அத்தியாயம் 22
“ஆம்பிளை புள்ளைங்க அழக்கூடாதுடா
ஹ்ம்ம். ஆம்பிள புள்ளைங்கள அழ வைக்கக் கூடாதுன்னு பொம்பள பிள்ளைங்ககிட்ட போய் சொல்லு”
(படம் - ரெமோ)
“ரோஜா!”
“ஹ்ம்ம்”
காலையில் கிளம்பிக் கொண்டிருந்தவளை அழைத்தான் வேந்தன்.
“வீக்கெண்ட் குல தெய்வம் கோயிலுக்குப் போறோம். ஞாபகம் இருக்குத்தானே?”
“ஹ்ம்ம்”
ஒற்றை வார்த்தை பதில்.
இவனும் வேலைக்குக் கிளம்பி இருந்தான். காலையில் அவள் கிளம்பி மேக்கப் போடும் நேரத்தை அனுமானித்து எதாவது சாக்குச் சொல்லி ரூமுக்குள் இருப்பான் வேந்தன். அவள் லிப்ஸ்டிக் ஒற்றுவதையும், முகத்துக்குப் பவுடர் போடுவதையும், அவளை மாதிரியே அடங்காத குட்டை முடியைச் சீவுவதையும் ஓரக் கண்ணால் பார்த்து சைட் அடிப்பான். திருமணம் ஆகியும் மனைவியை சைட் அடிப்பவன் வேந்தன் ஒருவனாகத்தான் இருப்பான். கார்த்திக் கைங்கர்யத்தால் நடந்த கூடலுக்குப் பிறகு, இருவரும் அதைப் பற்றி பேசுவதையோ மீண்டும் பரீட்சித்துப் பார்ப்பதையோ தவிர்த்திருந்தார்கள்.
அவனே ஆரம்பிக்கட்டும் என அவளும், காதல் இல்லையென வீர வசனம் பேசி விட்டு எப்படி தொங்கிக் கொண்டு போவது என இவனும் காலத்தைக் கடத்தினார்கள்.
வேலைக்குப் போவது போல் அணியாமல், முட்டி வரை இருக்கும் வெள்ளை டிரஸ் அணிந்திருந்தாள் தேவி.
“வேற எங்கயாவது போறயா ரோஜா? எப்பவும் வேலைக்குப் போடற மாதிரி இல்லையேன்னு கேட்டேன்”
“ஹ்ம்ம்”
கடுப்பாகி விட்டது வேந்தனுக்கு.
“இந்த ஹ்ம்ம்கு என்ன அர்த்தம்? கேட்ட கேள்விக்கு எல்லாம் அதே பதில்தான் வருது”
“ஹ்ம்ம்னா, ஆமாம்னு அர்த்தம். பதில் சொல்லப் பிடிக்கலன்னு அர்த்தம். எரிச்சலா இருக்குன்னு அர்த்தம். இன்னும் கொஞ்ச நேரம் நீ பேசுனா, எதாவது பறக்க போகுதுன்னு அர்த்தம்” என முகம் சிவக்கக் கத்தியவளை ஆர்வமாகவும் ஆச்சரியமாகவும் பார்த்தான் வேந்தன்.
‘என் செல்லத்துக்கு ஏன் இப்படி கோபம் வருது இன்னிக்கு? கோபத்துல கூட அழகாத்தான் இருக்கா. செவ செவன்னு தக்காளி மாதிரி. அடச்சே! அம்மா கிட்ட பேசி, நமக்கும் இந்தத் தக்காளி வந்து ஒட்டிக்கிச்சே’
“ரோஜாம்மா! என்னடா பிரச்சனை? ஏன் ஒரு மாதிரி இருக்க?”
அவள் அருகில் சென்று கையைப் பிடித்துக் கேட்டான். தேவியின் கண்கள் லேசாக கலங்கியது போல் இருந்தன. வேந்தனுக்குத் தாங்கவே முடியவில்லை. பாசமாக அணைத்துக் கொண்டான். சிறிது நேரம் அவன் அணைப்புக்குள் அடங்கியவள்,
“நான் போகனும்” என்றவாறே விலகினாள்.
“எங்கடா?”
“எங்கயோ போறேன். உனக்கு என்ன? அப்படியே பாசக்காரன் மாதிரி நடிக்காத” எனக் கத்தியவள், அவனது மாறிய முகத்தைக் கண்டு விடுவிடுவென வெளியேறி விட்டாள்.
கார்த்திக் கார் எடுக்க வருவதற்குள் அவளே ஓட்டிக் கொண்டுச் சென்று விட்டாள்.
நண்பர்கள் இருவரும் புழுதி பறக்கச் செல்லும் காரைப் பார்த்தபடியே வாசலில் நின்றார்கள்.
“என்ன மச்சி, உங்க மேடம் டிமிக்கி குடுத்துட்டுப் போய்ட்டாங்களா?”
“அதெல்லாம் நமக்கு புதுசா மச்சி. உன் முகம் ஏன் இப்படி செத்து சுண்ணாம்பா இருக்கு? அடி பலமோ?”
“போடா டேய்! உள்ள வாங்குனாலும், ஒன்னுமே நடக்காதது போல கெத்தா நடப்போம்டா நாங்க. உங்க மேடம் இவ்வளவு வேகமா எங்கடா போறாங்க? உனக்கு ஏதாவது தெரியுமா?”
“எனக்கு எப்படி மச்சி தெரியும்? வா, மச்சி! சாப்பிடற வேலைய பாப்போம்”
கார்த்திக்கை ஆழமாய் பார்த்த வேந்தன் ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை.
‘எமகாதகன்டா நீ! தெரிஞ்சா மட்டும் சொல்லவா போற? அடிமை நம்பர் ஓன் ஆச்சே. எனக்குக் கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் ஆகப் போகுது. இன்னும் நான் அடிமை நம்பர் டூதான்’
பொறாமை லேசாக எட்டிப் பார்த்தது வேந்தனுக்கு.
இருவரும் சாப்பிட உள்ளே நுழைந்தனர்.
“அப்புறம் மச்சி, மூவி நைட் எப்படி இருந்துச்சு? என் பிரச்சனையில இத பத்தி கேக்க மறந்துட்டேன்”
“உனக்கு என்ன பிரச்சனை மாமு? சொல்லு நான் தீர்த்து வைக்கிறேன்”
‘பிரச்சனைய சொன்னா என்னையல தீர்த்துருவ. போடா! இந்த சென்டிமென்டுக்கெல்லாம் மயங்கி நான் வாய திறக்க மாட்டேன்’
“அதெல்லாம் பெருசா ஒன்னும் இல்லை மச்சி. பச்சா மேட்டர்தான். விட்ட அறையில, எல்லாம் செட்டில் ஆயிருச்சு”
“அறையா?”
“ஐ மீன், என் வீட்டுல அறை ஒன்னு வாடகைக்கு விடலாம்னு இருக்கேன். சும்மா பூட்டித்தான இருக்கு”
“ஓ! சரி மச்சி. நீ குடுத்த ஐடியா செம்ம மச்சி. பட்சி இன்னைக்கு வரைக்கும் ஜாலி மூட்லதான் இருந்துச்சு. இப்ப என்னான்னா ‘மாச்சோ என்னாச்சோ, நல்ல மூட் எங்க போச்சோன்னு’ என்னை பாட விட்டுட்டா. அவ கோச்சிகிட்டா என் மனசுல ரத்தம் கொட்டுது மச்சி”
‘ரத்தம் கொட்டுதாம்! டேய் விட்டுட்டுப் போகப் பார்த்தவன்தானேடா நீ? இப்ப வந்து சீன போடுற. கேக்கறவன் கேணைன்னா, கே.எப்.சில கூழ் ஊத்துறாங்கன்னு சொல்லுவ. மவனே, இன்னும், இன்னும் உன்னை சோதிச்சிக்கிட்டே இருப்பேன்டா, நீ மேடத்துகிட்ட பாசம் வச்சிருக்கியா இல்லே வேஷம் போடறியான்னு தெரிஞ்சுக்க’
வெளியே சிரித்துக் கொண்டே மனதில் வேந்தனை ஓட்டி எடுத்தான் கார்த்திக்.
“கவலைப்படாதே மச்சி. ஊருக்கு போய் நல்லா வேண்டிக்கிட்டு வரலாம். எல்லாம் சரியா ஆகிரும்”
“அதுவும் சரிதான். வேண்டிக்கிட்டு வாங்கன்னு சொல்லாம, வரலாம்னு சொல்லுற? உன்னை நான் கூப்புடவே இல்லையே?”
“மேடம்தான் வர சொன்னாங்க. ரெண்டு பேரும் புது மாப்பிள்ளை. கார் ஓட்ட ஆள் வேணாம்?” எனப் புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டான் கார்த்திக்.
லாவண்யாவை இரண்டு நாட்கள் கண் குளிர பார்க்கும் பாக்கியத்தை எப்படி நழுவ விடுவான் அவன். சமாதானம் செய்து வீட்டில் விட்டு விட்டாலும், அதற்கு பிறகு அவள் போனையே எடுப்பதில்லை. மேசேஜையும் ரிப்ளை செய்வது இல்லை. ஓல்டு குருடி, டோரை திறடி கதையாக ஆகிவிட்டது.
“ரோஜா சொன்னா சரிதான். ஓகே மச்சி, நைட்டு பார்ப்போம்”
இரவு நடக்கப் போகும் பிரளயத்தைப் பற்றித் தெரியாமல் கிளம்பினான் வேந்தன்.
அங்கே இந்துவின் இல்லத்தில்,
“அனும்மா!” என மனைவியை அழைத்தான் வீரா.
சமையல் அறையிலிருந்து அடித்துப் பிடித்து ஓடி வந்தாள் அனு. ஹாலில் வேட்டி ஜிப்பாவில் நின்று கொண்டிருந்தான் அவன். என்ன என்பது போல் நிமிர்ந்து பார்த்தாள் அனு. திருமணத்திற்கு முன்பு பேசியவள்தான். இப்பொழுது என்னமோ வெட்கம் வந்து தடுத்தது.
“கிளம்பி வா!”
“எ..எங்க?” எனத் திக்கினாள் அனு.
“இன்னைக்கு என்னோட ‘வந்த’ டே. அதான் கோயிலுக்குப் போய்ட்டு வரலாம்”
“வந்த டேவா?” அனுக்கு மண்டைக் குழம்பியது.
‘இவரு என்ன சொல்லுறாரு? வயசுக்கு வந்த நாளா இருக்குமோ? ஆம்பிளைங்களுக்கும் இதெல்லாம் இருக்கா? அண்ணனுக்கு அம்மா சடங்கு ஒன்னும் செய்யலியே?’
“ஆமாடா. பொறந்த தேதி தெரியாது. ஆஸ்ரமத்துக்கு வந்த தேதிதான் தெரியும். அதையே அங்க, என் பொறந்த தினமா கொண்டாடுவாங்க. அழகா ஒரு சேலை கட்டிட்டு வா. லாவண்யாவை காலேஜில விட்டுட்டுப் போய்ட்டு வரலாம்”

Author: VanishaAdmin
Article Title: Uyir Vangum Rojave--EPI 22
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.