அத்தியாயம் 23
நான் உன்னை இறுக்கக் கட்டிப் புடிச்சுகிட்டா சாவு கூட உன் கிட்ட இருந்து என்னைப் பிரிக்க முடியாதுல. நீ என்னை உன் கூடவே வச்சிருப்ப இல்ல. நீ என்ன காப்பாத்துவ இல்ல. சாக விடமாட்டல்ல.
(படம் – இதயத்தை திருடாதே)
“ரோஜா!” பயம் கலந்த பாசத்துடன் கூப்பிட்டான் வேந்தன்.
“என்ன ரோஜா? ரோஜாவுக்கு என்ன வச்சிருக்க?” எனக் கத்தினாள் அவள்.
“ஏன்டா இவ்வளவு கோபம்?”
“கோபப்படாம உன்னை மடியில் வச்சு கொஞ்சுவாங்களா?” எனப் பறந்து வந்தது அவளது பெரிய சீப்பு.
அதைக் கையில் பிடித்தவன்,
“ரோஜா குட்டி, நோ வயலன்ஸ்! பேச்சு பேச்சா இருக்கும் போது, அடிதடி வேணாமே” என்றான்.
“யாரு உனக்குக் குட்டி? நானா? பாசமா கொஞ்சுற! உன் குட்டி வாழ்க்கையில இன்னிக்கு என்ன நாளுன்னு தெரியுமா?” எனக் கேட்டவளின் குரல் கூர்மையாக வந்தது.
“அது வந்து”
‘பிறந்த நாளா இருக்குமோ? இல்லையே அதுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கே. வேலண்டைன்ஸ் டேவா? இல்லையே! ஹ்ம்ம் பிரண்ட்ஷிப் டே? காபி டே? பஸ் டே? எய்ட்ஸ் டே? எந்த டே டீ?’
“இத்தாலி நேஷனல் டேவா ரோஜா?”
வந்தது பார் அவளுக்குக் கோபம். இத்தாலி பாஷையில் வண்ண வண்ணமாகத் திட்டினாள். வேந்தனுக்கு ஒன்றும் புரியாததால் ஒரு அசட்டுச் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான். வாய் வலிக்கத் திட்டியவள் பவுடர் டப்பாவை விட்டடித்தாள். அவனைத் தாண்டி பின்னால் விழுந்தது அது.
“என்னன்னு சொல்லுமா!”
அவனின் ஆழ்ந்த பாசமானக் குரலில் உடைந்து அழ ஆரம்பித்தாள் தேவி. பதறிவிட்டான் வேந்தன். அவள் அருகே சென்றவன்,
“அழாதே ரோஜா! நீ அழுதா என்னால தாங்க முடியலை” என கைகளைப் பற்றிக் கொண்டான்.
கையை உதறியவள்,
“இன்னிக்கு என்னோட மாம் இறந்த நாள். நேத்து நைட்டுல இருந்து உன் கிட்ட பாசமா ஒரு பார்வை, ஓர் அணைப்பு, ஓர் ஆறுதல் வார்த்தைன்னு எதிர்ப்பார்த்து நான் ஏமாந்துட்டேன். உனக்கு என் மேல துளி கூட அக்கறை இல்லை மலர்” எனச் சொல்லித் தேம்பித் தேம்பி அழுதாள்.
வேந்தனுக்கே பாவமாகி விட்டது. கிட்டே போனாலும் தள்ளி விடுகிறாள். செய்வதறியாமல் அவள் அழுவதை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“உன் அப்பா எப்ப இறந்தாரு, எப்படி இறந்தாரு எல்லாம் எனக்குத் தெரியும் மலர். உங்க அம்மாவுக்கு என்ன சீக் இருக்கு, என்ன மெடிசன் எடுக்கறாங்க, உன் தங்கைங்க ஹெல்த், அவங்க பேர்த் டேட் இப்படி உன் சம்பந்தபட்ட எல்லா விஷயமும் எனக்குத் தெரியும். பாசம் இருந்தா, அவங்கள பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கத் தோணும். உனக்குத்தான் என் மேல அப்படி எதுவும் இல்லையே” என அழுதபடியே பேசினாள்.
“அப்படி எல்லாம் இல்ல ரோஜாம்மா. முதல்ல எப்படியோ இப்ப உன் மேல நான் உயிரையே வச்சிருக்கேன்”
“போடா! கல்யாணம் பண்ண கடமைக்கு ஒன் டே என் கிட்ட அட்வாண்டேஜ் எடுத்துக்கிட்ட. அப்புறம் யூஸ் அன்ட் த்ரோ மாதிரி என்னைக் கண்டுக்கிறதே இல்ல. நீ என் மேல உயிரை வச்சிருக்கியா? நான்தான் நீ நழுவிப் போனாலும், உன்னை இழுத்துப் பிடிக்கறேன். என்னால முடியலைடா. போதும்! நான் புடிச்சதெல்லாம் போதும். போடா! உன்னை விட்டுட்டேன். நீ தாராளமா போ. எனக்கு என் மனசுல உள்ள டீமன்ஸ் கூடவே போராட சக்தி இல்ல, இதுல உன் கூடயும் சேர்ந்து போராட முடியல. நான் தோத்துட்டேன்! உன் விஷயத்துல தோத்துட்டேன்” என அழுது கொண்டே பேசியவள், போகப் போக ஆக்ரோஷமானாள்.
“நீ வேணா! எனக்கு யாரும் வேணா!” எனத் திரும்பத் திரும்பக் கத்தியவள், கையில் கிடைத்தப் பொருட்களை எல்லாம் விட்டடிக்க ஆரம்பித்தாள்.
“ரோஜாம்மா, ரோஜா! கால்ம் டவுன். ரோஜா!”
அவளைப் பிடித்து தடுத்தான் வேந்தன். கண் மண் தெரியாத ஆத்திரத்தில் அவன் கையைப் பிடித்துக் கடித்தாள். அவளை அணைத்தவாறே அவள் கோபம் தீரும் வரைக் கடிக்க விட்டான் வேந்தன். வலியில் கண் கலங்கியது! அப்பொழுதும் வாய் திறக்காமல் பொறுத்துக் கொண்டான்.
அதற்குள் பொருட்கள் உடைந்த சத்தத்தில் கார்த்திக் ஓடி வந்திருந்தான். கதவின் வெளியே நின்று கொண்டு,
“மச்சி, நான் உள்ள வரவா? என்னடா ஆச்சு? சொல்லுடா” எனப் பதறினான்.
“ஒன்னும் இல்ல நான் பார்த்துக்கறேன். நீ போ!” என்றான் வேந்தன்.
அவன் குரலிலேயே எதுவோ சரியில்லை என அனுமானித்தவன்,
“டேய்! நான் உள்ள வரப் போறேன். ஸ்பேர் கீ என் கிட்ட இருக்கு. நீங்க ரெண்டு பேரும் டீசண்டா இருக்கீங்களா?” எனக் கேட்டான்.
“வந்து தொலைடா!”
கதவைத் திறந்து கொண்டு இறைந்திருந்த பொருட்களைத் தாண்டி அவர்கள் அருகில் வந்தான் கார்த்திக். அங்கே கையில் ரத்தம் சொட்ட நின்று கொண்டிருந்த வேந்தனையும், இன்னும் அவன் கையைக் கடித்துக் கொண்டிருந்த தேவியையும் பார்த்து அதிர்ந்தான். வேறு வழி தெரியாமல் தேவியின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டான் கார்த்திக்.
அதிர்ச்சியில் வேந்தனின் கையைத் தானாக விடுவித்தாள் அவள். கன்னத்தைப் பிடித்தபடி விழித்துக் கொண்டிருந்த தேவியை அணைத்துக் கொண்ட வேந்தன்,
“ஏன்டா என் பொண்டாட்டிய அடிச்ச?” எனக் கேட்டு, கார்த்திக்குக்கு விட்டான் ஓர் அறை.
இப்பொழுது கன்னத்தைப் பிடித்தபடி விழிப்பது கார்த்திக்கின் முறையாகியது.
கார்த்திக்கைப் பார்த்து நக்கல் சிரிப்புச் சிரித்த தேவி அப்படியே மயங்கி சரிந்தாள். அவள் விழுவதற்குள் வேந்தனும், கார்த்திக்கும் தாங்கிப் பிடித்தனர். வேந்தன் பிடித்ததைப் பார்த்து மெல்லத் தன் பிடியை தளர்த்திக் கொண்ட கார்த்திக்,
“தூக்கி போய் படுக்க வைடா மேடத்தை!” என கூறிவிட்டு பாத்ரூம் சென்றான்.
அவன் திரும்பி வந்த போது கையில் ஈர டவல் இருந்தது.
“இந்தாடா! துடைச்சி விடு முகமெல்லாம். நான் கீழ போய் பால் எடுத்துட்டு வரேன். துடைச்சிட்டு உன் கைய கழுவி துண்டு வச்சு கட்டிக்க. இவங்கள செடடில் பண்ணிட்டு ஹாஸ்பிட்டல் போகலாம்”
கார்த்திக் வெளியேறியவுடன், டவலால் மெல்ல அவள் முகம், கழுத்து, கை, கால்கள் என ஒற்றி எடுத்தான் வேந்தன். கார்த்திக் சொன்னது போல ரத்தம் வந்த கையை சுத்தம் செய்து கட்டியவன், மீண்டும் கட்டிலருகில் வந்து அமர்ந்தான். இவன் மனம் மாறி வரும் போது, தன்னை வேண்டாம் என அவள் சொன்னது வேந்தனை மிகவும் பாதித்தது.
சோகமாக,
“ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே” எனப் பாடினான்.
மெல்ல கை நீட்டி வேந்தனின் கையைப் பற்றிய ரோஜா,
“மலர்! இந்த சைக்கோவ விட்டுட்டுப் போயிட மாட்டியே? உன்னைத் தவிர எனக்கு யாருமே இல்லை. நீயும் என்னை விட்டுட்டுப் போயிட்டா, நான் உயிரோட இருப்பேன், ஆனா உயிர்ப்பா இருக்க மாட்டேன். ஐ எம் சாரி மலர்” என்றாள்
“நீயே விரட்டினாலும், நான் உன்னை விட்டுப் போக மாட்டேன் ரோஜா”
“கை வலிக்குதா மலர்?”
“இல்லைடா! வலிக்கல. நீ கவலைப்படாதே”
தேவியை அமரவைத்து கார்த்திக் கொடுத்தப் பாலை மெல்ல புகட்டினான் வேந்தன். பின் படுக்க வைத்து
“இப்போ தூங்குடா!” எனத் தட்டிக் கொடுத்தான்.
அவள் உறங்கியதும், இவர்கள் இருவரும் அறையைச் சுத்தம் செய்தனர். பின் முனிம்மாவை அவளுக்குக் காவலாக வைத்து விட்டு ஹாஸ்பிட்டல் கிளம்பினர்.
“கை வலிக்குதாடா?”
“இல்லடா, குளு குளுன்னு சுகமா இருக்கு”
“இந்த நக்கல்தானே வேணாங்கறது”
“அப்புறம் என்னடா கேள்வி? ரத்தம் வர அளவுக்குப் பல் பதிஞ்சிருக்கு. வலிக்காம இருக்குமா?”
“வேந்தா! மேடம் இப்படி நடந்துகிட்டது உனக்குப் பயமா இருக்கா?”
“எப்படி நடந்துகிட்டது?”
“அதான்டா, சைக்கோ மாதிரி பிஹேவ் பண்ணது!”
“சைக்கோன்னு ஏன்டா சொல்லுற? மனத் தளர்ச்சி, மன அழுத்தம் இப்படின்னு சொல்லு”
“ஏதோ ஒன்னு. நிஜமா சொல்லு அவங்க நடந்துகிட்டத பார்த்து உனக்குப் பயம் வரல?”
“நம்புடா! பயம் எல்லாம் இல்ல”
சந்தேகமாகக் கார்த்திக் பார்க்கவும்,
“நம்புனாத்தான் எம்.ஜி.ஆர். நம்பலைனா நம்பியார். நீ எம்.ஜி.ஆரா, நம்பியாரா?” எனக் கேட்டுச் சிரித்தான் வேந்தன்.
“போடா! மேடம் கையில கடிச்சதுக்கு பதிலா வாயில கடிச்சிருக்கனும்”
“கண்கள் சிவக்கக் கத்த ஆரம்பிச்சப்போ முதல்ல பயமா இருந்துச்சு மச்சி. அவ பேச ஆரம்பிச்சவுடனே அவ மனசுல என்ன இருக்குன்னு புரிஞ்சது. என் மேல தப்புன்னும் தெரிஞ்சது. என் மனச அவளுக்கு உணர்த்திருக்கனும். இப்படி லேட் பண்ணிட்டேன். இனிமே ரோஜாவ காக்குற முள் போல, நான் பக்குவமா என் ரோஜாவ பார்த்துக்குவேன்”
“ரொம்ப தேங்க்ஸ்டா மச்சி”
“என் பொண்டாட்டிய நான் பார்த்துக்கறதுக்கு நீ ஏன் தேங்க்ஸ் சொல்லனும்?”

Author: VanishaAdmin
Article Title: Uyir Vangum Rojave--EPI 23
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.