அத்தியாயம் 21
காதல்னா நீ போட்டுருக்க ப்ளவுஸ்னு நினைச்சுக்கிட்டியா?
வேணும்னா போட்டுக்கறதுக்கு, வேணான்னா மாத்திக்கறதுக்கு?
(படம் - சிவா மனசுல சக்தி)
காலேஜ் முடிந்து களைப்புடன் பேக்கை தோளில் மாட்டிக் கொண்டு வந்தாள் லாவண்யா. நாளை அசைண்ட்மென்ட் பிரசென்ட் செய்ய வேண்டிய நாள். அவள் குழுவில் உள்ள இருவர் டெங்கு காய்ச்சலால் மெடிக்கல் லீவில் இருந்தார்கள். நான்கு பேர் வேலையை இவளும் இன்னொரு தோழியும் மட்டுமே செய்ய வேண்டியதாகி விட்டது. லைப்ரரியில் புத்தகங்களைக் குவித்து வைத்து, அதன் மேல்தான் இவ்வளவு நேரமும் விழுந்து கிடந்தாள். புத்தகத்தையும் கூகுள் ஆண்டவரையும் மாற்றி மாற்றிப் பார்த்து டைப்பியது கண்ணுக்குள் பூச்சி பறந்தது. லன்ச் கூட போகவில்லை. வயிறு வேறு பசியில் பாடியது. போன் செய்து வீராவை வரச் சொல்லியிருந்தாள்.
இப்பொழுதெல்லாம் காலேஜ் முடிய முன்னே பின்னே ஆவதால், போன் செய்துதான் வரச் சொல்லுவாள். வீரா, மாண்புமிகு மாமா ஆகியிருக்க, அவனைக் காக்க வைக்கப் பிடிக்கவில்லை. யார் எப்படியோ, லாவண்யாவுக்கு வீராவை நிரம்பவே பிடிக்கும். கண்ணியமாக அதே நேரம் கலகலப்புடன் பழகும் வீரா இப்பொழுது அவளின் செல்ல மாம்ஸ்.
காரைப் பார்த்தவுடன் தோழிக்கு பாய் சொல்லி விட்டு ட்ரைவர் பக்கத்து சீட் கதவை திறந்து எப்பொழுதும் போல் உட்கார்ந்தாள்.
“மாம்ஸ்! பசிக்குது. ஏதாவது ஸ்நேக்ஸ் இருக்கா?” எனக் கேட்டவாறே திரும்பியவள், கார்த்திக்கைப் பார்த்து அதிர்ச்சியானாள்.
“வாடி என் மச்சி! வாழைக்காய் பஜ்ஜி! எத்தனை நாளைக்கு இந்தக் கண்ணாமூச்சி டான்ஸ் ஆடுவ? வசமா மாட்டுனயா!” எனச் சிரித்தான் கார்த்திக்.
“டேய் பிராடு! திமிராடா? எங்கடா என் மாமா?” எனக் கேட்டவாறே கதவைத் திறக்க முயற்சித்தாள் இவள்.
“அஸ்க்கு புஸ்க்கு! உனக்காகவே மெக்கானிக் ஷாப் போய் சைல்ட் லாக் போட்டிருக்கேன். நானே வெளிய வந்து திறந்தாத்தான் கதவு திறக்கும் மகாராணி. யாரு கிட்ட உன் தில்லாலங்கடிய காட்டுற. அப்புறம் என்ன சொன்ன? மாமாவா? பிச்சி புடுவேன்டி. உங்கொக்கா புருஷனா இருந்தாலும், மாமா கோமான்னு கூப்புடற வேலைலாம் வச்சிக்காத. நான் மட்டும்தான் உனக்கு மாமா, மச்சி, மச்சான், அத்தான் எல்லாமே” எனப் பேசிக் கொண்டே காரைக் கிளப்பியிருந்தான்.
“எங்கடா என்னைக் கடத்திட்டு போற? முதல்ல என் மாமா எங்கன்னு சொல்லு கார்த்திக்?”
“திரும்பவும் மாமான்னு சொல்லுற! வாய் மேல வாய் வச்சாத்தான் சரியா வருவ!”
படீரென அவன் கையிலே ஒன்றுப் போட்டாள் லாவண்யா.
“வலிக்குதுடி பொண்டாட்டி! வீராவ கொஞ்சம் கன்பியூஸ் பண்ணி வேற வேலை குடுத்துருக்கேன்”
“கன்பியூஸ்னு அழகான வார்த்தை சொல்லாத! ஏமாத்தின்னு சொல்லு”
அவள் பேச்சைக் கேட்டுக் கலகலவெனச் சிரித்தான் கார்த்திக்.
“என் கன்னுக் குட்டிடி நீ. மாமன பத்தி எவ்வளவு அழகா புரிஞ்சு வச்சிருக்க. ஆக்சுவலி சனி பெயர்ச்சி வருதுல”
“நீதான் என் வாழ்க்கையில எப்பவோ வந்துட்டியே!”
“சைக்கிள் கேப்ல என்னை மிஸ்டர் சனின்னு சொல்லுற? மறப்போம், மன்னிப்போம்! சனிப் பெயர்ச்சிக்காக நம்ம ஷாப்பிங் காம்ப்ளேக்சுல விலை உயர்ந்த ராசி கல்லுங்க எல்லாம் இன்னிக்கு வந்து இறங்குது. அதுக்கு வீராவோட செக்கியூரிட்டி டீம் அலர்ட்டா இருக்கனும். அவனுக்குப் போன் பண்ணி லோடிங் இடத்துல இன்னைக்கு கல் வரும்னு சொல்லி முடிக்கறதுகுள்ள பேட்டரி முடிஞ்சிருச்சு. அந்த லூசு கலவரம்னு நினைச்சி ஓடி வந்துருச்சி. சரி வந்ததே வந்துட்ட இருந்து பாருன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன், நீ போன் பண்ணுற அவனுக்கு. விடுவனா இந்த சான்ஸ? கார் சாவிய கோழி அமுக்கற மாதிரி அமுக்கிட்டேன்!”
ஒன்றும் சொல்லாமல் சாலையையே வெறித்தவாறு அமர்ந்திருந்தாள் லாவண்யா. அவளது கையைச் சுரண்டினான் கார்த்திக்.
“இப்ப எதுக்கு பூனை மாதிரி சுரண்டுற?” என எரிச்சலைக் காட்டினாள் அவள்.
“என் கன்னுக்குட்டிக்குப் பசிக்குதா? இல்ல இவ்வளவு சூடா இருக்கியே. அதான் கேட்டேன். பின்னால சீட்டுல சமோசாவும், ப்ளாஸ்க்ல டீயும் வாங்கி வச்சிருக்கேன். எடுத்துக்கடா”
சீட்டிலிருந்து பின்னால் எம்பி அவனை இடித்தவாறே எடுத்தாள் லாவண்யா. பரவச நிலைக்குப் போன கார்த்திக்,
“தொட்டுத் தொட்டு என்னை
வெற்றுக் களி மண்ணைச்
சிற்பமாக யார் செய்ததோ” எனப் பாடலை ஹம் செய்தான்.
அவன் குமட்டிலேயே குத்தியவள்,
“ரோட்டைப் பார்த்து ஓட்டு. என் பக்கேட் லிஸ்டுல இன்னும் ஒன்னைக் கூட நான் செய்யல. அதுக்குள்ள எம்ஸ் மாமாகிட்ட அனுப்பிடாத!” என்றாள்.
“எம்ஸ் மாமாவா? எவன்டி அது இன்னொரு மாமா? இதெல்லாம் நல்லா இல்ல லட்டும்மா!”
“அடச்சீ! எம்ஸ் மாமான்னா எமதர்ம மாமா”
“ஊருல உள்ளவன், மேலோகத்துல உள்ளவன் எல்லாத்தையும் இந்தச் செப்பு வாயால மாமான்னு கூப்புடுற. ஹ்ம்ம்ம்! நான் மட்டும் என்னடி பாவம் பண்ணேன்? இப்படி ஓரவஞ்சனை பண்ணுற?” என்றவனின் குரல் முழுக்க ஏக்கம்.
“உன்னலாம் மாமான்னு கூப்புட முடியாது. வேணும்னா பீமான்னு கூப்புடறேன்” எனச் சமோசாவை மொக்கியவாறே சொன்னாள்.
முறைத்தவன்,
“எனக்கு ஒரு சமோசா குடு லட்டு. நீ மட்டும் வச்சு அமுக்கற” என்றபடி ஸ்டியரிங் வீலில் இருந்து வலது கையை நீட்டினான்.
“இந்த சமோசாவா?” எனக் காட்டியவள், கடைசி பீசையும் தன் வாயில் போட்டு அமுக்கினாள்.
“சாரி கார்த்திக், முடிஞ்சிருச்சு. எந்தக் கடையில வாங்குனா? எண்ணெய் வாசம் அடிக்குது. இனிமே வாங்குனா, என் காலேஜ் அப்போசிட்ல ஒரு பாய் கடை இருக்கு பாரு, அங்க வாங்கு. டேஸ்ட் அள்ளிக்கும்”
“நல்லா மொக்கிட்டு, பேச்சைப் பாரு. டீயாச்சும் குடுடி!”
“அதெல்லாம் முடியாது. கொஞ்சம்தான் இருக்கு. எனக்கே பத்தாது”
தலையில் அடித்துக் கொண்டான் கார்த்திக்.
“நீ நல்லா வருவ லட்டும்மா. ரொமெண்டிக்ன்னு ஒரு வார்த்தை இருக்கு. அப்படின்னா என்ன அர்த்தம்னு உனக்குத் தெரியுமா?”
“எது? காசு பத்தாம ஒரு கிளாஸ் டீ வாங்கி ரெண்டு பேரும் ஒரு மணி நேரமா நீ குடி, இல்ல நீங்க குடிங்கன்னு டைம் பாஸ் பண்ணுவாங்களே அதுவா? கண்றாவி. நானா இருந்தா, நீ குடிக்காட்டி போடா, நான் குடிக்கறேன்னு ஒரே மொடக்குல முழுங்கிருவேன்”
வாய் விட்டுச் சிரித்தான் கார்த்திக்.
“நீ கேட்டா ஒரு கப் என்ன, ஒரு கஃபேவே வாங்கிக் குடுப்பேன் கண்ணம்மா” எனச் சொன்னபடியே காரை பார்க்கிங் செய்திருந்தான் கார்த்திக்.
“எங்க வந்துருக்கோம்?”
“என் அபார்ட்மெண்டுக்கு”
“அங்கெல்லாம் நான் வர மாட்டேன். பப்ளிக் பிளேசுக்கு கூட்டிட்டுப் போ”

Author: VanishaAdmin
Article Title: Uyir Vangum Rojave--EPI 21
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.