அத்தியாயம் 30
வீட்டுல உள்ளவங்க ஊர்க்காரங்கன்னு எல்லாரோட எதிர்ப்பார்புங்குற பிரஷர் குக்கர்லதான் நீங்க வாழ்ந்துகிட்டு இருக்கீங்க. பிரஷர் அதிகமாகும் போது விசிலடிக்கும். ஊப், டப். காத்து(உயிர்) போயிரும்.
(படம் - பெங்களூர் நாட்கள்)
“வேய்ட் டேன்! ஓடாதே!” எனத் தன் இரட்டைச் சகோதரனைத் துரத்தியபடி ஓடினாள் ஐந்து வயது ரோசாலியாதேவி.
தங்கையிடம் மாட்டாமல் அவளது பந்தை எடுத்துக் கொண்டு மின்னலென வீட்டிற்குள் நுழைந்தான் டேன்.
“மாம், மாம்!” எனக் கூக்குரலிட்டவாறே இருவரும் ஹால் சோபாவில் கட்டிப் பிடித்து உருண்டனர்.
எப்பொழுதும் இப்படி சண்டை ஆரம்பிக்கும் பொழுதே ரெஃப்ரி வேலை பார்க்க உடனே ஆஜராகும் அவர்களின் அம்மாவைப் பத்து நிமிடங்கள் ஆகியும் காணாததால் இருவரும் சண்டையை நிறுத்தி விட்டு கிச்சனுக்கு விரைந்தனர். அங்கே கண்ட காட்சியில் இருவரும் ஒருவர் கையை ஒருவர் இறுகப் பற்றிக் கொண்டு பயத்துடன் நின்றிருந்தனர்.
மேரி அழுது கொண்டிருக்க அவர் முன்னே ஓர் ஆண் அமர்ந்திருந்தான். மெல்ல தங்கள் அம்மாவின் இரு பக்கத்திலும் சென்று நின்ற பிள்ளைகள், அந்த ஆடவரை ஏறிட்டுப் பார்த்தனர். பிள்ளைகள் வரவை கண்டுக் கண்களைத் துடைத்த மேரி அந்த ஆடவரை நோக்கி,
“வன், மீட் அவர் சில்ட்ரன் ரோசாலியா தேவி, டேனியல் ராஜ்” என ராகவனிடம் குழந்தைகளை அறிமுகப் படுத்தினாள்.
பின் பிள்ளைகளை பார்த்து,
“ரோஸ், டேன் திஸ் இஸ் யுவர் டேட்” என சொன்னார்.
இருவரையும் நோக்கிய ராகவனின் விழிகள் டேனியல் மீது நிலைக்குத்தி நின்றன. அவன் அப்படியே அவர் அப்பா நடராஜனை உரித்து வைத்திருந்தான். கலர் மட்டும் கொஞ்சம் வித்தியாசம். அவன் கண்கள் கலங்கி விட்டது மகனைப் பார்த்து.
“அப்பா” என அவனை இறுக அணைத்துக் கொண்டான்.
மிரண்ட டேனியல், பயத்துடன் அம்மாவை நோக்கினான். கண்களை மூடித் திறந்து மகனுக்குத் தைரியம் சொன்னாள் அவள். மேரியை உரித்து வைத்திருந்த தேவியின் பக்கம் பார்வையைக் கூட திருப்பவில்லை ராகவன். அவன் கவனம் எல்லாம் மகனை அங்குலம் அங்குலமாக ஆராய்வதிலே இருந்தது. முதன் முதலாக பார்க்கும் தந்தை தன்னை அறவே கண்டு கொள்ளாதது ஏமாற்றமாக இருந்தது தேவிக்கு. எப்பொழுதும் அவள்தான் அப்பா யார், எப்படி இருப்பார் என மேரியை போட்டு குடைந்து எடுப்பாள். தான் ஆசையாக மனதில் வைத்திருக்கும் அப்பா எனும் பிம்பம், தன்னை ஏறெடுத்தும் பார்க்காதது கோபத்தைத் தர விடு விடுவென தன் ரூமுக்கு சென்று விட்டாள் அந்தக் குட்டி.
‘கார்த்திக் மட்டும் இல்ல இவனும் என் அப்பாவ உரிச்சி வச்சிருக்கானே. அவருதான் இவனா பொறந்து வந்துருக்காரோ? இவன மட்டும் எப்படி இங்கிருந்து கூட்டிட்டு போறது?’ என யோசிக்க ஆரம்பித்தான் ராகவன்.
மேரியைப் பல வருடங்களுக்கு முன்பு கடற்கரையில் தவிக்க விட்டுச் சென்றவன் இப்பொழுது தான் திரும்ப வந்திருந்தான். விதி அவனை வர வைத்திருந்தது. இவ்வளவு நாள் கண்ஸ்ட்ரக்சன் பிஸ்னஸ் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. நண்பர்கள் பேச்சைக் கேட்டு இன்னும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என வட்டிக்கு பணம் எடுத்து பினாமி பேரில் ஹை கிளாஸ் பப், டிஸ்கோதே என சிட்டியில் பல இடங்களில் தொடங்கினான் ராகவன். முதலில் அள்ளி கொடுத்த பிஸ்னஸ் போகப் போக காலை வாரி விட்டு விட்டது. அடிக்கடி ரெய்ட், மேனேஜ்மெண்ட் குளறுபடியினால் பணத் திருட்டு, ஃபாரின் சரக்கு காணாமல் போவது, அடிதடியினால் பொருள் நஷ்டம் என இப்படி பல பிரச்சனைகள். நிறைய பண இழப்பு. அவர் அம்மா செய்து வைத்த ஏற்பாட்டினால், அவனால் எந்தச் சொத்தையும் விற்க முடியவில்லை. எல்லாம் கார்த்திக் பெயரில் இருந்தது. வட்டி முதலாளி கழுத்தைப் பிடிக்கும் அளவுக்கு நிலமை மோசமானது. நண்பர்கள் எல்லோரும் கை விரிக்க, சாந்தியிடம் போய் நின்றான்.
சாந்தியிடம் அசையா சொத்துக்கள் மட்டுமே இருந்தன. மற்றதை எல்லாம் உடைக்க முடியாத ஃபிக்சில் போட்டு கார்த்திக்கின் பெயரை எழுதி வைத்திருந்தார் அவள். மாமியாரை பார்த்துக் கற்றுக் கொண்ட பாடம். இதுவரை எட்டிக் கூட பார்க்காத கணவர் திடீரென பணத்துக்கு மட்டும் வரவும், மனம் உடைந்தாலும் லாக்கரில் இருந்த எல்லா நகையையும் எடுத்துக் கொடுத்தாள். அதுவும் போதாததால்தான் மேரியைத் தேடி வந்தான் ராகவன்.
மேரியின் அப்பா பெரும் பணக்காரர், அதோடு தாய் வழி பாட்டியின் சொத்தும் மேரிக்கு இருக்கிறது என்பது ஏற்கனவே அவனுக்குத் தெரியும். இருந்தாலும், நம்மூர் பெண் மாதிரி இவர்கள் இருக்க மாட்டார்களே. இந்நேரம் தூசியைப் போல் தன்னை மறந்து, நினைவுகளை ஊதித் தள்ளி இருப்பாள் என நினைத்தான். நூறில் ஒரு சதவிதமாக தன்னை நினைவிருந்தால், முயற்சித்துப் பார்க்கலாம் எனத் தோன்றியது. வேறு வழியில்லாமல் பிரைவட் டிடேக்டிவ் வைத்து அவளை பற்றி டீடேய்ல்ஸ் கலேக்ட் செய்தான் ராகவன். அதில் கிடைத்த செய்தியில் புல்லரித்து விட்டது இவனுக்கு.
மேரி தாங்கள் சந்தித்தத் தீவிலேயே வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டதாகவும், இரட்டைக் குழந்தைகள் இருப்பதாகவும், தகப்பனார் அவளுக்குச் சொத்தை எழுதி தலை முழுகி விட்டதாகவும் அறிந்தவன் குதூகலித்தான். கணக்குப் போட்டுப் பார்தவனுக்குக் குழந்தைகள் தன்னுடையதுதான் எனப் புரிந்தது. உடனே மீண்டும் தூண்டில் போட கிளம்பி வந்திருந்தான்.
மகனை உள்ளே அனுப்பிய மேரி, ராகவனுக்கு டீ கொடுத்து உபசரித்தாள்.
“எப்படி இருக்க மேரி? என்னை மன்னிச்சிரு. உன்னை அப்படி விட்டுட்டுப் போக வேண்டிய நிலை வந்துருச்சு. என்ன ஆச்சுனா” எனச் சொல்ல வந்தவனை நிறுத்திய மேரி,
“சாந்தி எப்படி இருக்காங்க?” எனக் கேட்டாள்.
ராகவனின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி.
“உனக்கு எப்படி தெரியும்?” குரல் நடுங்கியது அவனுக்கு.
“என்னை அவ்வளவு முட்டாள்னு நினைச்சிட்டீங்களா வன்? காதல் என் மனச மழுங்கடிச்சிருக்கலாம், என் மூளைய இல்ல” என விரக்தியாக முறுவலித்தாள் மேரி.
அவளது நினைவுகள் ராகவன் அவளை விட்டுச் சென்ற நாளுக்குச் சென்றன.
அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு மீண்டும் ஹோட்டல் அறைக்கு சென்றாள் மேரி. அங்கே ரிஷப்சனில் விசாரித்தாள் ராகவனைப் பற்றி. அவன் செக் அவுட் செய்து சென்றிருந்தது தெரிந்தது. என்ன செய்வது எனப் புரியவில்லை. அவளது சகோதரியும் திரும்ப வந்திருந்தாள். அழுது கரைந்த மேரியை தேற்றுவதற்குள் அவளுக்கு போதும் போதுமென ஆகி விட்டது. அவனை மறந்து ஊருக்குத் திரும்பலாம் எனச் சகோதரி அழைத்தும், அவன் திரும்பி வந்தால் தான் இங்கே இருக்க வேண்டும் எனப் போக மறுத்து விட்டாள்.
சோகத்தில் அப்படியே ஒரு மாதத்தை ஓட்டியவளுக்கு வாந்தி, மயக்கத்தில்தான் கருத்தரித்திருந்தது தெரிந்தது. டாக்டரை பார்க்க சென்றவள்,
“டாக்டர்! நான் கர்ப்பத்தடை மருந்து சாப்பிட்டேனே. அப்புறம் இது எப்படி சாத்தியம்?” எனத் தன் சந்தேகத்தைக் கேட்டாள்.
அதற்கு அவளிடம் சில கேள்விகளைக் கேட்டுத் தெளிவுப் படுத்திக் கொண்ட டாக்டர்,
“இந்த மருந்த கரெக்டான நேரத்துல விடாம எடுக்கனும். நீ விளையாட்டுத்தனமா சில தடவை ஸ்கிப் பண்ணியிருக்க. அதனாலதான் பேபி ஃபார்ம் ஆயிருச்சு. ரொம்ப சின்ன வயசா இருக்கியே, அபார்ட் பண்ணிடலாமா?” எனக் கேட்டார்.
முடியவே முடியாது என மறுத்து விட்டாள் மேரி.

Author: VanishaAdmin
Article Title: Uyir Vangum Rojave--EPI 30
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.