதுவும் சலவைக் கல் பதிக்கப்பட்டு, ஹீட்டருடன். எப்பொழுதும் போல் பச்சைத் தண்ணீரிலிலேயே குளித்தவள் நைட்டி அணிந்து தலையைத் துவட்டியவாறே வந்தாள். ரூமில் ஏசி வசதி இருந்தது. இவளுக்கு ஃபேன் காற்று மட்டும் போதுமானதாக இருந்தது. அண்ணி அளித்திருந்த எந்த வசதியையும் அவள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அண்ணியின் மேல் உள்ள கடுப்பினால் அல்ல! நாளை நமக்கு என்ன நிலைமையோ, எதற்கு இதையெல்லாம் பழகி கொள்ள வேண்டும் எனும் எண்ணம்தான். மெத்தையில் மட்டும் படுத்துக் கொள்வாள். உடம்பு அதற்கு மட்டும் பழகி விட்டிருந்தது.
ஆளுயற இருந்த கண்ணாடி அவளை வா, வாவென அழைத்தது. ஒவ்வொரு இரவும் அவள் அனுபவிக்கும் நரக வேதனைதான். அந்த வீட்டில் இருந்த போது குளியலைறையில் கண்ணீர் விடுவாள். இங்கு வந்ததிலிருந்து கண்ணாடி முன் நின்று மௌனமாக அழுகிறாள். இப்பொழுதும் கண்ணாடியை நோக்கி முன்னேறினாள் லாவண்யா. மெல்ல நைட்டியைத் தூக்கி தன் வலது புற இடுப்பைப் பார்த்தாள்.
சூட்டுக் காயத்தைப் பார்த்ததும் கண்களில் கண்ணீர் உடைப்பெடுத்தது. இடுப்பா இது, எரிஞ்சு போன அடுப்பு எனக் கார்த்திக் கூறியது ஞாபகம் வந்து இன்னும் வேகமாக கண்ணீர் சுரந்தது. அந்தத் தளும்பை மெல்ல தடவியளின் நினைவுகளும் பின்னோக்கி மெல்ல நகர்ந்தது.
அப்பொழுது லாவண்யாவுக்குப் பத்து வயது. அவளும் அனுவுடன் மாமா வீட்டில்தான் இருந்தாள். வேந்தன் மட்டும்தான் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தான். பெண் பிள்ளை இல்லாத சிதம்பரத்துக்கு லாவண்யாவின் மேல் தனிப்பாசம். தந்தை இல்லாத அவளும் தன் தாய் மாமனைத் தந்தையாகவே எண்ணினாள். தாமரை இல்லாத போதுதான் இந்தப் பாச பரிமாற்றம் நடக்கும். லட்டு எனச் செல்லப் பெயரிட்டு முதலில் அழைத்தவர் அவர்தான். மனைவிக்குத் தெரியாமல் தின்பண்டங்கள், துணிமணி என அவளுக்கு வாங்கி வருவார்.
மாமா குடித்து விட்டு வந்து சுருண்டு கொண்டாலும், அவரை எழுப்பி சாப்பாடுக் கொண்டு வந்து கொடுப்பாள் லட்டு. ‘எங்க ஆத்தாம்மா நீ’ என மருமகளை செல்லம் கொஞ்சுவார் அவர்.
ஊரில் அப்பொழுது நிமோனியா காய்ச்சல் பரவி வந்த சமயம், அனுவையும் அது விட்டு வைக்கவில்லை. படுத்தப் படுக்கையாக இருந்த அனுவை இந்துவும், லாவண்யாவும் மாறி மாறி கவனித்துக் கொண்டார்கள். ஹாஸ்பிட்டலில் காட்டி மருந்து மட்டும் வாங்கி வந்திருந்தனர். அங்கேயே தங்க வைக்க இந்துவிடம் பணமில்லை. மகள்களின் படிப்புக்காக ஃபிக்சில்தான் கொஞ்சம் போட்டு வைத்திருந்தார்.
அந்த வாரத்தில் ஒரு மாலை பொழுதில்,
“அம்மா!” எனப் பதறியபடி பாத்ரூமில் இருந்து ஓடி வந்தாள் லட்டு.
“என்னடா?”
“அம்மா, பயமா இருக்குமா. பாத்ரூம் போனேனா, ரத்தம் ரத்தமா வருதுமா” என அழுதாள் லட்டு.
நெஞ்சைப் பிடித்துக் கொண்டார் இந்து. இன்னும் அனுவே வயதுக்கு வந்திருக்கவில்லை. அதற்குள் பத்து வயதிலேயே பூப்பெய்தி நிற்கும் சின்ன மகளை நெஞ்சோடு அணைத்துக் கண்ணீர் வடித்தார். என்னமோ ஏதோ என அன்னையின் கண்ணீரில் பயந்து தானும் அழுதாள் லட்டு.
மகளின் பயத்தைக் கண்டு கண்ணீரைத் துடைத்த இந்து,
“ஒன்னும் இல்லடா ராஜாத்தி. இது எல்லா பொண்ணுங்களுக்கும் வரதுதான். இப்ப நீ பெரிய மனுசி ஆகிட்ட”
அந்த நேரத்தில் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என மகளுக்குக் கற்றுக் கொடுத்தார். மஞ்சள் நீரை அவரே மகள் தலைக்கு ஊற்றினார். காய்ச்சலில் படுத்திருக்கும் அனுவின் பக்கத்திலேயே லாவண்யாவையும் அமர வைத்தார். அதன் பிறகு அண்ணன் அண்ணி வரவிற்காக காத்திருந்தார் இந்து.

Author: VanishaAdmin
Article Title: Uyir Vangum Rojave--EPI 20
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.