Uyir Vangum Rojave--EPI 29

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
923
-1,952
93
அத்தியாயம் 29

தேள்னா கொட்டும், பாம்புன்னா கொத்தும், ஆம்பிளைனா சபலப்படத்தான் செய்வான். இட்ஸ் அ பயலோஜிக்கல் அர்ஜ்.

(படம் – கவன்)

Amalfi coast, Italy (அமல்பி கோஸ்ட், இத்தாலி)


முட்டி வரை இருக்கும் ஸ்விம்மிங் ட்ரங்க் அணிந்து, சட்டை இல்லாமல் கடற்கரை மர பெஞ்சில் துண்டு விரித்துப் படுத்திருந்தான் ராகவன். கண்களில் கறுப்பு கண்ணாடி அணிந்து, சூரிய கதிர்கள் உடலை வருட ஆழ்ந்த நித்திரையில் இருந்தான் அவன். பக்கத்தில் இருந்த சிறு மேசையில் அன்னாசிப் பழம் கலந்த காக்டேயில் வீற்றிருந்தது. கடல் காற்றின் சுகந்தமும், அலைகளின் ஆர்ப்பரிப்பும் தந்தை மடியாய் அவனைத் தாலாட்டியது. தந்தை போனதிலிருந்து ஊண் உறக்கமின்றி தவித்தவனை இத்தாலி இரு கரம் கொண்டு அரவணைத்துக் கொண்டது.

சோம்பலுடன் கண் விழித்தவன், மெல்ல எழுந்து அமர்ந்தான். காக்டயிலை ஒரு மிடறு விழுங்கியவன், கண்களை சுற்றிலும் சுழல விட்டான். நீச்சல் உடையில் வெள்ளை வெளேறென்ற யுவதிகள் அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தனர். பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் எனச் சுவைத்தறிந்தவனுக்கு யாரிடமும் மனம் லயிக்கவில்லை. மீண்டும் கடலை நோக்கி நடந்தவன், ஒரு நீச்சலைப் போட்டு விட்டு தண்ணீர் சொட்டச் சொட்டக் கரையேறி வந்தான்.

பல பெண்களின் கண்கள் அவனைச் சுற்றி வட்டமடித்தன. ஆறடி உயரமும், செதுக்கி வைத்த உடற்கட்டும், ஆண்மையை எடுத்துக் காட்டும் மீசையும் கன்னியரை மட்டும் அல்ல வெள்ளைக்கார கிழவிகளையும் திரும்பி பார்க்க வைத்தது. நீர் வழியும் உடம்பை துடைத்துக் கொண்டவன் ஹோட்டல் அறையை நோக்கி நடந்தான். அவனின் ஒவ்வொரு அசைவையும் ஒரு ஜோடி கண்கள் பிரமிப்பாக பருகிக் கொண்டிருந்தன. அவள்தான் ரோஸ்மேரி.

ரோஸ்மேரி பதினேழே வயது நிரம்பிய அழகு மங்கை. பெற்றவரின் கூட்டிலேயே அடைந்திருந்தவள், இப்பொழுதுதான் சுதந்திரமாக பறக்க விடப்பட்டிருக்கிறாள். பரீட்சை முடிந்தவுடன் தனது இரட்டை சகோதரியோடு உல்லாசப் பயணம் வந்திருந்தாள். வயதிற்குறிய துறுதுறுப்பு, ஆர்ப்பரிப்பு, புதிதாய் கிடைத்த சுதந்திரம் என குதூகலமாக இருந்தாள் ராகவனைப் பார்க்கும் வரை.

அவர்கள் நாட்டு ஆண்களைப் போல் வெள்ளையாக இல்லாமல், கருத்த சிகையுடன் வித்தியாசமாக இருந்தவனை ஒரு வேடிக்கையாகத்தான் முதலில் பார்த்தாள். ராகவனின் அலட்சிய போக்கும், பெண்களை ஏறிட்டுப் பார்க்காத பார்வையும்(?) மேரியை அவன் பக்கம் கட்டி இழுத்தது. ராகவன் தங்கியிருக்கும் ஹோட்டலில்தான் சகோதரிகளும் தங்கி இருந்தார்கள். அவர்கள் ஹோட்டல் பாரில்தான் ராகவனை முதன் முதலாக பார்த்தாள் மேரி. தனியாக அமர்ந்து ஸ்காட்ச் குடித்துக் கொண்டிருந்தவனைப் பல பெண்கள் நெருங்கி ஆட அழைத்தும் மென்மையாக மறுத்து விட்டான். அமைதியாகக் குடித்துவிட்டு எழுந்து நடந்தவன், இவர்கள் மேசைக்கு வரும் போது கொஞ்சம் தடுமாறினான். மேரிதான் அவன் கைப் பிடித்து நிறுத்தினாள்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“தேங்க்ஸ் லிட்டல் ஓன்!” எனக் கன்னத்தை தட்டி விட்டு திரும்பி பார்க்காமல் சென்று விட்டான்.

அவன் பார்த்தப் பார்வைக்கு அர்த்தம் புரியாவிட்டாலும், அந்தப் பார்வை இரவும் பகலும் அவளை ஏதோ செய்தது. அன்றிலிருந்துதான் இந்தப் பின் தொடரும் படலம்.

ராகவன் ஹோட்டலை நோக்கி நடக்கவும், தானும் எழுந்து பின் தொடர்ந்தாள் மேரி. அவன் லிப்டுக்குள் நுழைந்து கதவு மூடுவதை கவனித்து, நிற்குமாறு கத்திக் கொண்டே ஓடி வந்தவள் தடுமாறி, ராகவனின் மேல் மோதிக் கொண்டு நின்றாள். நிற்க தடுமாறியவளை ஒரு கரம் கொண்டு நிலைப்படுத்திய ராகவன்,

“ஆர் யூ ஆல்ரைட் லிட்டல் ஓன்?” என ஆழ்ந்த குரலில் கேட்டான்.

“ஐம் சாரி. பீச்சுக்கு போய்ட்டு வந்ததால ஸ்லீப்பர் எல்லாம் ஈரம். ஓடி வரவும் வழுக்கிருச்சு. வேரி சாரி” என மீண்டும் மன்னிப்பு கேட்டாள் மேரி.

“தேட்ஸ் ஓகே” என நகர்ந்து நின்று கொண்டான் ராகவன்.

அவன் கைப்பட்டு சிவந்துப் போயிருந்த தன் கரத்தைத் தேய்த்தவாறே ஓரக்கண்ணால் ராகவனை நோட்டமிட்டாள் மேரி. அவன் லிப்ட் கதவைப் பார்ப்பது போல நின்றிருந்தாலும், கறுப்பு கண்ணாடி வழியாக இவளைத்தான் இன்ச் பை இன்ச்சாக ரசித்துக் கொண்டிருந்தான்.

‘வாவ்! என்ன ஓர் அழகு. கை பட்டவுடனே சிவக்குதே இவ தேகம். எக்சோதிக்(exotic) பியூட்டி. சின்னப் பொண்ணு மாதிரி இருக்கா. வூ கேர்ஸ்? அவ கண்ணுல தெரியுதே மயக்கம், அது போதும் எனக்கு. ராகவன் கேம்ஸ் ஸ்டார்ட்ஸ் நவ்’ என எண்ணியவனுக்கு மனதுக்குள் பழைய உற்சாகம் பீறிட்டது.

அங்கிருக்கும் வரைக்கும் தன் மன்மத கணைகளை அவள் மேல் ஏய்வதற்குத் தயாரானான் ராகவன்.

அடிக்கடி அவள் கண்படும் இடங்களில் உலாவ ஆரம்பித்தான். அவள் ஆர்வமாகப் பார்த்தாலும் அவன் தெரியாத மாதிரி ஒரு பார்வை பார்த்து விட்டு நகர்ந்து விடுவான். எல்லா நாட்டு அழகிய பெண்களின் சைக்கலாஜியும் ஒன்றுதான். ஆண்கள் தன்னை ஆர்வமாக பார்த்தால் அலட்சியமாக ஒதுக்கி விடுவார்கள். அதுவே அவர்கள் திரும்பிப் பார்க்காவிட்டால், ‘நான் என்ன அவ்வளவு மொக்கை பிகரா’ என ஈகோ கிளர்ந்தெழ அந்த ஆண் பின்னாலேயே சுற்றுவார்கள். மேரியும் அதற்கு விதிவிலக்கல்ல. தனது இரட்டை சகோதரி புதிதாக கிடைத்த பாய் பிரண்டுடனே தங்கி விட, இவளுக்கு ராகவனை தொடர்வதே வேலையாகிப் போனது. விட்டில் பூச்சி விளக்கைச் சுற்றி வந்து தற்கொலைக்கு நாள் பார்த்தது.

அன்று அதிகாலையிலேயே விழித்த மேரி, சூடாகக் காபி சாப்பிடலாம் என ரூமிலிருந்து இறங்கி வந்தாள். பனிமூட்டமாக இருந்த அந்தக் காலை வேலையில், வெள்ளை டாப்சும், கருப்பு ஸ்கார்டும் அணிந்து உற்சாகமாக துள்ளல் நடையிட்டு நடந்து வந்தவள், எதிரே வந்த ராகவன் மீது மோதிக் கொண்டாள். மீண்டும் விழாமல் பிடித்து நிறுத்திய ராகவன்,

“கேர்ஃபுல் லிட்டல் ஓன்! என்ன அவசரம்?” என மென்மையாகக் கடிந்து கொண்டான்.

கருப்புப் கண்ணாடி அணியாமல் பவர் கண்ணாடி மட்டும் அணிந்திருந்தான். அவனது மயக்கும் கூரிய பார்வையில், தட்டுத் தடுமாறிப் போனது மேரியின் நெஞ்சம்.

“நான் லிட்டல் ஓன் இல்ல. எனக்குப் பதினேழு வயசு ஆச்சு” என உடைந்த ஆங்கிலமும், கை ஜாடையும் கலந்து பேசினாள் மேரி.

அவளுக்கு இத்தாலி மொழிதான் தெரியும். ஆங்கிலம் தட்டுத் தடுமாறி வரும். அவளது கொஞ்சல் மொழியிலும், நடனமாடிய உடல் அசைவிலும் தன்னை மறந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான் ராகவன்.

“சிக்னோர் (சார்)” என அவனை உலுக்கினாள் மேரி.

“பெலேஷா(அழகி)! இந்தப் பனி காலைப் பொழுதுல உன்னைப் பார்க்க தேவதையே இறங்கி வந்த மாதிரி இருந்தது. நான் பிரமிச்சுப் போய் நின்னுட்டேன்” எனக் கன்னம் குழிய சிரித்தான்.

மெதுவாக அவளுக்குப் புரியும்படி வார்த்தைகளை உச்சரித்தான் இவன். கன்னம் சிவக்கப் பார்வையைத் தாழ்த்தினாள் அவள். அவளது சிவந்த கன்னங்களைத் தன் விரலால் தடவிப் பார்த்த ராகவன், சட்டெனத் தன் கையை உறுவிக் கொண்டான்.

“என்னை மன்னிச்சுரு. வெள்ளைக் கன்னத்துல திடீரென ரோஜா பூக்கவும், என்னை அறியாம தீண்டிட்டேன். மன்னிச்சிரு ப்ளிஸ்” எனப் பதறி போய் பல தடவை மன்னிப்பு கேட்டான்.

அவள் பரவாயில்லை எனச் சொல்லியும், மீண்டும் மீண்டும் மன்னிப்பை வேண்டினான்.
 

Author: VanishaAdmin
Article Title: Uyir Vangum Rojave--EPI 29
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
923
-1,952
93
“என்னை மன்னிச்சிட்டதா இருந்தா என் கூட ப்ரேக்பஸ்ட் சாப்பிடனும்” என வேண்டுகோளை விடுத்தான் ராகவன்.

சரியெனத் தலையாட்டினாள் மேரி. மன்மதக் கலையில் பி.எச்.டி வைத்திருக்கும் ராகவனிடம் நோ என ஒரு பெண் சொல்லி விடத்தான் முடியுமா?

சாலையின் இரு மருங்கிலும் கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகள், கபேஸ், பூக்கடைகள், பொட்டிக்ஸ் என அணிவகுத்து நின்றன. பக்கத்தில் இருந்த கபேவுக்கு இருவரும் நடந்தே சென்றனர். பெரிய குடை விரிக்கப்பட்டு கீழே நாற்காலிகளும், சிறு மேசையும் போடப்பட்ட இடத்தை தேர்ந்தெடுத்தான் ராகவன். நாற்கலியை இழுத்து விட்டு, மேரி அமர்ந்தவுடன்தான், அவன் அமர்ந்தான். அவளிடம் கேட்டு அவளுக்குப் பிடித்த புளுபேரி ஸ்கோன், பஃப், வெனிலா லாட்டே என ஆர்டர் செய்தான்.

பேசியபடியே இருவரும் உணவருந்தினார்கள். பேச்சுவாக்கில் அவள் அப்பா வைன்யார்ட் வைத்திருக்கும் பெரும் பணக்காரர், அம்மா மறுமணம் செய்து போய் விட்டார், இரட்டைச் சகோதரி ஒருத்தி மட்டும் இருக்கிறாள் போன்ற விவரங்களைக் கிரகித்துக் கொண்டான்.

“அப்போ உன் சிஸ்டர பார்த்தா நீதான்னு ஏமாந்துருவேனோ?” எனச் சிரித்தான் ராகவன்.

“நோ, சில்லி! நாங்க ரெண்டு பேரும் நன்-ஐடெண்டிகல் டுவின்ஸ். அவ அப்பா மாதிரி இருப்பா, நான் அம்மா மாதிரி இருப்பேன்” எனச் சொல்லி பர்சில் இருந்த போட்டோவைக் காட்டினாள் மேரி.

“அப்பாடா!” எனப் பெருமூச்செறிந்தான் ராகவன்.

“என்னாச்சு வன்?” ராகவன் வன்னாக மாறியிருந்தார்.

“உன் ஒருத்தி அழகே இப்படி ஆள அசரடிக்குதே! நீங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருந்தா இந்தப் பூமி தாங்காதுன்னு நினைச்சேன். நல்ல வேளை அப்படி இல்ல” எனக் குறும்பாக சிரித்தான்.

வெட்கப் புன்னகை சிந்திய மேரி, இவனைப் பற்றி விசாரித்தாள். என்னத்தான் உடலை கிண்ணென வைத்திருந்தாலும் முகம் கொஞ்சம் கிழடு தட்டியிருந்தது .திருமணம் ஆகவில்லை என்று சொன்னால் கழுதை கூட நம்பாது என அறிவான் அவன்.

“எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சு. வைஃப் ரெண்டு மாசத்துக்கு முன்னே இறந்துட்டாங்க. பிள்ளைங்க இல்ல. அவ போன துக்கம் இன்னும் என்னை விட்டுப் போகல. மனச நிலைப்படுத்திக்கத்தான் இங்க வந்தேன்” எனச் சொல்லி லேசாக கண் சிவந்தான்.

உருகி விட்டது மேரிக்கு. ராகவனின் கைப் பற்றி தட்டிக் கொடுத்தாள்.

“ஷீ வாஸ் மை சோல். இப்ப எனக்கு உயிர் இருக்கு, ஆனா உணர்ச்சி இல்ல. நான் சிரிக்க ஆரம்பிச்சதே இன்னிக்குத்தான். உன்னைப் பார்த்துத்தான். யூ லைட் அப் மை மிசரபள் லைப்”

அவளது கையை இருகப் பற்றிக் கொண்டான். கண் கலங்கி விட்டது மேரிக்கு. இல்லாள் இறந்தவன் இமயமலைக்குப் போகாமல் இத்தாலிக்கு ஏன் வந்தான் என அவள் யோசிக்கவும் இல்லை. அப்படி யோசிக்க அவளுக்கு டைம் கொடுக்கவும் இல்லை நமது காதல் மா(மா)மன்னன்.

படுக்கும் நேரம் தவிர இருவரும் ஒன்றாகவே சுற்றி அலைந்தனர். சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அந்த ஊரையே சுற்றினார்கள். பசித்த நேரத்துக்கு சாப்பிட்டு, காரணமே இல்லாமல் சிரித்து, செல்லச் சண்டையிட்டு நெருக்கத்தைக் கூட்டி இருந்தனர் இருவரும். மெல்ல, மெல்ல உணர்ச்சிகளைத் தூண்டி, இத்தாலி வயலினை மீட்ட நாள் குறித்தான் ராகவன்.

“பேபி! இன்னிக்கு நைட் சீ சைட் கேம்பிங் போகலாமா? நான் புக் பண்ணவா? உன் கை கோர்த்துக்கிட்டு இரவுல மின்னும் நட்சத்திரத்தை கணக்கு பண்ணனும்னு ஆசையா இருக்கு”

அவளைக் கணக்கு பண்ணப் போவதை இண்டைரக்டா இப்படி தெரிவித்தான் அந்த ஜெகஜாலக்கில்லாடி.

“யூ ஆர் சச் அ ரோமாண்டிக்!” எனக் கிறங்கினாள் மேரி.

அவள் கன்னத்தைச் சிவக்க நிமிண்டினான் இவன். வலிக்கிறது என அவள் சிணுங்க, அடடா என அவன் தடவ இருவரும் கடை வீதியில் காதல் நாடகம் நடத்தினார்கள்.

சிரித்தபடியே வந்த மேரி, ஒரு கடையின் ஷோகேஸ் பொம்மையைப் பார்த்து பிரேக் போட்டதைப் போல் நின்றாள். அழகான வெள்ளை வேடிங் ட்ரெஸ் அது.

அவளையே கவனித்த ராகவன்,

“ஷல் வீ ட்ரை?” எனக் கேட்டான்.

“நெஜமாவா?” வாயைப் பிளந்தாள் மேரி.

“ஆமா டார்லிங். இந்தச் சட்டையில நீ ஸ்னோ வைட் மாதிரி அழகா இருப்ப” எனப் பேசியவாறே அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

கடைச் சிப்பந்தியிடம் சொல்லி, ஃபிட்டிங் பார்க்க வைத்தான். மேரி அந்த உடையை அணிந்து ஃபிட்டிங் ரூமிலிருந்து வெளியே வந்த போது, அவள் முன்னே மண்டியிட்டு மோதிரத்தைக் நீட்டி,

“வில் யூ மேரி மீ ரோஸ்மேரி?” எனக் கேட்டான் ராகவன்.

முகம் புன்னகைக்க, கண்கள் நீரை சொரிய கீழே தானும் மண்டியிட்டு அமர்ந்து ராகவனை அணைத்துக் கொண்டாள் மேரி.

“யெஸ் ஐ வில் மேரி யூ மை டியர் வன்” என அழுதவாறே தலையாட்டினாள் மேரி.

சுற்றி இருந்த கடை சிப்பந்திகள் கைத் தட்ட அங்கேயே மோதிரத்தை அணிவித்தான் ராகவன். அத்தோடு அந்த உடையையும் வாங்கிக் கொடுத்தான் அவளுக்கு. அந்த ப்ரோபசலைப் பற்றி அவள் தமக்கையிடமோ, தந்தையிடமோ கூட சொல்ல விடாமல் அவளை கைக்குள்ளேயே வைத்திருந்தான் ராகவன்.

அன்று இரவு கேண்டில் லைட் டின்னர் சாப்பிட்டு விட்டு சீ சைட் கேம்பிங்குக்கு சென்றனர் இருவரும். கடலோரமாக இருவர் தங்குவதற்கு ஏதுவாக கேம்ப் அமைக்கப்பட்டிருக்கும். கேம்ப் முன்னே சுள்ளிகள் வைத்து நெருப்பு மூட்டப் பட்டிருக்கும். ஒரு கேம்ப்கும் மற்ற கேம்புக்கும் நடுவே நிறைய இடைவெளி இருக்கும். கடற்கரையில் காதல் கரையைத் தேடுபவற்களுக்கான சொர்க்கபுரி அது.

ராகவனின் மடியில் படுத்துக் கொண்டு மின்னும் நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தாள் மேரி.

“வானத்தைப் பார்க்காம, என்னை ஏன் உத்துப் பார்க்கறீங்க?”

“வானத்துல மின்னும் நட்சத்திரத்த என்னால தொட முடியாது டார்லிங். ஆனா உன் கன்னக் கதுப்புல மின்னும் நட்சத்திரம் மட்டும் எனக்கே எனக்கு” என சொல்லியபடியே கன்னத்தைத் தடவினான் அவன்.

மெய் சிலிர்த்தது மேரிக்கு. அவர்கள் கலாச்சாரத்தில் ஆண் பெண் உறவு என்பது சர்வ சாதாரணம். பெற்றவர்களே பிள்ளைகளுக்குத் தகுந்த பாதுகாப்பு முறையை சொல்லிக் கொடுப்பார்கள். பள்ளியிலிலும் சேஃப் செக்ஸ் பற்றிப் போதிக்கப்படும். மேரியின் வாழ்க்கையில் நுழைந்த முதல் காதலன் ராகவன்தான்.

அவன் தொடுகை ஒவ்வொன்றும், அவளின் நாடி நரம்புகளை மீட்டியது.

“உன் கூட இருக்கற ஒவ்வொரு நிமிடமும் நான் என்னோட கவலை எல்லாத்தையும் மறந்துடறேன் மேரி. என் வாழ்க்கையில வந்த வசந்த காலம் நீ. என்னோட கசப்பான பக்கங்களை மீண்டும் இனிப்பா மாத்துனது நீதான்” எனச் சொல்லியவன் மென்மையாக அவள் உதட்டில் தன் உதட்டைப் பொருத்தினான்.

மென்மை கொஞ்சம் கொஞ்சமாக வன்மையாக மாறிய நேரம், அவளை அணைத்தவாறே தூக்கிக் கொண்டு கேம்பினுள் நுழைந்தான்.

“ஆர் யூ ஆன் தெ பில்(pill)?” எனக் கேட்கவும் தவிரவில்லை அவன்.

அவள் தலை ஆமோதிப்பாக அசைந்தவுடன்தான் அடுத்தக் கட்டத்துக்குச் சென்றான் ராகவன்.

மறுநாள் சுள்ளெனச் சூரியன் தடிமனான கேம்ப் துணியையும் மீறி முகத்தில் அடிக்கவும்தான் எழுந்து அமர்ந்தாள் மேரி. முகம் மின்ன, பக்கத்தில் பார்த்தாள். ராகவனைக் காணவில்லை. அவசரமாக கையில் கிடைத்த உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தவள்,

“வன், வன்! வேர் ஆர் யூ?” எனக் கத்தினாள்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரைப் பார்வையைச் சுழற்றினாள், யாரையும் காணவில்லை. மீண்டும் கேம்பில் நுழைந்துப் பார்த்தாள். அவள் கொண்டு வந்த பேக் மட்டும் தான் இருந்தது. ராகவனின் பேக்கை காணவில்லை. மண்டையில் மணி அடிக்க, சரிந்து அப்படியே அமர்ந்தாள் மேரி. கண்களில் தாரைத் தாரையாக கண்ணீர் வழிந்தது.

“ஐ லவ்ட் யூ சோ மச் வன். ஹொவ் குட் யூ டூ திஸ் டு மீ?” எனக் கதறினாள் அவள்.

இந்தியாவுக்குச் செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்த ராகவன்,

‘ஸ்வீட் லிட்டல் ஏஞ்சல், குட் பை!’ என மனதிற்குள்ளேயே பேசி, உதட்டில் உறைந்த சிரிப்போடு தூங்கிப் போனான்.